அருவி கேரக்டருக்கு 5௦௦ பெண்களிடம் ஆடிசன்; தயாரிப்பாளர் காசில் சைட் அடித்த டைரக்டர்.?

அருவி கேரக்டருக்கு 5௦௦ பெண்களிடம் ஆடிசன்; தயாரிப்பாளர் காசில் சைட் அடித்த டைரக்டர்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aruvi movie posterஅருவி படம் வருகிற டிசம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

எனவே படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இதில் படத்தின் தயாரிப்பாளர்கள் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் S.R.பிரகாஷ் பாபு , S.R.பிரபு, இயக்குநர் அருண் பிரபு, நாயகி அதீதி பாலன் (வக்கீல்), இசையமைப்பாளர் வேதாந்த் , ஒளிப்பதிவாளர் ஷெல்லி, படத்தொகுப்பாளர் ரேமன்ட், கலை இயக்குநர் சிட்டிபாபு, நடிகர்கள் ஸ்வேதா சேகர், அஞ்சலி வரதன், மதன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் தயாரிப்பாளர் S.R.பிரபு பேசியது…

இதுவரை நாங்கள் தயாரித்த திரைப்படங்களில் மிகச்சிறந்த படம் இது தான். உலகளவில் நடைபெற கூடிய திரைப்பட விழாக்களில் நீங்கள் தயாரித்த படங்களை பற்றி கூறுங்கள் என்று கேட்கும் போது சில படங்களின் பெயர்களை மட்டும் தான் என்னால் கூற முடிந்தது.

ஏன் ?? என்னுடைய எல்லா படங்களின் பெயர்களையும் என்னால் கூற முடியவில்லை என்ற சிந்தனை என்னுள் இருந்து வந்தது.

அப்போதிலிருந்து கண்டிப்பாக இனி பெயர் சொல்லும் வகையில் படங்களை தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இயக்குநர் சக்திசரவணன் தான் நான் பிரியாணி படத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது இப்படத்தின் கதையை கேட்குமாறு என்னிடம் கூறினார்.

இரவு 9மணிக்கு மேல் தான் அருவி படத்தின் கதையை இயக்குநர் அருண் பிரபு என்னிடம் கூறினார். கதை சொன்ன விதமே புதுமையாக இருந்தது. கதை சொல்லும் போது அந்த அந்த கதாபாத்திரமாகவே மாறி, இசையோடு அவர் கதையை கூறினார்.

நாங்கள் படத்தின் கதையை பெரிதாக நம்பினோம். மக்கள் அதை எப்படி ஏற்றுக்கொள்ள போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்குள் இருந்து கொண்டே இருந்தது.

அருவியை பொறுத்தவரை படத்தை நாங்கள் இந்த பட்ஜெட்டில் தான் தயாரிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். எங்கள் தயாரிப்பு குழுவும், இயக்குநர் குழுவும் கடுமையாக உழைத்து படத்தை தரமான படமாக உருவாக்கியுள்ளனர். இயக்குநர் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்தனர்.

இயக்குநர் ஷங்கர் அவருடைய படங்களை எடுக்க எந்த அளவுக்கு மெனக்கெடுவாரோ அதே அளவுக்கு அருணும் அவருடைய குழுவினரும் அருவிக்காக கடுமையாக உழைத்தனர்.

அருவி கதாபாத்திரத்தில் முதலில் இரண்டு முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அதன்பின்னர் புதுமுகத்துக்கே செல்லலாம் என்று முடிவெடுத்தோம்.

அருவி கதாபாத்திரத்துக்காக 5௦௦ பெண்களை இயக்குநர் Audition செய்தார். நான் அவரிடம் கேட்டேன் நீங்கள் நிஜமாகவே கதாநாயகிக்காக Audition செய்கிறீர்களா ?? அல்லது 5௦௦ பெண்களை சந்திக்க வேண்டும் என்று Audition செய்கிறீர்களா ?? என்று கேட்டேன்.

