அன்பான ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்.: மீண்டும் இணையும் சூர்யா-ஜோதிகா

அன்பான ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்.: மீண்டும் இணையும் சூர்யா-ஜோதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya jyothikaரீல் லைஃப்பில் இணைந்த சூர்யா ஜோதிகா ரியல் லைஃபிலும் ஜோடியாக இணைந்தனர்.

இவர்கள் இருவரும் கடந்த 2006ஆம் ஆண்டில் வெளியான ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் கடைசியாக இணைந்து நடித்திருந்தனர்.

அதன்பின்னர் திருமண வாழ்க்கையில் செட்டிலான ஜோதிகா சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார்.

தற்போது தன் கணவர் தயாரிக்கும் படங்களில் நடித்து வருகிறார்.

கணவரின் தம்பி கார்த்தியுடன் ஒரு படத்தில் கூட நடித்திருந்தார்.

ஆனால் கணவருடன் இணைந்து நடிக்கவில்லை.

எனவே சூர்யா அண்ணாவுடன் அண்ணி இணைவது எப்போது என ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

இந்நிலையில், சூர்யாவும் ஜோதிகாவும் மீண்டும் இணையவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

சில்லுக்கருப்பட்டி படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம் இயக்கத்தில் இவர்கள் இணைவார்கள் என கூறப்படுகிறது.

இந்த படத்தை மலையாள இயக்குனர் அஞ்சலி மேனன் தயாரிப்பார் என்றும் கூறப்படுகிறது.

எனவே விரைவில் இது தொடர்பான செய்திகளை எதிர்பார்க்கலாம்.

Suriya and Jyothika to romance again

VPF கட்டணம் தள்ளுபடி..; தீபாவளி முதல் நவம்பர் வரை புதுப்படம் ரிலீஸ்.. பாரதிராஜா அறிக்கை

VPF கட்டணம் தள்ளுபடி..; தீபாவளி முதல் நவம்பர் வரை புதுப்படம் ரிலீஸ்.. பாரதிராஜா அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bharathi rajaதயாரிப்பாளர்கள் அனைவருக்கும் வணக்கம்!

திரைப்படங்கள் தயாரிப்பதே அதை வெளியிடுவதற்காகத்தான். திரைத்துறை சங்கங்கள் இருப்பது அதன் உறுப்பினர்கள் நலனுக்குத்தான்.

VPF சம்மந்தமான எங்கள் சங்கத்தின் நிலைப்பாட்டை நேற்று தெரிவித்திருந்த நிலையில் “ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதை”யாக, டிஜிட்டல் புரஜொக்ஷன் நிறுவனங்கள் திடீரென்று VPF ஐ தற்காலிகமாக 2 வாரங்களுக்கு இல்லை என அறிவித்து இருக்கிறது. நல்லது!

திரையரங்கங்களுடன் எங்களுக்கு பங்காளி சண்டை போன்ற சூழ்நிலை நிலவி வரும் நிலையில், தயாரிப்பாளர்களையோ திரையரங்கங்களையோ‌ பாதிப்பது எங்கள் நோக்கமல்ல.

பிரித்தாலும் சூழ்ச்சியாக டிஜிட்டல் நிறுவனங்கள் VPF ஐ விலக்கி இருந்தாலும் அது 2 வாரங்களுக்காவது தயாரிப்பாளர்களுக்கு பயன்படும் பட்சத்தில் இதை எங்கள் சிறு வெற்றியாகவும் கருதி, VPF கட்டணம் இல்லாத இந்த 2 வாரங்கள் மட்டும் எங்கள் திரைப்படங்களை திரையிட முடிவு செய்துள்ளோம்.

அதே சமயம் VPF கட்டி படங்கள் திரையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

விரைவில் நல்ல நிலையான தீர்வை எட்டுவதிலும் உறுதியாக உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி!

