‘தலைவர் 170’ படத்தை இயக்கி தயாரிக்கும் ரஜினிகாந்த் குடும்பம்

‘தலைவர் 170’ படத்தை இயக்கி தயாரிக்கும் ரஜினிகாந்த் குடும்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ படம் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி தினத்தன்று தியேட்டர்களில் ரிலீசாகவுள்ளது.

‘அண்ணாத்த’ படத்தை அடுத்து ‘தலைவர் 169’ படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி.

முதன் முறையாக ரஜினி படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க முதன் முறையாக ரஜினி படத்தை இயக்கவிருக்கிறார் தேசிங்கு பெரியசாமி.

இவர் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கியவர்.

இந்த நிலையில் ‘தலைவர் 169’ படத்தை முடித்துவிட்டு ‘தலைவர் 170’ படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி.

இந்த படத்தை ரஜினி மகள்களான ஐஸ்வர்யா & சௌந்தர்யா தயாரிக்கிறார்களாம்.

ரஜினி மருமகனும் நடிகருமான தனுஷ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தனுஷ் ஏற்கெனவே ‘பவர் பாண்டி’ என்ற படத்தை இயக்கினார். இது சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

அதன் பிறகு படத்தை இயக்காமல் தன் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார் தனுஷ்.

தற்போது தன் மாமனார் ரஜினிக்காக மீண்டும் படம் இயக்க வருகிறார் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Thalaivar 170 project details here

ரஜினியின் ‘தலைவர் 169’ படத்திற்காக தேசிங்கு – ஏஜிஎஸ் கூட்டணி..?

ரஜினியின் ‘தலைவர் 169’ படத்திற்காக தேசிங்கு – ஏஜிஎஸ் கூட்டணி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thalaivar 169அரசியலுக்கு வராமலே அரசியலுக்கு முழுக்கு போட்டவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இவர் நடித்துள்ள ‘அண்ணாத்த’ படம் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி தினத்தன்று தியேட்டர்களில் ரிலீசாகவுள்ளது.

அரசியலுக்கு வராத காரணத்தினால் சினமாவில் முழுக்கவனம் செலுத்தி வருகிறார் ரஜினிகாந்த்.

‘அண்ணாத்த’ படத்தை அடுத்து ‘தலைவர் 169’ படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி.

இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

முதன் முறையாக ரஜினி படத்தை இயக்கவிருக்கிறார் தேசிங்கு பெரியசாமி.

இவர் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கியவர். இவருக்கு அண்மையில்தான் திருமணம் நடைபெற்றது.

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை கொரோனா ஊரடங்கு சமயத்தில் பார்த்த ரஜினி,தேசிங்கு பெரியசாமியைப் பாராட்டி தனக்கும் ஒரு கதை ரெடி பண்ண சொல்லியிருந்தார்.

அப்போது ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்திருந்த (2020) காலக்கட்டம் அது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே ‘தலைவர் 169’ குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Thalaivar 169 project details here

43 அமைச்சர்களுடன் மோடி அரசின் மத்திய அமைச்சரவை விரிவாக்கம்

43 அமைச்சர்களுடன் மோடி அரசின் மத்திய அமைச்சரவை விரிவாக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நரேந்திர மோடி அரசின் மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. 43 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.

இதன் மூலம் மத்திய அமைச்சரவையின் பலம் 77 ஆக அதிகரித்து உள்ளது

43 பேர் அமைச்சர்களில், 36 பேர் புதுமுகங்கள்.

ஏழு பேர் ஏற்கனவே அமைச்சரவையில் இருந்தவர்கள். அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது.

ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில், அவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

