மீண்டும் மாதவன் & ஷ்ரத்தா இணைந்த ‘மாறா’.; ஜனவரி 8ல் ஓடிடியில் வெளியிடும் அமேசான்

மீண்டும் மாதவன் & ஷ்ரத்தா இணைந்த ‘மாறா’.; ஜனவரி 8ல் ஓடிடியில் வெளியிடும் அமேசான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அமேசான் ஒரிஜினல் தயாரிப்பான மாறா ஜனவரி 8ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது.

ஆர் மாதவன் & ஷ்ரத்தா ஸ்ரீநாத் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்தில் ஷிவதா, மௌலி, அலெக்ஸாண்டர் பாபு, எம்.எஸ்.பாஸ்கர், குரு சோமசுந்தரம், கிஷோர் மற்றும் அபிராமி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்திங்களில் நடித்திருக்கின்றனர்.

திலீப் குமார் இயக்கத்தில் பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஷ்ருதி நல்லப்பா இணைந்து, பிரமோத் ஃபிலிம்ஸ் சார்பாகத் தயாரிக்கின்றனர்.

தான் குழந்தையாய் இருக்கும் போது, கடலோர நகரம் ஒன்றின் சுவரில் வரையப்பட்ட ஓவியத்தை வைத்து அந்நியர் ஒருவர் சொன்ன கதையக் கேட்கிறாள் பாரு.

அவள் வளர்ந்த பின் அந்த ஓவியத்தை வரைந்த மாறாவைத் தேடிச் செல்லும் காதலும் இசையும் கலந்த அழகான பயணம் தான் இந்தக் கதை.

இந்தப் படம் பற்றி தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் அமேசான் ப்ரைம் வீடியோ தளம், “மேடியின் மீதிருக்கும் காதல் அளவுக்கு இந்த அதிசயக் கதையின் மீது நாங்கள் ஏற்கனவே காதல் கொண்டுவிட்டோம்.

ஜனவரி 8, 2021 அன்று மாறாவை ப்ரைமில் சந்தியுங்கள்” என்று பகிர்ந்துள்ளது.

ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார், கார்த்திக் முத்துக்குமார் மற்றும் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவை கவனித்திருக்கின்றனர். புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்புச் செய்திருக்கிறார்.

@ActorMadhavan @ShraddhaSrinath @SshivadaOffcl @dhilip2488 @DesiboboPrateek @ShrutiNallappa @pramodfilmsnew @thinkmusicindia @thespcinemas @APIfilms @GhibranOfficial”

https://mobile.twitter.com/PrimeVideoIN/status/1338778323359555586

Tamil film Maara to Release On Amazon Prime Video On January 8

‘கேஜிஎப்’ பட இயக்குனர் & பிரபாஸ் கூட்டணியில் மோகன்லால்..?

‘கேஜிஎப்’ பட இயக்குனர் & பிரபாஸ் கூட்டணியில் மோகன்லால்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mohanlal prabhasயஷ் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவான படம் ‘கேஜிஎப்’.

இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் பிரஷாந்த் நீல்.

இவர் தற்போது கேஜிஎஃப் 2ஆம் பாகத்தை இயக்கி வருகிறார்.

இதனையடுத்து பாகுபலி நாயகன் பிரபாஸ் உடன் இணைந்து ‘சலார்’ என பிரம்மாண்டமான ஆக்சன் படத்தை உருவாக்கவுள்ளாகர் என்பதை நாம் முன்பே தளத்தில் தெரிவித்திருந்தோம்.

இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க மலையாள நடிகர் மோகன்லாலை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு அவருக்கு பெரும் தொகை சம்பளமாக பேசப்பட்டு வருகிறதாம்.

அதாவது ரூ. 15 முதல் 20 கோடி ரூபாய் வரையில் சம்பளம் பேசப்படுகிறதாம்.

ஆனால் இதுவரை மோகன்லால் தரப்பில் எதுவும் சொல்லப்படவில்லை.

கமலுடன் உன்னைப் போல் ஒருவன், விஜய்யுடன் ஜில்லா ஆகிய மற்ற மொழி படங்களில் நடித்துள்ளார் மோகன்லால்.

அதுபோல் தெலுங்கில் ஜுனியர் என்டிஆர் உடன் ‘ஜனதா கேரேஜ்’ படத்திலும் நடித்துள்ளார்.

Mohanlal joins Prabhas new film ?

தியேட்டர் ஓனர்களை ப்ளாக் மெயில் செய்கிறதா ‘மாஸ்டர்’ டீம்..? விஷால் கார்த்தி தனுஷ் என்ன செய்வார்கள்..?

தியேட்டர் ஓனர்களை ப்ளாக் மெயில் செய்கிறதா ‘மாஸ்டர்’ டீம்..? விஷால் கார்த்தி தனுஷ் என்ன செய்வார்கள்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

masterவிஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘மாஸ்டர்’.

ஏப்ரல் மாதம் 9ம் தேதி வெளியாக வேண்டிய இந்த படம் கிட்டதட்ட 10 மாதங்களாக கொரோனா ஊரடங்கால் வெளியாகாமல் உள்ளது.

தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் 100% பார்வையாளர்களை தியேட்டரில் அரசு அனுமதிக்கவில்லை.தற்போது வரை 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதியளித்துள்ளது.

இதனால் தியேட்டர்களில் பெரிய படங்கள் எதுவும் ரிலீசாகவில்லை.

மற்ற படங்களுக்கும் குறைவான கூட்டமே வருகிறது.

மாஸ்டர் போல பெரிய படங்கள் தியேட்டர்களில் கூட்டம் கூடும் என தியேட்டர்கள் உரிமையாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ட்விட்டரில் பேசப்பட்ட தென்னிந்திய படங்கள்.: ரஜினி லாஸ்ட்.. விஜய் பர்ஸ்ட்… அஜித் 3.. சூர்யா 5..

