கா.மு.க-வின் இளைஞர் அணி தலைவரான சூர்யா எம்எல்ஏ ஆகிறார்

Suriya became MLA of Kaakum Munnetra Kazhagam partyதானா சேர்ந்த கூட்டம் படத்தில் அதிகார திமிரை கண்டவுடன் விரட்டி விரட்டி வெளுக்க தோனுது என்று பாடி ஆடியிருந்தார் சூர்யா.

அரசியல்வாதிகளுக்கு எதிரான இந்த வரிகள் பாடல் வெளியான போது பரபரப்பாக பேசப்பட்டது.

தற்போது அவரே ஒரு படத்தில் முழுநேர அரசியல்வாதியாக களம் இறங்குகிறார்.

செல்வராகவன் இயக்கும் என்ஜிகே படத்தில் சூர்யா நடித்து வருகிறார்.

யுவன் இசையமைத்து வரும் இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்திலிருந்து நமக்கு கிடைத்துள்ள தகவல்களின் படி நந்த கோபால குமரன் என்ற வேடத்தில் நடிக்கிறார் சூர்யா.

இதை சுருக்கமாக என்ஜிகே எனவும் என்ஜி குமரன் எனவும் அழைக்கின்றனர்.

மேலும் காக்கும் முன்னேற்ற கழகம் என்கிற கட்சியின் இளைஞர் அணி தலைவராகவும் இதில் பொறுப்பு வகிக்கிறாராம் சூர்யா.

அத்துடன் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. வாக பதவி ஏற்றுள்ளராம் சூர்யா.

இப்படத்தில் சூர்யாவுடன் ரகுல் பிரித்தி சிங் மற்றும் சாய்பல்லவி இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர்.

Suriya became MLA of Kaakum Munnetra Kazhagam party

Overall Rating : Not available

Related News

Latest Post