ஆண்களுக்கே உங்களை காதலிக்க தோன்றும்.; புகழ் நடிகரை புகழ்வதாக ஓரினச் சேர்க்கைக்கு விஜய் டிவி ரூட்..?

ஆண்களுக்கே உங்களை காதலிக்க தோன்றும்.; புகழ் நடிகரை புகழ்வதாக ஓரினச் சேர்க்கைக்கு விஜய் டிவி ரூட்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay TV Pugazh (2)கடந்த ஆண்டு நவம்பர் 14-ம் தேதி முதல் குக் வித் கோமாளி சீசன் 2 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைக்குட்டி சிங்கம் தீபா மற்றும் கன்னி ஆகியோர் பங்கேற்றனர்.

இதே நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, வீஜே பார்வதி ஆகியோரும் உள்ளனர்.

பிக்பாஸ் நகழ்ச்சியில் கன்பெஃஷன் அறை வைத்திருப்பது போல் குக் வித் கோமாளியிலும் ஒரு அறை உள்ளது.

ஒரு நாள் புகழ் என்பவர் கன்பெஃஷன் அறைக்கு வந்த போது.. “நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். ஆண்களுக்கே உங்களை காதலிக்க தோன்றும்” என பிக்பாஸ் சொல்வது போல ஒரு குரல் ஒலித்தது.

இந்த சர்ச்சை வசனத்துக்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

புகழ் ஒரு ஆளா? அவரை காதலிக்கனுமா? ஆண் ஆண் காதலித்தால் அதுக்கு பெயர் வேற என கருத்துக்களை தெரிவித்தனர்.

இதனால் குக் வித் கோமாளி டிவியில் ஒளிபரப்பாகும் போது அந்த வசனம் நீக்கப்பட்டது.

ஆனால் ஹாட்ஸ்டாரில் அதே வசனம் நீக்கப்படவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Cook with Comali Pugazh recent video creates controversy

இதழில் கதை எழுதும் நேரமிது… ராஜா இசையில் பியானோ வாசித்த நேரமிது..; விவேக் நெகிழ்ச்சி

இதழில் கதை எழுதும் நேரமிது… ராஜா இசையில் பியானோ வாசித்த நேரமிது..; விவேக் நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளையராஜா திறந்துள்ள புதிய இசை ஸ்டூடியோவுக்கு நடிகர் விவேக் சென்று இணைஞானியை சந்தித்துள்ளார்.

இதுப்பற்றி விவேக்…

“இளையராஜா சாரை மரியாதை நிமித்தமாக அவரது புதிய ஸ்டுடியோவில் சந்தித்தேன். அப்போது புத்தர் சிலை ஒன்றை பரிசாக அளித்தேன்.

என் மகன் வாசித்த பியானோவில் இசைஞானியின் பாடல்களை வாசிக்க பழகினேன்.

அதில் எனக்கு மிகவும் பிடித்தமானது உன்னால் முடியும் தம்பி திரைப்படத்திற்காக அவர் இசை அமைத்த இதழில் கதை எழுதும் நேரமிது… பாடல்.

இளையராஜாவிடம் பேசும் போது, உங்கள் இன்ஸ்பிரேஷனில் நான் பியானோ வாசிக்க கற்றுக் கொண்டேன் என தெரிவித்தேன்.

பின்னர் நான் வாசித்த.. “இதழில் கதை எழுதும் நேரமிது…” அந்த பாடல் வீடியோவை காண்பித்தேன். அதை பார்த்துவிட்டு இளையராஜா பாராட்டினார்.

Comedy actor Vivek met maestro Ilayaraja recently

ரசிகர்களுக்கு சினிமா மோகம்.. நடிகருக்கோ தமிழ் மோகம்..; தன் மகனுக்கு அழகான பெயர் வைத்த கார்த்தி

ரசிகர்களுக்கு சினிமா மோகம்.. நடிகருக்கோ தமிழ் மோகம்..; தன் மகனுக்கு அழகான பெயர் வைத்த கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்நாட்டு மக்களின் சினிமா மோகம் உலக மக்களுக்கே தெரிந்த ஒன்று தான்.

தங்கள் அபிமான நடிகர் நடிகையருக்கு கோயில் கட்டுவார்கள்… சிலை வைப்பார்கள்.. கடவுள் ரேஞ்சுக்கு கொண்டாடுவார்கள்.