இதனால் இதனை பயன்படுத்தி தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் மாஸ்டர் படம் வெளியானால் மட்டுமே முதலீட்டு தொகையை அள்ள வாய்ப்புள்ளதாக தயாரிப்பாளர் நினைக்கிறார்.

ஆனால் இதற்கு எப்படி ஒத்துழைக்க முடியும்? என தியேட்டர் உரிமையாளர்கள் குழப்பதில் உள்ளனர்.

பொங்கல் சமயத்தில் தனுஷ் நடித்த ‘ஜகமே தந்திரம்’, விஷால் நடித்துள்ள ‘சக்ரா’, கார்த்தி நடித்துள்ள ‘சுல்தான்’ ஆகிய படங்களும் வெளியீட்டுக்கு தயாராகவுள்ளன.

மாஸ்டர் படத்திற்கு மட்டுமே வழிவிட்டால் மற்ற தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள். ஒருவேளை அவர்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்துவிட்டால் நமக்கு அடுத்தடுக்க இழப்புகள் ஏற்படும் என்பதால் குழப்பம் நீடிக்கிறதாம்.

ஒருவேளை பொங்கல் தினத்திற்குள் 100% பார்வையாளர்களை அரசு அனுமதித்தால் மட்டுமே இதற்கு சரியான தீர்வாக இருக்கும் என தியேட்டர் உரிமையாளர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

Do Master team blackmail theatre owners?

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியவர்கள் சந்திப்பு..; ரமேஷ் ஷனம் சுசீ நிஷா மிஸ்ஸிங்

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியவர்கள் சந்திப்பு..; ரமேஷ் ஷனம் சுசீ நிஷா மிஸ்ஸிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாக தொடங்கி 60 நாட்களை கடந்துவிட்டது.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, ரேகா, வேல்முருகன் ஆகியோர் வெளியில் சந்தித்துக் கொண்டனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ரேகா, வேல்முருகன் ஆகியோர் இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார் ரேகா.

அதில்… ரமேஷூம், நிஷாவும் இப்போதுதான் வெளியே வந்துள்ளனர். அவர்கள் ஓய்வு எடுக்கட்டும்.

சுசித்ரா, சனம் ஆகியோர் பிஸியாக இருக்கிறார்கள். சனம் ஷெட்டியை போனில் பிடிக்க முடியவில்லை. எனவே அவர்கள் வரவில்லை.

பிக்பாஸ் வீட்டுக்குள் எங்களுக்கு போட்டி. வெளியே வந்தால் நாங்கள் எல்லோரும் ஒன்றுதான்.” என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் ரேகா.

Bigg Boss 4 reunion Rekha shares video

Bigg boss 4 reunion

மீண்டும் அரசியலில் விஷால்..; தன் நண்பர்களுடன் இணைந்து தேர்தலில் போட்டி?

மீண்டும் அரசியலில் விஷால்..; தன் நண்பர்களுடன் இணைந்து தேர்தலில் போட்டி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vishalதமிழ் சினிமாவில் சீரியல் நடிகர்கள் தற்போது தான் அரசியலுக்கு வருகின்றனர். ஆனால் இளம் வயதிலேயே அரசியலுக்கு வர ஆசைப்பட்டவர் நடிகர் விஷால்.

கடந்த 2017ம் ஆண்டு நடைப்பெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தார் விஷால்.

ஆனால் அவரது மனு நிராகரிக்கப்பட்டதால் அரசியலில் ஈடுபடவில்லை.

அதுபோல நடிகர் சங்கத்திலும் சரி தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் சரி இவரது ஆதரவு அணிகள் தான் முன்பு பதவியில் இருந்தன.

இந்த நிலையில் 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட விஷால் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த முறை விஷால் மக்கள் நல இயக்க நண்பர்களுடன் இணைந்து இத்தேர்தலை சந்திக்கவிருக்கிறாராம் விஷால்.

Actor Vishal to contest in TN assembly election

நடிகை சித்ரா மரணம்..: தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் கைது

நடிகை சித்ரா மரணம்..: தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chithra husband hemanth kumarகடந்த 9 தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார் பாண்டியன் ஸ்டோர்ஸ் டிவி சீரியல் நடிகை சித்ரா.

அவரது மரணம் தற்கொலைதான் என முதற்கட்ட விசாரணையில் போலீசார் தெரிவித்தனர்.

அவர் தற்கொலைக்கு என்ன காரணம்? யார் காரணம்? என்பது தொடர்பாக அவரை பதிவு திருமணம் செய்த கணவர் ஹேம்நாத்திடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் ஒரு பெண் திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் உயிரிழந்தால் வரதட்சணை தடுப்புச்சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் விசாரணை செய்வது வழக்கம் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

எனவே அதன்படி சித்ராவின் தாயார் விஜயா, தந்தை காமராஜ் மற்றும் அக்கா சரஸ்வதி ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இவர்கள் மூவரும் ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ விசாரணை மேற்கொண்டார்.

விசாரணைக்கு பின்னர் வெளியே வந்த சித்ராவின் தாயார் விஜயா.. தனது மகள் சித்ராவின் தற்கொலைக்கு, அவரின் கணவர் ஹேம்நாத்தான் காரணம் என மீண்டும் குற்றம் சாட்டினார்.

மேலும் தனக்கும், தன் மகள் சித்ராவுக்கும் எந்தவொரு மனக்கசப்பும் இல்லை எனவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் சித்ரா கணவர் ஹேம்நாத்.

Chennai police arrested Chitra’s husabnd Hemanath Kumar

More Articles
Follows