01. நாராயண் ரானே

02. சர்பானந்தா சோனாவால்

03. விரேந்திர குமார்

04. ஜோதிராதித்யா சிந்தியா

05. ராமசந்திரா பிரசாத் சிங்

06. அஸ்வினி வைஸ்னவ்

07. பசுபதி குமார் பரஸ்

09. கிரண் ரிஜ்ஜூ

09. ராஜ்குமார் சிங்

10. ஹர்திப் சிங் புரி

11. மனுசுக் மாண்ட்வியா

12. பூபேந்தர் யாதவ்

13. பர்சோத்தம் ரூபாலா

14. கிஷன் ரெட்டி

15. அனுராக் சிங் தாகூர்

16. பங்கஜ் சவுத்ரி

17. அனுபிரியா சிங் படேல்

18. சத்யபால் சிங் பாகேல்

19. ராஜிவ் சந்திரசேகர்

20. சுஷ்ரி சோபா கரன்தல்ஜே

21. பானுபிரதாப் சிங் வர்மா

22. தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ்

23. மீனாட்சி லேகி

24. அன்புர்னா தேவி

25 நாராயஸ்வாமி

26. கவுசல் கிஷோர்

27. அஜய் பட்

28. பிஎல் வர்மா

29. அஜய் குமார்

30. சவுகான் தேவ் சிங்

31. பக்வந்த் குபா

32. கபில் மோரேஸ்வர் பாட்டீல்

33. சுஷ்ரி பிரதிமா பவுமிக்

34. சுபாஷ் சர்கார்

35. பக்வந்த் கிஷன்ராவ் காரத்

36. ராஜ்குமார் ரஞ்சன் சிங்

37. பார்தி பிரவின் பவார்

38. பிஸ்வேஸ்வர் டுடு

39. சாந்தனு தாகூர்.

40. முஞ்சபரா மகேந்திரபாய்

41. ஜான் பர்லா

42. எல்.முருகன்

43. நிஷித் பிரமனிக்

ஆகியோர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.

Narendra Modi’s Council of Ministers inducts 43 new leaders

பாஜகவால் தோல்வி : இல்லையென்றால் வென்று கிழித்திருப்பார்களா?.; முன்னாள் அமைச்சருக்கு காயத்ரி நெத்தியடி கேள்வி

பாஜகவால் தோல்வி : இல்லையென்றால் வென்று கிழித்திருப்பார்களா?.; முன்னாள் அமைச்சருக்கு காயத்ரி நெத்தியடி கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விழுப்புரத்தில் அ.தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் இந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கி பேசினார்.

அவர் பேசியதாவது…

நாம் தேர்தலில் தோல்வி அடைய காரணம் பாஜக. கூட்டணி தான். இதனால் சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்து விட்டோம்.

தி.மு.க. தான் ஆட்சிக்கு வர வேண்டும் என பொதுமக்கள் விருப்பப்பட்டு வாக்களிக்கவில்லை” என்று பேசினார் சி.வி.சண்முகம்.

இதனையறிந்த நடிகையும் பாஜக உறுப்பினருமான காயத்ரி தன் ட்விட்டர் பதிவில் சி.வி.சண்முகத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அதில்…

அதிமுகவுடன் பாஜக கூட்டணி இல்லையென்றால் வென்று கிழித்திருப்பார்களா? தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர்களுக்கு பலம் அளித்தது பாஜக தான் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

பல ADMK வேட்பாளர்கள் இதை ஒப்புக் கொண்டுள்ளனர். கடந்த முறை அதிகாரத்தில் இருந்தபோதும், இந்த ஆண்டு ஆத்மார்த்தமாக மக்களை அடைய முடியவில்லை https://t.co/oGvLcczRFH

என்றால் அது யாருடைய தோல்வி?

என்னைப் போன்ற பாஜக ஆதரவாளர்களை காயப்படுத்தியுள்ளது. 1 மாதம் ஒவ்வொரு இடத்திலும் பயணம் செய்து இந்தத் தேர்தலில் நான் பாஜக மற்றும் ADMK காக பிரச்சாரம் செய்துள்ளேன்.

நான் கடின உழைப்பைக் கொடுத்தேன் வெற்றிக்காக. இது போன்ற அறிக்கைகளுக்கு நான் வலுவான பதிலைக் கொடுப்பேன்.

என்னைப் போலவே ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம் 10000 பா.ஜ.க உறுப்பினர்கள் ADMK பாஜக கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர். இதை அவர்கள் மறந்துவிடக் கூடாது.

பிரதமர் மோடி ஜீ காரணமாக தமிழ் மக்கள் பல வழிகளில் பயனடைந்துள்ளனர். எங்கள் கட்சி தமிழகத்தில் வளர்ந்துள்ளது.

ஆன்மீக மற்றும் தேசபக்தி கொண்ட தமிழ் மக்கள் எங்கள் பிரதமருடன் உள்ளனர்.

இவ்வாறு காயத்ரி பதிவிட்டுள்ளார்.

