முதல்வர் பதவியை தவிர்க்கும் ரஜினிக்கு தமிழருவி மணியனின் தரமான அட்வைஸ்

முதல்வர் பதவியை தவிர்க்கும் ரஜினிக்கு தமிழருவி மணியனின் தரமான அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth Tamilaruvi Manianகடந்த சில நாட்களாகவே ரஜினி ரசிகர்கள் மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த தமிழக அரசியலையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய விஷயம் என்னவென்றால்.. “ரஜினி கட்சி ஆட்சிக்கு வந்தால் ரஜினி முதல்வர் பதவியில் அமரமாட்டார்” என்ற ரஜினியின் சொல் தான்.

இது விவாதப் பொருளாக பார்க்கப்பட்ட நிலையில் விழுப்புரத்தில் காந்திய மக்கள் இயக்கம் மற்றும் ரௌத்திரம் இலக்கிய வட்டம் சார்பில் கூட்டம் நடைபெற்றது..

இதில் ‘ரஜினியின் எதிர்பார்ப்பு என்ன ? ஏமாற்றம் என்ன?’ என்ற தலைப்பில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேச்சின் சில துளிகள் இங்கே…

“ஒரு வார்டு கவுன்சிலர் ஆவதற்காக தன் கொள்கைகளை குழிதோண்டி புதைத்த மனிதர்களைதானே நாம் பார்த்துள்ளோம்.

ஆனால் ரஜினி பற்றற்ற ஒரு துறவியாகவே பாவிக்க கூடிய மனிதர் ஆவார்.

ஸ்டைல் மன்னன் ரஜினியின் மாஸ் புரோமோவை வெளியிட்ட டிஸ்கவரி் சேனல்

ராஜகண்ணப்பன் என்பவர் ஒருவர் இருக்கிறார்… 10 நாளைக்கு முன்பு அதிமுகவில் இருப்பார். அதற்கு முன்பு திமுக.வில் இருந்தார்.

அதற்கு முன் அதிமுக.வில் இருந்தார். மக்கள் நலனை விட அவருக்கு தன் நலனே முக்கியம்.

கொஞ்சமாவது இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு கோவம் வர வேணாமா? வராது போல.

வாடகை சைக்கிள் கடை வைத்திருப்பவர்கள் கூட நம்மை தெரியாது என்றால் வாடகைக்கு சைக்கிள் தர மறுப்பான்.

அரசியல் மாற்றம் என்பது வெறும் ஆட்சி மாற்றம் மட்டும் இல்லை.

ஒட்டுமொத்தமாக படிந்திருக்கும் இழிந்த அரசியல் கலாச்சாரத்தை தூக்கி போடுவதுதான் ரஜினியின் அரசியல் மாற்றம்..

அவர் அரசியலை தூய்மைப்படுத்தவே வருகிறார்….

ரஜினி என்னிடம் ஒருமுறை கேட்டார், “ஐயா, மாற்று அரசியல் என்று திரும்ப திரும்ப என்று நீங்கள்தான் பேசுகிறீர்கள்? நான் அந்த முதல்படியிலாவது நான் கால் வைக்க வேணாமா?” என்றார்.

“அது என்ன முதல்படி?” என்றேன்… அதற்கு அவர், “ஆட்சி வேறு, கட்சி வேறு. ஆட்சி ஒருத்தர் நடத்தட்டும், கட்சி ஒருத்தர் நடத்தட்டும்.

கட்சி நடத்துபவர்கள் ஆட்சியில் அமர்ந்தால், அது கட்சியின் ஆட்சியாக இருக்குமே தவிர, மக்களின் ஆட்சியாக இருக்காது” என்று ரஜினி சொன்னார்.

இதைவிட மக்களாட்சி தத்துவத்துக்கு வேறு யாரால் விளக்கம் சொல்ல முடியும்?

உடனே நான் கேட்டேன்.. “சரி.. கட்சியை ஒருவரிடம் தந்துவிடுங்கள், ஆட்சியை நீங்கள் வைத்து கொள்ளுங்கள்” என்றேன்.

இப்படி பேசும் ஒரு அரசியல்வாதியை காட்டுங்கள் பார்க்கலாம்.

ரஜினியின் “ஏமாற்றம்” என்னவென்றால் ரஜினி மன்றத்தினர் தமிழக மக்களை சென்று சந்திக்கவில்லை என்பது மட்டும்தான்.