சென்சார் குழுவினர் படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார்கள். சென்சார் குழு இந்த படத்தை எப்படி எடுத்துகொள்வார்கள் என்ற பயம் என்னுள் இருந்துகொண்டே இருந்தது. ஆனால் அவர்களுக்கு இந்த படம் பிடித்திருந்தது. நல்ல படம் என்றார்கள்.

சில படம் எளிதாக சென்சார் ஆகிவிடும் என்று நினைப்போம் ஆனால் எதிர்பாராத ஒன்று நடைபெறும். அந்த வகையில் இது புதுமையாக இருந்தது என்றார் தயாரிப்பாளர் S.R.பிரபு.

இயக்குநர் அருண் பிரபு பேசியது :-

அருவி மனிதத்தை பற்றி பேசும் படமாக இருக்கும். நான் உதவி இயக்குநராக பணியாற்றிய என்னுடைய குருக்களான இயக்குநர் பாலு மகேந்திரா, கே.எஸ். ரவிகுமார் ஆகியோருக்கு நன்றி என்றார்.

500 girls were Auditioned for Aruvi character says Producer SR Prabhu

Aruvi Press meet Photos

இந்த உலகத்துக்கும் எனக்கும் இதான் பிரச்சினை… சிம்பு ஓபன் டாக்

இந்த உலகத்துக்கும் எனக்கும் இதான் பிரச்சினை… சிம்பு ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor simbuசிம்பு இசையமைப்பில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள சக்க போடு போடு ராஜா படத்தின் இசை வெளியீட்டு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

அப்போது சிம்பு நிறைய விஷயங்கள் பற்றி பேசினார்.

பொதுவாக மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை நான் இதை கடைப் பிடிப்பதில்லை.

தாய் நம்மை பெற்றெடுத்தவள்தான். ஆனால் என்னை பொறுத்தவரை இறைவன் தான் முதல் இடம்.

அவரில்லாமல் இந்த உலகத்தில் எதுவுமில்லை. அதன்பின் இந்த உலகத்தை கற்றுக் கொடுக்கும் குருதான் 2ஆம் இடம்.

நாம் சின்ன பிள்ளையாக இருக்கும்போது தன் தோளில் உட்கார வைத்து நான் பார்க்காத உலகத்தை நீ பார் என்று சொல்லும் தந்தை 3வது இடத்தில் இருக்கிறார்.

அதன்பின் 4வது இடத்தில்தான் தாய். (அம்மா என்னை மன்னிச்சிடுங்க)

ஏனா இந்த உலகம். இறைவனை இறுதியாக சொல்கிறது. நான் அந்த இடத்தில் என் தாய்யை வைத்துள்ளேன்.

இதனால்தான் எனக்கும் இந்த உலகத்துக்கும் அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சை பிரச்சினை வைக்கிறது.” என்று பேசினார்.

சிம்புவை கண்டிக்கும் தமிழ் வாத்தியார் தனுஷ்; சந்தானம் கிண்டல்

சிம்புவை கண்டிக்கும் தமிழ் வாத்தியார் தனுஷ்; சந்தானம் கிண்டல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

santhanam simbu dhanushதமிழ் சினிமாவில் சக போட்டியாளர்களாக கருதப்படும் சிம்புவும் தனுஷ் நேற்று சந்தானம் நடித்துள்ள சக்க போடு போடு ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டனர்.

அப்போது படத்தில் பணியாற்றிய சிம்பு படக்குழுவினரின் ஒவ்வொருவரின் பெயராக கூறிக் கொண்டு நன்றி தெரிவித்து வந்தார்.

மேலும் தன் இசை ஞானத்துக்கு உதவிய இளையராஜா, ஏஆர்.ரஹ்மான், தேவா, வித்யாசாகர், பிரேம்ஜி இசை கலைஞர்களின் அனைவரின் பெயரையும் தன் மொபைல் போனில் குறித்து வைத்துக் கொண்டு பேசினார்.

அப்போது அருகில் இருந்த தனுஷ் அவரது பேச்சை ரசித்துக் கொண்டே இருந்தார்.

