ரசிகர்களுக்கு நியூ இயரில் டபுள் ட்ரீட் தர தயாராகும் தளபதி

ரசிகர்களுக்கு நியூ இயரில் டபுள் ட்ரீட் தர தயாராகும் தளபதி

Thalapathy 65 Vijayவிஜய் & விஜய்சேதுபதி நடித்துள்ள ’மாஸ்டர்’ திரைப்படம் 2021 பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது.

இதனால் 2021 பிறக்கும் சமயத்தில் மாஸ்டர் பட டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து விஜய்யின் தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

’தளபதி 65’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில் இப்பட டைட்டில் வரும் புத்தாண்டு தினத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

2021 புத்தாண்டு தினத்தில் ’தளபதி 65’ டைட்டில் & ’மாஸ்டர்’ பட டிரைலர் வெளியானால் தளபதி ரசிகர்களுக்கு டபுள் சந்தோஷம் தானே..

Thalapathy Vijay’s double treat on New Year to his fans

ஆன்மிகத்தை காட்டி திமுகவை வீழ்த்த நினைக்கின்றனர்..; ரஜினியை வாழ்த்திய சில மணி நேரங்களிலேயே அவரை தாக்கிய ஸ்டாலின்

ஆன்மிகத்தை காட்டி திமுகவை வீழ்த்த நினைக்கின்றனர்..; ரஜினியை வாழ்த்திய சில மணி நேரங்களிலேயே அவரை தாக்கிய ஸ்டாலின்

MK Stalin Rajinikanthசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று 12-12-2020 தனது 70வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

அவரை கண்டு வாழ்த்து சொல்ல போயஸ் கார்டனில் ரசிகர்கள் திரண்டனர்.

ஆனால் ரஜினி வீட்டில் இல்லை என்பதால் அவரது குடும்பத்தாரிடம் வாழ்த்துக்களை சொல்லி திரும்பினர்.

பிரதமர் மோடி, தமிழக முதல்வர், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அவரை வாழ்த்திய சில மணி் நேரங்களிலேயே ரஜினி விரைவில் தொடங்கவுள்ள ஆன்மிக அரசியலை மறைமுகமாக தாக்கியுள்ளார் திமுக தலைவர் முக ஸ்டாலின்.

ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.

அவர் பேசியதாவது…

திமுக-வை வீழ்த்த எந்த சக்தியாலும் முடியாது. ராமநாதபுரத்தில் குடிநீர் திட்டத்தை, நிறைவேற்றியது திமுக ஆட்சி தான்.

“ஆன்மிகத்தை காரணம் காட்டி திமுகவை வீழ்த்தலாம் என சிலர் நினைக்கின்றனர்

மக்களுக்கு சேவை செய்வதுதான் மகத்தான ஆன்மிகம் என சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார்.

ஏழைகளை காக்க கூடியவர்கள்தான் உண்மையில் ஆன்மிகத்தை நேசிப்பவர்கள்

ஏழைகள் முன்னேற்றத்திற்கு உருவாக்கப்பட்ட கட்சிதான் திமுக.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

MK Stalin slams Rajiniaknth’s party Ideology

பிறந்த‌நாளில் வாழ்த்திய பிரதமர் முதல்வர் எதிர்கட்சி தலைவர் & உலகளாவிய ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி

பிறந்த‌நாளில் வாழ்த்திய பிரதமர் முதல்வர் எதிர்கட்சி தலைவர் & உலகளாவிய ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி

Rajinikanthசூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இன்று 12-12-2020 தனது 70வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

அவரை கண்டு வாழ்த்து சொல்ல போயஸ் கார்டனில் ரசிகர்கள் திரண்டனர்.

ஆனால் ரஜினி வீட்டில் இல்லை என்பதால் அவரது குடும்பத்தாரிடம் வாழ்த்துக்களை சொல்லி திரும்பினர்.

மேலும் ரஜினிக்கு வாழ்த்து சொல்லாதவர்களே இல்லை என்னுமளவுக்கு அனைத்து துறையினரும் ரஜினியை வாழ்த்தி வருகின்றனர்.

