ரஜினி கட்சி குறித்து தமிழக முதல்வர் என்ன சொன்னார் தெரியுமா..?

ரஜினி கட்சி குறித்து தமிழக முதல்வர் என்ன சொன்னார் தெரியுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth Edappadi Palanisamyசிவகங்கை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

“முதலில் நடிகர் ரஜினிகாந்த் கட்சியை பதிவு செய்யட்டும் அதற்கு பிறகு அதுகுறித்து பதில் தருகிறேன்.” என்று தெரிவித்தார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

Edappadi Palanisamy about Rajinikanth political entry

பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக ஸ்ரீதிவ்யா

பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக ஸ்ரீதிவ்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sri divya gautham karthikபத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார்

எல்.சிந்தன், ராஜேஷ்குமார் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.

இவர்கள் தயாரிப்பில் பத்ரி வெங்கடேஷ் ஏற்கனவே ‘பிளான் பண்ணி பண்ணணும்’ என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய படத்தை பற்றி டைரக்டர் பத்ரி வெங்கடேஷ் கூறியதாவது:-

“ஒரு படம் தயாரிப்பில் இருக்கும்போதே அந்த படத்தின் டைரக்டருக்கு அதே தயாரிப்பாளர்கள் இன்னொரு புதிய படத்தையும் இயக்கும் வாய்ப்பை தருவது அபூர்வம்.

எனக்கு அப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி.

வடசென்னையைச் சேர்ந்த ‘வெரலு’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் கௌதம்

அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா, ‘பிசியோதெரபிஸ்ட்’ வேடத்தில் வருகிறார்.

கதாநாயகன் கவுதம் கார்த்திக் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். அதில் இருந்து அவர் எப்படி வெளியே வருகிறார்? என்பதுதான் கதை.

இதன் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருக்கிறது. சென்னை, ராஜஸ்தான், குஜராத், கேரளா ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.”

இவ்வாறு பத்ரி தெரிவித்துள்ளார்.

Gautham Karthik and Sri Divya joins for Badri Venkatesh film

கட்சி கன்பார்ம்..; ரஜினியை வாழ்த்தி அட்வைஸ் கொடுத்த இயக்குனர் தங்கர் பச்சான்

கட்சி கன்பார்ம்..; ரஜினியை வாழ்த்தி அட்வைஸ் கொடுத்த இயக்குனர் தங்கர் பச்சான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth Thangar Bachchanநடிகர் ரஜினிகாந்த் தன் அரசியல் பிரவேசத்தை நேற்று உறுதிப்படுத்தினார்.

அடுத்தாண்டு 2021 ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும் இதே ஆண்டில் டிசம்பர் 31-ம் தேதி கட்சி அறிவிப்பு வெளியாகும் எனவும் ட்விட்டரில் அறிவித்தார் ரஜினிகாந்த்.

“மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல” என கூறியிருந்தார்.

அப்போது… “தமிழக மக்கள் நலனுக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை.

நான் வென்றால் அது மக்களின் வெற்றி, நான் தோற்றால் அது மக்களின் தோல்வி“ என்றார்.

இதனையடுத்து தமிழக அரசியல் களம் பரபரப்பானது.

இந்த நிலையில் ரஜினி அரசியல் கட்சி குறித்து இயக்குனரும் நடிகருமான தங்கர் பச்சான் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது…

“வளர்த்துவிட்ட தமிழக மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக அரசியல் தொண்டு ஆற்ற வரும் அண்ணன் ரஜினிகாந்த் அவர்களை வரவேற்கிறேன்!

தமிழக அரசியலை வணிகமாக மாற்றிய அரசியல்வாதிகள், அரசியல் தரகர்கள், அரசியல் கட்சிகளின் இணையக்கூலிகள் கலக்கத்தில் உறக்கமில்லாமல் கதறுவார்கள், புலம்புவார்கள்! அவர்களை எல்லாம் புறந்தள்ளி மக்கள் குறித்து மட்டுமே கவனம் செலுத்துங்கள்.”

