விஜய்-சூர்யா ரசிகர்கள் மோதல்; என்ஜிகே ரிலீஸ் குறித்து பிரபு விளக்கம்

NGK Producer SR Prabu clarifies about movie releaseஇந்த 2018 ஆண்டு தீபாவளிக்கு விஜய் நடித்து வரும் சர்கார் மற்றும் சூர்யா நடித்து வரும் என்ஜிகே ஆகிய படங்கள் வெளியாகும் என முதலியே அறிவிக்கப்பட்டது.

இதனிடையில் என்ஜிகே டைரக்டர் செல்வராகவனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இந்த படத்தின் வெளியீட்டில் தாமதம் ஆகும் என கூறப்பட்டது.

அதன்பின்னர் செல்வராகவன் ஆகஸ்ட் 2முதல் சூட்டிங்கை தொடங்கினார்.

இதனால் படம் நிச்சயம் தீபாவளிக்கு வெளியாகும் என ரசிகர்களே யூகித்து விஜய் ரசிகர்களுடன் சண்டை போட ஆரம்பித்தனர்.

இதனால் ட்விட்டரில் விஜய், சூர்யா ரசிகர்கள் மோதல் அனல் பறக்க ஆரம்பித்தது.

இதனையடுத்து ’என்.ஜி.கே’ தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு விளக்கமளித்துள்ளார்.

“நிறையப் பேர் என்.ஜி.கே படம் குறித்துக் கேட்கிறார்கள். தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். திட்டமிட்டதை விரைந்து முடிக்க முயற்சிக்கிறோம்.

இன்னும் ஒரு வாரத்தில் படத்தைப் பற்றிய தகவலை சொல்கிறேன்.

அதேநேரத்தில் ஒருவருக்கொருவர் சண்டையிடுவதை நிறுத்துங்கள். அது அவ்வளவு முக்கியமானதல்ல. நண்பர்கள் தின வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

எனவே அடுத்த அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம் ரசிகர்களே…

NGK Producer SR Prabu clarifies about movie release

S.R.Prabhu‏Verified account @prabhu_sr Aug 5
Hey Guys! Many are asking for release update on #NGK .Sorry for delayed response. We are little behind schedule & trying to catch up. Will update in a weeks’ time. Meanwhile stop fighting with each other! Not worth it!! #HappyFriendshipDay

S.R.Prabhu‏Verified account @prabhu_sr
சண்டை போடாதீங்கன்னு சொன்னா..அதுக்கும் புது அர்த்தம் கண்டுபுடிச்சு அடிச்சுக்கறீங்களேப்பா? #HappyFriendshipDay #Peace

Overall Rating : Not available

Related News

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள `என்ஜிகே' வருகிற…
...Read More
சூர்யா மற்றும் செல்வராகவன் முதன்முறையாக இணைந்துள்ள…
...Read More
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம்…
...Read More

Latest Post