அனைத்து துறைகளிலும் முதலிடம்.; சிறந்த மாநில பட்டியலில் ஹாட்ரிக் அடித்த தமிழ்நாடு.!

அனைத்து துறைகளிலும் முதலிடம்.; சிறந்த மாநில பட்டியலில் ஹாட்ரிக் அடித்த தமிழ்நாடு.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆண்டுதோறும் சிறந்த மாநிலங்களுக்கான விருதை வழங்கி வருகிறது இந்தியா டுடே.

இந்தாண்டு, விருது பெற உள்ளவர்களின் பட்டியலை அந்த நாளிதழ் வெளியிட்டுள்ளது.

ஒட்டுமொத்த துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தை பெற்றுள்ளது.

2000 புள்ளிகளில் 1263.1 புள்ளிகளைப் பெற்று ஒட்டுமொத்தச் செயல்பாடு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான வகைப்பாட்டில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

இந்த விருதை, தமிழ்நாடு அரசு 2018, 2019 மற்றும் 2020 ஆகிய மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக பெற்றுள்ளது.

“மாநிலங்களின் சிறந்த மாநிலம்” எனும் விருது தமிழ்நாடு அரசிற்கு வழங்கப்படுகிறது.

இந்த விருதானது, கடந்து ஐந்து ஆண்டுகளில் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருதல், கல்வி, பொது சுகாதாரம், அடிப்படை வசதி ஆகியவற்றை உள்ளடக்கிய வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு, தொழில் முனைவோரை ஊக்குவித்தல், சுற்றுச்சூழல், ஆளுமைத் திறன், மாநிலத்தின் பொருளாதாரம், வேளாண்மை, வணிகச் சூழல் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மாநில அரசின் செயல்பாட்டை ஆய்வு செய்து வழங்கப்பட்டு வருகிறது்.

இது தொடர்பான கடிதத்தை இந்தியா டுடே நிர்வாகம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.

இந்தாண்டுக்கான விருது வரும் டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தமிழகத்திற்கு அடுத்தபடியாக இமாச்சல பிரதேசம் மாநிலம் இரண்டாம் இடத்திலும் பஞ்சாப் மாநிலம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Nadu wins the first place in India Today’s 2020 state of the states survey

India Today Survey

விபத்தில் சிக்கிய போதும் அசத்திய அஜித்.; ரசிகர்களின் வலியை தீர்த்த ‘வலிமை’ அப்டேட்

விபத்தில் சிக்கிய போதும் அசத்திய அஜித்.; ரசிகர்களின் வலியை தீர்த்த ‘வலிமை’ அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Valimai Ajithபோனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கி வரும் படம் ‘வலிமை’.

அஜித் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.

இதில் அஜித்துடன் ஹீமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு இப்படபடப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

அஜித் பைக் ரேஸ் பிரியர் என்பதால் அவரின் திறமைக்கு சவால் விடும் வகையில் பிரத்யேகமாக பைக் ஸ்டண்ட் காட்சிகளை படமாக்கி வருகிறார் வினோத்.

இதற்காக ஸ்பெஷல் பைக் ஒன்றும் வரவழைக்கப்பட்டுள்ளது.

இந்த காட்சிகளை படமாக்கிய போது அஜித்துக்குக் காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பைக்கை வீலிங் செய்யும்போது தவறி கீழே விழுந்து அஜித்துக்கு கையில் காயம் ஏற்பட்டதாம்.

இருந்தாலும் சில மணி நேரங்களிலேயே மீண்டும் அந்த காட்சியில் நடித்துக் கொடுத்தாராம் அஜித்.

அஜித் அந்த பைக்கில் ஸ்டண்ட் செய்யும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

பல மாதங்களாக வலிமை அப்டேட் வேண்டும் என அஜித் ரசிகர்கள் கேட்டுக் கொண்டே இருந்தனர். படத் தயாரிப்பாளர் போனி கபூரை காணவில்லை என்றெல்லாம் போஸ்டர் அடித்தனர்.

தற்போது வலிமை அப்டேட் வந்துள்ளதால் அவர்களின் வலி பறந்துவிட்டதாம்.

Pics of Ajith performing bike stunt at Valimai sets sends fans into frenzy

‘தி லயன் கிங்’ பாணியில் ஏஆர். முருகதாஸின் அடுத்த படம்

‘தி லயன் கிங்’ பாணியில் ஏஆர். முருகதாஸின் அடுத்த படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AR Murugadossவிஜய் நடித்து முடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் 2021 பொங்கலுக்கு வெளியாகும் எனத் தெரிகிறது-

இதனையடுத்து முருகதாஸ் இயக்கவுள்ள ‘தளபதி 65’ படத்தில் நடிக்கவிருந்தார்.