இவ்வாறு ரஜினியை வாழ்த்தி அறிவுரை கொடுத்துள்ளார்.

Thangar Bachchan wishes and advice to Rajinikanth

ரஜினியும் மோடியும் சேர்ந்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம்.. – துக்ளக் குருமூர்த்தி

ரஜினியும் மோடியும் சேர்ந்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம்.. – துக்ளக் குருமூர்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tuglaq gurumurthyநடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் பற்றி துக்ளக் இதழாசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில்…

“25 வருடங்களாக தமிழகத்தில் ஒரு சாபம் உள்ளது.

இரண்டு பெரும் தலைவர்கள் இருந்ததால், (கருணாநிதி & ஜெயலலிதா) அவர்கள் கட்சி செய்யும் தவறுகள் மக்களுக்கு தெரியாமல் போனது.

அவர்கள் இல்லாததால் தற்போது கட்சிகளுக்கிடையே போட்டி உருவாகியுள்ளது.

ரஜினிகாந்தை மக்கள் சினிமா நடிகராக பார்க்கவில்லை; அவரை நல்லவராக பார்க்கிறார்கள்.

மோடியும் ரஜினியும் இணைந்தால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உருவாகும் என்பது என் நிலை. அதுதான் ரஜினியின் நிலைப்பாடா? என எனக்கு தெரியாது.” என்று கூறினார்.

Rajinikanth should ally with BJP says Gurumurthy

ஜெய் & வாணி போஜன் இணையும் ‘ட்ரிப்ள்ஸ்’..; ‘நீ என் கண்ணாடி’ எனும் அழகான பாடல் வெளியானது.

ஜெய் & வாணி போஜன் இணையும் ‘ட்ரிப்ள்ஸ்’..; ‘நீ என் கண்ணாடி’ எனும் அழகான பாடல் வெளியானது.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ஜெய் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவாகியிருக்கும் “ட்ரிப்ள்ஸ்” இணையத்தொடரிலிருந்து “நீ என் கண்ணாடி” எனும் அழகான காதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

சென்னை 3 டிசம்பர் 2020 : Hotstar Specials மற்றும் Stone Bench Films இணைந்து வழங்கும் முதல் தமிழ் இணையத்தொடர் “ட்ரிப்ள்ஸ்”.

ராம், மாது மற்றும் சீனு ஆகிய மூன்று நண்பர்களின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் அதிலிருந்து அவர்கள் வெளிவருவதை சுவாரசியமாக விவரிக்கும் கதை தான் இது.

தொழிலில் பங்குதாரர்களாகவும் இணைபிரியா நண்பர்களாகவும் இருக்கும் மூன்று பேருடைய வாழ்வில் நடக்கும் குழப்பங்களே இதன் கதை.

திருமணத்தில் ஏற்பட்ட ஒரு குழப்பத்திலிருந்து தப்பித்து தங்களை தாங்களே கண்டறிவதற்காக கோவாவிற்கு செல்லும் நண்பர்களை, ஒரு கடன் முதலை துரத்த, அதை தொடர்ந்து நடக்கும் களேபரங்கள் 8-பகுதிகளாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த காதல்-காமெடித் தொடரில், வாணி போஜன் மற்றும் சிறப்பான நடிப்பு திறன் கொண்ட விவேக் ப்ரசன்னா, ராஜ்குமார், மாதுரி எம்ஜே, ஆகியோருடன் தமிழ் சினிமாவின் இளம் நட்சத்திரமான ஜெய், முதன்முதலாக டிஜிட்டலில் அறிமுகமாகிறார்.

கார்த்திக் சுப்புராஜால் தயாரிக்கப்பட்டு சாருகேஷ் சேகரின் இயக்கத்தில் நகைச்சுவை மேதை க்ரேஸி மோகனின் காமெடி நடையில் பாலாஜி ஜெயராமன் வசனங்களை எழுதியுள்ளார்.

