கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாகும் செல்வராகவன் சாணிக் காயிதத்தில் உருக்கமான பதிவு

நடிகர்களை போல தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை 23 ஆண்டுகளாக உருவாக்கி வைத்திருப்பவர் செல்வராகவன்.

இதுவரை திரைக்குப் பின்னால் இயக்குனராக இருந்த செல்வராகவன் ‘சாணிக் காயிதம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.

இதில் கீர்த்தி சுரேஷ் இவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இப்படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்க அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்ற செல்வராகவன், 23 வருடங்களாக திரைப்படங்களை உருவாக்கி வந்த நான் இன்று நடிகனாகியுள்ளேன்.

இதற்கெல்லாம் நான் எனது ரசிகர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். அவர்கள் என்னை உருவாக்கினார்கள்” என உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Selva Raghavan’s emotional tweet on his upcoming film

Overall Rating : Not available

Latest Post