சுசீந்திரன் எப்போதும் சுதந்திரம் தருவார்… கவிஞர் வைரமுத்து

சுசீந்திரன் எப்போதும் சுதந்திரம் தருவார்… கவிஞர் வைரமுத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suseenthiran will give freedom to write lyricist says Vairamuthuசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சில் துணிவிருந்தால் படம் நாளை மறுநாள் நவம்பர் 10ஆம் தேதி வெளியாகிறது.

இதுகுறித்து இப்பட பாடலாசிரியர் வைரமுத்து கூறியதாவது…

“நெஞ்சில் துணிவிருந்தால்” இயக்குநர் சுசீந்திரனின் அடுத்த படைப்பு.

இயக்குநர் சுசீந்திரன் சலிக்காத உழைப்பாளி, அழுக்காத போராளி, ஒரு கலையாளி. தன் படைப்புக்குள் ஓர் உள்ளடக்கம் இருக்க வேண்டும் என்ற துடிப்பு தான் சுசீந்திரனின் பலம்.

இதுவரைக்கும் அவர் படைத்த படைப்புகள் பெரும்பாலும் வெற்றியை மட்டுமே தொட்டு இருக்கின்றன அல்லது தோல்வியை தொட்டது இல்லை அந்த வரிசையில் இன்னொரு வெற்றிப்படைப்பான சுசீந்திரனின் நெஞ்சில் துணிவிருந்தால் வெளிவருகிறது.

இந்த படைப்பு சமூகத்திற்கு ஒரு செய்தி சொல்லும் படைப்பாக இருக்கும். தகுதிமிக்கவர் கைகளிலேயே இந்த சமூகம் இயங்க வேண்டும்.

இந்த மையத்தை வைத்து இந்த படைப்பு இயங்குகிறது. அரசியல், கலை, சமூகம், அரசாங்கம், கல்வி, நீதி, மருத்துவம் எல்லா துறைகளிலும் தகுதிமிக்கவர்கள் தகுதி மிக்க இடத்தை அடைய வேண்டும் என்ற உன்னத இலட்சியத்தை உள்ளடக்கமாக கொண்டு இந்த படம் இயங்குகிறது.

இதில் நானும் பாடல் எழுதியிருப்பது எனக்கு கிடைத்த பெருமையாகும். சுசீந்திரன் படங்களில் எனக்கு எப்பொழுதுமே ஒரு சுதந்திரம் தருவார். எழுதி கொடுத்து இசையமைக்கலாமே என்று அவர் புன்னகையோடு கேட்கின்ற போது நான் மகிழ்ந்து போவேன்.

அப்படி எழுதி கொடுத்து இமான் இசையமைத்து ஒரு பாடல் இந்த படத்தில் உள்ளது அது அனைவராலும் முணுமுணுக்கப்படும் என நம்புகிறேன்.

அறம் என்பது என்ன தர்மம் செய்வது மட்டுமே அறமா, அன்னமிடுவது மட்டுமே அறமா, அள்ளித்தருவது மட்டுமே அறமா இல்லை அறத்தின் எல்லைகளை இந்த படம் விரிவு செய்கிறது.

அதை என் வரி உறுதி செய்கிறது. எண்ணம் அறிந்து ஏழை பசிக்கு அன்னமிடுவது அறமாகும். அறிமுகம் இல்லா நோயாளிக்கு ஆப்பிள் தருவது அறமாகும்.

சொந்தகாரனுக்கு தருவதல்ல அறம், நண்பனுக்கு அள்ளித்தருவதல்ல அறம், தெரிந்த முகத்திற்கு தருவதல்ல அறம். தெரியாத முகத்திற்கு, அறிமுகம் இல்லா முகத்திற்கு எவன் ஒருவன் தருகின்றானோ அதுதான் அறம் மூத்து செறிந்த கிழவி நெற்றியில் முத்தம் தருவது அறமாகும்.

இரத்த பந்தம் இல்லாதவருக்கு இரத்த தானமும் அறமாகும். குற்றம், ஊழல் காணும் இடத்தில் கோவம் என்பது அறமாகும்.

போர்கள் கொலையை வெறுத்ததில்லை சமூகம் கொலையை வெறுத்திருக்கின்றது. யுத்தத்தில் கொலை தான் தர்மம்.

