எப்படி இருந்த சிம்பு இப்படி மாறிட்டாரே..; எளிய மனிதர் STRஐ பாராட்டிய வெங்கட் பிரபு

நடிகர் சிம்பு… இவரை சுற்றி எப்போதுமே பல சர்ச்சைகள் இருக்கும்.. காதல் கிசு கிசு முதல் பீப் சாங் வரை பல ப்ளாஷ்பேக் கதைகள் உள்ளன.

இவையில்லாமல் சூட்டிங்க்கு லேட்டாக வருதல், கால்ஷீட் சொதப்பல், சூட்டிங்கில் லீவு கேட்பது என பல வகைகளில் இவரது பெயர் கெட்டப் பெயரானது.

ஆனால் கொரோனா லாக்டவுனுக்கு பிறகு முற்றிலும் மாறிவிட்டார் சிம்பு.

ஒரே மாதத்தில் சுசீந்திரன் இயக்கிய ‘ஈஸ்வரன்’ படத்தை முடித்து கொடுத்தார்.

தற்போது ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படப்பிடிப்பு தளத்தில் கேரவன் கூட கேட்காமல் மண் தரையில் படுத்து தூங்கியுள்ளார் சிம்பு.

இந்நிலையில் இப்பட இயக்குனர் வெங்கட் பிரபு, சிம்புவை “எளிய மனிதர்.. நடிகர்களின் வாழ்க்கை…” என குறிப்பிட்டு 2 புகைப்படங்களை தனது ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார்.

ஒரு படத்தில் சிம்பு, மண் தரையில் படுத்து தூங்குகிறார்.

மற்றொரு படத்தில் சிம்புவின் பக்கத்தில் நின்று எஸ்.ஜே.சூர்யா பேசிக் கொண்டிருக்கிறார்.

இந்தப் படங்களை சிம்பு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வைரலாக்குகின்றனர்.

Actors life!!! Man of simplicity!!! #nightshoot #Maanaadu in between shots!! @SilambarasanTR_ @iam_SJSuryah #candidshot https://t.co/rCtrpD97cV

STR’s recent pic goes viral

Overall Rating : Not available

Latest Post