இந்திய மொழிகளில் காம தேவதை படம்..; கவர்ச்சி பாம் ‘ஷகிலா’ வாழ்க்கையும் திரைப்படமானது

இந்திய மொழிகளில் காம தேவதை படம்..; கவர்ச்சி பாம் ‘ஷகிலா’ வாழ்க்கையும் திரைப்படமானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shakeela “ஷகிலா” பெண் கதாப்பாத்திரத்தை மையமாக கொண்ட தமிழ் திரைப்படம். தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரும் புகழ்பெற்ற அடல்ட் ஸ்டாரான நடிகை ஷகிலா உடைய வாழ்க்கை கதைதான் இப்படம்.

1990 களில் இளைஞர்களின் நெஞ்சங்களை வென்ற நாயகியாக, வயது வந்தோருக்கான காமபடங்களில் நடித்து, தனக்கென பெரும் ரசிகர்வட்டத்தை சேர்த்து, புகழ் பெற்றவர் தான் நடிகை ஷகிலா.

உண்மையை சொல்ல வேண்டுமானால் அந்த காலகட்டத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவரது படங்கள் வெளியானது.

அப்போது வெளியாகும் முன்னணி நாயகர்களின் படங்களுக்கே அப்படங்கள் பெரும் சாவாலாக இருந்தது.

இப்படத்தை எழுதி இயக்குகிறார் இந்திரஜித் லங்கேஷ். இப்படம் நடிகை ஷகிலாவின் வலி மிகுந்த வாழ்க்கையை, காம படங்களில் நடித்ததற்காக, குடும்தினராலேயே புறக்கணிக்கப்பட்டதை, சினிமா உலகத்தினரே அவரது படங்கள் தடை செய்யப்படவேண்டுமென போராடியதை என அவரது வாழ்வின் அனைத்து பக்கங்களையும் கூறவுள்ளது. இப்படம் நேரிடையாக இந்தி மொழியில் எடுக்கப்பட்டது.

ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. மலையாள பதிப்பு கேரள மாநிலத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்னர் வெளியிடப்படும்.

இப்படத்தில் ரிச்சா சத்தா, பங்கஜ் திரிபாதி, எஸ்தர் நொரான்கா, ராஜீவ் பிள்ளை, ஷீவா ரானா, கஜோல் சக் மற்றும் சந்தீப் மலானி நடித்துள்ளார்கள்.

ஷம்மி நன்வானி, சரவண பிரசாத் இப்படத்தை தயாரித்துள்ளார்கள். பிரகாஷ் பழனி இப்படத்தை வழங்குகிறார். சந்தீப் மலானி அஸோசியேட் புரடியூசராக பணிபுரிந்துள்ளார். சந்தோஷ் ராய் பதாஜே ஒலிப்பதிவு செய்ய, பல்லு சலூஜா படத்தொகுப்பு செய்துள்ளார்.

ஷம்மியின் Magic Cinema, Innovative Film Academy மற்றும் பழனியின் International Media Works நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை வழங்குகிறது.

கேரளா பகுதிகள் போன்று இருக்கவேண்டுமென கர்நாடகாவின் தீர்த்தஹல்லி பகுதிகளில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் பெரும்பகுதி பெங்களூருவின் Innovative Film City யில் படமாக்கப்பட்டுள்ளது.

படத்தில் மூன்று பாடல்கள் அமைந்துள்ளது. டைட்டில் பாடல் பாலிவுட் இசையமைப்பாளர் Meet Bros இசையமைத்துள்ளார். மற்ற இரண்டு பாடல்களை இசையமைப்பாளர் வீர் சமர்த் இசையமைத்துள்ளார்.

படத்தில் கையாளப்பட்டுள்ள தீரமான மொழியான்மைக்காவும், மிக கனமான காட்சிகளுக்காகவும் படத்திற்கு சென்சாரில் A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து மொழிகளிலும் சென்சார் ஃபோர்ட் கமிட்டியால் இப்படம் பாராட்டு பெற்றுள்ளது. அவர்கள் இப்படத்தின் கருத்துக்களை பாரட்டி படத்திற்கு தங்களின் நன்மதிப்பை வழங்கியுள்ளனர்.

இப்படம் இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் 2020 கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகிறது.

Zee Music நிறுவனம் இப்படத்தின் ஆடியோ உரிமையை பெற்றுள்ளது. UFO Moviez இப்படத்தை வெளியிடுகின்றனர்.

The rise of Actress Shakeela told in a cinematic way

‘ஒழுங்கா எடுத்துடுவீங்களா டைரக்டர்..? விக்னேஷ் சிவனிடம் சந்தேகம் கேட்ட சமந்தா

‘ஒழுங்கா எடுத்துடுவீங்களா டைரக்டர்..? விக்னேஷ் சிவனிடம் சந்தேகம் கேட்ட சமந்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

samantha vignesh shivanநானும் ரவுடிதான் பட மெகா வெற்றிப் பின்னர் விக்னேஷ் சிவன் – விஜய்சேதுபதி – நயன்தாரா இணையும் 2வது படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’.