இந்த சமூகம் எப்போது யுத்தத்தில் இருக்கிறதோ அப்போது கொலையும் கூட அறமாகிவிடுகிறது என்ற கீதையின் கருத்தையும், யுத்த தர்மத்தையும் இந்த படம் முன்னிலை படுத்துகிறது.

இந்த படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் எல்லாம் இந்த படத்தின் பெருமைக்கு பெருமை சேர்க்கின்றார்கள். சுசீந்திரன் தொட்டதெல்லாம் வெற்றி படம்தான்.

இந்த படம் வெற்றியின் இன்னொரு உயரத்தை எட்ட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எட்டும் என்று நம்புகிறேன் எட்டித் தீரும் என்று வாழ்த்துகிறேன்.”

இவ்வாறு வைரமுத்து கூறினார்.

Suseenthiran will give freedom to write lyricist says Vairamuthu

சுசீந்திரன் சொல்லும் கருத்து கண்டிப்பாக கவனிக்கப்படும்… சந்தீப் கிஷன்

சுசீந்திரன் சொல்லும் கருத்து கண்டிப்பாக கவனிக்கப்படும்… சந்தீப் கிஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sundeep Kishan talks about Suseenthiran and Nenjil Thunivirudhalமாநகரம் படத்தை தொடர்ந்து தமிழில் சந்தீப் கிஷன் நடித்துள்ள படம் நெஞ்சில் துணிவிருந்தால்.

இப்படம் குறித்து நாயகன் சந்தீப் கிஷன் பேசியதாவது…

மாநகரம் வெளியான பின் படத்தை பார்த்தவர்கள் அனைவரும் என்னை பாராட்டினார்கள்.

தமிழில் நிச்சயம் தரமான படைப்புகளில் மட்டும் நடிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை.

ஒவ்வொரு நாயகர்களுக்கும் ஒவ்வொரு அடையாளம் இருக்கும். அதை போல் என்னுடைய அடையாளமாக நான் தரமான படங்களில் நடிக்க வேண்டும். இது தான் என்னுடைய ஆசை.

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று நான் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே முயற்சித்து வருகிறேன். வெண்ணிலா கபடி குழு படத்தில் நடிக்க முயற்சித்தேன் ஆனால் சில காரணங்களால் எனக்கு அந்த வாய்ப்பு அமையவில்லை.

இப்போது நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படத்தின் மூலம் நாங்கள் இணைந்துள்ளது மகிழ்ச்சியாகவுள்ளது.

நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படத்தில் நான் குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.

விக்ராந்த் பாண்டிய நாடு படத்தை விட இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அவருக்கும் இந்த திரைப்படத்தின் கண்டிப்பாக நல்ல பெயர் வாங்கி தரும். நானும் மெஹ்ரீனும் இனைந்து நடித்துள்ள காதல் காட்சிகள் நன்றாக வந்துள்ளது. மாநகரம் திரைப்படத்தில் இருந்து இதில் நான் நடித்துள்ள கதாபாத்திரம் முற்றிலும் வேறுபடும்.

நான் படத்தை பார்த்துவிட்டேன் படம் சிறப்பாக வந்துள்ளது. என்னுடைய கதாபாத்திரமும் நிச்சயம் மக்களிடம் எனக்கு மீண்டும் நல்ல பெயர் வாங்கி தரும்.

இந்த படத்திலும் இயக்குநர் சுசீந்திரனின் பாணியில் சமூகத்துக்கு ஒரு நல்ல கருத்து ஒன்றை சொல்லியுள்ளோம் அது கண்டிப்பாக கவனிக்கப்படும் ஒன்றாக இருக்கும் என்றார் சந்தீப் கிஷன்.

Sundeep Kishan talks about Suseenthiran and Nenjil Thunivirudhal

நயன்தாரா உறுதியாக நின்று முடித்துக் கொடுத்தார்… அறம் இயக்குனர் கோபி நயினார்

நயன்தாரா உறுதியாக நின்று முடித்துக் கொடுத்தார்… அறம் இயக்குனர் கோபி நயினார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Gopi Nainar talks about Nayanthara dedication in Aramm movieKJR ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் தயாரிக்க, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருக்கும் படம் அறம். அறிமுக இயக்குனர் கோபி நயினார் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். முன்னதாக நாயகியை மையப்படுத்திய பல படங்களில் நயன்தாரா நடித்திருந்தாலும், இந்த படம் சமூக பிரச்சினைகளை பற்றி பேசும் படம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

நவம்பர் 10ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

டிவி நிகழ்ச்சிகளில் காமெடியாக பார்த்த என்னை சினிமாவில் முதன்முறையாக சீரியஸான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் கோபி.

