சதீஷ் இயக்கத்தில் கார்த்திகேயன் & சுபிக்‌ஷா இணைந்து நடிக்கும் ‘சூரகன்’

சதீஷ் இயக்கத்தில் கார்த்திகேயன் & சுபிக்‌ஷா இணைந்து நடிக்கும் ‘சூரகன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

3rd Eye Cine Creations சார்பாக V.கார்த்திகேயன் பிரம்மாண்டமாக தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் படம் “சூரகன்”.

அஹம் பிரம்மாஸ்மி படத்தை இயக்கிய சதீஷ் G.குமார் இப்படத்தை இயக்குகிறார். மேலும் ஒளிப்பதிவு இயக்கத்தையும் மேற்கொள்கிறார்.

க்ரைம் திரில்லராக உருவாகும் “சூரகன்” படத்தில் கதையின் நாயகனாக V.கார்த்திகேயன் நடிக்க கதாநாயகியாக சுபிக்‌ஷா நடிக்கிறார்.

முக்கிய வேடத்தில் பாண்டியராஜன், வின்சண்ட் அசோகன், நிழல்கள் ரவி நடிக்க, உடன் ரேஷ்மா பசுபுலெடி, வினோதினி, சுரேஷ் மேனன், K.S.G. வெங்கடேஷ், சாய் தீனா, ஜீவா ரவி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இன்று இப்படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது. இப்படத்தின் படபிடிப்பை இயக்குனர் கே.பாக்யராஜ் கிளாப் போர்ட் அடித்து துவக்கி வைத்தார்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம்:

தயாரிப்பு – 3rd Eye Cine Creations சார்பாக V.கார்த்திகேயன்
எழுத்து, இயக்கம், ஒளிப்பதிவு, இயக்கம் – சதீஷ் G.குமார்
ஒளிப்பதிவு – ஜேசன் வில்லயம்ஸ்
இசை – அச்சு ராஜாமணி
ஸ்டண்ட் – டேஞ்சர் மணி
நடனம் – ஶ்ரீதர்
மேக்கப் – பிரின்ஸ் பிரேம்
காஸ்டுயும் டிசைனர் – கீர்த்தி வாசன்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

சூரகன்

‘Suragan’ directed by Satish and starring Karthikeyan , Subhiksha

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.; ரூ 150 கோடியை தாண்டியது விக்ரம் வசூல்

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.; ரூ 150 கோடியை தாண்டியது விக்ரம் வசூல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள படம் ‘விக்ரம்’.

கமல்ஹாசனுடன் பஹத் பாசில், விஜய் சேதுபதி, காயத்ரி, நரேன் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அனிருத் இசையமைத்த இப்படத்தில் முக்கிய கேரக்டரில் (ரோலக்‌ஸ்) சூர்யா நடித்திருக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே ஆமோக வரவேற்பை பெற்றது.

மேலும் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய 3 நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளை திரையிட அனுமதி தமிழக அரசு அளித்திருந்தது.

‘விக்ரம்’ படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலகளவில் ரூ.49 கோடி வசூலை எட்டியது என்பதை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

தற்போது, படம் வெளியாகி 3 நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும் உலக அளவில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

வரும் நாட்களில் இன்னும் அதிக வசூலை ‘விக்ரம்’ படம் அள்ளும் என வர்த்தக ஆலோசகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Tamil film ‘Vikram’ grosses over Rs 150 crore

ஆசை தோசை அப்பளம் வடை.: சினிமா ஆசையால் மீண்டும் ரீஎன்ட்ரியாகும் வீரேந்திரன்

ஆசை தோசை அப்பளம் வடை.: சினிமா ஆசையால் மீண்டும் ரீஎன்ட்ரியாகும் வீரேந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தாகம் உள்ளவன் தண்ணீரைக் கண்டடைவான் என்பது கபீர் சொன்னது.

அதேபோல் சினிமாவை அடைய வேண்டும் என்று நினைப்பவர்கள் சினிமாவை எந்த வழியிலாவது கண்டடைந்து வந்து சேர்வார்கள். சினிமாவும் தனக்கான ஆட்களை எப்படியோ ஈர்த்து தேடிக்கொள்ளும்.