மற்றொரு நாயகியாக இதில் சமந்தா நடித்து வருகிறார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டியோ சார்பாக லலித்குமார், ரவுடி பிக்சர்ஸ் சார்பாக விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

டிசம்பர் 10-ம் தேதி இதன் படப்பிடிப்பு பூஜையுடன் ஹைதராபாத்தில் ஆரம்பமானது.

இப்பட ஷூட்டிங்கில் விஜய்சேதுபதி இணைந்த போது அவரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் விக்னேஷ் சிவன்.

அதை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

விஜய்சேதுபதி நயன்தாரா சமந்தா இணையும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படப்பூஜையோடு துவங்கியது

தற்போது சமந்தாவும் ஷூட்டிங்கில் பங்கேற்க உள்ளார்.

அவரை பூங்கொடுத்து கொடுத்து வரவேற்றபோது.. விக்னேஷ் சிவனிடம் “ஒழுங்கா எடுத்துடுவீங்களா டைரக்டர் சார்?” என சமந்தா கேட்க.., ம்ம்…பார்ப்போம்..” என்கிறார் விக்னேஷ்.

இந்த வீடியோவும் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

Samantha Joins The Shoot Of KaathuVaakula Rendu Kaadhal

‘மன்மதன் அம்பு’ விட்ட கமல் – உதயநிதி சந்திப்பு.; ஆண்ட கட்சியுடன் ஆண்டவர் கூட்டணி.?

‘மன்மதன் அம்பு’ விட்ட கமல் – உதயநிதி சந்திப்பு.; ஆண்ட கட்சியுடன் ஆண்டவர் கூட்டணி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasan politicsதமிழகத்தை இதுவரை ஆண்ட திமுக, அதிமுக உள்ளிட்ட திராவிட கட்சிகள் தமிழகத்தை சீரழித்துவிட்டதாக குற்றம்சாட்டி மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார் கமல்ஹாசன்.

தற்போது அதே திமுக உடன் மநீம கட்சி கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

டிசம்பர் 13 ஆம் தேதி தன் தேர்தல் பிரச்சாரத்தை கமல் மதுரையில் தொடங்கினார்.

அவர் மதுரை செல்வதற்கு முன்பே உதயநிதியை சந்தித்து பேசியதாக தற்போது தெரியவந்துள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனும் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஓர் தனியார் இடத்தில் சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைவது குறித்த பேச்சுவார்த்தைக்கான தொடக்கம் இது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2011ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான ‘மன்மதன் அம்பு’ படத்தை தயாரித்தவர் உதயநிதி என்பது குறிப்பிடத்தக்கது.

Udhayanidhi stalin met Kamal Haasan recently?

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த ‘பிக்பாஸ்’ சரவணன்..; விஷயம் என்ன தெரியுமா..?

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த ‘பிக்பாஸ்’ சரவணன்..; விஷயம் என்ன தெரியுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

saravanan1990களில் வெளியான ‘பார்வதி என்னை பாரடி’ & ‘பொண்டாட்டி ராஜ்யம்’ உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்தவர் சரவணன்.

பின்னர் சினிமாவை விட்டு விலகியிருந்த சரவணன் 2007-ம் ஆண்டு கார்த்தி உடன் பருத்திவீரன் படத்தில் நடித்து ரசிகர்களிடையே சித்தப்பா ஆனார்.

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 3வது சீசனிலும் பங்கேற்றார்.

மீண்டும் கார்த்தி உடன் இணைந்து ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்தார் சரவணன்.

தற்போது சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதனையடுத்து மரியாதை நிமிர்த்தமாக தமிழக முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

முதல்வருக்கும் சரவணனுக்கும் சொந்த ஊர் சேலம் மாவட்டம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Saravanan met CM Edappaadi Palanisamy today

‘MOVIEWUD’ மூவி ஆப்..: ரூ 365 கட்டி வருடம் முழுவதும் படங்கள் மேடை நாடகங்கள் பார்த்துட்டே இருக்கலாம்.!

‘MOVIEWUD’ மூவி ஆப்..: ரூ 365 கட்டி வருடம் முழுவதும் படங்கள் மேடை நாடகங்கள் பார்த்துட்டே இருக்கலாம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

cheranஇயக்குனர் சேரன், தயாரிப்பாளர் லிப்ரா ரவீந்தர் சந்திரசேகரன் இருவரும் “மூவி உட்” ஆப்பின் வெப்சைட் மற்றும் ஆண்டிராய்ட், ஆப்பிள் ஆப்களை வெளியிட்டார்கள்.

