மீண்டும் இணைந்த ‘டெடி’ கூட்டணியில் கைகோர்த்த தனுஷ் பட நடிகை

மீண்டும் இணைந்த ‘டெடி’ கூட்டணியில் கைகோர்த்த தனுஷ் பட நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொரு விதமாக எடுத்து ரசிகர்களுக்கு விருந்து படைப்பவர் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன்.

இவரின் நாணயம் வங்கிக் கொள்ளையைப் பற்றியது.

அதன்பின்னர் இயக்கிய நாய்கள் ஜாக்கிரதை படமானது துப்பறியும் கதை. மிருதன் படமானது ஸாம்பி கதை. டிக் டிக் டிக் விண்வெளி ஆராய்ச்சி கதை.

இறுதியாக வெளியான டெடி படம் பொம்மை ஃபேண்டஸி கதை.

ஆர்யா நடித்த ‘டெடி’ படம் இந்தாண்டு மார்ச் மாதம் ஓடிடி தளத்தில் வெளியாகி பின்னர் சின்னத்திரையிலும் ஒளிப்பரப்பானது.

இந்த படம் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது.

இப்போது ‘டெடி’ கூட்டணி மீண்டும் இணைகிறது.

சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் தனுஷின் ஜகமே தந்திரம் பட நாயகி ஐஸ்வர்ய லெட்சுமி நாயகியாக நடிக்கிறார். சிம்ரன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளது.

ஆர்யாவுக்கு இது வெகு சிறப்பான படமாக இருக்கும் என்றும் அவர் இதுவரை நடிக்காத கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Teddy combo joins again for a new film

ராஜூமுருகன் வரிகளில் ஷான் ரோல்டன் இசையில் ‘தல கோதும்…’ சூர்யா

ராஜூமுருகன் வரிகளில் ஷான் ரோல்டன் இசையில் ‘தல கோதும்…’ சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெய் பீம்’ படத்தின் தமிழ் ட்ரெய்லர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வெளியானது.

ட்ரெய்லரே மெகா ஹிட் ஆன நிலையில் தற்போது படத்தின் ‘தல கோதும்..’ பாடலின் லிரிக்கல் டிராக் வெளியாகியுள்ளது. கேட்பதற்கு இதமாக இருக்கும் இந்தப் பாடலுக்கு சீன் ரால்டன் இசையமைத்துள்ளார். பிரதீப் குமார் பாடியுள்ளார். ராஜூமுருகன் எழுதியுள்ளார்.

‘ஜெய் பீம்’ திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகியுள்ளது. ஆகையால், தெலுங்கில் ‘சிருகாலி..’ எனத் தொடங்கும் இதே பாடலின் லிரிக்கல் டிராக்கும் வெளியாகியுள்ளது.

‘சிருகாலி..’ பாடலை ஸ்ரீகாந்த் ஹரிஹரன் பாடியுள்ளார், நரசிம்மன் விருபுத்தூர் எழுதியுள்ளார்.
தல கோதும் (தமிழ்)- https://www.youtube.com/watch?v=sjhY4k6MVEc

சிருகாலி (தெலுங்கு)- https://www.youtube.com/watch?v=sYQZ52iPC7E
‘ஜெய் பீம்’ திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகி, இந்தத் தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆகிறது.

நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் வெளியாகிறது.

இத்திரைப்படத்தை தா.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். ஜோதிகா, சூர்யா இணைந்து அவர்களின் 2டி என்டர்டெய்ன்மென்ட் பேனரில் தயாரித்துள்ளனர்.

இந்தத் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் வழக்கறிஞர் சந்துருவாக, நடித்துள்ளார் சூர்யா.

படத்தினை ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணைந்து தயாரித்துள்ளார். ’ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு சீன் ரால்டன் இசையமைத்துள்ளார். படத்திற்கு கேமரா எஸ்.ஆர்.கதிர், எடிட்டர் ஃபிலோமின்ராஜா. கலை இயக்குநர் கதிர் பணியாற்றியுள்ளார்.

