சிம்பு பட விழா மேடையில் டி ஆர் ரஜினி கமல்.?; ஐசரி கணேஷின் ஐடெக் ப்ளான்

சிம்பு பட விழா மேடையில் டி ஆர் ரஜினி கமல்.?; ஐசரி கணேஷின் ஐடெக் ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிலம்பரசன் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கியுள்ள படம் ‘வெந்து தணிந்தது காடு’.

இதில் சிம்புவின் காதலியாக சித்தி இதானி நடிக்க சிம்புவின் அம்மாவாக ராதிகா நடித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

இப்படம் வருகின்ற செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த பட இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

வருகின்ற செப்டம்பர் 2ம் தேதியில் சென்னையில் உள்ள வேல்ஸ் யூனிவர்சிடியில் இசை விழா நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாம்.

இந்த விழாவில் டி ராஜேந்தர் ரஜினிகாந்த் கமல்ஹாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்வார்கள் என சொல்லப்படுகின்றது.

STR’s Vendhu Thanindhathu Kaadu audio launch update is here

அதிதியிடம் தோற்ற கார்த்தி.. மக்கள் ஏற்பார்கள் என நம்பல.. சூர்யா தங்கை சொன்ன சொர்க்கம்.; ‘விருமன்’ குடும்ப விழா சுவாரஸ்யங்கள்

அதிதியிடம் தோற்ற கார்த்தி.. மக்கள் ஏற்பார்கள் என நம்பல.. சூர்யா தங்கை சொன்ன சொர்க்கம்.; ‘விருமன்’ குடும்ப விழா சுவாரஸ்யங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில்
வசூல் வாகை சூடி வருகிறது விருமன்.

இந்த மாபெரும் வெற்றிக்கு துணை நின்ற நடிகர் நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் குடும்பங்களை கொண்டாடும் #விருமன் வெற்றி விழா,
சென்னை வி ஜி பி கோல்டன் பீச் ரிசார்ட்ஸ் இல் நேற்று மாலை நடந்தது.

விழாவின் முதலில், நடிகர் ஜெகன் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்து ஒரு வழியாக அழைத்து விளையாட்டு போட்டிகளை வைத்து அதற்கு பரிசுகள் கொடுத்து, ஊக்கப்படுத்தி சந்தோஷப்படுத்தினார்.

வையாபுரி, டீனா, முத்து, கலைராணி, இர்பான், சரவணன், செல்வா குடும்பத்தினர்கள், அனைவரும் மேடையில் சந்தோசமாக நடனமாடினார்கள்.

கலைராணி இந்த படத்தில் அதிதி ஷங்கருக்கு பயிற்சி அளித்தது நான் தான் என்றார்.

இந்திரஜா பேசும்போது,… “சூரி சாருக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன். எங்கள் குடும்பத்தில் இருந்து அனைவரும் ஒவ்வொரு திரையரங்கிற்கும் சென்று படம் பார்த்து வருகிறார்கள். பார்த்தவர்களே திரும்ப திரும்ப பார்க்கிறார்கள். இந்த வாய்ப்பு கொடுத்த 2D நிறுவனத்திற்கும் அனைவருக்கும் நன்றி என்றார்.

பிறகு, நடிகர் ஜெகன் தொகுத்து வழங்க நடிகர் கார்த்தியும், நடிகை அதிதி ஷங்கரும் அவரவர் குழுவிற்கு தலைமை ஏற்றார்கள். கார்த்தி ராஜ்குமார், செல்வா, முத்தையா, மனோஜ், ஷ்ரவன் மற்றும் ராஜா ஆகியோர்களை தனது குழுவில் இணைத்துக் கொண்டார்.

அதிதி, இந்திரஜா, சாண்டி, பாலா, ரிஷி, பாண்டி ஆகியோர்களை தனது குழுவில் இணைத்துக் கொண்டார். இறுதியில், அதிதி குழு வெற்றி பெற்றார்கள்.

கார்த்தி பேசும்போது,

“விட்டுக்கொடுத்து செல்வது தன் குடும்பத்திற்கு அழகு. ஒன்றாக இருப்பது அவ்வளவு சுலபமானதல்ல சேர்ந்து இருப்பதற்கு நிறைய சகிப்புத்தன்மை வேண்டும். நம்மை விட அவர்கள் முக்கியம் என்று நினைக்கும் மனம் வேண்டும். இந்த விஷயங்களை சினிமா மூலம் ஞாபகப்படுத்தி இருக்கிறோம்.