அப்படித்தான் நடிகர் பிஜாய் மேனன் பற்றி நினைக்கத் தோன்றுகிறது.

பிஜாய் மேனன் என்கிற தன் பெயரை சினிமாவுக்காக வீரேந்திரன் என்று மாற்றிக் கொண்டுள்ளார்.

ஒரு சிறிய தொழில் நடத்தி வந்தவர், சத்யஜோதி தியாகராஜன் அழைப்பின்பேரில் நடிகர்களுக்கான தேர்வில் கலந்துகொண்டார் .

அப்படி ஆடிஸனுக்குச் சென்றுவிட்டு அலுவலகத்திலிருந்து வெளியே வந்தபோது ஜிம் பாய்ஸ் என்பவர்களின் ஊக்கத்தில் இன்னொரு படத்துக்கான நடிகர்களுக்கான தேர்வில் அழைப்பு வரவே, கலந்து கொண்டார்.

இப்படி சத்யஜோதியின் பார்த்திபன் கனவு படத்திலும் காக்க காக்க படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் .

அதன் பிறகு வர்ணஜாலம், எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி, கனவு மெய்ப்பட வேண்டும் , ரிமோட் , சதுரங்கம் போன்ற 16 படங்களில் நடித்தார்.

இதில் பல படங்கள் வெற்றிப்படங்கள்.சன் டிவியின் ஆனந்தம் மற்றும் சிதம்பர ரகசியம் போன்ற தொடர்களில் நடித்தவர் விஜய் டிவியில் தொடர்களிலும் நடித்துள்ளார்.

இவர் நடித்த படங்களின் வெற்றிக்குப்பின் பல பட வாய்ப்புகள் வந்தன. இப்படித்தான் 16 படங்களில் நடித்தார்.

இப்படி நடித்தவர் பிள்ளைகள் முன்னேற்றம் சார்ந்த குடும்ப சூழல் காரணமாக ஆஸ்திரேலிய நாட்டுக்குப் போய் 18 ஆண்டுகள் இருந்து,தன் கடமைகளை முடித்து வந்தவர்,

தனது உள்ளத்தில் உறங்கிக்கிடந்த கனவைப் புதுப்பித்துக் கொள்ளும் முகமாக மீண்டும் வாய்ப்புகள் தேட ஆரம்பித்தார் .

தாயகம் வந்தவர்,மீண்டும் தனது தாய் வீடான சினிமாவில் மறுபிரவேசம் செய்து,தன் இடத்தை அடைந்து இப்போது சில படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்.

இப்போது தமிழில் இயல்வது கரவேல், வேதா மற்றும் கன்னடத்தில் ஷமந்த் எனப் புதிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
ஆசை தோசை அப்பளம் வடை படத்தில் நடிக்கவிருக்கிறார் .

நடிப்பாற்றலை வெளிப்படுத்த வாய்ப்பு தரும் குணச்சித்திரம் கொண்ட கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ஆர்வமாக இருக்கிறார்.

நடிக்கும் பாத்திரத்தின் தேவை கருதி நடிக்க விரும்பும் இவர், நடிப்பதில் நேர் நிலை, எதிர் நிலை என்கிற கவலை இல்லை என்கிறார். வீரேந்திரன் வெற்றி பெற வாழ்த்துவோம்.

Aashi Dosai Appalam Vada: Veerendran is re-entering cinema with desire

தமிழக அமைச்சர் & நடிகர் சங்க துணைத் தலைவரை சந்தித்தார் போண்டா மணி

தமிழக அமைச்சர் & நடிகர் சங்க துணைத் தலைவரை சந்தித்தார் போண்டா மணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீலங்காவை (இலங்கை) பூர்வீகமாக கொண்டவர் நடிகர் போண்டா மணி.

இவர் 1991-ம் ஆண்டு வெளியான ‘பவுனு பவுனுதான்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இவரை சினிமாவில் பாக்யராஜ் தான் அறிமுகப்படுத்தினார்.

வடிவேலுடன் போண்டா மணி நடித்த *அடிச்சு கூட கேட்பாங்க… சொல்லிடாதீங்க.. டேய் எதைடா சொல்ல கூடாது* என்ற காமெடி படு பிரபலம்.

