தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
20 வருடங்களுக்கு முன்பு தென்னிந்திய சினிமாவில் ‘கவர்ச்சி பாம்’ என்று சொன்னால் அது நடிகை ஷகிலா தான்.
இவரது ஆபாச படங்கள் மலையாளத்தில் நடிகர் மோகன்லால் மம்மூட்டிக்கு போட்டியாக கருதப்பட்டது.
எனவே ஷகிலா படத்திற்கு தடை விதிக்கவும் அப்போதைய முன்னணி நட்சத்திரங்கள் வேண்டுகோள் விடுத்திருந்தது தனிக்கதை.
ஒரு கட்டத்தில் கவர்ச்சி வேடங்களை துறந்து ஆபாச வேடங்களை மறந்து சின்ன சின்ன வேடங்களில் அடிக்க ஆரம்பித்தார்.
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’யில் பங்கேற்று மேலும் பிரபலமானார்.
இந்த நிலையில் இவரது சமீபத்திய பேட்டியில் யார் சூப்பர் ஸ்டார்? என்ற கேள்வியை கேட்டுள்ளனர்.
அதற்கு ஷகீலா பதிலளிக்கும் போது..
“ரஜினியை தான் சந்தித்தது பற்றிய அனுபவத்தை கூறியுள்ளார்.. எளிமையான மனிதர் அவர்.. என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகைகளில் யார் சூப்பர் ஸ்டார் என்ற கேள்விக்கு.? 20 வருடங்களுக்கு முன்பு ஆக்ஷனில் அசத்திய நடிகை விஜயசாந்தி தான் லேடி சூப்பர் ஸ்டார்.
இன்று அந்த இடத்திற்கு வந்துள்ளார் நயன்தாரா.. அவர்களெல்லாம் தண்ணீரை கூட அளவாகத்தான் குடிப்பார்கள்.
தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார்கள்.. அதுபோன்ற அர்ப்பணிப்புக்கு கடின உழைப்புக்கு தான் அவர்களுக்கு இந்த அளவிற்கு பேரும் புகழும் கிடைத்துள்ளது.
என்னை எடுத்துக் கொண்டால் நான் எல்லாம் தினமும் பிரியாணி கொடுத்தால் கூட சாப்பிடுவேன்.. நானெல்லாம் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில்லை” எனவும் பதில் அளித்துள்ளார் ஷகிலா.
Actress Shakeela reply to Who is Super Star?