Gayathri Raghuram slams ex minister CV Shanmugam

சூடான தோசை முதல் ஹாட்டான ஆசை வரை.; சினிமாவாகிறது ‘சரவண பவன்’ அண்ணாச்சி-ஜீவஜோதி கதை

சூடான தோசை முதல் ஹாட்டான ஆசை வரை.; சினிமாவாகிறது ‘சரவண பவன்’ அண்ணாச்சி-ஜீவஜோதி கதை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீவஜோதியின் தந்தை சரவணபவனில் மேலாளராகப் பணிபுரிந்தார்.

அப்போது ஜோதிடர்களின் அறிவுரையின் பேரில், ஏற்கெனவே 2 முறை திருமணம் செய்த ராஜகோபால் தான் ஆசைப்பட்ட ஜீவஜோதியை 3வது திருமணம் செய்ய விரும்பினார் ராஜகோபால்.

ஆனால், பிரின்ஸ் சாந்தகுமாரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் ஜீவஜோதி.

தான் ஜீவஜோதியைத் திருமணம் செய்ய அவரது கணவர் சாந்தகுமார் தடையாக இருந்ததால் போட்டுத் தள்ளினார் ராஜகோபால்.

எனவே ஹோட்டல் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு, ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலைவழக்கில், ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்த இந்த வழக்கு தற்போது ஜீவஜோதி சம்மதம் பேரில் திரைப்படமாக்க உள்ளது.

அதன் விவரம் வருமாறு…

தோசை அரசனுக்கு எதிரான ஜீவஜோதியின் போர், இந்திய சினிமாவில், பல வித்தியாசமான களங்களில் முன்னோடி படங்களான Badhaai Ho, Bareilly Ki Barfi, Talvar மற்றும் Raazi, போன்ற தீவிரமான படைப்புகளை தந்த Junglee Pictures நிறுவனம், உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு மீண்டும் ஒரு அற்புதமான படைப்பை வழங்கவுள்ளது.

Junglee Pictures நிறுவனம் திருமதி ஜீவஜோதி சாந்தகுமாரின் வாழ்க்கை கதையை அனைத்து மொழிகளிலும் திரைப்படமாக எடுப்பதற்கான உரிமையை பெற்றுள்ளது.

தமிழகத்தில் தொடர் உணவக நிறுவனங்களை நிறுவி, கொடி கட்டி பறந்த P.ராஜகோபால் V. மீது தேசமே அதிர்ச்சியுறும் வகையிலான குற்றங்களை சுமத்திய, ஜீவஜோதியின் வாழ்வில் நடந்த சம்பவங்களை, அது குறித்த வீடியோ, ஆடியோ, உண்மை செய்திகள், அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு திரைக்கதையாக மாற்றும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

இத்திரைப்படம் வாழ்வின் அடிமட்டத்திலிருந்து, வானளவு புகழுக்கு உயர்ந்த தொழிலதிபர், உணவின் சுவையை உலகம் முழுக்க கொண்டு சென்றவர்.

உலகம் முழுக்க 28 நாடுகளில் 100 உணவங்களை திறந்து, இந்தியாவின் மிகப்பெரும் தொடர் உணவகங்களின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவரின் வாழ்க்கை பக்கங்களை தொட்டு செல்லும்.

அவர் தமிழகத்தின் மிக முக்கிய புள்ளியாக திகழ்ந்தவர், பலருக்கு ஆதர்ஷமாக இருந்தவர். அவரது உழியர்கள் மட்டுமல்லாது பொது மக்களாலும் கொண்டாடப்பட்டவர்.

தென்னிந்திய உணவின் சுவையை உலகம் முழுக்க கொண்டு சேர்த்தவர். அப்படிபட்டவர் தன் வயதில் பாதியே இருந்த ஜீவஜோதியின் மீது ஆசைப்பட்டதும் அவரை அடைய நினைத்ததும், அதற்காக அவரது கணவர் சாந்தகுமாரை கொலை செய்த குற்றத்தில் சிக்கியதும், அதைத் தொடர்ந்து உண்மைகள் வெளிப்பட்டு நடந்த நீதிமன்ற வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதுமான நாட்டை உலுக்கிய இந்த சம்பவங்கள், உண்மையான ஆதார பின்னணியில் இப்படத்தில் இடம் பெறவுள்ளது.