பிரதமர் மோடி, தமிழக அரசியல் தலைவர்கள், சச்சின் டெண்டுல்கர், மோகன்லால் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் விரைவில் அரசியம் களம் காணவுள்ளதால் அவரது ரசிகர்கள் இம்முறை படு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் பாரத பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு ரஜினி நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் தன் பிறந்தநாளை உற்சாகத்துடன் கொண்டாடி வரும் உலகமெங்கும் உள்ள ரசிகர்களுக்கும் தன்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களுக்கும் மனமார்ந்த நன்றி என ரஜினிகாந்த் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Rajinikanth thanked politicians and all for birthday wishes

ரஜினி தூய்மையானவர்.. அவர் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் வளம் பெறும்..; ரஜினி தத்தெடுத்த தந்தை ‘பாலம்’ கல்யாணசுந்தரம் பேட்டி

ரஜினி தூய்மையானவர்.. அவர் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் வளம் பெறும்..; ரஜினி தத்தெடுத்த தந்தை ‘பாலம்’ கல்யாணசுந்தரம் பேட்டி

rajinikanthபாலம் என்ற சமூக சேவை அமைப்பை நடத்தி வருபவர் கல்யாணசுந்தரம்.

தான் வைத்திருந்த சொத்துகள் அனைத்தையும் ஏழை மக்களுக்கு எழுதிக் கொடுத்தவர்.

இவரின் சேவைகளை பலரும் பாராட்டி வந்தனர்.

ஆனால் ரஜினி ஒரு படி மேலே சென்று இவரை தந்தையாக தத்தெடுத்தார்.

அதாவது… 1999ம் ஆண்டு காமராஜர் அரங்கில் நடைபெற்ற பாலம் கல்யாண சுந்தரம் பாராட்டு விழாவில் ரஜினி பங்கேற்றார்.

தான் வாழும்போதே தன் சொத்துகளை எழுதித் தரும் மகானுக்கு நான் மகனாக வேண்டும். எனக்கு 2 மகள்கள் உள்ளனர், தந்தை இல்லை.

எனவே, நீங்கள் எனக்குத் தந்தையாக இருக்க வேண்டுமென போயஸ் கார்டன் இல்லத்திற்கு பாலம் கல்யாண சுந்தரத்தை அழைத்துச் சென்றார் ரஜினி.

“போயஸ் கார்டன் இல்லத்தில் ராஜா போல வாழ்ந்தாலும் வசதியான சிறையில் இருப்பதைப் போல உணர்ந்தேன்.

என் சமூக சேவைக்கு அது தடையாக இருந்தது. பொது மக்களுக்கு உதவிசெய்ய நேரம் ஒதுக்க முடியவில்லை” என கூறி ரஜினி வீட்டில் இருந்து வெளியேறினார் கல்யாண சுந்தரம்.

இந்த நிலையில் இன்று ரஜினிகாந்த் 70வது பிறந்த பிறந்தநாளையொட்டி அவரைச் சந்திக்க வந்துள்ளார் கல்யாணசுந்தரம்.

ரஜினி வீட்டில் இல்லாததைத் தெரிந்துகொண்டு அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து விட்டு புறப்பட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம்…

“ரஜினி நல்ல மனிதர், தூய்மையானவர். அவர் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நன்றாக இருக்கும், வளம் பெறும் என “பாலம்” கல்யாணசுந்தரம் தெரிவித்தார்.

Paalam Kalyana Sundaram praises Rajinikanth

‘ஜாங்கிரி’ மதுமிதா இடுப்பில் தீக்காயம்..; விஜய்சேதுபதியுன் ‘அனபெல் சுப்ரமணியம்’ சூட்டிங்கில் பரபரப்பு

‘ஜாங்கிரி’ மதுமிதா இடுப்பில் தீக்காயம்..; விஜய்சேதுபதியுன் ‘அனபெல் சுப்ரமணியம்’ சூட்டிங்கில் பரபரப்பு

Annabelle Subramaniamவிஜய்சேதுபதி, டாப்சி நடிப்பில் உருவாகி வரும் படம் அனபெல் சுப்ரமண்யம்.. பிரபல இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர் ராஜன் இந்தப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா, ‘ஜாங்கிரி’ மதுமிதா, யோகிபாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்..

