32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மணிரத்னம்?

32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மணிரத்னம்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் மணிரத்னம் ரஜினிக்கு மிகவும் பிடித்த ஒரு கதைக்களத்தை விவரித்ததாகவும், இந்த படம் 2023 இன் பிற்பகுதியில் தொடங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்க ஆர்வமாக இருப்பதாகவும், அடுத்த ஆண்டு ஏப்ரலில் ‘பொன்னியின் செல்வன் 2’ வெளியான பிறகு கூடுதல் விவரங்கள் வெளிவரும் என்றும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த கிளாசிக் காம்போ மீண்டும் ஒன்றிணைவதற்கும் பெரிய திரையில் மேஜிக்கை உருவாக்குவதற்கும் அதிகார பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.

நயன்தாரா வாடகைத்தாய் ட்வின்ஸ் விவகாரம்.; விசாரணை தொடங்கியது

நயன்தாரா வாடகைத்தாய் ட்வின்ஸ் விவகாரம்.; விசாரணை தொடங்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஜூன் 9 தேதி நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் திரைப் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.

திருமணமான 4 மாதங்களில் அக்டோபர் 9ஆம் தேதி தங்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் அறிவித்தார்.

திருமணமாகி நான்கு மாதங்களில் குழந்தைகள் எப்படி? என நெட்டிசன்கள் பலரும் கேள்வி கேட்டனர்.

இவர்கள் ஏற்கனவே செய்துக் கொண்ட ஒப்பந்தம்படி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

வாடகைத்தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்றதில் விதிகளை மீறி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

எனவே நயன்தாரா விக்னேஷ் சிவனிடம் தமிழ்நாடு அரசு விசாரணை நடத்தவுள்ளது.

இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்ய குழு அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இணை இயக்குநர் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு விசாரணையை தற்போது தொடங்கியது.

அவசியம் ஏற்பட்டால் நயன்தாரா – விக்னேஷ் சிவனிடமும் விசாரணை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

Nayanthara Surrogate Twins case. The investigation began

‘பிரின்ஸ்’: படத்தின் அதிகார பூர்வ சென்சார் மற்றும் ரன்னிங் டைம் இதோ !

‘பிரின்ஸ்’: படத்தின் அதிகார பூர்வ சென்சார் மற்றும் ரன்னிங் டைம் இதோ !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அக்டோபர் 21 ஆம் தேதி (தெலுங்கு மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் வெளியாகும்) ‘பிரின்ஸ்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படுவதை முன்னிட்டு, அதன் சென்சார் விவரங்கள் வெளியாகியுள்ளது.

நகைச்சுவை மிகுந்த இப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது சென்சார் குழு. மேலும் படத்தின் ரன்னிங் டைம் 143 நிமிடம் என வெளியாகியுள்ளது.

தெலுங்கு நகரத்தில் இந்திய பள்ளி ஆசிரியருக்கும் பிரிட்டிஷ் பள்ளி ஆசிரியருக்கும் இடையிலான காதல் கதையை படம் சொல்கிறது.

இயக்குனர் அனுதீப், சத்யராஜ் ஆகியோர் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளனர்.

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் வாழ்நாள் வசூலை மிஞ்சும் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் 1’

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் வாழ்நாள் வசூலை மிஞ்சும் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் 1’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பொன்னியின் செல்வன் 1’ திரைப்படம் முதல் வாரத்தில் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள நிலையில், தற்போது இரண்டாவது வார முடிவில் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தின் வசூலை முறியடித்து PS1 தமிழ்நாட்டில் ஆல்-டைம் GROSSER ஆக உள்ளது.

தர ஆய்வுகளின் படி, கோலிவுட்டில் ஒரே வருடத்தில், அதுவும் நான்கு மாத கால இடைவெளியில் இரண்டு பிளாக் பஸ்டர் படங்கள் வெளியிடுவது அரிதான நிகழ்வு.

