SPB மறைவு.. பிரதமர் நரேந்திர மோடி & முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்

SPB மறைவு.. பிரதமர் நரேந்திர மோடி & முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

modi edappadi palanisamyபிரபல பாடகர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்ட எஸ்பி பாலசுப்பிரமணியம் காலமானார்.

இதனால் இந்திய இசை துறையே கலங்கி நிற்கிறது.

SPB மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.. அதில்..

With the unfortunate demise of Shri SP Balasubrahmanyam, our cultural world is a lot poorer. A household name across India, his melodious voice and music enthralled audiences for decades. In this hour of grief, my thoughts are with his family and admirers. Om Shanti.

முதல்வர் இரங்கல்…

ஐந்து தலைமுறைகள் தாண்டி, அரைநூற்றாண்டிற்கும் மேலாக கோடிக்கணக்கான நெஞ்சங்களை தனது காந்தக் குரலால் கட்டிபோட்ட பன்முக ஆளுமை திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களது மறைவு திரைத்துறைக்கும், இசையுலகிற்கும் ஈடில்லா பேரிழப்பு! #RIPSPB

என தமிழக முதல்வர் எடப்பாடி தெரிவித்துள்ளார்.

PM Modi and TN Cm EPS condoles legendary singer SP Balasubrahmanyam’s death

BIG BREAKING பிரபல பாடகர் எஸ்பி. பாலசுப்ரமணியம் மறைந்தார்

BIG BREAKING பிரபல பாடகர் எஸ்பி. பாலசுப்ரமணியம் மறைந்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sp balasubramaniamகொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகரும் பாடகருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 14-ம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார்.

அவருக்கு தொடர்ந்து வெண்டிலேட்டர், எக்மோ கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் இந்த மாதம் செப்டம்பர் மாத முதல்வாரத்திலிருந்தே எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்தார்.

நேற்று செப். 24ல் நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனைக்கு வந்து சென்றார்.

நாலு தலைமுறை குரலாக ஒலித்தவர்.. ஏழு தலைமுறை புகழ் பாடும்…; SPB மறைவுக்கு கமல் இரங்கல்

அப்போது அவர் கூறும்போது… எஸ்பிபி நலமாக இல்லை. கவலைக்கிடமாக உள்ளார்.

அவர்களது உறவினர்கள் அவர்கள் நம்பும் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள் என சொன்னார்.

இந்த நிலையில் எஸ். பி. பாலசுப்ரமணியம் இறந்துவிட்டதாக இயக்குனர் வெங்கட்பிரபு அவர்கள் தெரிவித்துள்ளார். அவர் சரியாக 1.04PM மணிக்கு இறந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

உலகை மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல் மருத்துவர்…; SPB மறைவுக்கு STR இரங்கல்

ஆனால் இன்னும் மருத்துவனை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகவில்லை.

இதனையடுத்து எஸ்..பி.பி. சரண் அவர்களும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

Singer Actor SP Balasubramanyam passed away

இரு தரப்பிலும் பிடிவாதம்.; நடிகர் சங்கத் தேர்தல் வழக்கு.. தீர்ப்பளிக்காமல் நீதிபதிகள் விலகல்

இரு தரப்பிலும் பிடிவாதம்.; நடிகர் சங்கத் தேர்தல் வழக்கு.. தீர்ப்பளிக்காமல் நீதிபதிகள் விலகல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

madras high courtகடந்த ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலை எதிர்த்து சங்க உறுப்பினர்கள் ஏழுமலை மற்றும் பெஞ்சமின் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தேர்தலை ரத்து செய்தார்.

எனவே இந்த உத்தரவை எதிர்த்து நடிகர்கள் விஷால், கார்த்தி மற்றும் நாசர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகள், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நடிகர்கள் விஷால் மற்றும் கார்த்தி தரப்பில், தேர்தலை தள்ளிவைக்க மட்டுமே சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், தங்களுடைய பதவிக்காலத்தை நீட்டிக்கவில்லை எனவும் தெளிவுபடுத்தினர்.

