தமிழிசையை திட்டிய சூர்யா ரசிகர்களுக்கு நற்பணி மன்றம் கண்டனம்

தமிழிசையை திட்டிய சூர்யா ரசிகர்களுக்கு நற்பணி மன்றம் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya Fans club requests fans not to abuse Tamilisai Soundararajanஇந்தியாவில் கல்வி முறையை மாற்ற வேண்டும் எனவும் நீட் தேர்வு தேவையில்லை எனவும் நடிகர் சூர்யா ஒரு கட்டுரையை பதிவிட்டு இருந்தார்.

சூர்யா நீங்க ஆக்டர். டாக்டர் இல்லை என சூர்யாவை கண்டித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் தன் கருத்தை தெரிவித்திருந்தார் என்பதை பார்த்தோம்.

எனவே சூர்யா ரசிகர்கள் தமிழிசையை கடுமையாக விமர்சித்தார்கள்.

எனவே அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

சூர்யா நீட் தேர்வை பற்றி தமிழ் இந்து நாளேட்டில் தம்முடைய கருத்துக்களை பதிவிட்டு இருந்தார். அதற்கு சமூகத்தின் பல்வேறு தரப்புகளிடமிருந்தும் ஆக்கபூர்வமான ஆதரவு குரல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

எதிர்பாராத விதமாக, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மட்டும், மேலோட்டமாக விமர்சித்துள்ளார். அது அவரது கருத்து.

அதற்கு எதிர்வினையாக, சமூக வலைத்தளங்களில் உங்களில் சிலர் தரமற்ற வார்த்தைகளால் தமிழிசை சவுந்தரராஜனை விமர்சிப்பதாக அறிகிறோம். இதனை சூர்யா ஒருபோதும் ஏற்க மாட்டார்.

கருத்து தளத்தில் வரும் விமர்சனங்களை நேர்மையாக எதிர்கொள்வதும் நமது ஆரோக்யமான செயல்பாடுகளால் எதிர்வினையாற்றுவதுமே சூர்யா நமக்கு கற்றுத்தந்த நற்பண்பு.

அதைவிடுத்து இது போன்ற தரமற்ற விமர்சனங்களில் இறங்கும் மன்ற உறுப்பினர்களையும், உறுப்பினராக அல்லாமல் சமூக வலைத்தளங்களில் செயல்படும் ரசிகர்களையும் வன்மையாக கண்டிக்கிறோம்.

மற்றபடி அந்த கட்டுரையில் இருக்கும் கருத்துக்களிலும் அதன் செயல் வடிவத்துக்கான பணிகளிலும் சூர்யா எப்போதும் உறுதியாக இருப்பார். அகரத்தை பற்றியும், சூர்யா பற்றியும் சமூகத்தில் உள்ள கல்வியாளர்களுக்கு நன்கு தெரியும்.

‘செயல் அது ஒன்றே மிக உயர்ந்த சொல்’ என்ற தாரக மந்திரத்தில்தான் நம்முடைய நற்பணி இயக்கமானது எப்போதும் செயல் பட்டு கொண்டிருக்கிறது.

“விளம்பரத்திற்காக எதையும் செய்யாதீர்கள், உங்கள் மனதார மற்றவர்களுக்கு உதவுங்கள்” என்ற சூர்யாவின் சொற்படியே கடந்த இருபது வருடங்களாக மன்றமானது செயற்படுகிறது.

இனிமேலும் செயற்படும். ஒருவர் நம்மை கேள்வி கேட்பதனாலேயே அவரிடம் நம்முடைய உண்மைத் தன்மையை நிரூபிக்கவேண்டிய எந்த அவசியமும் இல்லை.

நம்முடைய செயல்கள் யாரையும் காயப்படுத்தாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன் அளித்தால் போதுமானது. எம் தம்பிமார்களின் செயல்கள், தமிழிசை சவுந்தரராஜனை எந்தவிதத்திலாவது காயப்படுத்தி இருந்தால், அதற்கான வருத்தத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Suriya Fans club requests fans not to abuse Tamilisai Soundararajan

suriya fans letter

நாம் தங்கையாக பார்க்கும் அனிதாவை தலித்தாக பார்க்கிறார் ரஞ்சித்… -சீமான்

நாம் தங்கையாக பார்க்கும் அனிதாவை தலித்தாக பார்க்கிறார் ரஞ்சித்… -சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seeman pa ranjithகடந்த செப்டம்பர் 7ஆம் தேதி நீட் தேர்வால் தற்கொலை செய்துக் கொண்ட மாணவி அனிதாவுக்கு உரிமையேந்தல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

அப்போது இயக்குநர் அமீர் பேசும்போது… ‘நாம் அனைவரும் அனிதாவுக்காக கூடியிருக்கிறோம். சாதிகளைக் கடந்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட இயக்குநர் பா.ரஞ்சித் ‘தமிழன் சாதியால் பிரிந்துகிடக்கிறான். இதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும்’ என்றார்.

ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்ட இவர்களின் மாறுபட்ட கருத்துகளால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ரஞ்சித்தின் கருத்துக்கு மற்றொரு நிகழ்ச்சியில் அது பற்றி பேசினார் சீமான்.

”ரஞ்சித்தின் ஆதங்கத்தை யாரும் மறுக்க முடியாது. அவரின் கோபம், வேதனை, காயங்களும் எல்லோருக்கும் உள்ளது.

சாதியப் புற்று நம் இனத்தை செல்லரித்துக் கொல்கிறது என்பதை மறுக்க முடியாது.

போராடுகிற எல்லோரும் அனிதாவை தங்களது தங்கையாகப் பார்க்கிறார்கள். ரஞ்சித் தலித்தாகப் பார்க்கிறார்.
இது அவர் சிந்தனைக்கும், பேச்சுக்கும் ஆபத்தானது.

போராடும் அத்தனை பேரும் தலித் மாணவர்கள்தானா? எல்லா மாணவர்களும் போராடியதுதான் வரலாற்றின் பெரும் மாற்றம்.

இந்த உணர்வைதான் வளர்க்க வேண்டும். அதுதான் முக்கியம்” என்றார் சீமான்.

Seeman talks about Ranjiths reaction in Anitha death issue

தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்து கமல் ஜோசியம்..?

தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்து கமல் ஜோசியம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan speech about Vote and Future of Nationஇதுநாள் வரை பொறுமையாக காத்திருந்த கமல்ஹாசன் அரசியலின் ஆழம் பார்த்திட முடிவெடுத்துள்ளார்.

எனவே விரைவில் அரசியல் களம் காண்பார் என தமிழ்நாடே எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்கு கமல் ஜோதிடம் பார்ப்பது போன்ற நிகழ்வு இருந்தது.

அப்போது கமல் ரசிகை ஒருவர் “கிளி ஜோசியம் போல கமல் ஜோசியம் தமிழ்நாட்டில் பிரபலம்.

அதை நம்பி நிறைய பேர் காத்திருக்கிறோம். அந்த ஜோசியத்தில் நீங்கள் ‘ம்ம்ம்ம்ம்’ என்ற வார்த்தை மட்டும் சொன்னால் போதும். மத்த எல்லாம் ரெடி” என்றார்.

அதற்கு பதிலளித்த கமல், “ஏற்கெனவே ட்விட்டரில் நான் பேசுவது பலருக்கு புரியவில்லை என சொல்கிறார்கள்.

தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பார்க்கலாம் என்றால் அனைவரும் கையைத் தூக்குங்கள்” என்றவுடன் பார்வையாளர்கள் அனைவரும் கையைத் தூக்கினார்கள்.

இப்படித் தூக்கக் கூடாது என (ஓட்டுப் போடும்போது மை வைக்கும் விரலைக் மட்டும் காட்டியபடி) இப்படித் தூக்க வேண்டும்.

நேரம் வரும் போது இந்த விரலில் மை இருக்கனும். சிந்தித்து ஓட்டு போடவேண்டும். விரலில் மட்டும் கறை இருக்கனும். வேறெங்கும் இருக்கக் கூடாது. அதுதான் நம் எதிர்காலம்” என்றார் கமல்.

Kamalhassan speech about Vote and Future of Nation

ஜாதி கருத்து மோதல்; ரஜினி உங்களுக்கு புரிய வைப்பார் ரஞ்சித்… – எஸ்வி.சேகர்

ஜாதி கருத்து மோதல்; ரஜினி உங்களுக்கு புரிய வைப்பார் ரஞ்சித்… – எஸ்வி.சேகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini_Ranjithசென்னையில் இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் சார்பில் அனிதாவுக்காக உரிமையேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் பா.ரஞ்சித், “தமிழன் சாதியால் பிரிந்துகிடக்கிறான். இங்கே ஊருக்கு ஊர் சேரியும் காலனியும் இருக்கிறது.