தங்கள் வீட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு ரஜினி, விஜய், அஜித், நயன்தாரா, ஹன்சிகா என பெயரும் வைப்பார்கள்.

ஆனால் நம்ம நடிகர் கார்த்தி அவரின் குழந்தைக்கு ‘கந்தன்’ என அழகான பெயர் வைத்துள்ளார்.

இவருக்கும் ரஞ்சனிக்கும் கடந்த 2020 அக்டோபர் 20ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

இவர்களுக்கு ஏற்கெனவே உமையாள் என்றொரு மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா ஜோதிகா தம்பதியினர் கூட அவர்களின் குழந்தைகளுக்கு தியா தேவ் என்று வடநாட்டு மோகத்தில் பெயர் வைத்துள்ளனர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

தற்போது ‘சுல்தான்’, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி.

Actor Karthi reveals the name of his son

சினிமாவில் நடித்தாலும் இன்னொரு தொழில் வைச்சிக்கனும்..; சஞ்சனா சிங் ஓபன் டாக்

சினிமாவில் நடித்தாலும் இன்னொரு தொழில் வைச்சிக்கனும்..; சஞ்சனா சிங் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SanjanaSingh‘ரேணிகுண்டா’ படத்தில் திறமையான நடிகையாக அறிமுகமானவர் நடிகை சஞ்சனா சிங்.

வித்தியாசமான முயற்சிக்கு பேர்போன நடிகை சஞ்சனா தற்போது தனது கவனத்தை ஹோட்டல் பிஸினெஸ்ஸை நோக்கித் திருப்பியுள்ளார்.

தன்னுடன் பணிபுரிந்த சகோதரன் வெங்கட்டுடன் இணைந்து உணவுத் தொழிலில் இறங்கியுள்ளார் சஞ்சனா.

யம்மியோஷா என்னும் சைனீஷ் ரெஸ்டாரெண்டை சென்னை வடபழனியில் சிம்ஸ் மருத்துவமனை எதிரில் தொடங்கியுள்ளார்.

நேற்று நடந்த தொடக்க விழாவில் அனேக திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டு சஞ்சனாவை வாழ்த்தினர்.

இயக்குநர் கே பாக்கியராஜ், சோனியா அகர்வால், மதுமிதா, நடிகர் பரணி, பெசண்ட் ரவி, சம்பத், கயல் தேவராஜ், மாஸ்டர் ஸ்ரீதர், மாஸ்டர் ராதிகா, ஆடை வடிவமைப்பாளர் சிட்னி, மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அகமது ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

இயக்குநர் பாக்கியராஜ் குறிப்பிடும்போது….

” சஞ்சனா ரொம்ப நல்ல மனுஷி. எந்த வேலை எடுத்துக்கிட்டாலும் சிறப்பாக செய்யக்கூடியவர். யம்மியோஷாங்கிற இந்த உணவகத்தின் சுவை நன்றாக உள்ளது.

இதேபோல் பல கிளைகள் திறந்து வெற்றிபெற வாழ்த்துகிறேன்.” என்றார்.

சஞ்சனா கூறும்போது,…

” இந்த கொரானா காலகட்டத்தில் தான் உணவின் தேவையை உணர்ந்தேன். நான் மட்டுமல்ல… உலகமே உணர்ந்தது.

சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும் நாம் ஏதாவது இன்னொரு தொழிலையும் வைத்துக்கொள்ள வேண்டும் என எண்ணினேன்.

நம்மில் பலர் சினிமா மட்டுமே என இயங்கி வாய்ப்புகள் இல்லாதபோது திணறிவிடுகிறோம்.

இந்த சினிமாவில் தைரியமாக பாதுகாப்பாக இயங்க இன்னுமொரு நிரந்தர வருமானமுள்ள தொழிலை கைவசம் வைத்துக் கொள்வது நல்லது என நினைத்தே இந்த யம்மியோஷா திட்டத்தை தொடங்கினேன்.

என்னுடன் பணிபுரிந்த சகோதரன் வெங்கட் பங்குதாரராக இணைய இதைத் தொடங்குவது சாத்தியமாயிற்று.

நடிப்பில் முழுக்கவனம் செலுத்தும் அதே வேளையில் இந்த யம்மியோஷாவையும் சிறப்புற நடத்த முனைவேன்.. அதற்கான உழைப்பு என்னிடம் இருக்கிறது ” என்றார்.

