BREAKING ரஜினி பெயர் போட்டோ குரலை பயன்படுத்த தடை?!.; வக்கீல் வார்னிங்

BREAKING ரஜினி பெயர் போட்டோ குரலை பயன்படுத்த தடை?!.; வக்கீல் வார்னிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

எனவே ரஜினியின் புகைப்படங்களை பயன்படுத்தியும் ரஜினியின் குரலை பயன்படுத்தியும் ரஜினியின் பெயரை பயன்படுத்தியும் பல விளம்பரங்களையும் பல வீடியோக்களையும் இவர்கள் உருவாக்குவது வழக்கம்..

இவை இல்லாமல் பெரிய பெரிய வர்த்தக நிறுவனங்களும் ரஜினியின் பெயரையும் குரலையும் பயன்படுத்தி தங்கள் நிறுவனங்களுக்கு விளம்பரம் தேடி வருகின்றனர்.

ரஜினி

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம் மற்றும் குரலை அவரது ஒப்புதல் இல்லாமல் வர்த்தக ரீதியில் பயன்படுத்துவோருக்கு எதிராக குற்றவியல் மற்றும் உரிமையியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அவரது தரப்பு வழக்கறிஞர் இளம்பாரதி பொது நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அந்த நோட்டீசில், ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம், குரலை அனுமதியின்றி பல்வேறு நிறுவனங்கள் பயன்படுத்துவதால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சில நிறுவனங்கள் பிரபலமடைவதற்காக ரஜினி பெயர், புகைப்படங்கள், குரலை அனுமதியின்றி பயன்படுத்துவதாக குற்றசாட்டுகள் எழுந்த நிலையில் ரஜினி வழக்கறிஞர் சுப்பையா இளம்பரிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Super Star Rajinikanth advocate warning notice to public

இதோ அறிக்கை…

ரஜினி

ரஜினி

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாத மலைப்பகுதி.; கெத்தாக வரும் ‘கெவி’

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாத மலைப்பகுதி.; கெத்தாக வரும் ‘கெவி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆத்யக் புரடக்சன்ஸ் சார்பில் கௌதம் சொக்கலிங்கம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கெவி’. தமிழ் தயாளன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

மண்டேலா, பேட்டைக்காளி புகழ் ஷீலா ராஜ்குமார் மற்றும் விஜய் டிவி புகழ் ஜாக்குலின் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.. அறிமுக நடிகர் ஆதவன் இந்த படத்தில் கதை நாயகனாக நடிக்கிறார்.

மெட்ராஸ் படத்தில் வில்லனாக நடித்த சார்லஸ் வினோத், தர்மதுரை புகழ் திருநங்கை ஜீவா ஆகியோர் நடித்துள்ளனர்.

கெவி

மேலும் உமர் ஃபரூக், விவேக் மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்கள் மலையாளத்தில் ’வே ஃபாரர்’ என்ற படத்திலும் நடித்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலை, தேன் ஆகிய படங்களுக்கு வசனம் எழுதிய ராசி தங்கதுரை இந்த படத்தின் வசனங்களை எழுதி உள்ளார்

படத்தின் ஒளிப்பதிவை ஜெகன் ஜெயசூர்யா கவனிக்க, ஏ.ஆர் ரகுமான், அனிருத் ஆகியவரின் ஆர்கெஸ்ட்ராவில் பணிபுரிந்த பாலசுப்பிரமணியன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை அஸ்வத் நாராயணன் மேற்கொள்கிறார்.

800 ஆண்டு கால தமிழக வரலாற்றில் எவ்வளவோ அரசியல் மாற்றங்கள் நடந்தாலும் மாறாத இடம் ஒன்று உள்ளது. அங்கு நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்த படம் உருவாகி வருகிறது.

கெவி

இந்த படம் பற்றி இயக்குநர் தமிழ் தயாளன் கூறும்போது,….

“கெவி என்பதற்கு அடிவாரம் அல்லது பள்ளம் என்று பொருள். மலை எப்போதுமே பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அதன் இன்னொரு இருட்டு பக்கம் யாருக்கும் தெரியாது.

