வேண்டாம் விபரீதம்.; விமான சேவையை நிறுத்த மோடிக்கு எடப்பாடி கடிதம்

modi epsகொரோனா பொது முடக்கம் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு 50 நாட்களை கடந்துவிட்டது.

தற்போது சில தளர்வுகளுடன் வணிக நிறுவனங்களை திறக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

வருகிற ஜீன் 1ஆம் தேதி முதல் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

நாடு முழுவதும் மே 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்படும் என விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதற்காக அனைத்து விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களும் தயாராக இருக்கும்படி தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வரும் 25ஆம் தேதி தமிழகத்தில் விமான சேவை தொடங்க வேண்டாம் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

கொரோனா பாதிப்பு இன்னும் தமிழகத்தில் அதிகமாக இருப்பதால், ஜூன் மாதத்திற்கு பிறகு விமான சேவையை தொடங்கலாம் என முதல்வர் அதில் கேட்டு கொண்டுள்ளார்.

மே 25 முதல் சென்னை, கோவையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Overall Rating : Not available

Latest Post