பலரும் படம் முடிந்து வெளியில் வரும்போது எங்கள் குழந்தைகளுக்கு இது பெரிய பாடமாக இருக்கிறது என்று கூறுவதைக் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படம் கிராமத்தில்தான் நன்றாக போகும் நகரத்தில் ஓரளவுக்கு தான் போகும் என்று சிலர் கூறினார்கள். ஆனால், நகரத்தில் எங்களுக்கே டிக்கெட் கிடைக்கவில்லை.

நான் கேட்டே டிக்கெட் கிடைக்கவில்லை. இந்த இரண்டு வருட கொரோனா காலகட்டத்தில் எல்லோரும் வீட்டிலேயே உட்கார்ந்து ஓடிடி-யில் கொரியன் படமாகப் பார்த்து பழகி இருப்பார்கள். தியேட்டருக்கு வந்து பார்க்க விரும்ப மாட்டார்களோ? என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஒருவேளை நம் மக்கள் மாறிவிட்டார்களா? என்ன நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஆனால், அப்படியெல்லாம் யாரும் மாறவில்லை. நம் பண்பாடு, கலாச்சாரம் என்றுமே மாறப் போவதில்லை என்பதற்கு விருமன் படம் வெற்றி, எடுத்துக்காட்டாகத் இருக்கிறது. இந்த கொண்டாட்டமே எங்கள் குடும்பங்களில் தியாகத்தால் தான் நாங்கள் வெளியில் சென்று உழைக்க முடிகிறது.

அவர்களுக்கு ஒரு நாளை ஒதுக்கி வெளியே அழைத்து சென்றிருக்கிறோமா? வாய்ப்பே இல்லை இல்லையா? ஆகையால், ஒரே நாளில் அனைவரையும் சேர்த்துப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது. குழந்தைகள் இதனை அறிந்திருப்பார்கள் என்று நம்புகிறேன். அம்மாவை அழைத்து வந்துருக்கிறோம் என்று கூறினார்கள், கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது.

எத்தனை நாள் அவர்களை வெளியே அழைத்து சென்றிருப்போம்? சாப்பாடு வாங்கி கொடுத்திருப்போம்? ஆகையால் தான் இந்த படத்தில் அதிதிக்கு ஹோட்டலுக்கு அழைத்து செல்லும் காட்சியை வைத்தோம்.

பெண்கள் அசதியாக இருக்கிறது ஹோட்டலுக்கு அழைத்து செல்லுங்கள் என்று கேட்பது சோம்பேறித்தனம் கிடையாது. தினமும் சமைத்துக் கொண்டிருக்கிறோம், ஒரு நாளைக்காவது சமைக்காமல் சாப்பிட வேண்டும் என்பதற்காக தான்.

அந்த வகையில் பெண்களுக்கு ஓய்வு கொடுக்கவும், சந்தோசமாக இருக்கவும் தான் திட்டமிட்டு செய்தோம். அது சந்தோசமாக இருக்கிறது. விளையாடி பல நாட்கள் ஆகிறது. அதிதியிடம் தோல்வியடைந்ததில் மகிழ்ச்சி. இப்படகுழுவினரும், பத்திரிகை நண்பர்களும் இங்கு வந்ததில் மகிழ்ச்சி. அனைவரும் கண்டிப்பாக உணவருந்தி விட்டு செல்லுங்கள். இந்த விழாவை சிறப்பாக உருவாக்கி கொடுத்த ராஜாவுக்கு நன்றி என்றார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் பேசும்போது,

இதைவிட வேறு என்ன வேண்டும். இந்தப்படத்தின் கதை கேட்டு படப்பிடிப்புக்கு செல்லும்போது கார்த்தியிடம் நம்பி செய்வோம் என்று கூறினேன். முத்தையா கதை சொல்லும்போது அழுதுகொண்டே சொல்லுவார். இந்தப் படத்தை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதற்கும் மேலே அன்பை காட்டி இருக்கிறார்கள். இங்கிருக்கும் கூட்டம் போலவே படப்பிடிப்பிலும் கூட்டமாகவே இருந்தோம்.