இந்த Moviewud ஆப்-பில் சிறு முதலீட்டு படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள், இசை ஆல்பங்கள், வெப் சீரீஸ்கள் என மற்ற ஆப் களை போன்றே அனைத்தும் இடம்பெறும். மேலும் OTT தளங்களில் முதல் முறையா ய் மேடை நாடகங்களை இத்தலைமுறை இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்கள்.

சிறு முதலீட்டுப் படங்கள், சுயாதீன திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒர் தளமாய் உருவாகியுள்ளார்கள். மிக முக்கியமாய் தயாரிப்பாளர்கள் தங்களது படங்களின் பார்வையாளர்கள் மற்றும் வருமானத்தை பார்த்து தெரிந்து கொள்ள அவர்களுக்கு. தனி டேஷ்போர்ட் அளிக்கப்படுகிறது. படங்களை வாடகை முறையில் 10 ரூ முதல் 50 ரூபாய் வரை பணம் கட்டி ஓர் நாள் வரையும் , ஆறு மாதங்களுக்கு ரு.200 ரூபாயும். வருடத்திற்கு ரூ.365 ருபாய் மட்டுமே.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு மூவி வுட் தளத்தில் ஸ்டைல் மிஷின் எனும் ஆல்பம் பாடலை இலவசமாக பார்க்கும் வண்ணம் வெளியிட்டு இருக்கிறது.அது மட்டுமில்லாமல் சமீபத்தில் நேரடியாக திரைக்கு வந்த ஒட்டிடி படங்கள் தெளிவு பாதையின் நீசத் தூரம், விண்வெளி பயணக் குறிப்புகள், மீண்டும் புன்னகை, வருண் வர்ஷா போன்ற திரைப்படங்களை நேரடியாக வெளியிட்டிருக்கிறது. ஸ்ருதி பேதம், தனிமை, சுஜாதாவின் மாமா விஜயம் போன்ற மேடை நாடகங்களை இலவசமாய் பார்க்கலாம்.

“விரைவில் பல புதிய வெப் சீரிஸ் மற்றும் ஒரிஜினல் திரைப்படங்கள் மூவி உட் மூவி ஆப்பில் வெளியாக உள்ளது” என்று மூவி உட் ஆப்பின் CEO ரமேஷ் சுப்பராஜ் மற்றும் அதன் கிரியேட்டிவ், கண்டென்ட் ஹெட் கேபிள் சங்கரும் தெரிவித்தார்கள்.

Andriod: https://play.google.com/store/apps/details
IOS: https://apps.apple.com/sg/app/moviewud/id1539262961
Website: https://www.moviewud.in
Mail: [email protected]
Mobile: 7010311658

Director Cheran and Libra Ravinder launched MOVIEWUD movie app

பாலாஜி தரணிதரனின் ‘ஒரு பக்க கதை’..; கிறிஸ்துமஸ் முதல் உங்கள் பார்வைக்கு…

பாலாஜி தரணிதரனின் ‘ஒரு பக்க கதை’..; கிறிஸ்துமஸ் முதல் உங்கள் பார்வைக்கு…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு பக்க கதைபுதிய மற்றும் சிறப்பான பொழுதுபோக்கை தொடர்ச்சியாக வழங்கும் ZEE5, ஒ.டிடி. தளத்தில் தனது வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ZEE5 இப்போது அதன் அடுத்த Exclusive படமாக, தமிழ் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஒரு பக்க கதை’’ படத்தை வெளியிடவுள்ளது.

பிரபல இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ள இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திறமையான இந்த இருவரும் நடிகர்களாக அறிமுகமான படம் ‘ஒரு பக்க கதை’ என்பது குறிப்பிடத் தக்கது.

ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையில் அசாதாரண சூழ்நிலை ஏற்படும் போது, சுற்றியுள்ள உலகம் அதை எவ்வாறு உணர்கிறது என்பதையும் அதன் மூலம் ஏற்படும் சவால்களையும் சுவாரஸ்யமாக கூறும் படமே ‘ஒரு பக்க கதை’

பிரேம்குமார்.சி ஒளிப்பதிவைக் மேற்கொள்ள, கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

தயாரிப்பு: வாசன்ஸ் விஷுவல் வென்ச்சர்ஸ்
திரைக்கதை, வசனம்: பாலாஜி தரணிதரன், மரியா
படத்தொகுப்பு: ஆர்.கோவிந்தராஜ்
கலை இயக்குனர்: வினோத் ராஜ்குமார்
டிசைன்ஸ்: கோபி பிரசன்னா
பாடல்கள்: கார்த்திக் நேத்தா, கதிர்மொழி

ZEE5 Exclusive – ‘ஒரு பக்க கதை’ டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகிறது.

Oru Pakka Kathai to premiere on December 25th – A ZEE5 Exclusive

More Articles
Follows