விஜய்சேதுபதியின் கருப்பன் டிவி உரிமையை பற்றிய சன்டிவி

விஜய்சேதுபதியின் கருப்பன் டிவி உரிமையை பற்றிய சன்டிவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karuppan movie stillsபன்னீர் செல்வம் இயக்கியுள்ள கருப்பன் படத்தில் விஜய்சேதுபதி, தன்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் இன்று வெளியாகிறது.

இதன் இசை வெளியீட்டு உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியது.

இந்நிலையில் இதன் சாட்டிலைட் உரிமையை சன்டிவி வாங்கியுள்ளதாக அவர்களது ட்விட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

முதல்வராக உலகநாயகனை உட்கார வைப்போம்… கமல் ரசிகர்கள்

முதல்வராக உலகநாயகனை உட்கார வைப்போம்… கமல் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanதன் ரசிகர் ஒருவரின் திருமண விழாவில் கமல்ஹாசன் கலந்துக் கொண்டார்.

அவ்விழாவில் பேசும்போது நேரடி அரசியலுக்கு வந்துவிட்டதாகவும், கோட்டையை நோக்கி நகர ஆரம்பித்து விட்டதாகவும் பேசினார்.

இதுநாள் வரை ட்விட்டரில் தமிழக அரசியலை சாடிய கமல், பொதுவிழாவில் இப்படி பேசியதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இதுகுறித்து கமல் ரசிகர்கள் கூறியதாவது…

அரசியலில் மட்டுமில்லாது கமல் எல்லாவற்றிலும் ரோல்மாடலாக உள்ளார்.

எதையும் வெளிப்படையாக பேசுபவர் எங்கள் உலகநாயகன்.

அவர் அரசியலுக்கு வந்தால், அவரது கரங்களை வலுப்படுத்துவோம். அவருக்காக அயராது பாடுபடுவோம்.

கோட்டைக்கு நிச்சயம் அவர் செல்வார். முதல்வர் நாற்காலியில் உலகநாயகன் உட்கார வைப்போம்” என்ற உற்சாகம் பொங்க பேசினர்.

கோட்டையை நோக்கி புறப்பட்டுவிட்டேன்.… கமல்ஹாசன் பேச்சு

கோட்டையை நோக்கி புறப்பட்டுவிட்டேன்.… கமல்ஹாசன் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal speechகோவை மாவட்டத்தில் உள்ள ஈச்சனாரியில் தன் ரசிகர் மன்றத்தின் அகில இந்திய பொருளாளர் தங்கவேல் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்துக் கொண்டார்.

அந்த விழாவில் கமல் பேசியதாவது…

“என்னை பார்த்து இந்த சமூகத்தில் என்ன செய்தீர்கள் என்று கேட்டால் எனக்கு கோபம் வரும்.

நாம் நமது வேலையை செய்வோம், தேவை வரும் போது கோட்டை நோக்கி புறப்படுவோம்.

ஆனால் இப்போதுள்ள அரசியலைக் இப்படியே விட்டுவிடக் கூடாது.

ஓட்டுக்கு பணம் வாங்கிய அன்றே திருடனை அனுமதித்து விட்டீர்கள்.

வெறும் சொத்து சேத்து வைத்தால் மட்டும் போதாதது அதைக் மக்களுக்கு பயன்படுத்த வேண்டும்.

இதை திருமண விழாவாக நான் நினைக்கவில்லை. இது ஆரம்ப விழாவாக நினைக்கிறேன்.

இந்த சமூகத்தின் மீதான கோபம் அதிகரித்து கொண்டு இருக்கிறது, தொடர்ந்து போராடுங்கள். என்று பேசினார்.

அதன்பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது…

என்னை ட்விட்டர் நாயகன் என்று சொல்கிறார்கள் என்றால் அது அவர்களுடைய விமர்சனம்.

கோட்டையை நோக்கி நகர ஆரம்பித்து விட்டேன். ஒரு யூனியன் பிரச்சினைக்கு கூட கோட்டையே நோக்கித்தான் செல்கிறோம். அப்படி கூட நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

போராட்டத்தை ஒரு கட்டத்தில் தொடங்கத்தான் வேண்டும். அதை தொடங்கி விட்டேன் எனவும் கமல் பரபரப்பாக பேசினார்.