தனது வாழ்க்கை கதையை உலகிற்கு சொல்ல விளைந்த திருமதி ஜீவஜோதி சாந்தகுமார் அவர்களுடன் உரையாடியபோது அவர் பகிர்துகொண்டதாவது..

“எனது வாழ்வில் நான் அடைந்த துன்பங்களை தாண்டி, உணர்வுப் பூர்வமிக்க சட்டத்தின் வழியிலான, எனது போராட்டத்தை, வசதி படைத்த உணவக முதலாளிக்கு எதிராக 18 வருடங்கள் நடந்த போரை, Junglee Pictures திரைப்படமாக உருவாக்க முன்வந்திருப்பது, மனதிற்கு நெகிழ்வை தருகிறது.

எனது கதையை பெரிய திரையில் காணும்போது ஆணாதிக்கத்தின் முகத்தை, நான் அனுபவைத்த வலியை அனைவரும் உணர்வார்கள் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

Junglee Pictures நிறுவனம் பிரபல திரைக்கதை ஆசிரியர் பவானி ஐயர் அவர்களை இப்படத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளது. பிரமாண்ட வெற்றி பெற்ற “Raazi” படத்திற்கு பிறகு Junglee Pictures அவருடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளது.

இப்படம் குறித்து பவானி ஐயர் கூறியதாவது..

இப்படத்திற்காக Junglee Pictures என்னை அணுகி, இக்கதையை கூறியபோது மிகப்பெரிய ஆச்சர்யம் உண்டானது.

ஆரம்பத்தில் வாழ்வை முன்னேற்றும் நம்பிக்கை மிக்க கதையாக ஆரம்பித்து தடாலென தடம் மாறி ஒவ்வொரு பெண்ணுக்குமான எச்சரிக்கை கதையாக மாறி நின்றது பெரும் அதிர்ச்சியை தந்தது.

வாழ்வின் மிகச்சிறிய ஒரு தருணம் உங்களை சந்தர்ப்பவாதியாக்கலாம் அல்லது குற்றத்தின் பாதிப்பில் சிக்கிகொள்பராகவும் மாற்றலாம்.

சமூகத்தில் மிகப்பெரும் சக்தி படைத்த ஒருவருக்கெதிராக ஜீவஜோதி பாதிக்கப்பட்டு, அதை எதிர்த்து மிகப்பெரும் போராட்டத்தை நடத்தியிருக்கிறார். அவரின் போராட்டம் அனைவரையும் ஆச்சர்யப்படுத்த கூடியது.

அவரது இந்த போராட்டம் எனக்கு மட்டுமல்ல மொத்த பெண் உலகத்திற்கும் மிகப்பெரும் பாடத்தை கற்றுதந்துள்ளது. இந்தகதை ஒரு பக்கம் குற்றத்தின் பிடியில் சிக்கி கொண்டு உயிர் பிழைக்க போராட்டம் நடத்திய கதையையும், இன்னொருபுறம் மிகப்பெரும் பணமும், அதிகாரமும், சக்தியும் எத்தனை தீய வழிகளுக்கு இட்டு செல்லும் என்பதையும் சொல்கிறது. இப்படியான கதையை எழுதுவது அற்புதமான சாவல். இதை எழுத ஆரம்பிக்க மிகப்பெரும் மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறேன் என்றார்.

இத்திரைப்படத்தில் பங்கு கொள்ளவுள்ள திறமையாளர்கள் குறித்து மிக விரைவில் தயாரிப்பாளர்கள் அறிவிப்பார்கள்.

Junglee Pictures நிறுவனம் சார்பாக கூறப்பட்டதாவது..

“மிகப்பெரும் ஆச்சர்யமளிக்கும் இந்த புதினத்தை பெரிய திரைக்கு கொண்டு வருவதற்கு மிக ஆர்வமுடன் காத்திருக்கிறோம்.

இந்த வழக்கு இந்தியா மட்டும்மல்ல உலக அளவில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய வழக்கு.