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஜெய்ப்பூரில் துவங்கி நடைபெற்றது.

இந்த படப்பிடிப்பின்போது மதுமிதா காட்டிய அர்ப்பணிப்பு உணர்வை படக்குழுவினர் ரொம்பவே சிலாகித்து பேசி வருகின்றனர்.

ஒருநாள் வேகமாக சமைக்கும் சமையல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அந்த காட்சியில் மதுமிதா பங்குகொண்டு வேகவேகமாக சமையல் செய்யவேண்டும்..

அப்போது எதிர்பாராத விதமாக சூடான எண்ணெய் தெறித்து, மதுமிதாவின் இடுப்பு பகுதியில் காயத்தை ஏற்படுத்தியது..

ஒருபக்கம் வலியால் துடித்தாலும், மிகப்பெரிய அளவில் செலவு செய்து படமாக்கப்படும் காட்சி என்பதாலும், அதில் தனது பங்களிப்பு முக்கியமானது என்பதாலும் தன்னால் படப்பிடிப்பு தடைபட்டு விடக்கூடாது என்பதற்காக வலியை வெளிக்காட்டி கொள்ளாமல் அந்த காட்சியில் நடித்து முடித்துள்ளார் மதுமிதா.

அதனால் அன்றைய தினம் படப்பிடிப்பு முடிந்த பின்னரே இந்த விஷயம் படக்குழுவினருக்கு தெரியவந்திருக்கிறது. காயம்பட்ட இடமே ஒரு வடுவாக மாறியுள்ளது மதுமிதாவுக்கு.

அதன்பின் மதுமிதாவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.. காயத்தை உடனே சொல்லாமல் மறைத்ததற்காக இயக்குநர் மற்றும் யூனிட்டினர் மதுமிதாவை அன்புடன் கடிந்து கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல விரதம் மேற்கொள்வதை தவறாமல் கடைப்பிடித்து வருபவர் மதுமிதா. ஒருநாள் படப்பிடிப்பின்போது விரதம் மேற்கொண்ட மதுமிதா, நாள் முழுவதும் உணவருந்தாமல் படப்பிடிப்பில் நடித்துள்ளார்..

அன்றைய தினம் இரவு நேர படப்பிடிப்பும் தொடரவே, ஒரு கட்டத்தில் படப்பிடிப்பு தளத்திலேயே மயங்கி விழுந்துவிட்டார் மதுமிதா.

பதறிப்போன படக்குழுவினர் அவருக்கு முதலுதவி செய்து மயக்கம் தெளிவிக்க, அதன்பிறகும் கூட, தன்னுடைய காட்சியில் நடித்து முடித்த பின்பே சாப்பிட சென்றிருக்கிறார் மதுமிதா.

தன்னால் படக்குழுவினருக்கு சிறிய அளவில் கூட பாதிப்பு வந்துவிடக் கூடாது என்கிற மதுமிதாவின் எண்ணத்தை படக்குழுவினர் பாராட்டியுள்ளனர்.

Jangiri Madhumitha injured in Annabel Subramanyam shooting

ரஜினி பிறந்த நாளில் ரஜினியாகவே மாறிய ஹரீஷ் கல்யாண்..; ‘ஸ்டார்’ ஆக மாறிய தளபதி

ரஜினி பிறந்த நாளில் ரஜினியாகவே மாறிய ஹரீஷ் கல்யாண்..; ‘ஸ்டார்’ ஆக மாறிய தளபதி

இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்க யுவன் இசையமைத்து வருகிறார்.

‘பியார் பிரேமா காதல்’ படத்திற்கு பிறகு இதே கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

இந்த படத்திற்கு ‘ஸ்டார்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இன்று 12-12-2020 ரஜினி பிறந்த நாளையொட்டி ‘ஸ்டார்’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

தளபதி படத்தில் வரும் ரஜினியின் கெட்டப் போன்று இந்த பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சரியாக மதியம் 12 மணி 12 நிமிடத்திற்கு பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Harish Kalyan’s next film is titled Star

EpBTI1IVgAAmKyI

EpBTI1LUcAAHTOz

More Articles
Follows