அமெரிக்காவில் ‘அண்ணாத்த’.: கஸ்தூரியிடம் யாரும் பேசவே இல்லை என ரஜினி பிஆர்ஓ விளக்கம்

அமெரிக்காவில் ‘அண்ணாத்த’.: கஸ்தூரியிடம் யாரும் பேசவே இல்லை என ரஜினி பிஆர்ஓ விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்த் தன் மருத்துவ பரிசோதனைக்காக அடிக்கடி அமெரிக்கா செல்வது வழக்கம்.

கடந்த 16 மாதங்களாக கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்கா செல்லவில்லை.

தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் மத்திய அரசிடமிருந்து சிறப்பு அனுமதி பெற்று தன் மனைவி லதாவுடன் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றார் ரஜினிகாந்த்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் இந்தியாவிலிருந்து வருபவர்களுக்குத் தடை விதித்து இருந்தது அமெரிக்கா.

இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் சமயத்தில் எப்படி சிறப்பு அனுமதி பெற்று ரஜினி செல்லலாம்? என கஸ்தூரி தனது ட்விட்டர் பதிவுகளில் கேள்வி மேல் கேள்வி கேட்டு இருந்தார்.

கஸ்தூரி கூறியிருந்ததாவது:

“இந்தியாவிலிருந்து நேரடியாக வருபவர்களுக்கு அமெரிக்கா மே மாதமே தடை விதித்துவிட்டது. இதில் எந்த விதிவிலக்கும் கிடையாது.

பிறகு எப்படி, ஏன் ரஜினிகாந்த் இந்தக் காலகட்டத்தில் பயணம் மேற்கொண்டார்?

அவர் அரசியலிலிருந்து விலகியது, இப்போது இது என எதுவும் சரியாகப் படவில்லை. ரஜினி அவர்களே, தயவுசெய்து தெளிவுப்படுத்துங்கள்.

தெளிவுக்காக: அமெரிக்க வாழ் இந்தியர்கள், அமெரிக்காவில் படித்துக் கொண்டிருப்பவர்கள் இந்தியாவில் இருந்தால் அவர்கள் மீண்டும் அமெரிக்கா திரும்ப அனுமதி இருக்கிறது.

எனவே ரஜினியின் இந்தப் பயணம் கண்டிப்பாக மர்மமே.

இந்திய அரசிடமிருந்து மருத்துவக் காரணங்களுக்காக ரஜினி விதிவிலக்குக் கோரி அனுமதி பெற்றிருக்கலாம் என்று பலர் கூறுகின்றனர். இது இன்னும் கவலைக்குரியது.

இந்தியாவின் சிறந்த மருத்துவமனைகள் சிகிச்சை தர முடியாத அளவுக்கு அப்படி என்ன அவருக்கு உடல் உபாதை? வழக்கமான பரிசோதனை என்றார்கள்.

மாயோ க்ளினிக் என்பது இருதய சிகிச்சைக்கானது.

ரசிகர்களே, ரஜினிகாந்துக்கு விதிமுறைகள் கிடையாது என்றெல்லாம் வந்து சொல்லாதீர்கள்.

சொல்வதற்கே மோசமான விஷயம் அது. இப்படிப்பட்ட புகழ்பெற்ற மனிதர்கள் மிக ஜாக்கிரதையாகச் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும்.

இதற்கு தர்க்கரீதியாக ஒரு விளக்கம் இருந்தால் நம் அனைவருக்கும் அது தெரியவரும். ரஜினிகாந்த் உட்பட எவருமே விதிமுறைகளுக்கும், கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல”.

இவ்வாறு கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

கஸ்தூரியின் இந்த ட்விட்டர் பதிவுகள் சர்ச்சை ஆனது.

இந்த நிலையில் நேற்று கஸ்தூரி தன் ட்விட்டரில் (ரஜினி தரப்பில்) அவருக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அவரின் பதிவில்…

“அலைபேசியில் அழைத்து விவரத்தை விளக்கினார்கள்.
ஆச்சரியம் கலந்த நன்றி !
நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது.
என் உள்மன கலக்கமும் முடிவுக்கு வந்தது.
நல்ல செய்தி- நானே முதலில் சொல்கிறேன்.
பூரண நலமுடன் புது பொலிவுடன்
‘தலைவரை’ வரவேற்க தயாராகட்டும் தமிழகம் ! #Rajinikanth #Annathe

என பதிவிட்டுள்ளார் கஸ்தூரி.