பாரதிராஜா
தலைவர்
தமிழ்நாடு நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்

Direcor Bharathi Raja about VPF payment issue

‘கஞ்சா’ கூட நல்லதுதான்…; தீபாவளிக்கு தியேட்டர்ல பாத்து தெரிஞ்சிக்க ஆனந்த் அட்வைஸ்

‘கஞ்சா’ கூட நல்லதுதான்…; தீபாவளிக்கு தியேட்டர்ல பாத்து தெரிஞ்சிக்க ஆனந்த் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Marijuanaசுமார் 8 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகளை இன்று நவம்பர் 10ல் மீண்டும் திறக்க அரசு அனுமதித்திருக்கும் நிலையில், புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

இந்த சிக்கல்களை தீர்க்க திரையுலக சங்கங்களிடையே பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், எந்த ஒரு தடையாக இருந்தாலும் சரி, யார் தடுத்தாலும் சரி ‘மரிஜுவானா’ படத்தை தீபாவளியன்று தியேட்டர்களில் ரிலீஸ் செய்வோம், என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Third Eye Creation சார்பில் எம்.டி.விஜய் தயாரிப்பில், எம்.டி.ஆனந்த் இயக்கியிருக்கும் இப்படத்தில் ‘அட்டு’ படத்தில் ஹீரோவாக நடித்து ரசிகர்களிடமும், ஊடகங்களிடமும் பாராட்டு பெற்ற ரிஷி ரித்விக் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

ஆஷா பார்த்தலோம் ஹீரோயினாக நடித்திருக்கும் இப்படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கிறார்கள்.

‘மரிஜுவானா’ என்பது கஞ்சாவின் அறிவியல் பெயர்.

மருத்துவத் துறையில் புற்றுநோய்க்கான மருந்தாக சில நாடுகளில் கஞ்சா அங்கீகரிக்கப்பட்டாலும், போதைக்காக அவற்றில் சேர்க்கப்படும் சில தீங்கான பொருட்களாலும், அதை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதாலும் பெரும் போதைப்பொருளாக உருவாகியிருக்கிறது.

இப்படி ஒரு கஞ்சா கலாச்சாரத்தால் ஏற்படும் விளைவுகள் மற்றும் குற்றங்களை மையமாக வைத்து சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக இப்படத்தை இயக்கியிருக்கிறார் எம்.டி.ஆனந்த்.

படம் குறித்து இயக்குநர் எம்.டி.ஆனந்த் கூறுகையில்… “கஞ்சா என்பது சில நாடுகளில் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

குறிப்பிட்ட அளவு எடுத்துக் கொண்டால் புற்றுநோயையும் குணப்படுத்தும் சக்தி கஞ்சாவுக்கு உண்டு என்பதையும் அறிவியல் பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள்.

ஆனால், தற்போதைய காலக்கட்டத்தில் அதிகமான போதைக்காக கஞ்சாவை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.

அளவுக்கு அதிகமான போதைக்கு ஆளாகும் மனிதன் தன்னையும் மறப்பதோடு, தனது மனநிலை பாதிக்கப்பட்டு பல குற்ற செயல்களில் ஈடுபடுகிறான். அப்படி குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களால், அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும், பெண் குழந்தைகளும் தான்.

இப்படி ஒரு போதை கலாச்சாரம் உருவாக என்ன காரணம் என்பதையும், அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதையும் சஸ்பென்ஸ் த்ரில்லராக சொல்லியிருக்கிறோம்.

இளைஞர்களுக்கான அனைத்து பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக இப்படத்தை இயக்கியிருந்தாலும், பெற்றோர்களுக்கான ஒரு பாடமாகவும், சமூகத்திற்கு நல்ல மெசஜ் சொல்லும் படமாகவும் இருக்கும்.

நாட்டில் குற்றம் நடந்தால், அந்த குற்றத்தை செய்பவர்கள் பெரிய ஆட்களாக இருந்தால் அவர்களை சட்டம் எப்படி கையாளும், அதே சமயம் குற்றம் செய்பவர்கள் சாதாரணமானவர்களாக இருந்தால் அவர்களை சட்டம் எப்படி கையாளும், என்பது பற்றியும் படத்தில் பேசியிருக்கிறோம்.

மொத்தத்தில், போதை மூலம் ஏற்படும் விளைவுகள் மற்றும் குற்றவாளிகளில் கூட ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு பார்ப்பது, என்ற இரண்டு விஷயத்தையும் சாட்டையடியாக சொல்லியிருக்கிறேன்.” என்றார்.

படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் தமிழ் தாய் கலைக்கூடம் எஸ்.ராஜலிங்கம் பேசுகையில், “ஒரு நல்ல படத்தை மிக நேர்த்தியாக எடுத்திருக்கிறார்கள். அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலிஸூக்கு தயாரான போது தான் கொரோனா பிரச்சினை வந்தது.

தற்போது மீண்டும் திரையரங்குகள் திறக்கப்படுவதால் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளோம்.

இதற்கிடையே, தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சில கட்டுப்பாடுகளை விதிக்க, புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதில் மீண்டும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கத்தை மதிக்கிறோம்.

அதே சமயம், மீண்டும் படத்தின் ரிலீஸை தள்ளிப்போடும் சூழலில் நாங்கள் இல்லை. கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்து படம் தயாரித்திருப்பதோடு, விளம்பரத்திற்காகவும் பெரும் தொகையை செலவு செய்துவிட்டு படத்தை வெளியிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டும்.

இனியும் நாங்கள் காத்திருக்க போவதில்லை. அதனால், படத்தை நிச்சயம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்கிறோம். படம் நிச்சயம் ரசிகர்களை கவரும்.” என்றார்.

ஹீரோ ரிஷி ரித்விக் பேசுகையில், “’அட்டு’ படத்தில் முழு ஈடுபாட்டுடன் நடித்தேன். அதற்காக எனக்கு ஊடகம் மற்றும் ரசிகர்களிடம் இருந்து தற்போது வரை பாராட்டு கிடைத்து வருகிறது.

மக்கள் மனதில் நிற்கும் அப்படிப்பட்ட வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வந்த போது தான் ‘மரிஜுவானா’ கதை என்னிடம் வந்தது.

கதை மற்றும் கதாப்பாத்திரம் வித்தியாசமாகவும், புதுஷாகவும் இருந்தது. இதில் நான் ஒரு போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். கட்டுப்பாடுகளை மதிக்காத ஒரு அதிரடி போலீஸ். சைக்கோ போலீஸ் என்று கூட சொல்லலாம். குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதில் ஒரு சைக்கோ.

ரெகுலரான போலீஸ் வேடம் என்றால் ஒகே. ஆனால், இந்த போலீஸ் வேடம் சற்று வித்தியாசம் என்பதால், இந்த கதாப்பாத்திரத்திற்காக சில மாதங்கள் பயிற்சி எடுத்தேன்.

எனக்கு தெரிந்த காவல்துறை நண்பர்கள் சிலரிடம் பயணித்து, போலீஸ் எப்படி இருப்பார்கள், என்பதை தெரிந்துக் கொண்டதோடு இயக்குநர் ஆனந்தின் போலீஸ் கதாப்பாத்திரத்தை மனதில் ஏற்றிக்கொண்டு நடித்தேன்.

’அட்டு’ மூலம் எனக்கு எப்படி பாராட்டுகள் கிடைத்ததோடு அதை விட பல மடங்கு அதிகமாக ‘மரிஜூவானா’ போலீஸ் வேடம் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.” என்றார்.

Tamil film Marijuana to release on Diwali

தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு சொந்த கட்டிடம்… நிரந்தர வருவாய் – ராமசாமி முரளி

தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு சொந்த கட்டிடம்… நிரந்தர வருவாய் – ராமசாமி முரளி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Murali Ramasamyதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.

இத்தேர்தலில், தேனாண்டாள் ராமசாமி முரளி தலைமையில் ஒரு அணியும் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன. இவ்விரண்டைத் தவிர சுயேச்சையாக தலைவர் பதவிக்கு P.L.தேனப்பன், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஓயாத அலைகள் அணி, முன்னேற்ற அணி சார்பில் பலர் போட்டியிட்டாலும் தேர்தல் களத்தில்” தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி” மட்டுமே தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது.

இந்த அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தேனாண்டாள் ராமசாமி முரளியுடன் தேர்தல் கள நிலவரம் பற்றி ஒரு பேட்டி.

1.என்னென்ன வாக்குறுதிகளை முன்வைத்து தேர்தலில் போட்டியிடுகிறீர்கள்.?

