தமிழக காவல் துறையில் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்திய ‘சில்லுக்கருப்பட்டி’ பட நடிகர் மரணம்

தமிழக காவல் துறையில் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்திய ‘சில்லுக்கருப்பட்டி’ பட நடிகர் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் ஹலிதா இயக்கி எடிட்டிங் செய்திருந்த படம் ‘சில்லுக்கருப்பட்டி’.

இந்த படம் கடந்த 2019ல் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக ரிலீசானது.

நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் & சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் இந்த படத்தை இணைந்து வெளியிட்டனர்.

இந்த படத்தில் 4 கதைகள் 4 காதலாக சொல்லப்பட்டது.

15 வயது காதல்… 25 வயது காதல்… 40 வயது காதல்…. 60 வயது காதல்…

முதல் அத்தியாயம் பிங்க் பேக்’

2வது அத்தியாயம் ‘காக்கா கடி’

3வது அத்தியாயம் ‘டர்ட்டிள் வாக்’

4வது அத்தியாயம் ‘ஹே அம்மு’

முதல் கதையில்…

குப்பை கிடங்கில் குப்பை பொறுக்கும் ஒரு சிறுவனுக்கும் பிங்க் ப்ளாஸ்டிக் பையில் குப்பைகளை போடும் ஒரு சிறுமிக்கும் உள்ள ஈர்ப்பு.

தந்தை அன்பாக கொடுத்த காஸ்ட்லியான மோதிரத்தை தவறவிடும் அந்த சிறுமி தவிக்க, குப்பை பொறுக்கும் அந்த பையன் எப்படி அதை அவளிடம் சேர்த்தான் என்பதே கதை.

2வது கதையில்…

வாடகை காரில் பயணம் செய்யும் கேன்சர் இளைஞன் மற்றொரு பயணி பெண் இடையே உண்டான உணர்வுபூர்வமான கவிதை இது.

*3வது கதையில்…

திருமணமே செய்துக் கொள்ளாமல் காலத்தை கடந்த கன்னிக்கும் (லீலா)…. பேரன் பேத்திகளை பார்த்த மனைவியை இழந்த (க்ரவ்மகா ஸ்ரீராம்) -வருக்கும் இடையே உருவான முதிர்ந்த காதல் கதை இது.*

4வது கதையில்…

வீடே சொர்க்கம் என வாழும் ஒரு இல்லத்தரசிக்கும் (சுனைனா) மனைவியுடன் உடலுறவே சொர்க்கம் என வாழும் சமுத்திரக்கனிக்கும் உள்ள கதை இது..

இந்த நிலையில் மேற்சொன்ன இந்த 3வது கதையில் நடித்தவர்களில் ஒருவரான க்ரவ்மகா ஸ்ரீராம் (நவநீதன்) என்பவர் இன்று மரணமடைந்தார்.

இவர் அந்த படத்தில் யசோதா கேரக்டரில் நடித்த லீலா சாம்சனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தற்காப்பு கலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளார் ஸ்ரீராம்.

தமிழக காவல் துறையில் Krav Maga என்ற இஸ்ரேல் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் க்ரவ்மகா ஸ்ரீராம் என்பது குறிப்பிடத்தக்கது.

#SilluKaruppatti fame #KravMagaSreeram passes away in an accident

IMG_20210123_151205

IMG_20210123_153136

IMG_20210123_153143

தினத்தந்தி உரிமையாளர் சிவந்தி ஆதித்தன் இடத்தில் சூர்யாவின் 2டி நிறுவன சீ.இ.ஓ.

தினத்தந்தி உரிமையாளர் சிவந்தி ஆதித்தன் இடத்தில் சூர்யாவின் 2டி நிறுவன சீ.இ.ஓ.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது சென்னை ரைஃபில் கிளப்.

இதில் பல முன்னணி பிரபலங்கள், கட்சித் தலைவர்கள் எனப் பலரும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

இந்த கிளப்பிற்கு செயலாளராக தேர்ந்தெடுக்க பட்டுள்ளார் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன்.