ThalaKodhum the next single from JaiBhim is out

சிம்பு உஷா டி.ராஜேந்தர் மீது நடவடிக்கை எடுக்க AAA தயாரிப்பாளர் போலீசில் புகார்

சிம்பு உஷா டி.ராஜேந்தர் மீது நடவடிக்கை எடுக்க AAA தயாரிப்பாளர் போலீசில் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கன்னித்தீவு கதையை போல் நடிகர் சிம்பு மற்றும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் மோதல் விவகாரம் நீண்ண்ண்டு கொண்டே செல்கிறது.

சில தினங்களுக்கு முன் சிம்புவின் தாய் உஷா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தரும் இந்த விவகாரம் குறித்து பேசினார்.

அப்போது

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தை வெளியிட முடியாதபடி மைக்கேல் ராயப்பன் மிரட்டல் விடுக்கின்றனர்.

தயாரிப்பாளர் சங்கம், நடப்பு வினியோகஸ்தர் சங்கமும் இணைந்து கட்டப்பஞ்சாயத்து செய்கின்றன.

இந்த விவகாரத்தை முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்ல அவரது வீட்டு முன் உண்ணாவிரதம் இருப்போம் என்றனர்.

இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மைக்கேல் ராயப்பன் நேற்று அளித்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது..

சிம்பு நடிப்பில், 2016ல், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தை தயாரித்தேன். இந்த படத்தை சொன்னபடி சிம்பு நடித்து கொடுக்கவில்லை. படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் என்பவர் இயக்கினார்.

இந்த படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்த நிலையில், படத்தை வெளியிடுங்கள். நஷ்டம் ஏற்பட்டால், அதற்கு ஈடாக, மீண்டும் ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பேன் என, சிம்பு உறுதி அளித்தார். அவரை நம்பி, நானும் படத்தை வெளியிட்டேன். ஆனால் படம் சரியாக ஓடவில்லை. 15 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.

அதில், 12 கோடி ரூபாய் வினியோகஸ்தர்களுக்கு தர வேண்டி உள்ளது. இது பற்றி திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தேன்.அப்போது தலைவராக இருந்த விஷால் உள்ளிட்ட நிர்வாகிகள் விசாரித்தனர்.

அவர்களிடம் படம் நடித்து தருவதாக, சிம்பு உறுதி அளித்தார். சங்க நிர்வாகிகள் மாறிய பின், ஏமாற்றும் நோக்கத்துடன் செயல்பட்டார்.

இது தொடர்பாக, பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடப்பு வினியோகஸ்தர் சங்கத்தில் புகார் அளித்தேன். சங்க நிர்வாகிகள், நஷ்டத்தை ஈடுசெய்ய சிம்பு புதிய படத்தில் நடித்து கொடுப்பது பற்றி தான், அவரது தாய் உஷாவிடம் கேட்டனர்.

மற்றபடி கட்டப்பஞ்சாயத்து செய்யவில்லை. உஷா பொய் புகார் அளித்துள்ளார். அதற்கு, அவரது கணவர் உடந்தையாக உள்ளார். என்னை ஏமாற்றிய சிம்பு, உஷா, டி.ராஜேந்தர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார் மைக்கேல் ராயப்பன்.

AAA producer complaint against STR family

ரஜினியின் ‘பச்சைத் தமிழன்’ இமேஜ்ஜை ஒரே வார்த்தையில் டேமேஜ் செய்த சௌந்தர்யா

ரஜினியின் ‘பச்சைத் தமிழன்’ இமேஜ்ஜை ஒரே வார்த்தையில் டேமேஜ் செய்த சௌந்தர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகின் எந்த மூலையில் எவர் வசித்தாலும் அவரை தொடர்பு கொள்ளும் எளிய சாதனமாக சமூக வலைத்தளங்கள் உருவெடுத்துள்ளன.

நம்முடைய நிஜ சமூகத்தை கூட மறந்து சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடப்பவர்களும் உண்டு.

புதிய உறவுகளை, நட்புகளை உருவாக்கவும் தொலைந்து போன தொலைத்து விட்ட பழைய நண்பர்கள் உறவை மீண்டும் புதுப்பிக்கவும் சமூக வலைத்தளங்கள் பயன்படுகின்றன.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த், ‘HOOTE’ என்ற வாய்ஸ் மூலம் தொடர்பு கொள்ளும் புதிய சமூக வலைதளம் ஒன்றை இன்று தொடங்கினார்.