தமிழ்த்திரையுலகில் இப்போதைய முக்கிய சிக்கலாக இருப்பது VPF கட்டணம். அதைக்கட்ட மாட்டோம் என்றும் அதற்குரிய மாற்று ஏற்பாடுகளை செய்வதற்கான முயற்சியை எங்கள் அணி வெற்றிபெற்றால் செய்வோம்.

நவீன தொழில் நுட்பங்கள் காரணமாக தமிழ்த் திரையுலகம் சந்திக்கும் சிக்கல்களைசரி செய்து அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கச் செய்வதே எங்களது முக்கிய பணியாக இருக்கும்.

ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த விரும்பும் தயாரிப்பாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை, தொகையை அதிகரித்து மீண்டும் செயல்படுத்துவோம்.
சிறிய படங்களையும் OTTயில் வெளியிட முயற்சி எடுப்பது.சிறு படங்களுக்கும் போதிய திரையரங்குகள் ஒதுக்கீடு உறுதி செய்தல் உட்பட பல வாக்குறுதிகளை முன் வைத்துத் தேர்தலில் போட்டியிடுகிறோம்.

2. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிதி இருப்பு எதுவும் இல்லை என்கிற நிலையில் ஓய்வூதியம், அன்பு தொகை எப்படி சாத்தியம்

எல்லோரும் இதைத்தான் கேட்கின்றனர் சாத்தியம் இல்லை என்பதை சாத்தியம் ஆக்கி காட்டும் செயல்திறன் எங்கள் அணிக்கு உள்ளது தேர்தல் வெற்றிக்கு பின் அனைத்து தரப்பினருடனும் இணைந்து நிதி ஆதாரத்தை உயர்த்துவோம்

3. தொழில்நுட்பச் சிக்கல் என்று OTTயை குறிப்பிடுகிறீர்கள். அதேசமயம் சிறிய படங்களையும் OTTயில் வெளியிட முயல்வோம் என்று சொல்கிறீர்களே?

திரையரங்குகள் ஒதுக்கீடு போல OTTயிலும் பெரிய படங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அதனால் சிறிய படங்களையும் OTTயில் வெளியிட முயல்வோம் என்று சொல்கிறோம்.

4. சிறிய படங்களுக்குப் போதிய திரையரங்குகள் என்னும் வாக்குறுதி பல தேர்தல்களில் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறதே? செயலுக்கு வந்தபாடில்லையே?

விஷால் தேர்தலில் வென்றபோதும் இப்படிச் சொன்னார். ஆனால் அவரால் இரண்டு சங்கங்களின் பொறுப்புகளை வைத்துக் கொண்டு இரண்டிலும் முழுமையாக செயல்படமுடியவில்லை.

5.சிறு படங்களுக்கு போதிய திரையரங்குகள் என்பது விஷாலுக்கு முன்பும்தேர்தல்களில் பேசப்பட்டுக் கொண்டே இருக்கும் விசயமாக இருக்கிறதே?

ஆமாம், ஒவ்வொரு முறை தலைவராக வருகிறவர்களும் அதற்காக உரிய முயற்சிகள் எடுக்காமல் விட்டுவிட்டார்கள்.சிறு படங்களை மட்டுமே தயாரித்து வெளியிட்டு வந்த என் தந்தை இராமநாராயணனுக்கும், அவரிடம் சினிமா தொழில் கற்ற எனக்கும்அதன் வலி முழுமையாகத் தெரியும் அதனால் இந்த முறை உறுதியானமுடிவு எடுத்து செயல்படுத்துவோம்.

6.எதிரணியில் போட்டியிடும் டி.ராஜேந்தர் மற்றும் மன்னன் ஆகியோர் விநியோகஸ்தர் சங்கத்திலும் பொறுப்பில் இருக்கிறார்களே?

