டாப் ஹீரோஸ் வரிசையில் சிவா; அவருக்கே இது அதிர்ச்சிதான்.!

Sivas Tamilpadam2 movie has special show at 5am on its release dateஒரு புதுப்படம் ரிலீஸ் என்றால் தியேட்டர்களில் தினசரி 4 காட்சிகள் திரையிடப்படும்.

அதுவும் பண்டிகை நாட்கள் என்றால் 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

டாப் ஹீரோக்களின் படங்கள் என்றால் அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்படும்.

கடந்த சில ஆண்டுகளாக இந்த நடவடிக்கை அதிகரித்து வருகிறது.

அதிகாலை என்பதை விட நள்ளிரவு என்பதே சரியாக இருக்கும். 4 மணிக்கு எல்லாம் முதல் காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன.

ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோரது படங்கள் இந்த வரிசையில் அடங்கும்.

இந்நிலையில் முதன்முறையாக மிர்ச்சி சிவா நடித்துள்ள தமிழ்ப்படம் 2 படத்தின் முதல் காட்சி சென்னையில் காலை 5 மணிக்கு திரையிடப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

சென்னை ரோகினி தியேட்டரில் இந்த காட்சி திரையிடப்பட உள்ளது.

சென்னையிலுள்ள ஜிகே. சினிமாஸ் தியேட்டரிலும் 5 மணி காட்சி திரையிடப்பட உள்ளது.

நிச்சயம் இந்த தகவல்கள் நடிகர் சிவாவுக்கே அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.

ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையே கலாய்த்து உருவாகியுள்ள இப்படம் நாளை ஜீலை 12ஆம் தேதி வெளியாகிறது.

Sivas Tamilpadam2 movie has special show at 5am on its release date

Overall Rating : Not available

Latest Post