மகாத்மா காந்தி நினைத்திருந்தால் அவர் இந்தியாவின் முதல் பிரதமராக வந்திருப்பார். யாரும் கேள்வி எழுப்பியிருக்க முடியாது..

ஆனால் ஜவஹர்லால் நேருவை பிரதமராக்கினார்… பின்னர் நேரு, காந்தியின் பேச்சை கேட்கவில்லை..

அதிகாரம் வலிமையானது என்பதை உணருங்கள் என்று ரஜினியிடம் சொன்னேன்..

முதல்வராக எடப்பாடியை பழனிசாமியை சசிகலாதான் தேர்வு செய்தார். 30 நாள்கூட தேற மாட்டார் என்று நினைத்த எடப்பாடியையே 3 வருஷம் ஆகியும் அசைக்க முடியவில்லை..

அமாவாசை என்றாலே எடப்பாடி என்றாகிவிட்டது.. அவரை்குறைத்து சொல்லவில்லை.. அவர் மீது மரியாதை இருக்கிறது.

கூவத்தூரில் எடப்பாடிதான் முதல்வர் என்று சொன்னதுமே அப்படியே முட்டி போட்டபடியே சசிகலாவிடம் வந்தார். இப்படி ஒரு அமாவாசை கிடைப்பார் என்று நாம்கூட நினைக்கவில்லை..

சசிகலா சிறைக்கு போனவுடன் முட்டி போட்டவர் எழுந்து நின்றார்.. அதான் அவரை அப்படி சொன்னேன்.

அண்மையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ரஜினி 3 விஷயங்களை பேசினார்.

அதில், ஆட்சிக்கு வந்தால் கட்சிப்பதவி பறிக்கப்படும். 48 வயதுக்குட்பட்டோருக்கு 60 சதவீதம் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்றார். இதற்கு ஒப்புக்கொண்ட மாவட்ட செயலாளர்கள் அடுத்து அவர் சொல்லிய விஷயத்திற்கு மட்டும் ஒப்புக்கொள்ளவில்லை. அது என்னவென்றால், நான் அதிகாரத்திற்கு வரமாட்டேன் என்றதுதான்..

அதிகாரம்.. பதவி… இதை ரஜினி புரிந்து கொள்ள வேண்டும்.. ரஜினி எந்த அமாவாசை பின்னால் செல்ல பார்க்கிறார்.

ஒருநாளும் இந்த தவறை ரஜினி செய்ய மாட்டார்.. ரஜினி அவர்களே.. நான் உட்பட எவனையும் நீங்கள் முதல்வர் என்று சொல்லாதீர்கள்.

கட்சித் தலைமையாக யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஆட்சித் தலைமையாக ரஜினி மட்டுமே இருக்க வேண்டும். இந்த கோரிக்கையை உங்களிடம் வைக்கிறேன்.

ரஜினி அனைத்துத் தலைவர்களையும் அரவணைக்கிறார். ஆனால் அவருக்கு ஆதரவாக எந்த அரசியல்வாதியும் பேசியதில்லை.

எம்ஜிஆரின் சுறுசுறுப்பு.. இந்திரா காந்தியின் கண்ட அதே விறுவிறுப்பு ரஜினியிடம் எனக்கு தெரிகிறது.” என்றார்.

இவ்வாறு தமிழருவி மணியன் பேசினார்.

நாடக கதையை திருடியே ஷங்கர் படம் எடுத்தார்; அடித்து சொல்வேன் – ராதாரவி

நாடக கதையை திருடியே ஷங்கர் படம் எடுத்தார்; அடித்து சொல்வேன் – ராதாரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Radha Ravi Shankarநடிகர் ஒய்.ஜி மகேந்திரனின் நாடக அரங்கேற்றம் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

அப்போது மேடையில் பேசினார் ராதாரவி.

“எனக்கு திமிரு என்பது உள்ளேயே இருக்கிறது ஆரம்பகாலத்திலிருந்து சொல்கிறேன்.

நல்ல நாடகங்களை போடுகிறார் ஒய்.ஜி.மகேந்திரன்.

தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தில் முதல் முறையாக பாஜக அரசு ஒரு தமிழரை பதவியில் அமர்த்தியுள்ளது.

ஒய்.ஜி மகேந்திரனின் நாடகக் கதையை கதையை பலர் திருடிவிட்டனர்.

டைரக்டர் ஷங்கரும் கதையை திருடி விட்டார்.

