தயாரிப்பாளர் சங்கத்துக்கான தேர்தல் தேதி அறிவிப்பு

Vishal teamதயாரிப்பாளர் சங்கத்தினுடைய தேர்தல் ஏப்ரல் 2 – இரண்டாம் தேதி உட்லண்ட்ஸ் ( Woodlands ) திரையரங்கில் நடைபெறவுள்ளது

ஓய்வு பெற்ற நீதிபதியும் தமிழ்த்திரைப்பட தேர்தல் அதிகாரியுமான திரு . ராஜேக்ஷ்வரன் அவர்கள் இன்று காலை 11மணி அளவில் filmchamber அலுவலகத்தில் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் தேர்தல் சம்பந்தமாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் 27.02.2017 அன்று வரை உறுப்பினர்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்படுமாயின் புகார் கொடுக்கலாம்.

28.02.2017 -ல் புகார்களுக்கு பதில் கிடைக்கும் என்று கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாபஸ் பெற கடைசி நாள் 01.03.2017.

ஏப்ரல் இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை Wood lands திரையரங்கில் தேர்தல் நடைபெறும் அன்று இரவே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்தார். இக்கூட்டத்தில் மூத்த தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

விஷால் அணி சார்பாக பிரகாஷ் ராஜ் ,ஆர்.பார்த்திபன், K.E.ஞானவேல்ராஜா, பாண்டிராஜ் ,SR.பிரபு ,AL உதயா மற்றும் உடன் ராதாகிருஷ்ணன், கேயார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Overall Rating : Not available

Latest Post