நான் இன்னும் சேரியில்தான் வாழ்கிறேன். வீதிக்கு ஒரு சாதி இருக்கிறது.” என்று ஆவேசமாக பேசினார்.
இவரது பேச்சுக்கு சமூகவலைத்தளங்களில் ஆதரவுக் குரல்களும் எதிர்ப்புக் குரல்களும் கிளம்பியது.

இந்நிலையில் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தன்னை தமிழன் என்று சொல்லாமல் தலித் என்று சொல்லும் ரஞ்சித். தன் ஜாதியை பெருமையாக சொல்லும் ரஞ்சித்திற்கு வாழ்த்துகளும் வணக்கங்களும்” என்று பதிவிட்டு இருந்தார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் “தலித் என்பது சாதியல்ல, ஆரியம்- சாதியம் ஒழிக்கும் விடுதலைக் கருத்தியல்” என்று பதிவிட்டார் ரஞ்சித்.

அதற்கு பதிலளித்த எஸ்விசேகர்.. “வெற்றி, வேகம் தங்களின் பதில். வயதும் அனுபவமும் கூடக்கூட தெளிவு பெறுவீர்கள். என் நண்பர் தங்களின் நாயகன் புரிய வைப்பார் ” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது ரஞ்சித் இயக்கும் காலா படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருவதும், அவர் எஸ்வி. சேகரின் நண்பர் என்பதும் தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Actor SVeShekar and Director Ranjith fight regarding caste Issue

சிவகார்த்திகேயனுக்காக 10 லாரி குப்பை கொண்டுவந்த இயக்குனர்

சிவகார்த்திகேயனுக்காக 10 லாரி குப்பை கொண்டுவந்த இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Art Director brought 10 lorry of Garbage for Velaikkaran movieதனி ஒருவன் படத்தைப் பார்த்த சிவகார்த்திகேயன், உங்கள் இயக்கத்தில் நடிக்க ஆசை என்று கேட்டுக் கொண்டதன்படி வேலைக்காரன் படத்தை இயக்கியுள்ளார் மோகன்ராஜா.

இப்படம் இந்த மாதமே வெளியாகும் என கூறப்பட்டு பின்னர் 2017 டிசம்பர் 22ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் சமூகம் சார்ந்த ஒரு கருத்தை வலியுறுத்தவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்படத்திற்காக ஒரு சேரி போன்ற பகுதியை உருவாக்க நினைத்தாராம் இயக்குனர்.

எனவே அதை படமாக்க, நிஜமான குப்பைகளை 10 லாரிகளில் கொண்டுவந்து அந்த சேரி பகுதியை செட் போட்டு படமாக்கினாராம்.

Art Director brought 10 lorry of Garbage for Velaikkaran movie

ஜிமிக்கி கம்மல் பெண்ணே நீட் சமயத்தில் இது நியாயமா.? – விஜயகுமார்

ஜிமிக்கி கம்மல் பெண்ணே நீட் சமயத்தில் இது நியாயமா.? – விஜயகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

uriyadi VijayKumarதமிழகத்தை நீட் தேர்வு போராட்டங்கள் ஆட்டுவித்து கொண்டிருக்கையில் திடீரென ஜிமிக்கி கம்மல் ஆட்டம் சில இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கேரள பெண்களின் இந்த அழகு நடனம் யூடிப் மற்றும் சமூக வலைத்தளங்களில் தமிழகத்திலும் பலரது பாராட்டை பெற்று வருகிறது.

இந்நிலையில் உறியடி பட இயக்குனர் விஜயகுமார், நீட் தேர்வு குறித்தும் இந்த ஜிமிக்கி கம்மல் குறித்தும் தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

பாட திட்டத்தை மாற்றாமல் தேர்வு முறையை மாற்றி என்ன பயன்..? நம்மிடம் ஓட்டு வாங்கும் அரசியல்வாதிகள் இதற்கான போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபடாமல் இருப்பது ஏன்?

நீட் தேர்வு போராட்டத்தால் பல மாணவர்கள் சிறை சென்று கொண்டிருக்கிறார்கள்.

இந்த சமயத்தில் ஜிமிக்கி கம்மல் பாடல் டிரெண்ட் ஆகிவருகிறது. இதை பார்க்கும்போது நீட் ஆதரவாளர்கள் நம்மை பார்த்து கேலி செய்ய மாட்டார்களா? என கேட்டுள்ளார்.

இதனையறிந்த அந்த நடன பெண்மணி செர்லியும் நீட் தேர்வு போராட்டங்களில் கவனம் செலுத்த அனைவரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Director Vijayakumar request to Jimikki Kammal dance fame Sherli

More Articles
Follows