‘ரூபாய்க்கு மூணு கொலை’ என்ற நாடகத்தின் போது ஓரமாக அமர்ந்திருப்பார்.

அந்த நாடகங்களைப் பார்த்து அதிலிருந்து தான் இரட்டை வேடங்களில் உள்ள கதையை எடுத்துள்ளார் என அடித்துச் சொல்வேன்” என ராதாரவி கூறினார்.

புதுப்பேட்டை 2: ரசிகர்கள் மனதில் புது வெள்ளத்தை பாய்ச்சிய செல்வராகவன்

புதுப்பேட்டை 2: ரசிகர்கள் மனதில் புது வெள்ளத்தை பாய்ச்சிய செல்வராகவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pudhu Pettai Dhanushகாதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என தரமான படைப்புகளை கொடுத்தவர் செல்வராகவன்.

ஆனால் செல்வராகவன் & சூர்யா இணைந்த NGK உள்ளிட்ட படங்கள் தோல்வியை தழுவின.

இதனால் நிச்சயம் ஒரு வெற்றியை கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் செல்வராகவன்.

இந்த நிலையில் கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம் அடுத்தப்படம் குறித்து மாணவர்கள் கேட்டனர்.

தனுஷ் நடிக்கும் புதுப்பேட்டை 2 படத்தை இயக்க உள்ளேன், என அறிவித்தார்.

இதைக்கேட்டு மாணவர்கள் & செல்வா ரசிகர்கள் உற்சாகமாகினர்

மயக்கம் என்ன படத்திற்கு பிறகு செல்வராகவனும், தனுஷும் இணையவில்லை் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

ஒரு பொண்ணையே இப்படி தடவுறீங்களே..; அமலா பாலின் லெஸ்பியன் வைரல் வீடியோ.!

ஒரு பொண்ணையே இப்படி தடவுறீங்களே..; அமலா பாலின் லெஸ்பியன் வைரல் வீடியோ.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Amala paul kissing her friendசினிமாவில் அறிமுகமான சிந்து சமவெளி என்ற தன் முதல் படத்திலேயே சர்ச்சையை ஏற்படுத்தியவர் அமலா பால்.

மாமனாருடன் தகாத உறவு கொள்ளும் மருமகளாக நடித்திருந்தார்.

அதன் பின்னர் நடித்த மைனா படம் மூலம் சிறந்த நடிகை என பெயரை பெற்றார்.

இதனையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால்.

விஜய் நடித்த தலைவா படப்பிடிப்பின்போது இயக்குனர் விஜய்யின் மீது காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் ஒரு வருடத்திலேயே கருத்து வேறுபாடு விவாகரத்தும் பெற்றார்.

15 ஆண்கள் முன்னிலையில் ‘ஆடை’யின்றி நடித்த அமலாபால்

அதன் பிறகு டைரக்டர் விஜய் ஒரு டாக்டர் பெண்ணை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

ஆனால் அமலாபால் திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார்.

சமீபத்தில் ஆடை இல்லாமல் ஆடை படத்தில் நடித்தார்.

இந்நிலையில் தன் தோழியிடம் எல்லை மீறிய அமலாபாலின் லெசிபியன் ரொமான்ஸ் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பாகியுள்ளது.

இதனை பார்த்த பலரும் பலவிதமான பலான கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர்.


View this post on Instagram

Music, Stories, Laughs, Tears and LOVEEEEEEE = LIFEEEEEEE . #love #loveiseverywhere #letlovein and #pda 😉

A post shared by Amala Paul ✨ (@amalapaul) on

ஸ்டைல் மன்னன் ரஜினியின் மாஸ் புரோமோவை வெளியிட்ட டிஸ்கவரி் சேனல்

ஸ்டைல் மன்னன் ரஜினியின் மாஸ் புரோமோவை வெளியிட்ட டிஸ்கவரி் சேனல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini on discoveryடிஸ்கவரி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் ‘மேன் VS வைல்ட்’ என்ற நிகழ்ச்சியை வழங்கி சாகசங்கள் புரிந்து வருகிறார் பியர் க்ரில்ஸ்.

இவருடன் இணைந்து பல ஹாலிவுட் நடிகைகள் காட்டுக்குள் பயணம் செய்துள்ளனர்.

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் மோடி இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதும் இந்த நிகழ்ச்சி உலக அளவில் பிரபலமானது.

