தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் வெளியான அனைத்து படங்களையும் கிண்டல் செய்து வெளியான படம் தமிழ்ப்படம்.
சி.எஸ்.அமுதன் இயக்கிய இப்படத்தில் சிவா நாயனாக நடித்திருந்தார்.
கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை தயாநிதி அழகிரி தயாரித்திருந்தார்.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளது.
இப்படத்தின் தலைப்பிலேயே ரஜினியின் 2.ஓ படத்தை கிண்டல் செய்யும் வகையில் அமைத்துள்ளனர்.
அதாவது தமிழ்ப்படம் 2.0 என்று பெயரிட்டு அதன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.
வருகிற டிசம்பர் 11ஆம் தேதி இப்படத்தின் சூட்டிங் தொடங்கவுள்ளதாகவும் படத்தை அடுத்த வருடம் 2018 ஏப்ரல் 25ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் படம் ரிலீஸ் ஆன அடுத்த நாள் 2018 ஏப்ரல் 26ஆம் தேதி தமிழ் ராக்கர்ஸிஸ் இணையத்தளத்தில் இப்படம் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளனர்.
அதில் பைரசி பார்ட்னர் தமிழ் ராக்கர்ஸ் எனவும் டிசைன் செய்துள்ளனர்.
இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.