இத்தனை ஆண்டு கால தமிழக வரலாற்றில் எத்தனையோ ஆட்சிகள் மாறி இருக்கின்றன. எத்தனையோ விஷயங்கள் மாறி உள்ளன. ஆனால் இந்த மலைப்பகுதியில் இன்னும் மாறாத விஷயங்கள் இப்போதும் தொடர்ந்து வருகின்றன. இதை மையப்படுத்தி இந்த படம் ஒரு முக்கிய சமூக பிரச்சனையை பேசுகிறது.

கெவி

ஒரு சாமானிய மனிதனின் வாழ்க்கையை அருகில் இருந்து பார்க்கும்போது எவ்வளவோ அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது..

அவர்களுடைய வலியை அருகில் இருக்கும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இதை சினிமா மூலமாக வெகுஜனத்தின் பார்வைக்கு கொண்டு செல்லும்போது ஏதாவது மாற்றம் நிகழ்ந்து விடாதா என்கிற நோக்கில் தான் இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்.

இந்த படத்தில் மலை கிராமத்து பெண்ணாக ஷீலா ராஜ்குமாரும், படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஜாக்குலினும் நடித்துள்ளனர்.

கெவி

இந்த இருவரும் சேர்ந்து பல பிரச்சனைகளை எதிர்கொண்டு ஒரு இக்கட்டான சூழலை எப்படி சமாளிக்கின்றனர் என்பதை விறுவிறுப்பு கலந்து கூறியுள்ளோம்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. படப்பிடிப்பின்போது புயல், மழை, கடும் குளிர் என வெவ்வேறு சீதோஷ்ண பிரச்சனைகளையும் எதிர்கொண்டு படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்.

குறிப்பாக இரவு நேர படப்பிடிப்பின்போது குளிர் தாங்காமல் நடிகை ஷீலா ராஜ்குமார் மிகப்பெரிய அளவில் சிரமப்பட்டார். பனியில் அவரது கை கால்கள் விரைத்துக்கொண்டு விட, ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அவரை நடந்தே தூக்கிச் சென்று சிகிச்சை அளித்து குணப்படுத்தினோம். அதன்பிறகு மீண்டும் வந்து படப்பிடிப்பில் தொடர்ந்து நடித்து மிகப்பெரிய ஒத்துழைப்பைக் கொடுத்தார்.

கெவி

அதேபோல படத்தின் நாயகன் ஆதவன் இந்தப்படத்திற்காக இரண்டு வருடம் வேறு எந்த படங்களையும் ஒப்புக்கொள்ளாமல் கடுமையான அர்ப்பணிப்புடன் உழைத்தார்.

படப்பிடிப்பு நடக்கும் லொக்கேசன்களுக்கு முன்கூட்டியே சென்று அந்த பகுதி மக்களின் வாழ்வியல் நடைமுறைகளுடன் பழகி, அவற்றை தனது நடிப்பில் பிரதிபலித்துள்ளார். “ என்று கூறியுள்ளார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர்கள் யோகிபாபு, கலையரசன் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

கெவி

தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம்

தயாரிப்பு ; கௌதம் சொக்கலிங்கம்

இணை தயாரிப்பு ; கார்த்திகேயன் & FJ

இயக்கம் ; தமிழ் தயாளன்

ஒளிப்பதிவு ; ஜெகன் ஜெயசூர்யா

இசை : பாலசுப்பிரமணியன்

படத்தொகுப்பு ; அஸ்வத் நாராயணன்

வசனம் ; ராசி தங்கதுரை

கலை ; சரவணன்

சண்டை பயிற்சி ; டான் அசோக்

மக்கள் தொடர்பு ; A. ஜான்

கெவி

Yogi Babu and Kalaiyarasan launch the first look of the GEVI

——-

Sheela Rajkumar Aadhavan Jaqueline Starrer Gevi Movie

Mr. Gautham chokkalingam of Adyag Productions is producing a new film titled ‘GEVI’, directed by Tamizh Dhayalan. Mandela & Pettaikaali fame Sheela Rajkumar and Vijay TV fame Jacqueline are playing the female lead roles in this movie. Debut actor Aadhavan is playing the content-driven protagonist in this movie. ‘Madras’ fame villain actor Charles Vinoth, Dharmadurai fame Jeeva, Umar farook, Vivek Mohan acted in malayalam movie ‘named way farer’. they are doing a prominent role in this movie Gevi. And many more prominent actors are a part of this star cast.

Rasi Thangadurai, who shot to fame for his versatile dialogues in the movies like Merku Thodarchi Malai and Thaen is penning dialogues for this movie.