இவர் சூர்யாவின் 2டி நிறுவனத்தில் சீ.இ.ஓ மற்றும் இணை தயாரிப்பாளர். இவருக்குத் துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் மிக அதிகம். தேசிய அளவிலான போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்று அனைவருடைய பாராட்டையும் பெற்றவர்.

தற்போது இவர் சென்னை ரைஃபில் கிளப்புக்கு செயலாளராக நியமிக்கப்பட்டு இருப்பதற்காக ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இவருக்கு முன்பாக இந்தப் பதவியில் தினத்தந்தி உரிமையாளர் டாக்டர் பி.சிவந்தி ஆதித்தன் இருந்தது குறிப்பிடத்தக்கது.

rajsekar pandian

rajsekar pandian (2)

Raj Sekar Pandian elected as Honorary secretary of the Chennai Rifle Club

மீண்டும் புரட்சி… ‘நான் கடவுள் இல்லை’..; சமுத்திரக்கனிக்காக குறும்படத்தை பெரிய படமாக மாற்றிய எஸ்ஏசி

மீண்டும் புரட்சி… ‘நான் கடவுள் இல்லை’..; சமுத்திரக்கனிக்காக குறும்படத்தை பெரிய படமாக மாற்றிய எஸ்ஏசி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SAC Samuthirakaniநீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப்படங்களில் துணிச்சலாக பிரதிபலித்த புரட்சி இயக்குநர் S.A.சந்திரசேகரன் மீண்டும் தனது புரட்சிகரமான கருத்துகளுடன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் திரைப்படம் “நான் கடவுள் இல்லை” .

இதில் சமுத்திரகனி CB CID அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வாகை சூடவா, மௌனகுரு படத்தில் நடித்த நாயகி இனியா நடிக்க மற்றும் ஒரு துணிச்சல் மிக்க பெண் போலீஸ் அதிகாரியாக பிக்பாஸ் புகழ் சாக்க்ஷி அகர்வால் நடிக்கிறார். வில்லனாக மிகவும் மிரட்டலான கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன் நடிக்கிறார்.

ஓய்வு பெற்ற வழக்கறிஞராக S.A.சந்திரசேகரரும், அழுத்தமான அர்த்தமுள்ள கதாபாத்திரத்தில் நடிகை ரோகிணியும், ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் மயில்சாமியின் இரண்டாவது மகன் யுவனும் கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் முக்கிய கதாபாத்திரத்தில் துணிச்சல் மிக்க இளைஞனாக அபி சரவணனும் அவருக்கு ஜோடியாக இளம் நாயகியாக அறிமுகமாகிறார் ப்ரியங்கா. சமுத்திரகனியின் தாயாக மதுரையை சேர்ந்த மாயக்கா நடிக்கிறார். சமுத்திரகனியின் மகள்களாக டயாணா ஸ்ரீ மற்றும் ஷாஷாவும் நடித்திருக்கிறார்கள்.

இவர்களின் கதாபாத்திரங்கள் பலர் மனதில் நீங்காமல் இடம் பிடிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் நகைக்சுவை கதாபாத்திரத்தில் இமான் அண்ணாச்சியும், ‘சூப்பர் ஜீ’ புகழ் முருகானந்தமும் நடிக்கிறார்கள்.

மகேஷ் கே.தேவ் ஒளிப்பதிவு செய்ய, “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” படத்தின் புகழ் சித்தார்த் விபின் இசையமைக்க, படத்தொகுப்பை பிரபாகரனும், கலையை வனராஜூம் கவனிக்கிறார்கள்.

“நான் கடவுள் இல்லை” படத்தை பற்றி இயக்குநர் S.A.சந்திரசேகரன் கூறியதாவது:…

“குழந்தைகளை மையமாக வைத்து நான் இயக்கிய
ஒரு குறும்படத்தை தற்செயலாக சமுத்திரகனி பார்த்தார். பார்த்துவிட்டு குறும்படத்தை பற்றி நெகிழ்ந்து பேசி பாராட்டினார்.