ராஜாவிற்கு நன்றி. பெரிய குடும்பம், நல்ல சாப்பாடு, எல்லோரிடமும் அன்பு..
இவைகளோடு நல்லபடியாக முடிவடைந்திருக்கிறது. கார்த்தி, சூர்யா, பத்திரிகையாளர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி. அனைவரின் நகைச்சுவைக்கும் நன்றி. லவ் யூ ஆல் என்றார்.

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் பேசும்போது,

எல்லா படங்களும் வெற்றியை நோக்கி தான் பயணிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஒரு சில படங்கள் தான் வெற்றியின் உச்சத்திற்கு போய் நிற்கும். அப்படி ஒரு படம் தான் விருமன். நாங்கள் எதிர்பார்த்தது
பி அண்டு சி-ல் தான் பெரிய கூட்டம் வருவார்கள் என்று நினைத்தோம். முதல் முறையாக லூக்ஸ்-இல் 24 காட்சிகள் போட்டிருந்தார்கள். மல்டிபிளக்ஸ்-இல் 24 காட்சிகளை போடுகிறார்கள் என்று அதிர்ச்சியாக இருந்தது.

வியாழக்கிழமை அன்று திங்கள்கிழமை வரை 90 சதவீத டிக்கெட்டுகள் முன்பதிவாகி இருந்தது. பி அண்டு சி மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாடே இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள் என்று அப்போதே ராஜா அண்ணனிடம் கூறினேன். நிறைய படங்களின் வெற்றியே நிறைய பேர்களுடைய உழைப்பால் தான் இருக்கும். உழைப்பாகட்டும், இந்த படத்தின் திட்டமாகட்டும் அதைத் தாண்டிய அன்பு 2D சூர்யா அண்ணன், ராஜசேகர் அண்ணன், கார்த்தி சார், சிவகுமார் ஐயா குடும்பத்தினர் உடைய மனசுக்கு ஒரு வெற்றி இருக்குமல்லவா? அந்த வெற்றியாகத்தான் விருமனின் வெற்றியைப் பார்க்கிறேன்.

3 மடங்கு அன்பை வெளிக்காட்டி இருக்கிறார்கள். அதே ஊரை சேர்ந்த ஐந்து குடும்பங்கள் படம் பார்த்துவிட்டு, பெரியண்ணா இந்த கதாபாத்திரம், சின்ன அண்ணன் இந்த கதாபாத்திரம், அப்பா இந்த கதாபாத்திரம் என்று கூறி ஒட்டுமொத்தமாக பேசியதை பத்திரிகையாளர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டிருந்தார்.

இந்த 4 நாட்களில் 35 கோடியை தாண்டி வசூல் ஆகி இருக்கிறது. இது சாதாரண வெற்றியல்ல; மிகப்பெரிய வெற்றி! எல்லோரும் உழைத்திருக்கிறார்கள். இந்த வெற்றியைக் கொண்டாடுவதற்கு இதைவிட சரியான தருணமோ, சரியான நபர்களோ இல்லை என்று நினைக்கிறேன். அனைவருக்கும் நன்றி என்றார்.

இயக்குனர் முத்தையா, 2D ராஜசேகர், நடிகர் சூர்யா சார், கார்த்தி சார் அனைவருக்கும் அனைவரின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நடிகர் சூர்யா பேசும்போது,

கொரோனா காலகட்டத்தில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அந்த கடுமையான சூழலில் நடித்த, நடிகர், நடிகைகள், இயக்குனர், ஒளிப்பதிவாளர் என அனைவருக்கும் ஏற்கனவே நன்றி தெரிவித்துவிட்டோம். அவர்களைப் பற்றி அதிகம் பேசியுள்ளோம்.

ஆனால், கேமேராவுக்கு பின்பு வேலை பார்த்த அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. தயாரிப்புப் பணிகளை செய்த ராஜாவுக்கு நன்றி. இப்படம் உருவாகுவதற்கு இயக்குனர் முத்தையா எப்படியோ, அதே போல் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முதல் வெளியாகும் வரை இருந்த ராஜாவும் முக்கிய காரணம். ராஜா மூலமாகத் தான் இந்த வெற்றியை இன்று அடைய முடிந்தது.

மனோஜ், செந்தில் சார், விஜய், மஹாதேவன், நந்து, கார்த்தி, குணா, சத்யா என இவர்கள் இல்லாமல் இந்த வெற்றி இல்லை. எந்தவித தங்கு தடையுமின்றி விருமன் வெற்றிக்கு இவர்கள் தான் முக்கிய காரணம். கார்த்தி சொன்ன வார்த்தைகள் தான், தனியாக இருந்தால் ஜெயிக்க முடியாது.