Balasubramanian, who has been a part of AR Rahman and Anirudh’s orchestra, is composing the music, and Jagan Jayasurya is handling the cinematography for this movie. Ashwath Narayanan is taking care of editing.

In the 800-yr history of Tamil Nadu, no matter how many political changes have taken place, there is one particular place, which remains unaffected or influenced by them. This film’s story is based on real-life incidents that happened in that place.

Sharing about the film, director Tamizh Dhayalan says, “GEVI means foothill or ditch. Although mountains and hills are acclaimed for their beauty, not many know about their darker side. Tamil history has witnessed changes in political regimes across the years. However, some things remain unchanged in the mountainous regions. This film, centering on this, will address an important social issue.

When we have a close glance at the life of a common man, we can see how many political changes are taking place. I have personally experienced their pain and pathos. We have created this film with a belief that a change might happen in their lives when their issues are displayed to the public glare.

Sheela Rajkumar plays the role of a villager from the hill region, and Jacqueline also plays the major role. The film is about the challenges and odds faced by them, and how they tackle them has been presented with a gripping narration.

The film was shot in and around the exotic locales of Kodaikanal. We faced a lot of adverse climatic conditions like heavy rainfall, and extreme cold and completed our schedule amidst such challenges. In particular, actress Sheela Rajakumar suffered a lot due to the extremely cold conditions during the night time as her hands and feet got frozen. We had to carry her and walk for more than One Kilometre to give her treatment and revived her health condition. Without taking any rest, she immediately bounced back and started shooting her portions with complete cooperation.

Significantly, the film’s protagonist, actor Aadhavan worked hard with complete dedication for two years, without committing himself to any other project. He would reach the locations before the shooting schedule, adapt the mannerisms and lifestyle routine of the people in that region, and reflect them on his character.”

Actor Yogi Babu and Kalaiyarasan have launched the first look at this film.

Technical Crew

Production: Gautham Chokkalingam
Co-Production: Karthikeyan & FJ
Direction: Tamizh Dhayalan
Cinematography: Jagan Jayasuriya
Music: Balasubramanian
Editing: Ashwath Narayanan
Dialogues: Rasi Thangadurai
Art: Saravanan
Stunts: Don Ashok
PRO: A. John

குடிமகன் குடிமகானாக இருந்தால்..? நாளைய இயக்குனர் சீசன் 6 ரன்னர் குழுவின் அதிரடி

குடிமகன் குடிமகானாக இருந்தால்..? நாளைய இயக்குனர் சீசன் 6 ரன்னர் குழுவின் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குடிமகான்’. நாளைய இயக்குநர் சீசன் 6-ல் ‘குட்டி தாதா’ என்கிற குறும்படத்திற்காக ரன்னர் அப் டைட்டில் வென்ற பிரகாஷ்.

N இந்தப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இயக்குநராக அடியெடுத்து வைத்துள்ளார்.

நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பெரும்பாலும் இதுவரை தனித்தனி நபர்களாகத்தான் சினிமாவில் நுழைந்து தங்களை வெளிப்படுத்தி உள்ளனர்.

குடிமகான்

ஆனால் முதன்முறையாக நாளைய இயக்குனர் சீசன் 6 ரன்னர் அப்பின் மொத்த டீமும் இந்த ‘குடிமகான்’ படத்தில் இணைந்து ஒன்றாக வெள்ளி திரையில் நுழைந்துள்ளனர் என்பதுதான் இதில் ஹைலைட்டே.

விஜய் சிவன் அறிமுகக் கதாநாயகனாக நடிக்க, சாந்தினி தமிழரசன் கதாநாயகியாக நடித்துள்ளார். பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, நமோ நாராயணன், சேது, விஜய் டிவி புகழ், கேபிஒய் ஹானஸ்ட் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இவர்கள் தவிர நாளை இயக்குனர்கள் சீசன்-6 டீமில் பணியாற்றிய கலைஞர்கள் பலரும் இதில் நடித்துள்ளனர்.