இந்தியாவின் முதல் குரல் அடிப்படையிலான சமூக ஊடக தளமான இதற்கு ‘hoote’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதனை சன்னி போக்கலா என்பவருடன் இணைந்து அவர் தொடங்கியுள்ளார்.

இதை ரஜினி தன் குரலில் பதிவு செய்து நேரலையில் தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசும்போது…

எனக்கு எல்லாமே என் அப்பா தான். அவரின் ஆசியுடன் இதை தொடங்குகிறேன்.

தலைவர் குரலை கேட்கும் போது எனக்கு இந்த ஹூட் வாய்ஸ் சோஷியல் மீடியா குறித்த யோசனை தோன்றியது.

சிலருக்கு எழுத படிக்க தெரியாது. அவர்கள் தங்கள் குரலில் இதில் பதிவு செய்யலாம்.

என் அப்பாவுக்கு தமிழ் எழுத தெரியாது. ஆனால் அவருக்கு பல மொழிகள் தெரியும்”

என பேசினார் சௌந்தர்யா.

ரஜினிக்கு தமிழ் எழுத தெரியாது என்ற தகவல் அவரது ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் பேரதிர்ச்சியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நான் அரசியலுக்கு வருவேன் என 2017 டிசம்பர் 31ல் அறிவித்தார் ரஜினி. அதன் பிறகு சில தமிழ் ஆர்வலர்கள் ‘தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும்’ என எதிர்ப்பு குரல்கள் கொடுத்தனர்.

அப்போது பல சர்ச்சைகள் உருவான நிலையில் நான் ‘பச்சைத் தமிழன்’ என பதிலடி கொடுத்து இருந்தார் ரஜினிகாந்த்.

இந்த நிலையில் தற்போது அப்பாவுக்கு (ரஜினிக்கு) தமிழ் எழுத தெரியாது என சௌந்தர்யா சொன்னது பல சர்ச்சைகளை ரசிகர்கள் & தமிழர்களிடையே உருவாக்கியுள்ளது.

பச்சை தமிழனுக்கு தமிழ் எழுத தெரியாதோ..?? என விமர்சகர்கள் விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.

Soundarya Rajinikanth recent speech creates controversy

வழக்கறிஞராக சூர்யா மிரட்டும் ‘ஜெய் பீம்’ பட ஹிந்தி ட்ரெய்லர் வெளியானது

வழக்கறிஞராக சூர்யா மிரட்டும் ‘ஜெய் பீம்’ பட ஹிந்தி ட்ரெய்லர் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெய் பீம்’ படத்தின் தமிழ் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை வெளியான இந்த ட்ரெய்லர் இணையத்தில் ட்ரெண்டானது. வழக்கறிஞர் சந்துருவாக, ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் சூர்யா ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார்.

இப்போது இந்தி ரசிகர்களை மகிழ்விக்க, படத்தின் இந்தி ட்ரெய்லரும் வெளியிடப்பட்டுள்ளது.

‘ஜெய் பீம்’ திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தத் தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆகிறது.

நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் வெளியாகிறது.

‘ஜெய் பீம்’ இந்தி ட்ரெய்லருக்கான லிங்க்: http://youtu.be/nnXpbTFrqXA

இத்திரைப்படத்தை தா.செ.ஞானவேல் இயக்கியுள்ளார்.

ஜோதிகா, சூர்யா இணைந்து அவர்களின் 2டி என்டர்டெய்ன்மென்ட் பேனரில் தயாரித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தினை ராஜசேகர் கர்பூரசுந்தரபாண்டியன் இணைந்து தயாரித்துள்ளார்.

’ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு சீன் ரால்டன் இசையமைத்துள்ளார்.

படத்திற்கு கேமரா எஸ்.ஆர்.கதிர், எடிட்டர் ஃபிலோமின்ராஜா. கலை இயக்குநர் கதிர் பணியாற்றியுள்ளார்

Prime Video drops the ‘Hindi’ trailer of Suriya-Starrer JAI BHIM

விஜய் தேவரகொண்டாவின் LIGER Saala Crossbreed மாஸ் டான்ஸ் சூட்டிங் அப்டேட்

விஜய் தேவரகொண்டாவின் LIGER Saala Crossbreed மாஸ் டான்ஸ் சூட்டிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு திரையுலகில் வெற்றி நாயகனாக தனது முத்திரையை பதித்திருக்கும் இளம் ஹீரோ விஜய் தேவரகொண்டா நடிக்கும் LIGER ( saala Crossbreed ) படத்தை கமர்ஷியல் கிங் இயக்குநராக புகழப்படும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்குகிறார்.