குடும்பங்களின் தியாகம், விட்டுக் கொடுக்கும் தன்மை, அவர்கள் சுமக்கும் அத்தனை பாரமும் தான் செய்யும் தொழிலைத் தொடர்ந்து செய்யக் காரணமாக உள்ளது. அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.

எங்களுக்கு பின் மிக பெரும் பலம் உள்ளது. எங்களை கை தூக்கி விடவும், எங்களை மேலே தூக்கி விடவும் காரணமாக இருப்பது எங்கள் குடும்பத்து பெண்கள் தான். என் அம்மா, மனைவி, என் மகள் ஆகியோர் எவ்வளவு தியாகம் செய்கிறார்கள் என்று தெரியும்.

ஒரு ஆண் ஜெயிப்பது சுலபம். அதுவே ஒரு பெண் ஜெயிக்க 10 மடங்கு சிரமப்பட வேண்டும். பெண்கள் நிறைய விஷயங்களை தியாகம் செய்கிறார்கள். தன் வீட்டிலுள்ள மகனை முன் நிறுத்திவிட்டு அவர்கள் பின்தங்குகிறார்கள். இது போன்று நிறைய சொல்லிக்கொண்டே இருக்கலாம், தியாகம் என்ற சொல்லுக்குள் பல வார்த்தைகள் உள்ளது.

இங்கு அனைவரையும் வரவழைத்து நன்றி தெரிவிக்க ஆசைப்பட்டேன். அதை ராஜா மிகவும் அழகாக நடத்திக் காட்டியுள்ளார். அனைவருக்கும் நன்றி.

என் தங்கை பிருந்தா மற்றும் செல்வி சொன்ன விஷயம் தான் நினைவுக்கு வருகிறது. “எங்களுக்கு சொர்க்கம் என்றால், நாங்கள் சாப்பிட்ட தட்டை வேறு ஒருவர் கழுவுவதில் தான் சொர்க்கம்” என்றார். பெண்கள் நிறைய சிரமங்களை கடந்து வருகின்றனர். அதை நாம் அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும். அவர்களை முன்னிறுத்தி அழகு பார்க்க வேண்டும். அனைவருக்கும் நன்றி என்றார்.

இத்துடன் விழா நிறைவு பெற்றது.

Viruman success meet photos

Karthi in Viruman success meet highlights

சர்வதேச விருதுகளை குவித்தும் ‘அந்த நாள்’ படத்திற்கு சென்சார் பிரச்சனை.; விரைவில் பார்த்திபன் – ஆர்யன் ஷ்யாம் கூட்டணி

சர்வதேச விருதுகளை குவித்தும் ‘அந்த நாள்’ படத்திற்கு சென்சார் பிரச்சனை.; விரைவில் பார்த்திபன் – ஆர்யன் ஷ்யாம் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விரைவில் வெளியாகவிருக்கும் ‘அந்த நாள்’ என்ற படம் திரைக்கு வருவதற்கு முன்பாகவே உலகமெங்கும் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்று வருகிறது.

இந்த அந்த நாள் படத்தை க்ரீன் மேஜிக் என்டர்டெயின்மென்ட்டின் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ரகுநந்தன் தயாரித்துள்ளார்.

இந்த ‘அந்த நாள்’ படத்தில் ஆர்யன் ஷ்யாம் கதாநாயகனாக நடிக்கிறார்.

மேலும் ஆதி பிரசாத் மற்றும் லீமா எஸ்.பாபு முன்னணி ஹீரோயின்களாகவும், கிஷோர் ராஜ்குமார் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.

இந்த ‘அந்த நாள்’ படத்தை வி.வி.கதிரேசன் இயக்கியுள்ளார். கதை மற்றும் திரைக்கதையை ஆர்யன் ஷ்யாம் எழுதியுள்ளார்.

இந்த ‘அந்த நாள்’ நரபலி மற்றும் Black Magic கருவாக கொண்ட திரைப்படம். அதனால் இந்தப் படத்திற்கு சென்சார் மறுக்கப்பட்டது.

பின்னர் ரிவிசிங் கமிட்டியிடம் அப்பீல் செய்து படத்திற்கான தணிக்கை சான்றிதழ் பெறப்பட்டது.