தனுஷின் ‘படிக்காதவன்’ படத்தில் விவேக் உடன் இணைந்து காமெடி செய்திருப்பார். இதுவரைக்கும் யாருக்குமே ஒன்னுமே பண்ணல..” என்ற காமெடியும் படுபிரபலம்.

மேலும் ‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘மருதமலை’, ‘வின்னர்’, ‘வேலாயுதம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், இதயக் கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் போண்டா மணி அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

தற்போது பூரண குணம் அடைந்துள்ளார் நடிகர் போண்டாமணி.

இந்த நிலையில் நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி எஸ் முருகனை இன்று காலை காமெடி நடிகர் போண்டாமணி நேரில் சந்தித்து தனது மருத்துவ சிகிச்சைக்கு உதவியதற்காக நன்றி தெரிவித்தார்.

மேலும் உடல் நலம் பெற்ற காமெடி நடிகர் போண்டாமணி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி அவர்களையும் இன்று சந்தித்து, நன்றி தெரிவித்தார். அப்போது போண்டா மணி மகன் சாய்ராம் உடனிருந்தார்.

மேலும் இதே போல் சமீபத்தில் மருத்துவ சிகிச்சையில் இருந்த அங்காடித்தெரு சிந்து அவர்களும் நலம் பெற்று வீடு திரும்பியதும் சிகிச்சைக்கு உதவியதற்காக நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி முருகன் அவர்களுக்கு போனில் நன்றி கூறினார்.

Bonda Mani meets Tamil Nadu Minister & Vice President of Actors Association

சுனைனா நடிக்கும் ஸ்டைலிஷ் திரில்லர் ‘ரெஜினா’.; வைரலாகும் பான் இந்தியா போஸ்டர்ஸ்

சுனைனா நடிக்கும் ஸ்டைலிஷ் திரில்லர் ‘ரெஜினா’.; வைரலாகும் பான் இந்தியா போஸ்டர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுனைனா நடிக்கும் ஸ்டைலிஷ் திரில்லர் படம் ‘ரெஜினா.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் “ரெஜினா” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட வெங்கட் பிரபு.

பிரபல மலையாள டைரக்டர் ஆஷிக் அபு மலையாள போஸ்டரை வெளியிட்டார்.

தென்னிந்திய திரையுலகின் திறமை மிக்க பிரபல நடிகையாக இருப்பவர் சுனைனா.

#நீர்ப்பறவை, #சில்லுக்கருப்பட்டி படங்களில் தன் நடிப்பு திறமையால் அனைவரையும் கவர்ந்தவர்.

தற்போது பன்மொழிகளில் உருவாகும் #ரெஜினா என்ற புதிய திரைப்படத்தில் முதன்மை நாயகியாக நடிக்கிறார்.

( Yellow Bear Production LLP ) எல்லோ பியர் புரொடக்‌ஷன் சதீஷ் நாயர் இப்படத்தினை தயாரிக்கிறார்.

இப்படம் நான்கு மொழிகளில் தயாராகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் “ரெஜினா” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று பிரபல டைரக்டர் வெங்கட் பிரபு வெளியிட்டார்.

மலையாள போஸ்டரை பிரபல மலையாள டைரக்டர் ஆஷிக் அபு ( AASHIQ ABU ) வெளியிட்டார்.

இப்படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார், மலையாள பிரபலம் டோமின் டி சில்வா.

இவர், மலையாளத்தில் பரபரப்பாக பேசப்பட்ட “பைப்பின் சுவத்திலே பிராணயம்” மற்றும் “ஸ்டார்” படங்களை இயக்கியவர்.

இப்படம் பெண்களை மையமாகக் கொண்ட ‘ஸ்டைலிஷ் திரில்லராக’ இருக்கும் என்று இயக்குநர் டோமின் டி சில்வா கூறியுள்ளார்.

மேலும் நீரோட்டத்திற்கு எதிராக ஒரு மீன் நீச்சலடிப்பதை போல, இப்படம் ஒரு சாதாரண இல்லத்தரசி ஆக இருக்கும் ஒரு பெண், அசாதாரணமான விஷயங்களைச் சாதிப்பதைப் பற்றியதாகவும், அனைவரையும் ஈர்க்கக்கூடிய ஒரு திரில்லர் படமாக இருக்கும், ”என்றார்.

