பிடிக்காமல் அறிக்கை வெளியிட்ட சூர்யா

பிடிக்காமல் அறிக்கை வெளியிட்ட சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriyaகாக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் ஆகிய இரு படங்களும் சூர்யாவிற்கும் கௌதம் மேனனுக்கும் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

இதனைத் தொடந்து ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் இணையவிருந்தனர்.

ஆனால் பல்வேறு கருத்து வேறுபாடால்களால் அப்படம் கைவிடப்பட்டது.

பின்னர் சூர்யா வெளியிட்ட அறிக்கை பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் தனியார் டிவியின் புத்தாண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூர்யா பேசும்போது…

எங்கள் கூட்டணியை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்காக மீண்டும் ஒரு படம் செய்ய வேண்டும் என தோன்றும்.

பிரச்சினையான சமயத்தில் எங்கள் இருவருடைய கருத்துக்களும் வலுவாக இருந்தது.

எனவே அப்போது கௌதம் மேனனுடன் இணைய மறுத்துவிட்டேன்.

எனக்கு பிடிக்காமல் அறிக்கை ஒன்றை அப்போது வெளியிட்டு விட்டேன்.

பின்னர் அப்படி செய்திருக்கக் கூடாது என்றே தோன்றியது.

ஆனால் சமீபத்தில் இருவரும் சந்தித்து பேசினோம். விரைவில் இணைந்து பணியாற்றுவோம்.” என்று பதிலளித்துள்ளார்.

அஜித் படம் என்றாலும் தன்னை மாற்றிக் கொள்ளாத பவர் ஸ்டார்

அஜித் படம் என்றாலும் தன்னை மாற்றிக் கொள்ளாத பவர் ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Veeram telugu remakeசிவா இயக்கத்தில் அஜித் நடித்த வீரம் படம் தமிழில் வெற்றிப் பெற்றது.

இப்படம் தற்போது தெலுங்கில் கட்டம்மராயுடு என்ற பெயரில் உருவாகி வருகிறது.

இப்படத்தை கிஷோர் குமார் இயக்க, அஜித் வேடத்தில் பவர் ஸ்டார் பவன்கல்யானும், தமன்னா வேடத்தில் ஸ்ருதிஹாசனும் நடித்து வருகின்றனர்.

தமிழ் பதிப்பில் அஜித் நரைத்த முடியுடன் வேட்டி சட்டை அணிந்திருப்பார்.

ஆனால் தெலுங்கில் பவன் கல்யாண் இளமையாகவே வருகிறார்.

மேலும் பேண்ட ஷர்ட் அணிந்தபடியே நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லாரன்ஸின் ‘சிவலிங்கா’ சீக்ரெட்ஸை உடைத்த பி. வாசு

லாரன்ஸின் ‘சிவலிங்கா’ சீக்ரெட்ஸை உடைத்த பி. வாசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivalinga Teamபி.வாசு இயக்கி கன்னடத்தில் பெரும் ஹிட்டடித்த சிவலிங்கா படத்தை தமிழிலும் அவரே இயக்கி வருகிறார்.

ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க, நாயகியாக ரித்திகா சிங் நடித்திருக்கிறார்.

மிகமுக்கிய வேடத்தில் வடிவேலு நடித்துள்ளார்.

தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் ‘ரங்கு ரக்க…’ என்ற பாடலை அனிருத் பாடியுள்ளார்.

சிவலிங்கா படம் குறித்து இயக்குநர் பி வாசு கூறியதாவது…

“கன்னட சினிமாவில் சென்சேஷனல் ஹிட் சிவலிங்கா. இப்படத்தை தற்போது தமிழில் எடுத்துள்ளேன்.

கடந்த ஆண்டில் 85 அரங்குகளில் இப்படம் 100 நாட்களை கடந்து ஓடியது.

வழக்கம்போல என் படத்தில் கதைதான் ஹீரோ.

தான் வளர்க்கும் புறாவுடன் ஒருவன் ரெயிலில் சென்றுகொண்டிருக்கிறான்.

அவன் கண் அசந்த நேரம், கண் தெரியாத ஒருவர் ரயிலின் வாசல் வரை சென்று விடுகிறார்.

அவரை காப்பாற்ற சொல்லி, அந்த புறா அவனை எழுப்புகிறது.

ஆனால், கண் தெரியாதவர் அவனை கொலை செய்து விடுகிறார். அவனது ரத்தம் மீது விழுகிறது.

புறாவை தவிர கொலைக்கு யாரும் சாட்சி இல்லை.

ஆனால் அந்தப் புறா போலீசுக்கு எப்படி உதவுகிறது? என்பதுதான் கதை.