அண்மையில் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சிக்காக கர்நாடகா பந்திப்பூர் காட்டுக்குள் சென்றார்.

‘இன் டூ தி வைல்ட்’ என்று பெயரிடப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முதல் பிரபலமாக ரஜினி உள்ளார்.

அதனை தொடர்ந்து இந்நிகழ்ச்சி எப்போது ஒளிப்பரப்பாக போகிறது என்று பலரும் காத்திருந்தனர்.

வருகிற மார்ச் 28ஆம் தேதி இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்போவதாக டிஸ்கவரி சேனல் புரோமோ வெளியிட்டது.

அதில் ரஜினிகாந்த் காட்டில் குவாட் வகை பைக்கை ஓட்டி வந்தார்

தற்போது மேலும் புதிதாக ஒரு வீடியோவை டிஸ்கவரி சேனல் வெளியிட்டுள்ளது.

அதில் பாலத்தை கடப்பது, நெஞ்சளவு ஓடும் தண்ணீரில் நடப்பது என்று பல சாகசங்கள் உள்ளது.

இதுதான் உண்மையான சாகசம் என்று ரஜினிகாந்த் ஹாப்பியாக சொல்கிறார்.

கர்நாடகா கலவரத்தில் என் குடும்பத்தைக் காப்பாற்றிய கன்னடர் – இயக்குநர் கே.பாக்யராஜ் ருசிகர தகவல்!

கர்நாடகா கலவரத்தில் என் குடும்பத்தைக் காப்பாற்றிய கன்னடர் – இயக்குநர் கே.பாக்யராஜ் ருசிகர தகவல்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director K Bhagyarajகர்நாடகாவில் நடந்த கலவரத்தில் தன் குடும்பத்தைக் காப்பாற்றிய கன்னடர் ஒருவர் பற்றி திரைப்பட ஆடியோ விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் ருசிகர தகவலை
வெளியிட்டார் . இதுபற்றிய விவரம் வருமாறு:

எல்.சி. நீரஜா ஃபிலிம்ஸ் வழங்க டாக்டர் தணிகாசலம் தயாரிப்பில் அருணாச்சலம் ஆனந்த் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கும் படம் ‘டிம் டிப்’.

இப்படத்தில் புதுமுக நாயகன் மோனிஷ் குமார், சஞ்சனா சிங், பவர்ஸ்டார்,கே .ஆர். விஜயா ,பெரேரா நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு இசை- ஆதிப், ஹமரா, சி.வி ,கு.கார்த்திக் .

எடிட்டிங் பாஸ்கோ, நடனம் சாய் பாரதி.

‘டிம் டிப் ‘படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் பிரிவியூ தியேட்டரில் நடைபெற்றது.பாடல்களை இயக்குநர் கே .பாக்யராஜ் வெளியிட, படக்குழுவினர் பெற்றுக் கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் இயக்குநர் கே பாக்யராஜ் பேசும்போது,
“இங்கே
.இசையமைப்பாளர்கள் கதாநாயகன் எல்லோருடைய பெற்றோர்களையும் அழைத்து அவர்களுக்கு மரியாதை செய்து சந்தோஷப் படுத்தினார்கள். இது எல்லோருக்குமே அமைவதில்லை. இது ஒரு நல்ல விஷயம்.எல்லாரும் பேசும்போது தயாரிப்பாளர் எவ்வளவு ஒத்துழைப்பு கொடுத்தார் இயக்குநர் எவ்வளவு ஒத்துழைப்பு கொடுத்தார் என்று பேசினார்கள். இங்கே திரையிடப்பட்ட இரண்டு பாடல்களில் ஒரு பாடல் காட்சியில் கதாநாயகனும் நாயகியும் நெருக்கமாக இருக்க வேண்டிய காட்சி .ஆனால் சற்று இடைவெளி இருந்தது போல் தெரிந்தது. அவர்களுக்குள் ஹெமிஸ்ட்ரி இல்லையோ என்று தோன்றியது. அப்படிப்பட்ட காட்சிகளில் இருவரும் சங்கோஜப்பட்டு நடித்திருந்தார்கள்.இருவரும் ஒரு போர்வைக்குள் போர்த்திக் கொள்வது போல் முடிகிற அந்தக் காட்சிக்கு முன்பு இருந்த இடைவெளியில் அவர்கள் ஏதாவது செய்திருக்க வேண்டும். இருவரும் சங்கோஜப் பட்டுக் கொண்டிருந்தார்கள் .