நடிகர் நாகேஷ் கூட முதல் படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் தான் நடித்தார், நீங்க நல்ல வருவீங்க என்று சொன்னார் இயக்குனர்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பெரிய ரசிகன், அவருடன் நடித்தது என் பாக்கியம் என்றார் நடிகர் பழனி பட்டாளம்.

இந்த காலகட்டத்துக்கு தேவையான மிகவும் முக்கியமான படம். படம் பார்க்கும் ரசிகர்களின் மனதை இந்த அறம் கனக்க செய்யும் படம்.

படத்தில் வரும் வசனங்கள் அனைத்தும் சாட்டையடியாக இருக்கும். கோபி பெரிய புரட்சிகர இயக்குனராக வருவார் என்றார் நடிகர் ஈ ராம்தாஸ்.

ராஜா ராணி படத்தின் நயன்தாராவுடன் நடித்ததன் மூலம் நிறைய இளைஞர்களிடத்திலும் போய் சேர்ந்திருக்கிறேன்.

அவருடன் இரண்டாவது முறையாக சேர்ந்து நடிப்பது மகிழ்ச்சி. கடும் வெயிலில் ஒரு பெருங்கூட்டம் மிகவும் கஷ்டப்பட்டு படத்தை உருவாக்கியிருக்கிறது என்றார் நடிகர் பாண்டியன்.

இந்த படத்துக்கு முன்பு, எனக்கு நிகழ்ந்த துயரத்தின் போது எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தது பத்திரிக்கையாளர்கள் தான். அதன் மூலம் தான் இந்த மிகப்பெரிய வாய்ப்பே எனக்கு கிடைத்தது என்பது தான் உண்மை.

இயக்குனர் சற்குணம் தான் தயாரிப்பாளர் ராஜேஷை எனக்கு அறிமுகப்படுத்தினார். அதன்பின் நயன்தாராவுக்கு கதை சொல்ல வைத்தார்கள், சில மணி நேரங்களிலேயே எனக்கு அட்வான்ஸ் கொடுத்தார்கள். எல்லாமே ஒரு கனவு போல வேகமாக நடந்தது.

கதை ஓகே ஆனபிறகு கூட இந்த படத்தை தடுக்க நிறைய பேர் முயற்சி செய்தார்கள். ஆனாலும் நயன்தாரா மேடம் உறுதியாக இருந்து இந்த படத்தை முடிக்க துணை நின்றார்.

இந்த படத்தில் என்னை போலவே எல்லோருக்கும் சமூக அக்கறை இருந்தது, அதனால் தான் எல்லோரும் இந்த படத்துக்குள் வந்தார்கள். முதலில் பாடல்கள் வேண்டாம் என்று தான் முடிவெடுத்திருந்தோம். பின்னர் படத்தை முடித்த பிறகு இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு போட்டுக் காட்டி, உமாதேவியின் வரிகளில் பாடல்களை சேர்த்தோம்.

இரண்டு நாட்களுக்கு முன்பு கூட என்னிடம் பேசிய நயன்தாரா, நிச்சயம் படம் வெற்றி பெறும். அடுத்த கட்டத்துக்கு உங்களை நகர்த்தும் வரை நான் உடன் இருப்பேன் என்றார்.

எங்களை போன்ற கலைஞர்களை பத்திரிக்கையாளர்கள் நீங்கள் தான் அடக்குமுறையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றார் இயக்குனர் கோபி நயினார்.

இந்த சந்திப்பில் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், சௌந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Director Gopi Nainar talks about Nayanthara dedication in Aramm movie

கமல் அறிமுகப்படுத்திய செயலி திட்டம் கேரளா அரசின் காப்பி.?

கமல் அறிமுகப்படுத்திய செயலி திட்டம் கேரளா அரசின் காப்பி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal bday dressஓரிரு தினங்களுக்கு முன் கமல் தன் அரசியல் பிரவேசத்தை பகிரங்கமாக அறிவித்தார்.