அதன்பின்னர் பேச வந்த சந்தானம்… என்ன தனுஷ் சார்?, ஒரு தமிழ் வாத்தியார் போல அவரையே கவனிச்சிட்டு இருந்தீங்க. எல்லாம் கரெட்க்டா சொன்னாரா? என்று கிண்டலடித்தார்.

ஏப்பா? கண்ணாடி போட்டு வந்தா? நான் தமிழ் வாத்தியரா? என கேள்வி கேட்டு சிரிக்க வைத்தார் தனுஷ்.

Breaking : இயக்குனர் கௌதம்மேனன் விபத்தில் சிக்கினார்; லாரி மோதியது

Breaking : இயக்குனர் கௌதம்மேனன் விபத்தில் சிக்கினார்; லாரி மோதியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Gautham Menon car accident near chennaiதமிழ் சினிமாவில் கிளாசிக் இயக்குனர் கௌதம்மேனன்.

இவர் சற்றுமுன் சென்னையருகேயுள்ள செம்மஞ்சேரி அருகே காரில் சென்றுள்ளார்.

அப்போது அதன் அருகில் வந்த டிப்பர் லாரி ஒன்று இவரின் காரின் மீது மோதியுள்ளது.

காரின் பெரும்பாலான பகுதிகள் நொருங்கியுள்ளது.

ஆனால் இயக்குனர் சிறு காயங்களுடன் உயிர் தப்பிவிட்டார்.

Director Gautham Menon car accident near chennai

நிவின்பாலி படத்தில் அமலாபாலுக்கு பதிலாக பிரியா ஆனந்த்

நிவின்பாலி படத்தில் அமலாபாலுக்கு பதிலாக பிரியா ஆனந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nivin pauly and priya anandகேரளா மாநிலத்தில் காயம்குளம் என்ற பகுதியில் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்தவர் கொச்சுன்னி.

இருப்பவர்களிடம் இருந்து பறித்து இல்லாதவர்களுக்கு கொடுத்தவர்தான் இந்த கொச்சுன்னி.

தற்போது இவரது பெயரில் ஒரு புதிய படம் தயாராகி வருகிறது.

ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கிவரும் மெகா பட்ஜெட் படமான இதில் காயம்குளம் கொச்சுன்னியாக நிவின்பாலி நடித்து வருகிறார்.

இதில் நாயகியாக நடிக்க அமலாபால் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். அந்தப் படங்களும் இணையத்தில் வெளியாகியது.

ஆனால் தற்போது கால்ஷீட் பிரச்சினையால் அமலாபால் விலக, அவருக்கு பதிலாக ப்ரியா ஆனந்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

காயம்குளம் கொச்சுன்னி பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யாவும், ஜோதிகாவும் சேர்ந்து வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண் தேவதை படத்தில் இணைந்தார் ஜிமிக்கி கம்மல் புகழ் பாடகர்

ஆண் தேவதை படத்தில் இணைந்தார் ஜிமிக்கி கம்மல் புகழ் பாடகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vineeth srinivasan‘இயக்குநர் சிகரம் பாலசந்தர், இயக்குநர் இமயம் பாரதிராஜா என ஜாம்பவான்கள் இருவரையும் வைத்து ‘ரெட்டச்சுழி’ படத்தை இயக்கியவர் தாமிரா.

இவர் தற்போது ஆண் தேவதை என்ற படத்தை இயக்கி வருகிறார்’.

சமுத்திரக்கனி மற்றும் ரம்யா பாண்டியன் இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் மலையாள இயக்குனரும் நடிகரும், ‘ஜிமிக்கி கம்மல்’ புகழ் பாடகருமான வினீத் சீனிவாசன் ஒரு பாடலை பாடியுள்ளாராம்.

ஆனால் ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் வெளியாவதற்கு முன்பே ‘ஆண் தேவதை’ படத்தில் பாடல்பாடி கொடுத்து விட்டாராம் வினீத் சீனிவாசன்.

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

More Articles
Follows