முன்னதாக, பெசண்ட் ரவி ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.

Sanjana Singh turns entrepreneur

தியேட்டர் ரிலீசுக்காக அக்‌ஷய்குமார் படத்தை தயாரிக்கும் பிரபல ஓடிடி தளம்

தியேட்டர் ரிலீசுக்காக அக்‌ஷய்குமார் படத்தை தயாரிக்கும் பிரபல ஓடிடி தளம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AMAZON PRIME VIDEO இப்போது இந்தியாவில் திரைப்படத் தயாரிப்பிலும் பங்கேற்கிறது: அக்ஷய் குமார் நடிக்கும் ராம் சேது திரைப்படத்தின் இணை தயாரிப்பாளராக உருவெடுக்கிறது.

இப்பங்கேற்பின் மூலம், இந்தியாவின் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தை உலகெங்கும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு எடுத்துச் செல்வதற்கான மற்றொரு படியில் Prime Video முன்னெடுத்துப் பயணிக்கிறது
கேப் ஆஃப் குட் பிலிம்ஸ், அபண்டன்டியா என்டர்டெயின்மென்ட், லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் Prime Video தயாரிப்பில் வெளிவரவுள்ள இந்த அதிரடி-சாகசப் படத்தை அபிஷேக் சர்மா இயக்கி டாக்டர் சந்திரபிரகாஷ் திவேதி கிரியேட்டிவ் புரொடியூசராகவும், இந்திய சூப்பர் ஸ்டார் அக்‌ஷய் குமார், ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நசரத் பருச்சா ஆகியயோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சமீபத்திய மற்றும் பிரத்யேக திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை, Amazon Original தொடர், Amazon Prime மியூசிக் மூலம் விளம்பரமில்லாத மியூசிக், இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்புகளின் இலவச விரைவு விநியோகம், முன்கூட்டிய அணுகல், கவர்சிகரமான டீல்கள், Prime Reading உடன் வரம்பற்ற வாசிப்பு மற்றும் Prime Gaming உடன் மொபைல் கேமிங் உள்ளடக்கம், இவை அனைத்தையும் மாதத்திற்கு ₹129 மட்டுமே என்ற கட்டணத்தில், நம்பமுடியாத பிற மதிப்புகளோடு Amazon Prime தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

மும்பை, இந்தியா, 17-மார்ச், 2021: இந்தியாவில் தனது செயல்பாடுகளுக்கு மேலும் வலு சேர்ப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக, விரைவில் வெளிவரவுள்ள ராம் சேது இந்தி திரைப்படத்தின் இணை தயாரிப்பாளராக, கேப் ஆஃப் குட் பிலிம்ஸ், அபண்டன்டியா என்டர்டெயின்மென்ட் மற்றும் லைக்கா புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் Amazon Prime Video கைகோர்த்துள்ளது. அபிஷேக் சர்மா (பர்மாணு, தேரே பின் லேடன்) இயக்கத்தில் டாக்டர் சந்திரபிரகாஷ் திவேதியை (பிருத்விராஜ் சவுகான்) க்ரியேடிவ் புரொடியூசராகக் கொண்டு வெளிவரும் இத் திரைப்படம், இந்திய கலாச்சாரம் மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றிய ஒரு கதையை முன்வைக்கும் ஒரு அதிரடி-சாகச நாடகமாகும்.

இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார், ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நஸ்ரத் பருச்சா ஆகியோருடன் மேலும் பல திறமை வாய்ந்த நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர்.

திரையரங்குகளில் வெளியீட்டைத் தொடர்ந்து, ராம் சேது விரைவில் இந்தியாவிலும் 240-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் உள்ள Prime மெம்பர்களுக்கும் காணக் கிடைக்கும்.

விஜய் சுப்பிரமணியம், டைரக்டர் & ஹெட் (கன்டென்ட்), Amazon Prime Video இந்தியா கூறுகையில்,…

“Amazon Prime Video-இல் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் வாடிக்கையார்களுக்கு முன்னுரிமை என்ற கண்ணோட்டத்தில் எடுக்கப்படுகின்றன. இந்திய மண்ணில் வேரூன்றிய பல கதைகள் பெரும்பாலும் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை அடைந்துள்ளன.