இதை பெரும் படமாக இயக்கும் எண்ணம் இருந்தால் தான் நடிப்பதாக தன் விருப்பத்தை தெரிவித்து இக்குறும்படத்தை பெரும்படமாக இயக்கும் எண்ணத்தை என்னூள் வித்திட்டார்.

சில நாட்களில் முழு நீள க்ரைம் த்ரில்லர் கதையாக மாற்றி அவரிடம் விரிவாக சொன்னேன், கதையை கேட்டவர் “சார் எத்தனை நாள் என்னுடைய டேட் வேண்டுமென்று” கேட்டதோடு இல்லாமல் தனது தமிழ், தெலுங்கு என தொடர் படப்பிடிப்புக்கு மத்தியில் இரவு பகல் பாராது ஒரே மூச்சில் இந்த படித்தில் நடித்துக்கொடுத்தார்” என்றார்.

மேலும் இத்திரைப்படம் சமுத்திரகனி அவர்களுக்கு வித்தியாசமான படமாக அமையும் என்றும் கூறினார். மேலும் அவரை ஒரு நடிகராக மட்டுமில்லாமல், அவருக்குள் இருக்கின்ற மனிதநேயமும் சமூக அக்கரையும் பாராட்டப்பட வேண்டியது என்றார்.

இதன் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து இறுதிக்கட்டப்பணிகள் நடந்துக்கொண்டிருக்கிறது.

SAC and Samuthirakani joins for Naan Kadavul Illai

சுஷாந்த் சிங் பிறந்த நாளில் டெல்லியில் முக்கிய சாலைக்கு அவரது பெயர் வைக்க அனுமதி

சுஷாந்த் சிங் பிறந்த நாளில் டெல்லியில் முக்கிய சாலைக்கு அவரது பெயர் வைக்க அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sushant singh rajputபல ஹிந்தி படங்களில் நடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

இவர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்தன் மூலம் இந்தியா முழுக்க பிரபலமானார்.

கடந்த 2020 ஜூன் மாதம் 14ஆம் தேதி மர்மமான முறையில் மும்பையில் உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 34.

இவரது மரணம் சினிமா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது வரை இவரது மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் டெல்லியிலுள்ள ஆண்ட்ரூஸ் கஞ்ச் என்ற பகுதிக்கு சுஷாந்த் சிங் ராஜ்புத் பெயர் சூட்டப்படவுள்ளது.

அந்த பகுதி காங்கிரஸ் கவுன்சிலரான அபிஷேக் தத், இதற்கான முன்மொழிவை கொண்டுவந்தார்.

இந்த முன்மொழிவினை உள்ளாட்சி அமைப்பின் சாலை பெயரிடுதல், மறுபெயரிடுதல் குழுவுக்கு அனுப்பி வைத்தது டெல்லி மாகராட்சி.

அந்த பகுதியில் ஆண்ட்ரூஸ் கஞ்ச் முதல் இந்திரா கேம்ப் வரை உள்ள சாலைக்கு சுஷாந்த் சிங் ராஜ்புத் மார்க் என பெயர் வைக்க மக்கள் வலியுறுத்துவதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே சுஷாந்த் பெயரை வைக்கும் இந்த முன்மொழிவுக்கு அவரது 35ஆவது பிறந்தநாளான நேற்று மாநகராட்சி ஒப்புதல் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் சுஷாந்த் பெயரில் சாலை என்ற அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

Delhi street to be named after Actor Sushant Singh Rajput

3 படம் சூட்டிங்… 3 படம் ரிலீஸ்..; வேற ‘மாரி’ வேகம் காட்டும் தனுஷ்

3 படம் சூட்டிங்… 3 படம் ரிலீஸ்..; வேற ‘மாரி’ வேகம் காட்டும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

DhanushD43 என்ற தற்காலிக படத்தலைப்பில் நடித்து வருகிறார் தனுஷ்.