நான் கூட ‘மௌனகீதங்கள்’ படத்தில் நடிக்கும்போது சரிதாவை வாங்க போங்க என்று தான் அழைப்பேன். அவருக்கு அது ஒரு மாதிரியாக இருந்தது .பெயர் சொல்லி அழையுங்கள் என்பார். நடிக்கும்போதெல்லாம் நன்றாக நடித்து விடுவோம் . பேசும்போது பெயர் சொல்லிக் கூப்பிட எனக்கு வாய் வார்த்தை வரவில்லை. காரணம் அவர் ‘தப்புத்தாளங்கள்’ போன்ற படங்களில் நடித்து மூத்தவர் என்கிற உணர்வு மனதில் இருந்ததால் கடைசி வரை பெயர் சொல்ல வாய் வார்த்தை வரவே இல்லை.

நமக்கு நெருக்கமான நண்பன், வாடா போடா என்று கூப்பிட்ட அந்த நண்பனுக்குத் திருமணம் ஆகி விட்டால் அவனது மனைவியை வாங்க போங்க என்றுதான் அழைப்போம் .அப்போது அவன் நீ அவளைப் பெயர் சொல்லிக் கூப்பிடலாம் என்பான். ஆனால் நமக்கு வாய்வராது .அதுதான் நமது பண்பாடு .ஏனென்றால் நண்பன் நமக்குத் தெரிந்தவன். அந்தப் பெண் யார் வீட்டுப் பெண்ணோ ? எனவே நமக்கு அப்படிச் சொல்லத் தோன்றாது. பெயர் சொல்லி அழைக்க நமக்குள் இடர்பாடு இருக்கும்.அந்த இடர்ப்பாடு மரியாதைக்குரிய இடர்ப்பாடுதான்.ஏனென்றால் அதுதான் நமது பண்பாடு.

சஞ்சனாசிங் பேசும்போது என்னைப் பற்றிப் பேசும்போது “நிறைய சொல்லிக் கொடுத்தார்” என்று சொன்னார் .பா. விஜய் படத்தில் நடித்த போது அவரைத் தெரியும். இப்படி எப்போதாவது தீபாவளிக்குத் தீபாவளி சந்திப்பதோடு சரி. ஆனால் அவர் சொல்வதைப் பார்த்தால் ஏதோ இவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்களோ என்று மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.பேசும்போது முழுமையாகப் பேசவேண்டும். மொட்டையாகப் பேசக்கூடாது. அதை தெளிவாக சொல்லியிருக்க வேண்டும்.இந்த படத்தில் பவர்ஸ்டார் ஜோடியாகத்தான் அவர் நடித்திருக்கிறார். பாக்யராஜ் சார் ஜோடியாக என்று என் பெயரை சேர்த்து விட்டார்.இதையெல்லாம் பார்ப்பவர்களுக்கு அடிக்கடி சந்தித்துக் கொள்வது போல் நினைத்துக்கொள்வார்கள். எனவே தெளிவாகப் பேச வேண்டும்.

தயாரிப்பாளர் பேசும்போது அவரது உற்சாகத்தை பார்த்து எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. கர்நாடகாவில் இருந்து வந்துள்ள ஒருவர் நம்பிக்கையோடு உற்சாகமாகப் பேசியது எனக்கு பிடித்திருந்தது.கர்நாடகா என்றதும் கன்னடர் அனைவரும் பிரச்சினை செய்பவர்கள் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் இவரைப் பார்க்கும் போது அங்கும் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்று எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது .’ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி ‘ படப்பிடிப்பு மைசூரில் நடந்துகொண்டிருந்த போது எங்கள் பிள்ளைகளுக்கு ஒரு வாரம் விடுமுறை கிடைத்ததால், படப்பிடிப்பில் வந்து பார்ப்பதாக பூர்ணிமா அழைத்து வருவதாகச் சொன்னார். அதன்படி என் மனைவியும் பிள்ளைகள் இரண்டு பேரும் சென்னையிலிருந்து பெங்களூர் ஏர்போர்ட்டில் வந்து இறங்கிய உடனேயே அங்கே கலவரம் ஆரம்பித்து விட்டது .சிட்டி மட்டுமல்ல போகிற இடமெல்லாம் கலாட்டா கல்லெறிதல் என்று தொடர்ந்திருக்கிறது.
தமிழ்நாட்டு பதிவு எண் வாகனங்கள் எல்லாம் தாக்கப்பட்டன .எங்கள் காரையும் தாக்க முயற்சி செய்தார்கள். கற்களும் வீசப்பட்டுக்கொண்டு இருந்தன.
சாலை எங்கும் டயர்களும் தடைகளும் ஆக இருந்தது.மைசூர் எப்படி வருவது என்று தெரியாமல் டிரைவர் குழம்பி எப்படியோ அங்குமிங்கும் ஓட்டி தட்டுத்தடுமாறி ஒரு ஊருக்குச் சென்றுவிட்டார். அந்த ஊர் பெங்களூரிலிருந்து இருபது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிராமம்