மேற்கண்ட தகவல்களை நம் தளத்தில் பார்த்தோம்.

இப்போது ரஜினிகாந்தின் பிஆர்ஓ ரியாஸ் தன் ட்விட்டரில்…

தலைவரோ ,தலைவர் குடும்பத்திலிருந்து யாரும் பேசவில்லை , எந்த விதமான விளக்கமும் கொடுக்க வில்லை என்பது தான் நிஜம்
@rajinikanth
@soundaryaarajni
@OfficialLathaRK
@ash_r_dhanush
#Thalaivar #Rajinikanth

இவ்வாறு கஸ்தூரிக்கு விளக்கம் அளித்துள்ளார்.

இதனால் மீண்டும் கஸ்தூரி வேறு ஒரு காரணம் (விளக்கம்) அளித்துள்ளார்.

அதில்… “என்னை அழைத்து பேசியது கங்கை அமரன் அவர்கள். அவர் பகிர்ந்த விவரங்களை நான் யாரிடமேனும் சரி பார்க்க வேண்டும் என்றெல்லாம் நினைக்க வில்லை.”

இவ்வாறு அந்தர் பல்டி அடித்துள்ளார் கஸ்தூரி.

என்னமோ ரஜினி தரப்பில் விளக்கம் சொன்னது போல பில்டப் கொடுத்தீர்களே? இப்போ என்ன ஆச்சு? என ரஜினி ரசிகர்கள் கஸ்தூரியை வறுத்தெடுத்து வருகின்றனர்.

Superstar Rajinikanth officially denies contacting actress Kasthuri

ஜூலை 15 வரை கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு.; புதுச்சேரி காரைக்காலில் தளர்வுகள் என்னென்ன..??

ஜூலை 15 வரை கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு.; புதுச்சேரி காரைக்காலில் தளர்வுகள் என்னென்ன..??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

lockdown in puducherryபுதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கொரோனா பரவலைத் தடுக்க போடப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் (ஜூன்-30) முடிவடைகிறது.

இந்த நிலையில், தற்போது கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு வரும் ஜூலை 15ஆம் தேதி வரை நீட்டித்து புதுச்சேரி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி காரைக்காலில் தளர்வுகள் என்னென்ன..??

*கடற்கரை சாலை, பூங்காக்கள் இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* உடற்பயிற்சி, யோகா மையங்களில் 50% பேர் பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்கப்படும் , காய்கறி மற்றும் பழ கடைகள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும்.

* அனைத்து தனியார் அலுவலகங்களும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். (கொரோனா பரிசோதனை மற்றும் ஊழியர்களுக்கு 100 சதவீத தடுப்பூசி உறுதி செய்யப்பட வேண்டும்).

* அனைத்து சினிமா தியேட்டர்கள், மல்டிபிளெக்ஸ்களுக்கு ஊரடங்கில் விதிக்கப்பட்ட தடை தொடரும்.

* சமூக, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான கூட்டங்களுக்கு தடை.

* பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்த வழிகாட்டுதல்களின்படி அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்படும்.

* ஹோட்டல்கள், லாட்ஜ்கள் மற்றும் விருந்தினர் மாளிகைகள் மற்றும் முழுமையான உணவகங்களுக்குள் உள்ள உணவகங்கள் மற்றும் பார் வசதிகள் இரவு 9 மணி வரை 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* சில்லறை மதுபானக் கடைகள் மட்டுமே காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும்.

* திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்புக்கு 100 நபர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது.

* பெட்ரோல் பங்குகள், ஏடிஎம்கள், தொலைத்தொடர்பு, இணைய சேவைகளுக்கு எந்த நேர கட்டுப்பாடுகளும் இருக்காது.