ஸ்நேகா வெங்கட்பிரபு யோகிபாபு சிவாங்கி கூட்டணிக்கு சிறந்த திரைப்பட விருது

ஸ்நேகா வெங்கட்பிரபு யோகிபாபு சிவாங்கி கூட்டணிக்கு சிறந்த திரைப்பட விருது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருணாச்சலம் வைத்யநாதன் அவர்கள் இயக்கி சினேகா, வெங்கட் பிரபு, யோகி பாபு சிவாங்கி ஆகியோர் நடித்துள்ள சாட் பூட் த்ரி, தமிழ் திரைப்படத்திற்கு தென் கொரிய தலைநகர் சியோலில் அக்டோபர் 7-8 தேதிகளில் நடந்த செல்லப்பிராணிகள் குறித்த பன்னாட்டு திரைப்பட விழாவில் (International Comap on Animal FIlm Festival) சிறந்த திரைப்படத்திற்கான விருது (ICAFF Excellence for Feature) வழங்கப்பட்டது.

சாட் பூட் த்ரி திரைப்படத்தின் ஒளிப்பதிவு சுதர்சன் ஸ்ரீநிவாசன், கலை ஆருச்சாமி தொகுப்பாளர் பரத் விக்ரமன் இசை பிரபல வீணைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா திரைக்கதை ஆனந்த் ராகவ் மற்றும் அருணாச்சலம் வைத்யநாதன்.
விருதிற்கான சான்றிதழையும், பணமுடிப்பையும் விழாவில் கலந்துகொண்ட படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான அருணாச்சலம் வைத்யநாதன் பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் கொரிய தமிழ்ச் சங்கத்தின் சார்பில் முனைவர் பு. பாஸ்கரன், செயலாளர், செயற்பாட்டுக்குழு, அவர்கள் கலந்துகொண்டு இயக்குனரை வாழ்த்தி தேவையான உதவி மற்றும் ஒத்துழைப்புக்களை வழங்கினார்.

பின்னர் இப்படம் கொரிய மக்களுக்கு திரையிடப்பட்டது. படத்தில் இடம்பெற்ற குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளுக்குமிடையேயான காட்சிகள் தமக்கு நெருக்கமாக இருந்ததாக கொரிய மக்கள் தெரிவித்தனர்.

2016-இம் ஆண்டு முதல் நடக்கும் இந்த பன்னாட்டு திரைப்பட விழாவில் விருதுபெரும் முதல் இந்திய திரைப்படம் “சாட் பூட் த்ரி” என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வு பற்றி கருத்து வெளியிட்ட படத்தின் இயக்குனர், நாடு, மொழி உள்ளிட்ட காரணிகள் கடந்து கொரியாவில் கிடைத்திருக்கும் இந்த வரவேற்பு “அன்பிற்கோர் பஞ்சமில்லை” என்ற தன் படத்தின் மூலக்கருவை உள்ளபடியே இயல்பில் உணர்த்தியது தமக்கு பெருமகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

முன்னதாக கடந்த ஜூலை மாதம் விருதிற்கான விண்ணப்பங்கள் பன்னாட்டு அளவில் பெறப்பட்டு செப்டம்பர் இறுதியில் முடிவுகள் வெளியிடப்பட்டன.

புகழ் பெற்ற கொரிய திரைப்பட இயக்குனர்களான சாங் பியோம் கோ, சாங் ஜே லிம், மற்றும் கிவி தோக் லீ ஆகியோர் அடங்கிய குழு விருதிற்கான படங்களை தெரிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமது கொரிய வருகையின் ஒரு பகுதியாக முனைவர் பாஸ்கரன் அவர்களும் படத்தின் இயக்குனரும் இந்திய தூதரகம் சென்று மாண்புமிகு இந்திய தூதர் அமித் குமார், துணைத்தூதர் சுரீந்தர் பகத், பண்பாட்டுத்துறை செயலாளர் முனைவர் சோனு திரிவேதி ஆகியோரை சந்தித்தனர்.

இச்சந்திப்பில் கொரியாவில் தமிழ் உள்ளிட இந்திய திரைப்படங்களை வணிகரீதியாக கொண்டு செல்வது குறித்து கலந்துரையாடினர்.

கொரிய மற்றும் தமிழ் திரைப்படங்களுக்கு தமிழ் கொரிய மக்களுக்கிடையே இருக்கும் நல்ல வரவேற்பு, தமிழ் திரைத்துரையின் உலகளாவிய வீச்சு மற்றும் வளர்ச்சி குறித்து இயக்குனர் தூதரிடம் எடுத்துரைத்தார்.

சாத் பூட் திரி உள்ளிட்ட சிறந்த தமிழ்ப்படைப்புகளை கொரிய மக்களிடம் கொண்டுசெல்ல தன்னால் ஆன அனைத்து உதவிகளையும் செய்வதாக தூதரும் பண்பாட்டுத்துறை செயலாளரும் தெரிவித்தனர்.