.அங்கே இவர்களைப் பார்த்த ஒரு பெரியவர் இந்த நிலையில் நீங்கள் வெளியே செல்ல வேண்டாம் .இரவு இங்கேயே தங்கி விட்டுப் பிறகு செல்லலாம் என்று கூறியிருக்கிறார். இவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து யோசித்த போது அவர் யோசிக்க வேண்டாம் உங்கள் காரை தமிழ்நாட்டு பதிவு எண் தெரியாத அளவுக்கு உள்ளே நிறுத்தி விடுங்கள் வெளியே தெரிந்தால் பிரச்சனை என்று ஒரு காம்பவுண்ட் கேட்டை திறந்து உள்ளே வழிவிட்டு, இங்கே பெண்களும் இருக்கிறார்கள் எங்கள் வீட்டுப் பெண்களோடு நீங்கள் தங்கிக் கொள்ளுங்கள் என்று அங்கே தங்க வைத்திருக்கிறார் .நானும் மைசூரில் பதற்றமாக இருந்தேன்.என் மனைவியிடம் பேசியபோது அந்த இடத்தில் பாதுகாப்பாக இருப்பதாகச் சொன்னார். நான் கர்நாடகாவிலுள்ள திரையுலகினரைத் தொடர்பு கொண்டேன் .அம்ப்ரீஷைத் தொடர்பு கொண்டபோது பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தார். மறுநாள் காலை போலீஸ் பாதுகாப்போடு அவர்களை அழைத்து வந்தார்கள்.இதை ஏன் சொல்கிறேன் என்றால் கன்னடர்கள் என்றாலே அப்படி இப்படி என்று நினைக்கிறோம் .எல்லாக் கன்னடர்களும் அப்படியில்லை. அவர்களிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள் .கலவரத்திலும் ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது என்பதற்கு அந்த ராசய்யா ஒரு சாட்சியாக இருக்கிறார். அவர்கள் ஏதோ ஒரு தமிழ்க் குடும்பம் என்ற வகையில்தான் என் மனைவி குழந்தைகளைக் காப்பாற்றினார்களே தவிர பாக்யராஜ் மனைவி குழந்தைகள் என்று அல்ல. ஏனென்றால் அது பிறகுதான் தெரியும்.

எனவே இங்கு வந்துள்ள கர்நாடகாவைச் சேர்ந்த இந்த தயாரிப்பாளரும் நிறைய படங்கள் தயாரிக்க வேண்டும். இந்தப் படத்தின் பாடல் காட்சி பார்க்கும் போது புதுமுக நாயகன் என்பதால் கொஞ்சம் கூச்சப்பட்டு நடித்திருப்பார் போல் தெரிகிறது இன்னும் காதல் காட்சிகளில் நெருக்கம் காட்டியிருக்கலாம். ஏனென்றால் நான் ஊரில் இருந்த போதெல்லாம் சினிமாவில் வரும் காதல் காட்சிகளை கிண்டலடித்து கேலி பேசிக்கொண்டிருப்பேன்.என்னை முதல் படத்தில் நடிக்க வைக்கும் போது எங்கள் இயக்குநர் முதலில் எடுத்த காட்சி பாடல் காட்சிதான்.’வான்மேகங்களே’ என்று பாட வேண்டும் . நான் மிகவும் கூச்சப்பட்டு நடித்தேன்.அப்போது என்னை சத்தம் போட்டு நடிக்க வைத்தார். ஆறு ஏழு டேக் வாங்கினேன். இப்படித்தான் நானும் கூச்சப்பட்டேன். போகப் போக சரியாகி விட்டது .
போக போக பழகிவிடும்.