*சரக்கு போக்குவரத்து எல்லா நேரங்களிலும் அனுமதிக்கப்படும் மற்றும் தனியார் / அரசு பொது போக்குவரத்து அனைத்து நாட்களிலும் 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* இரவு 9 மணி வரை அனைத்து மத வழிபாட்டுதலங்களும் பொது தரிசனத்திற்காக திறக்கப்படும். 100 பேர் திருமணத்தில் பங்கேற்கலாம், இறுதிச்சடங்கில் 20 பேர் பங்கேற்கலாம்.

Pondy government extends lock down till july 15th

‘டிக்கிலோனா’ பட இயக்குநர் திருமணம்: நடிகர் சந்தானம் நேரில் வாழ்த்து

‘டிக்கிலோனா’ பட இயக்குநர் திருமணம்: நடிகர் சந்தானம் நேரில் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dikkilona director marriageடிக்கிலோனா திரைப்படத்தில் இயக்குநர் கார்த்திக் யோகிக்கும் மணமகள் வினி ஷாமுக்கும் நேற்று முன் தினம் திருச்சியில் திருமணம் நடந்தது. பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண வைபவம் சிறப்பாக நடந்தது.

திருமணத்தில், நடிகர் சந்தானம் நேரில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

நடிகர்கள் காளி வெங்கட், கண்ணன் ரவி (மண்டேலா பட நடிகர்), வத்ஸன் (எங்கேயும் எப்போதும்) ஆகியோரும் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும், திருமணத்தில் திரைப்பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். கரோனா ஊரடங்கு என்பதால் நேரில் வர இயலாதவர்கள் ஆன்லைன் மூலம் வாழ்த்துத் தெரிவித்தனர்.

நடிகர்கள் யோகி பாபு, சதீஷ், சாம்ஸ் ஆகியோர் இணையவழியில் புதுமணத் தம்பதியை வாழ்த்தினர்.

பலூன் இயக்குநர் சினிஷ், எட்டு தோட்டாக்கள் இயக்குநர் ஸ்ரீ கணேஷ், மண்டேலா இயக்குநர் அஸ்வின், டோரா இயக்குநர் தாஸ் ராமசாமி, தர்மபிரபு இயக்குநர் முத்துக்குமார், ப்ரூஸ் லீ இயக்குநர் பிரசாந்த், விழா இயக்குநர் பாரதி பாலா, சொன்னா புரியாது திரைப்பட இயக்குநர் ஜெயராஜ் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இவர்களுடன் மாஸ்டர் திரைப்பட எடிட்டர் ஃபிலோமின் ராஜ், மாநகரம், ஜிப்சி திரைப்பட கேமராமேன் செல்வா ஆகியோரும் தம்பதிகளை வாழ்த்தினர்.

கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனர் கே.ஜே. ஆர் ராஜேஷ், கிளாப் போர்டு சத்யா மற்றும் டிக்கிலோனா திரைப்படத்தின் ஒட்டுமொத்த குழுவினரும் மணமக்களை வாழ்த்தினர்.

திருமண விழாவில் கலந்து கொண்ட ரசிகர்கள் டிக்கிலோனா எப்போது வெளியாகும் என்று தங்களின் எதிர்பார்ப்பைத் தெரிவித்தனர்.

நடிகர் சந்தானம் மூன்று விதமான கெட் அப்களில் நடிக்கும் திரைப்படம் டிக்கிலோனா. இத்திரைப்படம் டைம் டிராவலை மையப்படுத்தி நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ளது.

2027ம் ஆண்டிலிருந்து 2020ம் ஆண்டுக்கு வந்து தனது கல்யாணத்தை இளைஞர் ஒருவர் தடுத்து நிறுத்துவதற்காக டைம் டிராவல் செய்வதை போல் ‘டிக்கிலோனா’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கேஜேஆர் ஸ்டூடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் பிலிம் பேக்டரி இணைந்து இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளது.

FK2A7448

Dikkilona movie director gets married

உலகநாயகன் கமலுடன் கூட்டணி.; லோகேஷ் இயக்கத்தில் மீண்டும் ‘கைதி’ நடிகர்

உலகநாயகன் கமலுடன் கூட்டணி.; லோகேஷ் இயக்கத்தில் மீண்டும் ‘கைதி’ நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal lokeshஉலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் படம் “விக்ரம்”.

பட நாயகன் கமல்ஹாசனே தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

பஹத்பாசில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். விஜய்சேதுபதியும் நடிப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகர் நரேன்.