“ட்ரிபிள்ஸ்” தொடர் இணை பிரியா மூன்று உயிர் நண்பர்களின் வாழ்வில் நடக்கும் காமிக்கல் தருணங்களை, அவர்கள் வாழ்வில் வரும் காதல், காபி ஷாப் வைத்து முன்னேற போராடும் அவர்களின் முயற்சி, மறக்கமுடியாத கோவா பயணம் ஆகியவற்றை கலகலப்பான காமெடியுடன் திரையில் கொண்டு வந்துள்ளது.

இன்று படக்குழு இத்தொடரின் அழகான காதல் பாடலான “நீ என் கண்ணாடி” பாடலை வெளியிட்டுள்ளது.

இப்பாடலுக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்க, இயக்குநர் சாருகேஷ் சேகர் பாடல் வரிகள் எழுதியுள்ளார்.

முதன்மை கதாப்பாத்திரங்களுக்கு இடையேயான உறவின் ஆழத்தை சொல்லும் இப்பாடலை கோவிந்த் பிரசாத் & சிந்தூரி விஷால் பாடியுள்ளனர்.

“நீ என் கண்ணாடி” எனும் அழகான காதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

கலகலப்புக்கு பஞ்சமில்லா காமெடித் தொடரான “ட்ரிபிள்ஸ்” டிசம்பர் 11, 2020 அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி தளத்தில் ப்ரத்யேகமாக வெளியிடப்படுகிறது.

Link: https://www.youtube.com/watch?v=9HqEU-kBpmo&feature=youtu.be

The romantic song ‘Nee En Kannadi’ from Jai Sampath and Vani Bhojan starrer ‘Triples’ Out now!

28 Years Of Vijay… கோயில்களில் அர்ச்சனை.. ஏழைகளுக்கு உதவிகள் செய்த தளபதி ரசிகர்கள்

28 Years Of Vijay… கோயில்களில் அர்ச்சனை.. ஏழைகளுக்கு உதவிகள் செய்த தளபதி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

28 years of Vijay1984-ஆம் ஆண்டில் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய ‘வெற்றி’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக விஜய் நடித்தார்.

சில வருடங்களுக்கு பின் எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் தன் மகனை ஹீரோவாக்கினார்.

இதனையடுத்து மாண்புமிகு மாணவன், செந்தூரப் பாண்டியன், தேவா, ரசிகன் என மசாலா படங்களில் நடித்து வந்தார் விஜய்.

இதன்பின்னர் விக்ரமன் இயக்கிய ‘பூவே உனக்காக’ படம் விஜய்க்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

இதன்பின்னர் சில வருடங்களுக்கு பிறகு வெளியான ‘திருமலை’ விஜய்யை ஆக்சன் ஹீரோவாக மாற்றியது.

அவருக்கான ரசிகர்கள் கூட்டமும் பெருகியது.

கடந்த 10 வருடங்களில் மட்டும் திருப்பாச்சி, கத்தி, துப்பாக்கி, ஜில்லா, தெறி, சர்கார் என தொடர் வெற்றிகளை கொடுத்து வருகிறார்.

பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் விஜய்யின் ‘மாஸ்டர்’ விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் விஜய் 1992-ஆம் ஆண்டு முதன்முறையாக ஹீரோவாக நடிக்க தொடங்கிய நாளான டிசம்பர் 4ல் 28 ஆண்டுகள் நிறைவு செய்கிறார்.

இதனையொட்டி அவரது ரசிகர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

காஞ்சிபுரம், தேனி, திருச்சி, நாமக்கல், கரூர், உள்ளிட்ட மாவட்டங்களில் கோவில்களில் விஜய் பெயரில் சிறப்பு பூஜை செய்து ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

Vijay fans are engaged in special prayers on Vijay completing 28 years in the industry

More Articles
Follows