மேலும் நமது இந்திய பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுகின்ற ஒரு திரைப்படத்தின் இணை தயாரிப்பாளராக அறிமுகம் ஆவதன் மூலம் முன்னேற்றப் பாதையில் மேலும் ஒரு படி எடுத்து வைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

விக்ரம் மல்ஹோத்ரா மற்றும் அபண்டன்டியா என்டர்டெயின்மென்ட் மற்றும் அக்ஷய் குமார் உடனான எங்கள் ஒத்துழைப்பு இன்றுவரை தனித்துவமானது மற்றும் மிகவும் வெற்றிகரமாக இருந்தது;

இந்த புதிய முயற்சி, எங்கள் உறவை மேலும் வலுப்படுத்தும். சீரிய திறன் கொண்ட நடிகர்கள் மற்றும் வரலாற்றில் தனித்துவம் கொண்ட ஒரு கதையுடன், உலகெங்கிலும் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களை தொடர்ந்து மகிழ்விப்பதை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.” என்றார்.

நடிகர் அக்‌ஷய் குமார் கூறுகையில்,…

“வலிமை, துணிச்சல், அன்பு மற்றும் நமது அற்புதமான நாட்டின் தார்மீக மற்றும் சமூகப் பின்னலை உள்ளடக்கிய தனித்துவமான இந்திய சிறப்பியல்புகளைப் பிரதிபலிக்கும் ராம் சேது திரைப்படதின் கதை எனக்கு ஆர்வத்தையும் ஊக்கத்தையும் அளித்தது.

ராம் சேது என்பது கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்காலத் தலைமுறைகளுக்கு இடையிலான ஒரு பாலமாகும். இந்தியப் பாரம்பரியத்தின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியின் கதையை விளக்குவதை, குறிப்பாக இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்வதை நான் எதிர்நோக்குகிறேன், Amazon Prime Video-வுடன் இக்கதை எல்லைகளைக் கடந்து உலகெங்கிலும் உள்ள திரைப்பட ரசிகர்களை அடையும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.” என்றார்.

Amazon Prime Video to turn Hindi film producer with Super Star Akshay Kumar’s ‘Ram Setu’

ஆண்டு வருமானம் 1000ம்னு பொய் சொல்லி அசிங்கப்பட்ட சீமான்.; மீண்டும் வேட்பு மனு தாக்கல் செய்ய திட்டம்.?

ஆண்டு வருமானம் 1000ம்னு பொய் சொல்லி அசிங்கப்பட்ட சீமான்.; மீண்டும் வேட்பு மனு தாக்கல் செய்ய திட்டம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதனையடுத்து அரசியல் கட்சி & சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய தொடங்கியுள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ஆம் தொடங்கியது.

முக்கிய கட்சிகள், கூட்டணிகளின் வேட்பாளர்கள் நேற்று முதல் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

வேட்புமனுத் தாக்கல் செய்ய வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் நேற்று, திங்கள்கிழமை, தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

சட்டமன்ற தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிட்டுகிறார் சீமான்.

வேட்பு மனுவுடன் அவர் தாக்கல் செய்த சொத்து விவரத்தில்…

“தனக்கு உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.31,06,500 என்றும், அசையா சொத்துகள் ஏதுமில்லை என சீமான் தெரிவித்துள்ளார்.

தன் மனைவிக்கு உள்ள அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.63,25,031 என்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.25,30,000 என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.65,500 வருமானம் வந்துள்ளதாக சீமான் குறிப்பிட்டுள்ளார்.

இத்துடன் குறிப்பாக 2019-20ஆம் நிதியாண்டில் தமக்கு வந்த ஆண்டு வருமானம் ரூ.1,000 மட்டுமே என சீமான் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினசரி கூலி வேலைக்கு செல்வோர் கூட தினம் 500-1000/- வரை சம்பாதிக்கும் இந்த காலக்கட்டத்தில் ஆண்டு வருமானம் வெறும் 1000 ரூபாய் என (பெரிய பொய்யை) சீமான் குறிப்பிட்டுள்ளதால் அவரை சமூக வலைத்தளங்களில் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.

மேற்கண்ட செய்தியை நாம் நம் தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் இதுகுறித்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஒருவர் கூறும்போது…

“சீமானின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 60 ஆயிரம். ஆனால், ஆயிரம் ரூபாய் என தவறுதலாக டைப் செய்யப்பட்டுள்ளது.

அதை சரி செய்து மீண்டும் ஒரு வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.”

இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.

NTK leader Seeman’s clarification on his yearly income

More Articles
Follows