இந்தப் படம் வெற்றியடைய வேண்டும்.
இயக்குநர் ஆனந்த் பேசும்போது இந்த படத்துக்கு ஆதரவு தரும்படி நான் கெஞ்சமாட்டேன் .படம் நன்றாக இருந்தால் ஆதரித்து எழுதுங்கள் ஊக்கப்படுத்துங்கள் என்று பேசினார் . அந்த நம்பிக்கை எனக்குப் பிடித்திருந்தது. அதுதான் ஒரு இயக்குநருக்கு இருக்க வேண்டும்.அவரை வாழ்த்துகிறேன்.” என்று கூறி வாழ்த்தினார்.

விழாவில் தயாரிப்பாளர் சங்கம் ‘கில்டு’ தலைவர்

ஜாக்குவார் தங்கம் பேசும்போது,

“இங்கே கர்நாடகாவிலிருந்து ஒரு தயாரிப்பாளர் வந்திருக்கிறார். இது வந்தாரை வாழ வைக்கும் தமிழகம். உங்களையும் வாழவைக்கும். எத்தனை பேர் வந்தாலும் இங்கே வாழலாம். வாழட்டும் வாழ்த்துகிறோம். தமிழ்நாட்டில் எத்தனையோ பேர் வாழலாம் .ஆனால் தமிழர்களைத் தமிழன்தான் ஆள வேண்டும் என்பது என்னுடைய கருத்து.

உங்கள் கர்நாடகாவிற்கு சொல்லுங்கள் தமிழர்கள் நல்லவர்கள். வந்தவரை வாழ வைப்பவர்கள் என்று. அதே போல் நீங்களும் தமிழர்களை வாழ்த்தவேண்டும் .தமிழர்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று கேட்டு சொல்லுங்கள்” என்றார்.

நடிகை சஞ்சனா சிங் பேசும்போது,
“இந்தப் படம் மிகவும் சிரமப்பட்டு எடுத்திருக்கிறார்கள். அனைவரும் நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

இங்கே பாக்யராஜ் சார் வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி. அவருடன் நடித்த போது நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுத்தார்.” என்றார்.

நாயகன் மோனிஷ் குமார் பேசும்போது ,
“நாங்கள் எனக்குச் சொந்த ஊர் ஊட்டி .இது எனக்கு முதல் படம் அல்ல ‘ என். ஜி .கே ‘ படத்தில் சூர்யா சாருக்கு நண்பனாக கூட ஒரு சின்ன வேடத்தில் நடித்திருக்கிறேன்.இது போல சில படங்களில் நடித்திருக்கிறேன்.வேறொரு படத்தின் படப்பிடிப்புக்காக இயக்குநர் ஊட்டி வந்தபோது என்னைச் சந்தித்தார். அப்படித்தான் இந்த படம் உருவானது .அப்பா, அம்மா திட்டுவார்கள் என்று ரொமான்ஸ் காட்சியில் கூட நான் நெருக்கமாக இருப்பதைத் தவிர்த்தேன்.இந்த படம் பல நண்பர்கள் சேர்ந்து உருவாக்கியிருக்கிறார்கள் .இதில் நானும் ஒரு பங்காக இருப்பதில் மகிழ்ச்சி “என்றார்.

இயக்குநர் அருணாச்சலம் ஆனந்த் பேசும்போது,

” நான் இந்தப் படத்தை காப்பாற்றுங்கள். எனக்கு உதவி செய்யுங்கள் படத்தை பற்றி பெரிதாக தூக்கி நிறுத்தி எழுதுங்கள் என்று நான் கெஞ்சப்போவதில்லை. ஏனென்றால் படம் நன்றாக இருந்தால் நீங்கள் தாராளமாக நன்றாகத்தான் எழுதுகிறீர்கள்.பாராட்டி ஊக்குவிப்பீர்கள். இல்லையென்றால் எழுதமாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும் .இந்த படத்தின் மேல் உள்ள நம்பிக்கையில் சொல்கிறேன் நீங்கள் நன்றாக எழுதுவீர்கள் “என்றார்.

விழாவில் நடிகர் பெரேரா, ‘கலைஞர் டிவி’ சி .ஆர் .பாஸ்கரன், நடன இயக்குநர் சாய் பாரதி, நடிகர்கள் அசால்ட் மது ,முரளி , இசையமைப்பாளர்கள் ஆதிப்,கு. கார்த்திக் .ஹமரா சி.வி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

More Articles
Follows