தியேட்டர்களில் 50% சீட் அனுமதியென்றால் ‘மாஸ்டர்’ மட்டுமே ரிலீஸ்.; சிக்கலில் ‘ஈஸ்வரன்’.? யார் சொன்னாங்க தெரியுமா?

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த 2020 மார்ச் மாதம் 17ந் தேதி தியேட்டர்கள் மூடப்பட்டன.

கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பிறகு கடந்தாண்டு தீபாவளி சமயத்தில் நவம்பர் 10 முதல் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்து திரையரங்குகளை திறக்க அனுமதியளித்து உத்தரவிட்டது.

அப்போது 50% இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க வேண்டும் என்று நிபந்தனையுடன் அனுமதியளிக்கப்பட்டது.

எனவே இரண்டு இருக்கைகளுக்கு நடுவில் உள்ள இருக்கையில் ரிப்பன் கட்டியும் இருக்கையில் தடுப்பு வைத்தும் தடுத்து வைத்தும் தியேட்டர்கள் இயங்கி வந்தன.

இதனால் சிறிய படங்கள் மட்டுமே தியேட்டர்களில் ரிலீசாகின.

இந்த நிலையில் 100% இருக்கைகளுக்கு அனுமதியளிக்க வேண்டும் என விஜய், சிம்பு உள்ளிட்ட திரையுலகினர் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்

இவர்கள் கோரிக்கை வைத்த நிலையில் 100% பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

இந்த அறிவிப்புக்கு முன்பே மாஸ்டர், ஈஸ்வரன் உள்ளிட்ட படங்கள் பொங்கலுக்கு தியேட்டரில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் 100% பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளதை சமூக ஆர்வலர்கள் எதிர்த்தனர்.

தியேட்டர்கள் மூடிய அரங்கு என்பதால் இது ஆபத்தானது. அங்கு கொரோனா எளிதில் பரவும் என பலரும் கருத்து தெரிவித்தனர்.

தமிழக அரசின் உத்தரவை மத்திய அரசின் உள்துறை அமைச்சகமும் கண்டித்துள்ளது.

கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காதது ஏன்.?

கொரோனா தடுப்புக்கான மத்திய அரசின் வழிகாட்டு விதிகளுக்கு ஏற்ப புதிய உத்தரவை பிறப்பிக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்… ” 100% ரசிகர்கள் அனுமதி என்ற உத்தரவை தமிழக அரசு திரும்பப் பெற்றால் ‘மாஸ்டர்’ படம் மட்டுமே வெளியிடப்படும்.

ஒருவேளை விஜய்யின் ‘மாஸ்டர்’ ரிலீஸ் தள்ளிப் போனால் மட்டுமே சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படம் தியேட்டர்களில் வெளியிட முடியும்” இவ்வாறு திரையரங்க உரிமையாளர் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

Tamil Nadu theatre owners’ association head Tiruppur Subramaniam has said they will give first preference for Thalapathy in Master

Overall Rating : Not available

Related News

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிதாக திறக்கப்பட்ட கார்…
...Read More

Latest Post