விரைவில் இப்பட தலைப்பு வெளியாகும் என தனுஷ் அறிவித்திருந்ததை நம் தளத்தில் செய்தியாக பார்த்தோம்.

சத்யஜோதி தயாரித்து வரும் இந்த படத்தை கார்த்திக் நரேன் டைரக்டு செய்கிறார்.

கதாநாயகிகளாக மாளவிகா மோகனன், ஸ்மிருதி வெங்கட் இருவரும் நடிக்க இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது.

இப்படத்தை அடுத்து செல்வராகவன் இயக்க தாணு தயாரிக்கும் ‘நானே வருவேன்’ என்ற புதிய படத்திலும் தனுஷ் நடிக்கிறார்.

இதனையடுத்து ஒரு ஹாலிவுட் படத்திலும் நடிக்கவுள்ளார் தனுஷ்.

இந்த படங்கள் ஒரு புறம் தயாராக மறுபுறம் தனுஷின் 3 படங்கள் ரிலீசுக்கு ரெடியாகவுள்ளன.

அதன் விவரம் வருமாறு…

பேட்ட படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’.

இதில் தனுஷுடன் ஐஸ்வர்ய லட்சுமி & சஞ்சனா நடராஜன் நடிக்க்ஒய்நாட் ஸ்டூடியோ சசிகாந்த் தயாரித்து இருக்கிறார்.

‘கர்ணன்’ படத்தை மாரிசெல்வராஜ் டைரக்டு செய்ய, எஸ்.தாணு தயாரித்துள்ளார். கதாநாயகியாக மலையாள நடிகை ரெஜினா விஜயன் நடித்துள்ளார்.

‘அந்த்ரங்கிரே’ (ஹிந்தி) படத்தை ஆனந்த் எல்.ராய் டைரக்டு செய்து இருக்கிறார்.

இவர் தனுஷின் முதல் ஹிந்திப்படமான ‘ராஞ்சனா’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Dhanush’s next movie updates

பூசாரி வேலைக்கு ஆகாது.. எனவே கடவுளிடமே ‘வலிமை’ அப்டேட் கேட்கும் அஜித் ரசிகர்கள்

பூசாரி வேலைக்கு ஆகாது.. எனவே கடவுளிடமே ‘வலிமை’ அப்டேட் கேட்கும் அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Valimaiவினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’.

போனிகபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இப்பட படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தானில் நடைப்பெற்று வருகிறது.

இதில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார் தல. நாயகியாக ஹூமா குரேஷி நடிக்க காமெடியனாக யோகிபாபுவும், வில்லனாக கார்த்திகேயாவும் நடித்து வருகின்றனர்.

அதர்வா நடித்த 100 பட வில்லன், ராஜ் அய்யப்பன் அஜித்தின் தம்பியாக நடிக்கிறாராம்.

இப்படத்தில் தாயின் அன்பை உணர்த்தும் பாடல் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் இப்பட இசையமைப்பாளர் யுவன்.

இது தவிர படத்தில் விக்னேஷ் சிவன் ஒரு பாடலை எழுதி இருக்கிறாராம்.

இந்த தகவல்கள் படிப்படியாக கிடைத்தாலும் முறையான அதிகாரப்பூர்வ தகவல்களை படக்குழுவினர் தரவில்லை.

எனவே ஒருமுறை தமிழக முதல்வரிடமே ‘வலிமை’ அப்டேட்டை அஜித் ரசிகர்கள் கேட்டனர்.

தற்போது ஒரு படி மேலே சென்று கடவுள் முருகனிடம் அப்டேட் கேட்டுள்ளனர்.

வித்தியாசமான முறையில் போஸ்டர் ஒன்றை டிசைன் செய்துள்ளனர்.

அதில், முருகனின் படமும், அஜித்தின் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.

அத்துடன் ‘வலிமை-க்கு அப்டேட் கொடுக்க சொல்லுங்க முருகா” என்ற வசனங்களும் இடம் பெற்றுள்ளது.

Ajith Fans request Valimai update to God

More Articles
Follows