இப்பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படத்திலிருந்து விலகினார் முருகதாஸ்.

எனவே ‘தளபதி 65’ பட இயக்குநர் யார் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இதனையடுத்து முருகதாசின் அடுத்த பட ஹீரோ என்ற கேள்வி கோலிவிட்டில் எழுந்தது.

தற்போது ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து ஒரு படத்தை தயாரித்து இயக்கவுள்ளாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.

இந்தப் படம் அனிமேஷன் படமாக உருவாகவுள்ளதாம்.

அதாவது ‘தி லயன் கிங்’ பாணியில் இப்படம் இருக்கும் என கூறப்படுகிறது.

Director AR Murugadoss in next film details here

சூரி தனுஷ் அப்புறம்தான் சூர்யா..; வெற்றிமாறன் போட்ட ப்ளான்

சூரி தனுஷ் அப்புறம்தான் சூர்யா..; வெற்றிமாறன் போட்ட ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vetrimaranஅசுரன் என்ற மாபெரும் வெற்றிக்கு பிறகு வெற்றிமாறன் எந்த படத்தை இயக்கவில்லை.

ஆனால் சூரி ஹீரோவாக நடிக்கவுள்ள படத்தை தயாரித்து இயக்குகிறார் என்ற தகவல் வந்தது.

இதன் பின்னர் கலைப்புலி தானு தயாரிப்பில் சூர்யா நடிக்கவுள்ள வாடிவாசல் படத்தை இயக்குகிறார் எனவும் அறிவிப்புகள் வந்தன.

ஆனால் இரு படங்களின் சூட்டிங்கும் தொடங்கப்படாமலே இருந்தன.

இந்த நிலையில் விரைவில் சத்தியமங்கலம் காடுகளில் சூரி நடிக்கவுள்ள படத்தின் சூட்டிங் தொடங்கவிருக்கிறாராம் வெற்றிமாறன்.

இப்படத்தை முடித்துவிட்டு, எல்ரெட் குமார் தயாரிப்பில் தனுஷ் நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன்.

இந்த படங்களை முடித்துவிட்டு தான் கலைப்புலி தாணு தயாரிப்பில் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தை தொடங்குவாராம் வெற்றிமாறன்.

Vetrimaaran – Suriya’s Vaadi Vaasal gets delayed

தனுஷ் படத்திற்கு வித்தியாசமான தலைப்பிட்ட ‘ராட்சசன்’ இயக்குநர்

தனுஷ் படத்திற்கு வித்தியாசமான தலைப்பிட்ட ‘ராட்சசன்’ இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director ram kumar dhanushமாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கர்ணன்’ படத்தை அண்மையில் முடித்து கொடுத்தார் நடிகர் தனுஷ்.

தற்போது ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார்.

ஆனந்த் எல்.ராய் இயக்கும் ‘அந்தரங்கி ரே’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை முடித்துவிட்டு சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.

இதனையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படங்களை அடுத்து தான் ‘ராட்சசன்’ இயக்குனர் ராம்குமார் இயக்கத்ல் நடிக்க தேதிகளை ஒதுக்கவிருக்கிறார் தனுஷ்.

இப்படத்துக்கு ‘வால் நட்சத்திரம்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையில் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். அதன் விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

Dhanush – Director Ram Kumar’s new film is titled Vaal Natchathiram

மாதம்பட்டி ரங்கராஜ் & வாணி போஜன் இணையும் ‘கேசினோ’

மாதம்பட்டி ரங்கராஜ் & வாணி போஜன் இணையும் ‘கேசினோ’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Casino tamil movie‘மெஹந்தி சர்க்கஸ்’ என்ற வித்தியாசமான படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ்.

இதனையடுத்து கீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ படத்திலும் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருந்தார்.

தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார்.

இதில் நாயகியாக வாணி போஜன் நடிக்கிறார்.

இவர்களுடன் விஜய்யின் ‘சச்சின்’ பட இயக்குநர் ஜான் மகேந்திரன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இப்படம் மூலம் இவரும் நடிகராகிறார்.

‘கேசினோ’ என இந்தப்படத்திற்கு பெயரிட்டுள்ளனர்.

ஒளிப்பதிவாளராக விக்னேஷ் ஜே.கே, இசையமைப்பாளராக ஸ்டான்லி சேவி ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.

Madhampatty Rangaraj and Vani Bhojan joins for Casino

More Articles
Follows