இந்திய தூதரகம் சென்று கொரியாவில் தமிழ் உள்ளிட்ட இந்திய திரைப்படங்களை வணிகரீதியில் கொண்டு செல்வது குறித்து உரையாடிய முதல் இந்திய திறப்பிட இயக்குனர் அருணாச்சலம் வைத்யநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் இயக்குனருக்கும் இந்திய தூதரக அதிகாரிகளுக்குமிடையான சந்திப்பிற்கான ஏற்பாடுகளை கொரிய தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் சு. இராமசுந்தரம், மக்கள் தொடர்பு செயலாளர் சாந்தி பிரின்ஸ், காப்பாளர் முனைவர் பிரபாகரன், செயலாளர் முனைவர் பத்மநாபன், மூத்த உறுப்பினர்கள் முனைவர்கள் சரவணன், சோபா, கோபி மற்றும் திவ்யா ஆகியோர் செய்திருந்தனர்.
மகிழ்வுடன் தாய்நாடு திரும்பிய இயக்குனர் அவர்கள் கொரிய தமிழ்ச் சங்கத்திற்கும், உடன்நின்று உதவி செய்த முனைவர் பாஸ்கரன், கள ஏற்பாடுகளை முன்னின்று செய்த சங்கத்தின் தலைவர் முனைவர். இராமசுந்தரம் உள்ளட்ட சங்கத்தின் ஆளுமைக்குழு உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் கொரிய தமிழ்ச் சங்கத்திற்கும் தமிழ் திரைத்துறைக்குமான நல்லுறவை ஏற்படுத்தி அதனை விரிவுபடுத்த பங்காற்றும் இயக்குனர் சீனு இராமசாமி மற்றும் இயக்குனர் M. S. இராஜு, திரு. பாலு மற்றும் தொடர்பாடல் உதவி புரிந்த டோக்கியோ தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு ஹரி ஆகியோருக்கும் இயக்குனர் நன்றி தெரிவித்தார்.

சாட் பூட் த்ரி

Shot Boot 3 won Best Feature film award at ICAFF

Shot Boot 3 a Childrens film in Tamil directed by Arunachalam Vaidyanathan featuring Sneha, Venkat Prabhu, Yogibabu, Sivangi along with 4 Children and a Golden Retriever Dog has won the Best Feature film award at the ICAFF (International Companion Animal Film Festival) held at the South Korean Capital city Seoul on October 7th and 8th.

#ShotBoot3 won the Best Feature film award at the #ICAFF (International Companion Animal Film Festival) held at Seoul, South Korea

@Arunvaid @Universecreatns @actress_Sneha @vp_offl @iYogiBabu @sivaangi_k @RajheshVaidhya @dop_sudarshan @barathvikraman @madhankarky @stuntsudesh

@sidsriram @Arusamy57223618 @onlynikil

எம்.ஜி.ஆர். சிவாஜி ரஜினி படங்களின் தயாரிப்பாளர் காலமானார்

எம்.ஜி.ஆர். சிவாஜி ரஜினி படங்களின் தயாரிப்பாளர் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எம்.ஜி.ஆர். நடித்த ” குமரிப் பெண்” , சிவாஜி நடித்த ” தங்கச்சுரங்கம்”, ரஜினி நடித்த “குப்பத்து ராஜா”, அர்ஜூன் நடித்த ” கல்யாண கச்சேரி” மற்றும் “சட்டம் சிரிக்கிறது” உட்பட 15 படங்களை தமது இ.வி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரித்தவர் இ.வி. ராஜன்.

இவருக்கு வயது 83. வயது மூப்பு காரணமாக இன்று இயற்கை எய்தினார்.

பிரபல திரை நட்சத்திரம் ஈ.வி.சரோஜாவின் சகோதரரான இவர் பிரபல இயக்குனர் டி.ஆர்.ராமண்ணா அவர்களின் மைத்துனராவார்.

நாளை அக்டோபர் 13 மதியம் 2 மணியளவில் இறுதி சடங்கு நடைபெற உள்ளது.

முகவரி.
3/ 543 ராஜா தெரு
லட்சுமண பெருமாள் நகர்,
கொட்டிவாக்கம்
சென்னை 600041

Contact person
Ganeshramanna
(Son in law)
9840192627

Producer EV Rajan passes away

More Articles
Follows