இந்த ‘அந்த நாள்’ படம் உலகமெங்கும் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு 8 அதிகாரப்பூர்வமான விருதுகளை பெற்றுள்ளது.

இந்தப் படத்தில் திரைக்கதை எழுதப்பட்டுள்ளவிதம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் மிகுந்த பாராட்டுகளைப் பெற்றது.

இப்படத்தின் இயக்குநரான வி.வி.கதிரேசன் ‘EUROPE FILM FESTIVAL’ விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதையும், அறிமுக நடிகரான ஆர்யன் ஷியாம் ‘NEWYORK MOVIE AWARDS’, ‘AMERICAN GOLDEN INTERNATIONAL FILM FESTIVAL’, ‘MEDUSA FILM FESTIVAL’, ‘WORLD FILM CARNIVAL SINGAPORE’ உள்ளிட்ட 4 சர்வதேச திரைப்பட விழாக்களில் ‘சிறந்த நடிகருக்கான விருதை’யும் பெற்றுள்ளார்.

இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் முயற்சியால் ஈர்க்கப்பட்ட ஆர்யன் ஷ்யாம், ‘அந்த நாள்’ படத்தை பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு அனுப்பினார்.

மேலும் சமீபத்தில் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் ஆர்யன் ஷ்யாமை வாழ்த்தி விரைவில் அவருடன் ஒரு படத்தில் பணியாற்றுவது குறித்தும் விவாதித்துள்ளார்.

Actor Parthiban and Aryan Shyam joins for a new film

கோடிகளைக் கொட்டினாலும் முடியாது.; ரசிகர்களுக்காக சிம்புவின் சிலிர்க்க வைக்கும் செயல்

கோடிகளைக் கொட்டினாலும் முடியாது.; ரசிகர்களுக்காக சிம்புவின் சிலிர்க்க வைக்கும் செயல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மாநாடு’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார் சிம்பு.

மேலும் இவரது நடிப்பில் ‘பத்து தல’, ‘கொரானா குமார்’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

இதில் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் மிக பிரபலமான ஒரு ஆல்கஹால் பிராண்ட் விளம்பரத்தில் சிம்பு நடிக்கு மறுத்ததாக கூறப்படுகிறது.

ஒரு பன்னாட்டு மதுபான நிறுவனம் தங்கள் விளம்பரத்தில் நடிக்க கோடிகளை கொட்டிக் கொடுக்க தயாராக இருந்ததாம்.

ஆனால் தான் நடித்தால் தன் ரசிகர்களும் அந்த மதுவை அருந்த கூடும் என்பதால் அதை நிராகரித்து விட்டாராம் சிம்பு.

மேலும் தீய பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையை அவர் கைவிட்டதால் இந்த வாய்ப்பை நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.

Why Simbu Rejects The Offer To Act In Alcohol Advt

உடல் உறுப்புகளை தானம் செய்கிறேன்.; நடிகை மீனா உருக்கமான பதிவு

உடல் உறுப்புகளை தானம் செய்கிறேன்.; நடிகை மீனா உருக்கமான பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பெரிய நட்சத்திரங்களாக உயர்ந்தவர்கள் ஒரு சிலரே.

சிலரை அதில் மிக முக்கியமானவர் நடிகை மீனா. இவர் குழந்தையாக இருந்த போது ரஜினியுடன் ஓரிரு படங்களில் நடித்தார். பின்பு வளர்ந்து ரஜினிக்கு ஜோடியாக முத்து வீரா எஜமான் உள்ளிட்ட படங்களின் நடித்திருந்தார்.

மேலும் கமல் , சத்யராஜ் , விஜயகாந்த் , கார்த்திக் , அஜித் , விஜய் , பிரசாந்த் ஆகியோருடன் நடித்திருந்தார்.

கடந்த 2009-ல் பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் முடித்தார். இந்த தம்பதிக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இவர் விஜய்யின் தெறி படத்தில் நடித்திருந்தார்.

கடந்த ஜூன் 27-ம்தேதி நுரையீரல் பாதிப்பு காரணமாக மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்தார்.

இந்த நிலையில் சர்வதேச உடல் தான தினத்தையொட்டி மீனா உடல் தானத்தை அறிவித்துள்ளார்.

“உயிர்களைக் காப்பாற்றுவதை விட சிறந்த செயல் எதுவும் இருக்க முடியாது.