இன்று அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் அறிமுகப்படுத்திய மையம் விசில் என்ற செயலியில் மக்கள் தங்கள் குறைகளை பதிவு செய்யலாம் என தெரிவித்தார்.

அதன்படி #maiamwhistle #theditheerpomvaa #virtuouscycles #KH ஆகிய ஹேஸ் டேக்குளை பத்திரிகையாளர்கள் முன்பு அறிமுகப்படுத்தினார்.

இந்த செயலி தற்போது ஆராய்ச்சியில் உள்ளதால் 2018 ஜனவரி முதல் இது பயன்பாட்டிற்கு வரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதே போன்ற விசில் நவ் என்ற ஒரு ஆப் கடந்தாண்டு கேரளா அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே கேரளா முதல்வரும் என் முதல்வர் தான் என தெரிவித்திருந்தார் கமல்.

மேலும் அரசியல் கற்க கேரளா சென்று வந்தேன் எனவும் கமல் தெரிவித்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Is Kamal copied new app maiam whistle concept from Kerala Govt

விசில் நவ் என்ற செயலி பற்றி தகவல்களை இங்கே காணலாம்..

http://www.whistlenowkerala.com/

மௌனவலை பட பூஜையில் ஆரி மேற்கொண்ட அரிய முயற்சி

மௌனவலை பட பூஜையில் ஆரி மேற்கொண்ட அரிய முயற்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mouna Valai movie poojaவலம்புரி பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ராஜ சேகர்.S தயாரிக்கும் மௌனவலை திரைப்படத்தின் பூஜை மற்றும் துவக்க விழா கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் கதாநாயகன் ஆரி, இயக்குநர் பெஸ்ட் ராபர்ட், தயாரிப்பாளர் ராஜசேகர், கதாநாயகி ஸ்ம்ருதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதில் சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் ஜாகுவார் தங்கம் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்து சிறப்பித்தார்.

வழக்கமாக நடைபெறும் பட பூஜை மற்றும் துவக்க விழா போல் இல்லாமல் “ மௌனவலை“ திரைப்படத்தின் பூஜை மற்றும் துவக்க விழா தனித்துவமாகவும் நாம் அனைவருக்கும் பயனுள்ளதாகவும் அமைந்தது.

விழாவில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் வழக்கமான உணவு வழங்கப்படாமல் organic உணவு வழங்கப்பட்டது.

உணவே மருந்து என்பதற்கு ஏற்றவாறு வந்திருந்த விருந்தினர்கள் அனைவருக்கும் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்ககூடிய உணவு வழங்கப்பட்டது அதன் பின்னர் அவர்கள் தண்ணீர் குடிப்பதற்காக சில்வர் Tumbler வழங்கப்பட்டது.

அந்த tumbler தண்ணீர் பருகிவிட்டு அவரவர் தங்களுது வீட்டிற்கு எடுத்து செல்வதற்காக வழங்கப்பட்டது.

நடிகர் ஆரி தன்னுடைய மாறுவோம் மாற்றுவோம் அமைப்பின் மூலம் வந்திருந்தோர் அனைவருக்கும் உணவு பற்றியும், விவசாயம் பற்றியும் விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவதற்காக இந்த விஷயங்களோடு மேலும் பல நல்ல விஷயங்களை ஏற்பாடு செய்திருந்தார்.

விழாவில் பிரபல டாக்டர் சுல்தான் கலந்து கொண்டு organic உணவின் முக்கியத்துவம் பற்றியும் மற்றும் விவசாயத்தின் இன்றியமையாமை பற்றியும் விளக்கி கூறினார்.

காவல் துறை DSP ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு விவசாயம் பற்றியும் தமிழர்கள் மறந்த நல்ல பழக்கவழக்கங்கள் பற்றியும் பேசினார்.

நடிகர் சாந்தனு பேசும் போது பிளாஸ்டிக் பொருட்களை ஏன் தவிர்க்க வேண்டும் என்பதற்கான காரணத்தையும் கூறினார். அவரும் அவருடைய குடும்பத்தினரும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து என்னென்ன விஷயங்களை பயன்படுத்துகிறார்கள் அது எந்த வகையில் நல்லது என்பது பற்றியும் கூறினார்.