வழக்கமாக குறும்பட இயக்குநர்கள் சினிமாவுக்குள் நுழையும்போது தாங்கள் இயக்கி வெற்றிபெற்ற குறும்படங்களையே முழுநீள திரைப்படமாக உருவாக்குவது வழக்கம். அதேபோல் இயக்குனர் பிரகாஷும் தனது ‘குட்டி தாதா’ குறும்படத்தையே திரைப்படமாக எடுக்கலாம் என முயற்சித்தபோது அதன் பட்ஜெட் பெரிய அளவில் இருந்ததால் முதலில் இந்த குடிமகான் படத்தை எடுப்பது சரியாக இருக்கும் என முடிவு செய்து களத்தில் இறங்கி விட்டார்.

குடிமகான்

இந்தப்படம் பற்றி இயக்குனர் பிரகாஷ்.N கூறும்போது,….

“வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய குடும்பபாங்கான படமாக இந்த ‘குடிமகான்’ உருவாகியுள்ளது.

குடியை பற்றிய படம் என்றாலும் அதை தப்பாக புரமோட் பண்ணும் விதமாக இருக்காது. இந்த நாட்டின் பிரஜையையும் குடிமகன் என்று சொல்வார்கள்..

குடிப்பவர்களையும் குடிமகன் என்றுதான் அழைக்கிறார்கள். அப்படி ஒரு குடிமகன், ‘குடிமகானாக’ இருந்தால் எப்படி இருக்கும் என்கிற கோணத்தில் இந்த கதை உருவாகியுள்ளது” என்கிறார்.

குடிமகான்

இந்தப்படத்தின் இசையமைப்பாளர் தனுஜ் மேனன் இயக்குனர் பிரகாஷின் 27 வருட நண்பர். அவரது குறும்படங்கள் அனைத்திற்கும் இசையமைத்துள்ள இவர், ஏற்கனவே சினிமாவில் நுழைந்து சஞ்சீவன் என்கிற படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ள மெய்யேந்திரன், இதற்குமுன் கேடி என்ற கருப்புதுரை, சில நேரங்களில் சில மனிதர்கள் ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அங்கமாலி டைரீஸ் படத்தின் இந்தி ரீமேக்கிலும் தற்போது பணியாற்றி முடித்துள்ளார். இந்தப்படத்தின் படத்தொகுப்பை சிபு நீல் பி.ஆர் மேற்கொண்டுள்ளார்.

விஜய் டிவி புகழ் மணிசந்திரா ஒரு முக்கியமான பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.. இந்தப்படத்திற்காக பல அரங்குகள் அமைக்கப்பட்டு சென்னையிலேயே கிட்டத்தட்ட 50 நாட்கள் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை இயக்குநர்கள் வெற்றிமாறன், பொன்ராம், அருண்ராஜா காமராஜ், க/பெ ரணசிங்கம் இயக்குநர் விருமாண்டி, அடங்காதே மற்றும் டீசல் படங்களின் இயக்குநர் சண்முகம், ‘விலங்கு’ வெப்சீரீஸ் இயக்குநர் பிரசாந்த் மற்றும் ட்விட்டர் இணையதளத்தில் நடிகர் நகுல் ஆகியோர் வெளியிட்டனர்.

குடிமகான்

Naalaiya Iyakkunar 6 team on their journey in cinema with Kudi Mahaan

‘ஹே சினாமிகா’ படத்தை தொடர்ந்து பிருந்தா-வின் பான் இந்தியா படம்

‘ஹே சினாமிகா’ படத்தை தொடர்ந்து பிருந்தா-வின் பான் இந்தியா படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய திரையுலகில் புகழ்பெற்ற டான்ஸ் மாஸ்டர் பிருந்தா ஹே சினாமிகா படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார்.

தற்போது அவரது முந்தைய படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட படைப்பாக ‘தக்ஸ்’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட பின்னணியில் க்ரைம் திரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

தமிழின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான HR Pictures சார்பில் ஷிபு தமீன்ஸ் இப்படத்தை வழங்குகிறார். ரியா ஷிபு இப்படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தின் டிரெய்லரை இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் சேதுபதி, துல்கர் சல்மான், ஆர்யா, அனிருத் & கீர்த்தி சுரேஷ் ஆகியோர் வெளியிட்டனர்.

2 நிமிடங்கள் 23 வினாடிகள் ஓடக்கூடிய டிரெய்லர் பார்வையாளர்களை அசத்தும் வகையில் அதிரடியாக அமைந்துள்ளது.

