தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பழனி மாவட்டத்தை சேர்ந்தவர் நடிகர் அர்ஜெய்.
இவர் வில்லனாக நடித்துள்ள பண்டிகை ‘ மற்றும் ‘திரி’ ஆகிய இரண்டு படங்களும் நாளை ரிலீஸ் ஆகிறது.
ஆக்ஷன் த்ரில்லரான பண்டிகையில் கிருஷ்ணா மற்றும் ஆனந்தியும், அரசியல்-குடும்ப படமான திரியில் அஸ்வின் மற்றும் ஸ்வாதியும் நடித்துள்ளனர்.
இது குறித்து அர்ஜெய் பேசுகையில்…
”நடிப்பதிற்கான திறமைகளை வளர்த்துக்கொண்டு 2009 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்தேன்.
எனது பெயர் ‘அர்ஜெய்’ என்பதற்கு குறிக்கோள், சமாதானம் என்று பொருள். எனது பெயரின் அர்த்தங்களே எனக்கு முன்னேற்றத்தியும் பொறுமையும் தருவதாக நம்புகிறேன்.
‘நான் சிகப்பு மனிதன்’, ‘நாய்கள் ஜாக்கிரதை’ போன்ற படங்களில் சின்ன சின்ன வில்லன் வேடங்கள் செய்தேன். பிறகு ‘எமன்’ படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரம் செய்தேன்.
அதன் பிறகு ‘தெறி’ படத்தில் ஒரு சிறு வில்லன் கதாபாத்திரம் கிடைத்தது.
திரியில் அமைச்சரின் மகனாகவும், பண்டிகை ஒரு சட்டவிரோத நிலத்தடி சண்டைகள் பற்றிய படம் என்பதால், ஹீரோ கிருஷ்ணாவுடன் மோதும் பிரதான பைட்டராக நடித்துள்ளேன்.
பண்டிகையின் இயக்குனர் பெரோஸ் அவர்களின் தேவைக்கேற்ப இணங்க ‘ Mixed Martial Arts’ பயின்றேன்.இப்படத்திற்காக அன்பு மற்றும் அறிவு மாஸ்டரின் சண்டை காட்சியமைப்பு அற்புதமாக வந்துள்ளது.
ஹீரோ கிருஷ்ணா அவர்கள் எனக்கு கொடுத்த ஊக்கமும் ஒத்துழைப்பும் மிக பெரியது. அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பண்டிகை மற்றும் திரி எனது நடிப்பு வாழ்க்கையை அடுத்த லெவெலுக்கு கொண்டு போகும் என நம்புகிறேன்.
இவ்விரண்டு படங்களில் எனது உழைப்புக்கும் நடிப்புக்கும் கிடைத்த வரவேற்பு என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . நல்ல கதாபாத்திரங்கள் செய்து குணச்சித்திர நடிகராக சாதிக்கவும் ஆசை படுகிறேன்.
எல்லா வகையான சவாலான மற்றும் சுவாரஸ்யமான கதாபாத்திரத்திற்கும் பொருந்தும் நடிகனாகவே இருக்க விரும்புகிறேன். நான் கெட்டவனாக நடித்திருந்தாலும், எனது வாழ்வில் ஊக்கத்திற்கு ‘திரி’யும் , கொண்டாடுவதற்கு ‘பண்டிகை’யும் மிக அவசியம்.
இவ்விரண்டு படங்களிலும் கிருஷ்ணா மற்றும் அஸ்வினுக்கு வில்லனாக நடித்திருந்தாலும் , நிஜ வாழ்வில் அவர்கள் இருவரும் தான் என்னை கிண்டல் செய்து விளையாடுவார்கள்.
இருவரும் எனக்கு அவ்வுளவு நல்ல நண்பர்கள் ஆகிவிட்டனர். என்றார் அர்ஜெய்.
அர்ஜெயின் இரண்டு படங்களும் வெற்றிப் பெற வாழ்த்துவோம்.
Arjai starring Pandigai and Thiri releasing on 14th July 2017