இறுதியாக நடிகர் ஆரி -யின் “ மாறுவோம் மாற்றுவோம் “ அமைப்பு பற்றிய ஆவன படம் ஒன்று திரையிடப்பட்டது.

அதன் பின்னர் பேசிய ஆரி பிளாஸ்டிக்கை நாம் ஏன் ஒழிக்க வேண்டும் என்பது பற்றியும். அதற்கு மாற்றாக என்னவெல்லாம் பயன்படுத்தலாம் என்பது பற்றியும் விளக்கி பேசினார்.

அதுமட்டுமின்றி organic உணவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் நன்மைகள் பற்றியும் பேசினார்.

இவ்வாறு ஆரியின் மௌனவலை திரைப்படம் த்ரில்லர் படமாக இருந்தாலும். திரைப்படத்தின் துவக்க விழா அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்தது என்று விழாவுக்கு வருகைதந்த அனைவரும் பாராட்டினர்.

Mouna Valai movie pooja

aari mounavalai

மக்கள் பிரச்சினைகளுக்காக கமல் அறிமுகப்படுத்திய மையம் விசில் ஆப்

மக்கள் பிரச்சினைகளுக்காக கமல் அறிமுகப்படுத்திய மையம் விசில் ஆப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan introduced Maiam Whistle app for the peoplesஇன்று தன் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் பிரச்சினைகளை அறிய சென்னையில் உள்ள ஆவடி சுற்றியுள்ள பகுதிகளில் பயணம் செய்தார் கமல்.

இதனையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது மக்கள் பிரச்னைகளைப் பேச ’MAIAMWHISTLE’ என்ற பெயரில் புதிய ஆப் குறித்து அறிவித்த கமல், #theditheerpomvaa, #virtuouscycles, #maiamwhistle என்ற பெயரில் ஹேஷ்டேக்குகளையும் அறிமுகம்செய்தார்.

’மக்கள் தங்கள் பிரச்னைகளைப் பற்றி இந்த ஹேஷ்டேக்கின் கீழ் பேசலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

நான் வெளியிட இருப்பது வெறும் செயலி மட்டும் அல்ல, அது ஒரு பொது அரங்கம்’ என்றார்.

அதன்பின்னர் அவர் பேசியதாவது…

இதற்கு மேலும் நான் அரசியலுக்கு வந்துவிட்டேனா? என யாரும் கேட்க முடியாது.

அரசியலில் முழுமையாக ஈடுபடுவதற்காக முன்னேற்பாடுகளை தீவிரமாகச் செய்துகொண்டிருக்கிறேன்.

விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அனைத்துத் தரப்பு மக்களையும் சந்திக்கவிருக்கிறேன்.

அதில் என்னை பற்றி தெரிந்துக் கொள்ள முடியும். மக்களின் பிரச்சினைகளையும் அறிந்துக் கொள்ள முடியும்.

அரசியல் கட்சியின் அடிப்படை தேவைகளை செய்துக் கொண்டிருக்கிறேன். என அதுகுறித்த அறிவிப்பு வர தாமதம் ஆகும்.

அன்று ஊடக உந்தல் காரணமாக கட்சியை அறிவிக்க மாட்டேன் என்று கூறியதாக செய்திகள் வந்தன.

அதற்கு காரணம் அறிவிப்பு தாமதம் ஆகும் என்பதால் அன்று அப்படி தெரிவித்தேன்.

ஜனவரி மாதத்துக்குப் பின் அனைத்து அறிவிப்புகளும் ஒன்றன் பின் ஒன்றாக வரும்.

எனது அரசியல் அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டும். எனவே, அரசியல் சம்பந்தமான அறிஞர்களுடன் அதுகுறித்து ஆலோசித்து வருகிறேன்.

ஒரு சினிமா எடுக்கவே ஆறு மாதம் தேவைப்படுகிறது. அரசியல் என்பது பெரிய பணி.

எனவே, அரசியலில் கால் பதிக்க தயார் செய்துகொண்டு இருக்கிறேன்.

இன்று முக்கியமான நாள். நான் பிறந்த தினம் என்பதால் அல்ல. நான் பிறந்ததுக்கான காரணத்தை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது.” என்று பேசினார்.

Kamalhassan introduced Maiam Whistle app for the peoples

kamal bday dress

More Articles
Follows