படத்தின் முன்னணி நடிகர்களான ஹிருது ஹாரூன், அனஸ்வர ராஜன், சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ் மற்றும் முனிஷ்காந்த் ஆகியோரின் நடிப்பும் கதாப்பாத்திர அமைப்பும் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.

சாம் CS-ன் அற்புதமான பிஜிஎம், ஒளிப்பதிவாளர் பிரியேஷ் குருசாமியின் அட்டகாசமான காட்சிகள் மற்றும் எடிட்டர் பிரவீன் ஆண்டனியின் நேர்த்தியான எடிட்டிங் அனைத்தும் இணைந்து, பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

எல்லாவற்றையும் விட இயக்குனர் பிருந்தாவின் மேக்கிங் ஸ்டைல் ஒரு கைதேர்ந்த இயக்குனரின் படத்தை பார்ப்பது போன்ற உணர்வை தருகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ‘தக்ஸ்’ திரைப்படம் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர்கள்..

ஹிருது ஹாரூன், பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஷ்காந்த், அனஸ்வர ராஜன், சரத் அப்பானி மற்றும் பலர்

தொழில் நுட்பக் குழுவினர்:
இயக்கம் : பிருந்தா
தயாரிப்பு : HR பிக்சர்ஸ் – ரியா ஷிபு
இசை : சாம் CS
ஒளிப்பதிவு : பிரியேஷ் குருசுவாமி
புராஜக்ட் டிசைனர்: ஜோசப் நெல்லிக்கல்
எடிட்டர்: பிரவீன் ஆண்டனி
ஆக்சன்: பியோனிக்ஸ் பிரபு & ராஜசேகர்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: முத்து குருப்பையா
தயாரிப்பு ஒருங்கிணைப்பு : பரமேஷ்வர் சுபாஷ்
ஆடை: மாலினி கார்த்திகேயன்
நிர்வாக தயாரிப்பாளர் – யுவராஜ்
இணை இயக்குனர்: ஹரிஹரகிருஷ்ணன் ராமலிங்கம்
டிசைனர்: கபிலன்
மக்கள் தொடர்பு : சதீஷ் குமார் – சிவா (AIM)

தக்ஸ்

dance master brinda’s Thugs Official Trailer release

லைக்கா – அஜித் கூட்டணியில் இருந்து விலகிய இயக்குனர் விக்னேஷ் சிவன்.?!

லைக்கா – அஜித் கூட்டணியில் இருந்து விலகிய இயக்குனர் விக்னேஷ் சிவன்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் உருவான ‘துணிவு’ படம் சமீபத்தில் வெளியாகி உலகளவில் வசூல் வேட்டை செய்து வருகிறது.

இதனையடுத்து லைக்கா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘ஏகே 62’ படத்தில் அஜித் நடிப்பதாக கூறப்பட்டது. இதற்கு அறிவிப்பும் முறையாக வெளியானது.

இந்த நிலையில் நடிகருக்கும் இயக்குனருக்கும் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தற்போது ஒரு புதிய இயக்குனரை இந்த தயாரிப்பு குழு தேடி வருவதாக கூறப்படுகிறது.

எனவே ‘பில்லா’ & ‘ஆரம்பம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் அஜித் 62 படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது. எனவே இது பற்றிய அறிவிப்பை நாம் விரைவில் எதிர்பார்க்கலாம்.

இந்தப் படத்தில் அரவிந்தசாமி, சந்தானம் உள்ளிட்டோர் அஜித்துடன் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Director Vignesh Shivan walks out of Ajith 62

ரஜினியுடன் இணையும் பாலிவுட் நடிகர்.; பான் இந்தியா படமாக மாறிய ‘ஜெயிலர்’

ரஜினியுடன் இணையும் பாலிவுட் நடிகர்.; பான் இந்தியா படமாக மாறிய ‘ஜெயிலர்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘ஜெயிலர்’ படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் தமன்னா, யோகி பாபு, ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இவர்களுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரஃப் இந்த படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ஏற்கனவே மலையாளம் தமிழ் கன்னடம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளின் பிரபல நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது பாலிவுட்டில் இருந்தும் ஒரு நடிகர் ‘ஜெயிலர்’ படத்தில் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே கண்டிப்பாக ஜெயிலர் படம் பான் இந்தியா படமாக உருவாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஜாக்கி ஷெரஃப்

Bollywood Actor will join with Rajini in Jailer

More Articles
Follows