டி.ராஜேந்தர் போடியிடுவது ஏற்க்கத்தக்கது இல்லை. ஏற்கெனவே விஷால் தலைவரான போது அவரே இந்த காரணத்தைச் சொல்லி விஷாலை விமர்சனம் செய்தார். இப்போது அவரே அப்படிச் செய்கிறார்.
அவருடைய மகன் சிம்புவால் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

டி.ராஜேந்தர் பொறுப்புக்கு வந்தால் என்ன செய்வார்? அதுமட்டுமின்றி விநியோகஸ்தர் சங்கப் பொறுப்பிலிருப்பவர்கள் வேறு அமைப்புகளில் பொறுப்பு வகிக்கக்கூடாது என்கிற சட்டத்தைத் திருத்தி அதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாமலேயே இங்கே போட்டியிடுகிறார்கள்.

இது அவருக்குப் தேர்தலில் பின்னடைவையே ஏற்படுத்தும். இப்படிப் பல சிக்கல்களை வைத்துக் கொண்டு அவர் போட்டியிடுவது வருந்தத் தக்கது.

7. தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் ஆட்சியிலிருப்பவர்களைச் சந்தித்து அதிகாரத்துக்கு நெருக்கமாக இருப்பது போல் காட்டிக் கொள்வது சரியா?

எங்கள் சங்கத்தைப் பொறுத்தவரை மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்களோடு இணக்கமாக நடந்துகொள்வது எப்போதும் இருக்கும் வழக்கம்தான்.

எங்கள் அணியில் பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் போட்டியிடுகிறார்கள். அரசியல் என்பது வெளியில்தான் இங்கே எல்லோரும் தயாரிப்பாளர்கள்தான்.

8. நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் புதிதாகஅமைந்திருக்கிறதே?

அப்படி ஒரு சங்கம் அமைவதற்குக் காரணம் இருந்தது. அரசாங்கம் சங்கத்தின் பொறுப்பை எடுத்துக் கொண்டு ஒரு நிர்வாகக் கமிட்டி அமைத்தது. அதனால் பல சிக்கல்களில் முடிவெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அதனாலேயே அந்தச் சங்கம் உருவானது.நாங்கள் வென்ற பிறகு அவர்களுடன் பேசி தாய்ச்சங்கத்தில் இணைய வைத்து ஒன்றுபட்டு செயல்படுவோம்

9.இந்தத் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறதே?

கொரோனா நேரத்தில் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் அவரவர் சக்திக்குட்பட்டு உதவி செய்தோம். ஆனால் இப்போது எங்கள் அணி சார்பாக வாக்குக்காகயாருக்கும் எந்தப்பணமோ, பொருளோ கொடுக்கப்படவில்லை

10.உங்களிடம் குறிப்பிட்ட அளவு ஓட்டுகள் இருக்கின்றன. நீங்கள் சொல்லும் வேட்பாளர்களுக்கு அவர்கள் ஓட்டுப்போடுவார்கள் என்று சொல்லப்படுவது பற்றி..?

மறைந்த என் தந்தை இராமநாராயணன் எளிமையானவர்எல்லோரிடத்திலும் அன்பாகப் பழகியவர் அவர் தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக பொறுப்பில் இருந்தபோது அறிமுகப்படுத்தப்பட்டது ஓய்வூதியம், அன்புத்தொகை என்பது
சிறுபட தயாரிப்பாளர்கள் வளர்ச்சிக்காக சிறப்பு கவனம் செலுத்தினார்.

யாருக்கு சிக்கல் என்றாலும் அவராலானஉதவிகளை செய்திருக்கிறார்அதனால் எல்லோரும் அவர் மீது பாசமாக இருந்தார்கள், அது இப்போது எனக்கு ஆதரவாக மாறியிருக்கிறதுஇதைத்தான் அப்படிச் சொல்கிறார்கள்.

11.பிலிம் சேம்பர் வளாகத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பயன்பாட்டுக்காக 10,000 ம் ச.அடி உங்கள் தந்தை தலைவராக இருந்தபோது வழங்குவதாக சேம்பர் நிர்வாகத்தால் உறுதியளிக்கப்பட்டது அது பற்றி என்ற போது

பிலிம்சேம்பர் கட்டிடம் கட்டுவதற்கு எனது தந்தை இராமநாராயணன் சங்கத்தின் தலைவராக இருந்தபோது நிர்வாக ரீதியாகபல்வேறு உதவிகளை செய்துள்ளார். கட்டிட பணிகள் தற்போதுதான் நிறைவடைந்துள்ளது.