நீண்ட கால உடல்நல பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுப்புகள் தானமாக கிடைப்பது என்பது ஒரு வரம். தனிப்பட்ட முறையில் இதனை நான் உணர்ந்திருக்கிறேன்.

உடல் தானம் செய்வது என்பது உயிர்களைக் காக்கும் உன்னத வழிகளில் ஒன்று. எனது கணவருக்கு உறுப்புகள் தானமாக கிடைத்திருந்தால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும்.

ஒருவர் உறுப்பை தானம் செய்யும்போது 8 பேர் காற்றப்படலாம். உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்திருப்பார்கள்.

அந்த வகையில் எனது உடல் உறுப்புகளை நான் தானம் செய்வதாக அறிவிக்கிறேன்.

இதன் மூலம் நீண்ட நாட்களுக்கு நாம் உயிர் வாழலாம். என உருக்கமாக தெரிவித்துள்ளார் மீனா.

Actress Meena has pledged her organs for donation

தெய்வக் குழந்தை அப்பா நீ.. வர்ணிக்க முடியா உணர்வு நீ.; ரஜினியை வாழ்த்திய சௌந்தர்யா

தெய்வக் குழந்தை அப்பா நீ.. வர்ணிக்க முடியா உணர்வு நீ.; ரஜினியை வாழ்த்திய சௌந்தர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கே பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் முதன்முறையாக அறிமுகமான ‘அபூர்வ ராகங்கள்’ என்ற திரைப்படம் ஆகஸ்ட் 15 1975 ஆண்டு வெளியானது.

தற்போது 47 வருடங்களை கடந்துள்ள நிலையில் ரஜினியிசம் 47 ஆண்டுகள் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதனை முன்னிட்டு சென்னை ரோகினி தியேட்டரில் ரஜினி நடித்த ‘சிவாஜி’ படம் சிறப்பு காட்சியாக ஆகஸ்ட் 14ல் திரையிடப்பட்டது.

இந்த படத்தை வரவேற்று ரஜினி ரசிகர் கோலாகலமாக கொண்டாடி பட்டாசு வெடித்து பாலபிஷேகம் செய்து மகிழ்ந்தனர்.

படம் ரிலீசான நாள் முதல் காட்சி பார்ப்பது போன்ற ஒரு உற்சாகம் ரசிகர்களிடம் காணப்பட்டது.

ஆரம்பத்தில் வில்லன் வேடங்களில் நடித்து வந்த ரஜினிகாந்த் பின்னர் நாயகனாக ‘பைரவி’ படம் மூலம் மாறினார்.

முதலில் ஸ்டாராக மாறி 5 வருடங்களிலேயே சூப்பர் ஸ்டாராக மாறினார்.

தற்போது அமெரிக்கா, ஜப்பான், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளிலும் உலகம் முருவதும் ரஜினிக்கு ரசிகர்கள் உள்ளனர்.

ரீல் லைஃப்பை தாண்டியும் ரியல் லைஃப்பிலும சூப்பர் ஸ்டாராக மாறினார் ரஜினிகாந்த்.

அவர் திரைத்துறையில் நுழைந்து 47 ஆண்டுகள் நிறைவை அடுத்து ரஜினிக்கு ரசிகர்களும் அரசியல் பிரபலங்களும் திரைத்துறை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் குடும்பத்தினரும் இதை கேக் வெட்டிக் கொண்டாடினர்.

அந்தப் புகைப்படத்தை வெளியிட்டு ரஜினியின் மகள் சௌந்தர்யா அந்த பதிவில்…

“நீங்கள் தெய்வக் குழந்தை அன்பு அப்பா! வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒரு உணர்வு நீ’ என்றும், ‛அப்பாவின் பெரிய ரசிகை மற்றும் எங்கள் குடும்பத்தின் சூப்பர் ஸ்டார்’ என பதிவிட்டுள்ளார் சௌந்தர்யா.

ரஜினியை எதிர்க்க ஆளே இல்ல.; ஒரு ஹிட்டுக்கே அவரு ஆட்டமா? 47 Years of Rajinism Fans Celebration

#Thalaivar #Rajinikanth

‘கபாலி’ வசூலை அறிவித்தார் தாணு.!

‘விக்ரம்’ வசூலை அறிவிப்பாரா கமல்.?

ரஜினிகாந்த்

Soundarya congratulated her father Rajinikanth on completing 47 years in industry

More Articles
Follows