ரெஜினா படத்தின் பாடல்களை இசையமைத்து படத்தை தயாரிக்கிறார் சதிஷ் நாயர்.

இந்த பாடல் 4 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

சில பாடல்கள் சிங்கப்பூரில் பதிவாக்கப்பட்டது. கிராமி விருது வென்ற, டபுள் பேஸ்-இல் இசையமைக்கும் வல்லமை படைத்தவர்களில் ஒருவரான கிறிஸ்டி வாசித்து இருக்கிறார்.

இவருடன் ஜோண்ட் என்பவரும் வாசித்திருக்கிறார். இவர் ஜாஸ் பாணியில் வல்லமை வாய்த்தவர்.

இந்த பாடல்களுக்கான வரிகளை யுகபாரதி, விவேக் வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ்.R எழுதியுள்ளனர்.

பவி K.பவன் ஒளிப்பதிவு செய்ய, கமருதீன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். டோபி ஜான் எடிட்டிங் செய்ய, ஆடை வடிவமைப்பை ஏகன் செய்கிறார். PRO ஜான்சன்.

இப்படத்தின் படல்கள் வெளீயீடு மற்றும் வெளியீட்டு தேதி பின்னர் அறிவிக்கப் படும்.

Stylish thriller ‘Regina’ starring Sunaina; Pan India Posters Going Viral

நாலு ஹீரோயின்ஸ் மூணு ஹீரோஸ் இணைந்து ருசிக்கும் ‘காபி வித் காதல்’

நாலு ஹீரோயின்ஸ் மூணு ஹீரோஸ் இணைந்து ருசிக்கும் ‘காபி வித் காதல்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக இருப்பவர் சுந்தர் சி.

காலமாற்றத்திற்கு ஏற்ப தன்னை அப்டேட் செய்துக் கொண்டு எப்போதும் முன்னணி இயக்குனர்கள் வரிசையிலேயே தன்னை தக்கவைத்து கொண்டிருப்பவர் இயக்குனர் சுந்தர்.சி.

கவலைகளை மறந்து குடும்பத்துடன் சிரித்து மகிழ்ந்தபடி கலகலப்பான படம் பார்க்க வேண்டும் என்றால் அந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பதும் இயக்குனர் சுந்தர்.சியின் படங்கள்தான்.

முழுநீள காமெடி படங்கள் என்றாலும் சரி, ஹாரர் படங்கள் என்றாலும் சரி, அனைத்துமே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தியேட்டருக்கு அழைத்து வரக்கூடிய பொழுதுபோக்கு அம்சங்களுடன் அமைந்திருக்கும்..

அந்த வகையில் அரண்மனை-3 படத்திற்குப் பிறகு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘காபி வித் காதல்’.

குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் என மூன்று கதாநாயகர்கள் நடிக்க, மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடிக்கின்றனர் . .

பல வருடங்களுக்கு முன்பு சுந்தர்.சி இயக்கத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்ற ‘உள்ளத்தை அள்ளித்தா’ திரைப்படம், ஊட்டியை கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்டு மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அந்த வகையில் தற்போது இந்த படமும் சென்னையில் துவங்கி ஊட்டியில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு மொத்தம் 75 நாட்கள் நடைபெற்றுள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். மொத்தம் 8 பாடல்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் E.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு பணிகளை ஃபென்னி ஆலிவர் மேற்கொள்கிறார்.

ஒரு குடும்பத்தில் உள்ள மூன்று சகோதரர்கள் அவர்களுக்குள் ஒத்துப் போகாத வெவ்வேறு பாதைகளில் பயணிக்கிறார்கள்.

இசையமைப்பாளராக ஒருவன், ஐ டி கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவன், சமையல் வேலையில் ஆர்வம் உடைய ஒருவன். அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை மையப்படுத்தி இந்த படத்தில் சுந்தர்.சி. தனது பாணியில் கலகலப்புடன் கூறி இருக்கிறார்

இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் ஜூலை மாதம் படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

‘Coffee with Love’ where four heroines taste three heroes together

More Articles
Follows