அப்போது, விஷால் தரப்பில், கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு ரூ.30 லட்சம் செலவிடப்பட்டுள்ள நிலையில் மறு தேர்தல் நடத்த சாத்தியமில்லை எனவும் வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதையடுத்து, நடிகர் சங்கத்திற்கு மறு தேர்தல் நடத்துவதா அல்லது வாக்கு எண்ணிக்கையை நடத்துவதா என்பது குறித்து இரு தரப்பும் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மறு தேர்தல் நடத்துவதா அல்லது வாக்கு எண்ணிக்கையை நடத்துவதா என்பது குறித்து இரு தரப்பும் மாற்றுக் கருத்துக்களை தெரிவித்தனர்.

இரு தரப்பிலும் சமாதானம் ஏற்படவில்லை.

இதையடுத்து, மேற்கொண்டு இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கை வேறு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும் என தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து வழக்கில் இருந்து நீதிபதிகள் விலகி விட்டனர்.

we are not interested to continue nadigar sangam case says high court judges

பாடகர் எஸ்பிபி உடல்நிலை கவலைக்கிடம்..; மருத்துவமனை அறிக்கையால் ரசிகர்கள் அதிர்ச்சி

பாடகர் எஸ்பிபி உடல்நிலை கவலைக்கிடம்..; மருத்துவமனை அறிக்கையால் ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sp balasubramaniamகொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகரும் பாடகருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 14-ம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார்.

அவருக்கு தொடர்ந்து வெண்டிலேட்டர், எக்மோ கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் இந்த மாதம் செப்டம்பர் மாத முதல்வாரத்திலிருந்தே எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்தார்.

இதையே மருத்துவமனை தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று செப். 24 எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை எஸ்.பி.பி.உடல்நிலை குறித்து விடுத்திருக்கும் அறிக்கையில்….

கடந்த 24 மணி நேரமாக அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும், மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Legendary singer SPB health condition critical now

ஓடிடி ரிலீஸ் சிக்கல்..: விஷாலின் ‘சக்ரா’ பட விற்பனையை இறுதி செய்ய கூடாது என ஐகோர்ட் உத்தரவு

ஓடிடி ரிலீஸ் சிக்கல்..: விஷாலின் ‘சக்ரா’ பட விற்பனையை இறுதி செய்ய கூடாது என ஐகோர்ட் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chakraவிஷால் நடித்துள்ள சக்ரா படத்தின் விற்பனையை இறுதி செய்யக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சக்ரா படத்தை ஓடிடி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை செப்டம்பர் 30 வரை நிறுத்திவைக்க வேண்டும்.

தங்களிடம் கூறிய கதையை கொண்டு சக்ரா படம் உருவாக்கப்பட்டுள்ளதாக டிரைடென்ட் நிறுவனம் வழக்கு தொடர்ந்து இருந்தது.

Vishal’s Chakra in trouble; Madras HC issues notice to Vishal

கமல் நடத்தும் பிக்பாஸ்-4 ஒளிப்பரப்பு தேதியை அறிவித்தது விஜய் டிவி

கமல் நடத்தும் பிக்பாஸ்-4 ஒளிப்பரப்பு தேதியை அறிவித்தது விஜய் டிவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor kamal haasanவிஜய் டிவியில் கமல் நடத்தும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி விரைவில் ஒளிப்பரப்பாகவுள்ளது.

இந்நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் விவரம் இதுவரை வெளியாகவில்லை.

ஆனால் பிரபலமான ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், பாடகர் ஆஜித், கேப்ரில்லா, ஜித்தன் ரமேஷ், அனுமோகன், ரியோ ராஜ், சனம் ஷெட்டி உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இம்முறை போட்டியாளர்களாக கலந்து கொள்பவர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் முன்னரே 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 4ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் என விஜய் டிவி அறிவித்துள்ளது.

Kamal Haasan’s Bigg Boss Tamil Season 4 to premiere on october 4th

More Articles
Follows