தமிழ்ப்படம் 2.0 பாடல் வெளியீடு; டென்ஷனில் சிம்பு-தனுஷ் ரசிகர்கள்

TP2point0கடந்த 2010ஆம் ஆண்டு அமுதன் இயக்கி சிவா நடிப்பில் வெளியான படம் தமிழ்ப்படம்.

ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையே கலாய்த்த இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

இப்படத்திற்கு தமிழ்ப்படம் 2.0 என்று பெயரிட்டுள்ளனர்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அரசியல் உலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சசிகாந்த் தயாரித்துள்ள இப்படத்தில் சிவா உடன் திஷா பாண்டே, சந்தான பாரதி, மனோபாலா, சுந்தர் ராஜன், நிழல்கள் ரவி, சேட்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் சிங்கிள் ட்ராக் பாடலை இன்று மார்ச் 8ல் மகளிர் தினத்தில் வெளியிட்டுள்ளனர்.

இப்பாடல் கூட அண்மையில் வெளியான சில பாடல்களை கலாய்க்கும் வகையிலும் பெண்களின் சூப் சாங் ஆக உருவாகியுள்ளது.

சிம்பு நடித்த வானம் படத்தில் எவன்டி உன்ன பெத்தான் என்ற பாடல் வந்திருந்தது. அதுபோல் தனுஷ் நடித்த 3 படத்தில் பாய்ஸ் சூப் சாங் என்ற கொலவெறி பாடல் இடம் பெற்றிருந்தது.

தற்போது இந்த இரண்டு பாடல்களையும் கிண்டலடிக்கும் வகையில் எவடி உன்ன பெத்தா? அவன் கையில கிடச்சா செத்தான் எனவும் ஆண்களை திட்டியும் பாடலை வெளியிட்டுள்ளனர்.

இறுதியில் எங்கிருந்தாலும் நல்லா இருங்கடா என்று பாடலை முடித்துள்ளனர்.

இந்த பாடல் சிம்பு, தனுஷ் ரசிகர்கள் வருத்தமடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.

படம் வந்தால் யார்? யாரை எப்படியெல்லாம் கலாய்க்க போறாங்களோ-? தெரியலையே…

Overall Rating : Not available

Related News

ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் நம்ம ஹீரோக்களையும்…
...Read More
ஒரு புதுப்படம் ரிலீஸ் என்றால் தியேட்டர்களில்…
...Read More

Latest Post