இருபது ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கு, இறுதியாக சுப்ரீம் கோர்ட் 2019 ல் தீர்ப்பு வழங்கிய போது தான் முடிவுக்கு வந்தது. தமிழக கிராமத்தின், ஒரு முனையில் ஏழ்மையின் பிடியில் சிக்கித்தவித்த ஒருவர், தன் நம்பிக்கையால் உலகம் முழுக்க பிரபலமான உணவங்களை எழுப்பி ஜெயித்த கதை, தடாரென திரும்பி அதிர்ச்சிதரும் சம்பவங்களுக்குள் பயணித்து, ஜீவஜோதியின் நியாயத்திற்கான 18 வருட
போராட்டத்தை உண்மைக்காக அவரின் நீண்ட பயணத்தை நம்பிக்கை கதையை சொல்லும்.

வாழ்வின் பாடத்தை தரும் இந்த அற்புதமான கதையை திரையில் உங்கள் பார்வைக்கு கொண்டுவர ஆர்வமுடன் காத்திருக்கிறோம்.

உண்மை சம்பவங்களை கொண்டு அற்புதமான கதைகள், வித்தியாசமான களங்களின் பின்னணியில் உருவாகும் தரமான படைப்புகள், என இந்தி திரையுலகத்தில், பாலிவுட்டில் மிகப்பெரும் பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகளை குவித்து மிகப்பெரும் பெயரை பெற்றிருக்கிறது Junglee Pictures நிறுவனம்.

தற்போது Rajkummar Rao மற்றும் Bhumi Pednekar, நடிப்பில் ‘Badhaai Do’ திரைப்படத்தையும் Ayushmann Khuranna மற்றும் Rakul Preet Singh நடிப்பில் ‘Doctor G’ படத்தையும் தயாரித்து வருகிறது.

Saravana-bhavan-rajagopal-jeevajothi

A biopic on Rajagopal and Jeeva Jothi real story

‘ஸ்ருதி’ பெயரில் ஹன்சிகாவின் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம்

‘ஸ்ருதி’ பெயரில் ஹன்சிகாவின் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை ஹன்சிகா மோத்வானி் ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும் “My Name is Shruthi” எனும் பரபர திரில்லர் படத்தில் நடிப்பதில் உற்சாகத்தில் உள்ளார்.

இந்தப்படம் சுதந்திரமாக இயங்கும் ஒரு பெண்ணின் வாழ்வை மையமாகக் கொண்ட, ஒரு சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் படமாக இருக்கும்.

அந்தப் பெண் ஒரு எதிர்பாரத அசாதாரண சூழ்நிலையில் மாட்டிக் கொண்டு அதிலிருந்து எவ்வாறு தப்பிச் செல்கிறார் என்பதே கதை.

இதற்கு மேல் விவரிப்பது தவறாக இருக்கும் மேலும் படத்தின் சுவாரஸ்யத்தை கெடுத்து விடும்.

நல்ல அனுபவம் மிகுந்த பல நடிகர்கள், இயக்குநர்களுடன் பல்வேறு மொழிகளில் பணிபுரிந்ததில், ஒரு கதை விவரிக்கப்படும்போதே, கதையில் உள்ள நிறை குறைகளை, கதையின் திருப்பங்களை கொஞ்சம் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

ஆனால் இயக்குனர் ஶ்ரீநிவாஸ் ஓம்கார் இந்தக் கதையை மிகவும் அற்புதமாக என்னிடம் விவரித்தார்.

இந்த படத்தில் பல காட்சிகளை அவர் விவரிக்கும் போது இருக்கை நுனியில் தான் அமர்ந்திருந்தேன் ஆரம்பத்திலிருந்து படத்தின் கிளைமாக்ஸ் வரை, எந்த இடத்திலும் என்னால் படத்தின் கதை எப்படி செல்லும் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

இப்படத்தில் அமைந்துள்ள திருப்பங்கள் மற்றும் சஸ்பென்ஸ் திரையில் ரசிகர்களை வெகுவாக கவரும் என உறுதியாக நம்புகிறேன். திரையரங்கில் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடுவார்கள்

இந்தப் படத்தின் நடிகர் முளரி ஷர்மா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மார்க் கே ராபின் இந்தப் படத்திற்கு இசை அமைக்கிறார், Kishore Boyidapu ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தை Ramya Burugu மற்றும் Nagender Raju இருவரும் Vaishnavi Arts நிறுவனம் சார்பில் தயாரிக்கின்றனர்.

Hansika’s suspense thriller is titled My name is shruthi
IMG-20210707-WA0022

More Articles
Follows