எங்களது அணி வெற்றிபெற்று பதவி ஏற்றவுடன் முதன்மை பணியாக பிலிம்சேம்பர் நிர்வாகத்துடன் பேசி சங்க பயன்பாட்டுக்காக 10,000ம் ச.அடி இடத்தை பெறுவோம்.

சங்க அலுவலக பயன்பாட்டுக்கு போக எஞ்சியுள்ள இடத்தை சினிமா துறைசார்ந்து வணிக பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தப்படும் அதன் மூலம் சங்கத்துக்கு மாதந்தோறும் நிரந்தர வருவாய் கிடைக்க திட்டமிட்டு செயல்படுத்தப்படும் என்றார்.

Thenandal films Murali on why he is contesting in producer council election

பாண்டிச்சேரியில் தொடங்கும் சிம்புவின் ‘மாநாடு’.. ரசிகர்கள் மகிழ்ச்சி

பாண்டிச்சேரியில் தொடங்கும் சிம்புவின் ‘மாநாடு’.. ரசிகர்கள் மகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

maanaduசிம்புவின் நடிப்பில் உருவான ‘ஈஸ்வரன்’ படத்தை நாற்பதே நாட்களில் முடித்துவிட்டார் சுசீந்திரன்.

இந்த படத்துக்காக சிம்பு தனது உடல் எடையை 30 கிலோ வரை குறைத்து செம ஸ்லிம் ஆக மாறியிருத்தார்.

இப்பட டீசர் தீபாவளி தினத்திலும், படத்தை 2021 பொங்கல் தினத்திலும் வெளியிட உள்ளனர்.

இதனையடுத்து அடுத்த படமான மாநாடு பட படப்பிடிப்புக்கு தயாராகி விட்டார் சிம்பு.

வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கொரோனா ஊரடங்குக்கு முன்பே முடிவடைந்துவிட்டது.

தற்போது 2ஆம் கட்ட சூட்டிங்கை பாண்டிச்சேரியில் தொடங்கவுள்ளனர்.

இது தொடர்பான அறிவிப்பும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞராக நடிக்கிறார், சிம்பு.

இந்த படத்தில் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இவர் இயக்குனர் பிரியதர்ஷன், லிஸி தம்பதியின் மகள் ஆவார்.

சிவகார்த்திகேயனுடன் ஹீரோ படத்திலும் நடித்துள்ளார்.

இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, மனோஜ், பிரேம்ஜி, கருணாகரன், டேனியல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில், சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.
ஒரு படத்தை முடித்த சூட்டோடு அடுத்த படத்தில் சிம்பு நடிக்கவிருப்பதால் அவரின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Simbu to resume Maanadu shoot in Pondicherry

பேய்கள் முன்னேற்ற கழகத்தில் அட்மிஷன்.. ; அஞ்சலிக்கு ஜோடியாகும் யோகி பாபு

பேய்கள் முன்னேற்ற கழகத்தில் அட்மிஷன்.. ; அஞ்சலிக்கு ஜோடியாகும் யோகி பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

yogi babu anjali‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் யோகி பாபு.

அந்த படம் சூப்பர் ஹிட்டாகவே சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் யோகி பாபு.

தற்போது அஞ்சலிக்கு ஜோடியாக பூச்சாண்டி என்ற படத்தில் நடித்துள்ளார் யோகிபாபு.

‘பூச்சாண்டி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளனர்.

இந்த போஸ்டரை தன் ட்விட்டரில் வெளியிட்டு “மக்களே பேய்கள் முன்னேற்ற கழகத்தில் அட்மிஷன் ஆரம்பித்துள்ளது. அதற்கு சில நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் (T&C) உள்ளன” என பதிவிட்டுள்ளார் யோகி பாபு.

கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கும் இந்தப் படத்தில் விஷால் சந்திரசேகர் இசையமைப்பாளராகவும், மருது ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகின்றனர்.

சந்தானம் நடித்த ’டிக்கிலோனா’படத்தை தயாரித்த கேஎஸ் சினிஷ் ‘பூச்சாண்டி’ படத்தை தயாரிக்கிறார்.

Yogi Babu and Anjali joins for Poochandi

More Articles
Follows