ஏற்கனவே லோகேஷ் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடித்த ‘கைதி’ படத்தில் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படம் குறித்து நடிகர் நரேன் கூறுகையில்..

” இது என் வாழ்நாளில் மிக முக்கியமான படம். கைதி படம் முடித்த பிறகு நான் இரண்டு படங்கள் நடித்து முடித்திருந்தேன்.

விக்ரம் படத்தின் டீசர் வெளியான போது லோகேஷிற்கு வாழ்த்து தெரிவிப்பதற்கு அவரை தொடர்பு கொண்டு பேசினேன்.

அப்போது தான் அவர் சொன்னார், உங்களுக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் இப்படத்தில் உண்டு என்பதை! ஒரு கனவு நிறைவேறியதை போல உணர்வு பெறுகிறேன்.

உலக நாயகன் கமல்ஹாசன் சாரை பார்த்து சினிமாவுக்குள் நுழைந்த பல பேரில் நானும் ஒருவன்! இது ஒரு மகிழ்ச்சியான செய்தி என உளம் நெகிழ்ந்து பேசியுள்ளார்.

Kaithi actor joins Kamal’s Vikram

மகனை இழந்த இரண்டே வாரத்தில் கணவரையும் இழந்த நடிகை கவிதா

மகனை இழந்த இரண்டே வாரத்தில் கணவரையும் இழந்த நடிகை கவிதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் தன் 11 வயதில் ‘ஓ மஞ்சு’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கவிதா.

பின்னர் கதாநாயகி, குணச்சித்திர நடிகை என அறியப்பட்டவர் கவிதா.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கவிதா.

தமிழில் மட்டுமே 50-ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர்.

தற்போது ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும், ‘என்றென்றும் புன்னகை’ சீரியலில் நடித்து வருகிறார் கவிதா.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளதால், வீட்டில் ஓய்வில் இருந்துள்ளார் இவர்.

இவரது மகன், சஞ்சய் ரூப் மற்றும் இவரது கணவர் தசரத ராஜு ஆகிய இருவருக்கும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டது.

இருவரும் பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இருவருக்குமே உடல் நிலை மோசமாகி கொண்டே போனது.

சிகிச்சை பலனின்றி கவிதாவின் மகன் சஞ்சய் ரூப் ஜூன் 15ல் உயிரிழந்தார்.

அவரது கணவரும் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்துள்ளார்.

இவரது மகன், கொரோனாவால் உயிரிழந்த நிலையில், இன்று கவிதாவின் கணவர் தசரத ராஜுவும் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தார்.

காமெடி நடிகர் பாண்டு, ‘தொரட்டி’ பட ஹீரோ ஷமன் மித்ரு, நடிகர் நிதீஷ் வீரா, இயக்குனர் அருண் ராஜா காமராஜின் மனைவி, பாடகர் கோமகன் என பலர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil actress Kavitha lost her family due to covid 19

capturerre-jpg

சூர்யா சிறந்த நடிகர் அவ்வளவு தான்.; முடிந்தால் இதை நடத்தட்டும் – கரு.நாகராஜன் (பாஜக)

சூர்யா சிறந்த நடிகர் அவ்வளவு தான்.; முடிந்தால் இதை நடத்தட்டும் – கரு.நாகராஜன் (பாஜக)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya (2)பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் நீட் தேர்வு குறித்து பேசினார்.

அவர் பேசியதாவது…

12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்தபோது, குறைந்த மதிப்பெண் பெற்றவர்களின் மருத்துவக் கனவுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

ஆனால் நீட் தேர்வில் 3 வாய்ப்புகள் வழங்கப்படுகிறது; முதல்முறை தோல்வி அடைந்தாலும், அடுத்தடுத்த முறைகளில் எழுதி மருத்துவர் கனவை நனவாக்கிக்கொள்ளலாம்.

நடிகர் சூர்யா ஒரு சிறந்த நடிகர், அவ்வளவு தான். முடிந்தால் ஏழை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சூர்யா பயிற்சி மையம் நடத்தி மருத்துவராக்கட்டும்”

என பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் பேசியுள்ளார்.

BJP Karu Nagarajan reply to Actor Suriya

More Articles
Follows