மாதவன் இயக்கும் படத்தில் சூர்யா & ஷாரூக்கான்

Suriya and Shahrukh Khan will be acting in Madhavans directionநடிகர், தயாரிப்பாளர் என வலம் வரும் மாதவன் தற்போது இயக்கி நடித்து வரும் திரைப்படம் ராக்கெட்ரி: நம்பி விளைவு.

இப்படம் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் திரைப்படமாக உருவாகி வருகிறது.

அதாவது ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994-ல் கைதானார் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன்.

ஆனால் அவரது குற்றம் நீருபிக்கப்படவில்லை என்பதால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

அவரது வாழ்க்கை ‘ராக்கெட்ரி’ என்ற தலைப்பில் தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது என்பதை பார்த்தோம்.

இதில் விஞ்ஞானி நம்பி நாராயணன் வேடத்தில் மாதவன் நடித்து வருகிறார். இவருடன் சிம்ரன் நடிக்கிறார்.

இந்நிலையில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க சூர்யா சம்மதித்து இருக்கிறாராம். இந்த கேரக்டர் திருப்பு முனையாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதே கேரக்டரை ஹிந்தியில் ஷாருக்கான் செய்ய உள்ளராம்.

15 வருடங்களுக்கு முன்பு மணிரத்னம் இயக்கிய ‘ஆய்த எழுத்து’ படத்தில் சூர்யா – மாதவன் இணைந்து நடித்திருந்தனர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Suriya and Shahrukh Khan will be acting in Madhavans direction

Overall Rating : Not available

Related News

கேரளாவை சேர்ந்த விஞ்ஞானி நம்பி நாராயணன்.…
...Read More

Latest Post