Kamalhassan started his movie towards St George fort Chennai

அஜித்-சிவா கூட்டணியின் 4வது பட கதைக்களம் இதுதான்

அஜித்-சிவா கூட்டணியின் 4வது பட கதைக்களம் இதுதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith sivaவீரம் படம் வெற்றிப் பெற்றதை அடுத்து மீண்டும் சிவா இயக்கிய வேதாளம் படத்தில் நடித்தார் அஜித்.

இந்தப்படமும் சூப்பர் ஹிட்டடிக்க விவேகம் படத்தில் இந்தக் கூட்டணி இணைந்தது.

கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியான விவேகம் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் சிவாவின் அடுத்த படத்தில் அஜித் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

அவரும் இதை ஒரு பேட்டியில் சூசகமாக தெரிவித்துள்ளார்.

இது முற்றிலும் மாறுபட்ட கதைக்களமாக இருக்கும் என கூறப்படுகிறது.

அதாவது இம்முறை சரித்திர கால கதையில் இந்த கூட்டணி இணைகிறதாம்.

Ajith teams up with Siva for 4th time for Historical subject movie

தனுஷின் மூன்றாவது இந்திப்படம் குறித்த தகவல்

தனுஷின் மூன்றாவது இந்திப்படம் குறித்த தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanushகோலிவுட் கலக்கிய தனுஷை ராஞ்சனா என்ற இந்திப் படத்திற்காக பாலிவுட் அழைத்துச் சென்றார் இயக்குனர் ஆனந்த் எல். ராய்.

இப்படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது.

முதல் இந்திப்படம் வெற்றிப்பெறவே பால்கி இயக்கிய ஷமிதாப் என்ற படத்தில் அமிதாப்பச்சனுடன் நடித்தார் தனுஷ்.

அதன்பின்னர் கோலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் பிஸியாகிவிட்டார்.

இந்நிலையில் 3வது இந்திப்படத்தில் நடிக்கவிருக்கிறாராம் தனுஷ்.

தற்போது ஷாரூக்கானின் இந்திப்படத்தை இயக்கி வரும் ஆனந்த் எல்.ராய் அடுத்த வருடம் 2018ல் தனுஷின் இந்திப் படத்தை தொடங்கவிருக்கிறாராம்.

Dhanush 3rd hindi movie updates

மாறுவோம் மாற்றுவோம்; சீனாவை வீழ்த்தி ஆரி செய்த கின்னஸ் சாதனை

மாறுவோம் மாற்றுவோம்; சீனாவை வீழ்த்தி ஆரி செய்த கின்னஸ் சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor AAri made Guinness World Records by his Maaruvom Maatruvomஆரியின் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக ‘நானும் ஒரு விவசாயி’ என்ற கின்னஸ் சாதனை நிகழ்வு, திண்டிவனம் அருகில் உள்ள அவனிபூர் – நல்லநிலம் என்ற ஊரில் நடைபெற்றது.

இதில் சத்யபாமா பல்கலைக்கழகம் மற்றும் ஜே.பி.ஆர். கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 2683 பேர் ஒரே நேரத்தில் கலந்துகொண்டு, ஒருவருக்கு தலா இரண்டு நாற்றுகள் வீதம் நடப்பட்டது.

இந்த நிகழ்வின் போது மாணவர்களை உற்சாகப்படுத்த கிராமிய பாடகி சின்ன பொண்ணு கலந்து கொண்டு நாட்டுபுற பாடல்களை பாடினார்.

மேலும் நண்பர்கள் குழுவினர் பறை இசைத்து மாணவர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் ஸ்டண்ட் மாஸ்டர் பாண்டியன் குழுவினர் சிலம்பாட்டம் நிகழ்த்தினர்.

இந்த நிகழ்வு 2017 பேரை கொண்டு சீனா நடத்திய கின்னஸ் சாதனையை முறியடிக்கும் விதமாக 2683 பேரை கொண்டு நிகழ்த்தப்பட்டது.

இந்த நிகழ்வை ஆரியின் மாறுவோம் மாற்றுவோம் தொண்டு நிறுவனத்தோடு இணைந்து சத்யபாமா பல்கலைக்கழகம் மற்றும் ட்ரான்ஸ் இந்தியா நிறுவனம் சேர்ந்து நடத்தியது.

இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம் கின்னஸ் சாதனை பெறவேண்டும் என்பது மட்டும் இல்லாமல், விவசாயத்தின் பெருமையை பறை சாற்றும் விதமாக அமைந்தது.

Actor AAri made Guinness World Records by his Maaruvom Maatruvom

More Articles
Follows