இப்படம் மார்ஷியல் ஆர்ட்ஸ் ஆக்சன் படமாக மட்டுமல்லாமல், கமர்ஷியல் படத்திற்கான அனைத்து அம்சங்களும் நிறைந்த படமாக உருவாகிவருகிறது.

விஜய் தேவரகொண்டா தனது முந்தைய படங்களில், பாடல்களில் பெரிதாக நடனமாடவில்லை. அவரது நடன திறமையை வெளிப்படுத்தும் வகையிலான கதைகள் அப்படங்களில் இல்லை.

ஆனால் இந்த Liger திரைப்படத்தில், உங்களையெல்லாம் ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கும்படி, அட்டகாசமான நடனத்தை வெளிப்படுத்தவுள்ளார்.

படக்குழு இந்த அதிரடி மாஸான டான்ஸ் பாடலை, மும்பையில் மிகப்பெரும் பட்ஜெட்டில் அமைக்கப்பட்ட அரங்கில் படமாக்க ஆரம்பித்துள்ளது. விஜய்தேவரகொண்டா, சார்மி இருவரும் இதில் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். சமூக வலைதளத்தில் வெளியான புகைப்படத்தில் விஜய் தேவரகொண்டா டான்ஸ் ஆடுவதில், மிக மகிழ்ச்சியாக காணப்படுகிறார்.

இப்புகைப்படத்தை சார்மி கவுர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பெரும் உற்சாகத்துடன் வெளியிட்டு, அதிரடி மாஸான மசாலா நடனம் கொண்ட, கொண்டாட்டம் மிகுந்த பாடலை, ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

அவர் டிவிட்டில் குறிப்பிட்டுள்ளதாவது..

#liger நடன பாடல் மும்பையில் படமாகிறது. நம்புங்கள் @TheDeverakonda முன்னெப்போதும் கண்டிராத வகையில் நடனமாடியுள்ளார். அதிரடி மாஸான மசாலா நடனம் கொண்ட, கொண்டாட்டம் மிகுந்த பாடலை, ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் பின்குறிப்பு – இந்த ஆணழகனின் நடனத்தை கண்டு, எனது அடிவயிற்றில் பறக்கும் பட்டாம்பூச்சி உணர்வால், பாடல் தந்த உற்சாகத்தால் இந்த டிவிட் பகிரப்பட்டது @PuriConnects @DharmaMovies ,”
என்று பகிர்ந்துள்ளார்.

இப்படத்தினை Puri connects நிறுவனம், பாலிவுட்டின் முன்னணி நிறுவனமான Dharma Productions உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.

இந்தியளவில் பன்மொழி திரைப்படமாகும் உருவாகும் இப்படத்தை Puri connects மற்றும் Dharma Productions நிறுவனங்கள் மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக்கி வருகிறது.

மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவினை விஷ்ணு சர்மா செய்கிறார். தாய்லாந்தை சேர்ந்த ஸ்டண்ட் கலைஞரான Kecha சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அபூர்வா மேத்தா இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர்.

பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே, விஜய் தேவரகொண்டா ஜோடியாக அவரது காதலியாக நடிக்கிறார். உலக குத்துசண்டை பிரபலம் மைக் டைசன் அவர்கள் மிக முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார்.

ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் மிக முக்கிய அகதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். லைகர் (Liger) படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் உருவாகிறது.

நடிகர்கள் : விஜய் தேவரகொண்டா, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே, மற்றும் கெட்டப் ஶ்ரீனு.

இயக்கம் : பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள் : பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அபூர்வா மேத்தா
தயாரிப்பு நிறுவனங்கள் : Puri connects and Dharma Productions
ஒளிப்பதிவாளர்- விஷ்ணு சர்மா
கலை இயக்கம்- ஜானி சையிக் பாட்ஷா
படதொகுப்பாளர்- ஜுனைத் சித்திக்
சண்டை காட்சிகள் இயக்குனர்- Kecha

Vijay Devarakonda’s Liger Song Shoot Begins in Mumbai

More Articles
Follows