தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை..; வாழ்த்திய OPS & EPS-க்கு முக ஸ்டாலின் நன்றி

mk stalinதமிழகத்தில் திமுக 6வது முறையாக ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது.

முக ஸ்டாலின் முதல்வர் ஆகிறார். மே 7ல் அவரது பதவியேற்பு விழா மிக எளிமையாக நடக்கிறது.

இந்த நிலையில், திமுக கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தன் ட்விட்டரில்…

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் @mkstalin

ஓ பன்னீர் செல்வம் அவர்கள் தன் ட்விட்டரில்…

தமிழகத்தின் முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்கவிருக்கும் திமுக தலைவர் மாண்புமிகு திரு.ஸ்டாலின் @mkstalin அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவர்கள் இருவருக்கும் தன் நன்றியை தெரிவித்துள்ளார் முக ஸ்டாலின்.

அவர் தன் ட்விட்டரில்..

மாண்புமிகு @EPSTamilNadu அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை!

ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம்!.

மாண்புமிகு @OfficeOfOPS அவர்கள் என்னைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார்கள். அவருக்கு எனது இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்களின் வளர்ச்சிக்காக கழக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் அனைவர் ஒத்துழைப்பும் தேவை எனக் கேட்டுக் கொள்கிறேன்.

MK Stalin thanked EPS & OPS for their wishes

Overall Rating : Not available

Latest Post