இதில் லாரன்ஸ் சிபிசிஐடி அதிகாரியாக வருகிறார். இப்படத்தின் க்ளைமாக்ஸ் வித்தியாசமாக இருக்கும்.

லாரன்சின் தாயாக ஊர்வசியும், ரித்திகாவின் தாயாக பானுப்பிரியாவும் நடித்துள்ளனர்” என்றார்.

இப்படம் ஜனவரி 26ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Director P Vasu reveals Sivalinga movie secrets

தங்கல்-துருவங்கள் 16-மோ-அச்சமின்றி படங்களின் வசூல் எவ்வளவு?

தங்கல்-துருவங்கள் 16-மோ-அச்சமின்றி படங்களின் வசூல் எவ்வளவு?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dangal Dhruvangal 16 Box Office collectionகடந்த வாரம் டிசம்பர் 30ஆம் தேதி துருவங்கள் 16, மோ, அச்சமின்றி ஆகிய நேரடி தமிழ் படங்கள் வெளியானது.

இவற்றைத் தொடர்ந்து, அமீர்கான் நடித்த தங்கல் Dangal என்ற இந்திப் படத்தின் தமிழ் பதிப்பும் வெளியானது.

இப்படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் இதோ…

துருவங்கள் பதினாறு படம் ரூ. 13.5 லட்சத்தை வசூலித்துள்ளது.

அச்சமின்றி படம் ரூ. 4.7 லட்சத்தை வசூலித்துள்ளது.

மோ படம் ரூ. 3.9 லட்சத்தை வசூலித்துள்ளது.

தங்கல் (யுத்தம்) படம் ரூ. 2 கோடியை வசூலித்துள்ளது.

‘பைரவா-சிங்கம்’ படத்திற்காக காத்திருக்கும் அஜித் படக்குழு.?

‘பைரவா-சிங்கம்’ படத்திற்காக காத்திருக்கும் அஜித் படக்குழு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith Kajal Agarwal Akshara Hassanஇந்த புத்தாண்டு 2017 பிறந்ததினம் விஜய், சிம்பு உள்ளிட்டவர்களின் பட ட்ரைலர், டிரெண்ட் சாங் உள்ளிட்டவைகள் வெளியானது.

ஆனால் தல-57 படம் தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ போஸ்டர் கூட வெளியாகவில்லை.

இந்நிலையில் பொங்கல் தினத்திற்கு பிறகு அதாவது ஜனவரி 18ம் தேதி இறுதிக்கட்ட சூட்டிங்கை தொடங்கவிருக்கிறதாம் படக்குழு.

அதன்பின்னர் ஜனவரி இறுதியில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது பைரவா மற்றும் சிங்கம் 3 படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், அப்படங்கள் ரிலீஸ் ஆன பிறகு தல 57 பர்ஸ்ட் லுக்கை வெளியிட உள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

தமிழ் சினிமாவை ஆளப் போகும் ரஜினி-தனுஷ் குடும்பத்தார்

தமிழ் சினிமாவை ஆளப் போகும் ரஜினி-தனுஷ் குடும்பத்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Dhanush familyரஜினி குடும்பத்தை போன்றே தனுஷின் குடும்பமும் கலையுலகம் தொடர்பு உடையதே.

இந்த இரு குடும்பங்களின் சார்பாக நிறைய படங்கள் இந்தாண்டை (2017) கலக்கப் போகின்றன.

ரஜினி நடித்துள்ள 2.0 படம் இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

மேலும் இந்தாண்டிலேயே ரஞ்சித் இயக்கும் படத்தில் ரஜினி நடிப்பார்.

இவை இந்தாண்டில் வந்தாலும் ஆச்சரியமில்லை.

தனுஷ் முதன் முதலாக இயக்கி வரும் பவர் பாண்டி படமும் இந்தாண்டு திரைக்கு வரும்.

மேலும் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா மற்றும் சௌந்தர்யா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் விஐபி 2 படமும் இந்தாண்டு வெளியாகும்.

இவர்களைத் தொடர்ந்து, பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனின் வாழ்க்கையை படமாக்குகிறார் ஐஸ்வர்யா தனுஷ்.

மேலும் சினிமா வீரன் என்ற ஆவணப்படத்தை இயக்குகிறார்.

செல்வராவன் இயக்கியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை படம் விரைவில் வெளியாகவுள்ளது.

தற்போது சந்தானம் நடிக்கும் மன்னவன் வந்தானடி படத்தை இயக்கி வருகிறார் செல்வா.

இதனைத் தொடர்ந்து, சூர்யா நடிக்கவுள்ள படத்தை இயக்கவிருக்கிறார்.

More Articles
Follows