• ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக சிம்பு-தனுஷ் வாய்ஸ்

  arrahmanஒரே நேரத்தில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை இந்திய சினிமாவுக்கு பெற்றுத் தந்து பெருமை தேடித் தந்தவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

  இவர் சமீபத்தில் நடத்திய இசை நிகழ்ச்சியில் தமிழ் பாடல்கள் அதிகம் பாடியதால், இந்தி ரசிகர்கள் பாதியில் எழுந்து சென்றது பெரும் பரபரப்பானது.

  இசைக்கு மொழி கிடையாது. அது எல்லா மொழிகளுக்கும் பொதுவானது என பலரும் ஏஆர். ரஹ்மானுக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  இந்நிலையில் தனுஷ் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

  ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எந்த மொழியும் கிடையாது. அவருடைய தாய்மொழி இசையை தவிர வெறு எதுவுமில்லை. ரஹ்மான் ரஹ்மான் தான். ஜெயஹோ என பதிவிட்டுள்ளார்.

  சிம்புவும் தன் ஆதரவு கருத்தை தெரிவித்துள்ளார்.

  ‘இசைக்கு மொழி என்பதே கிடையாது. எனவே தான் இசை எல்லா மக்களையும் இணைக்கிறது.

  ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு ஜீனியஸ். இந்த பிரச்சனைக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைக்கவும்” என்று தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  STR and Dhanush supports ARRahman in issue held at London live concert

  STR‏Verified account @iam_str
  Music has no language, and that’s the reason music unites people, and so does the genius legend @arrahman End of story dot. #Peace

  Dhanush‏Verified account @dhanushkraja
  A r Rahman does not have languages. His language is music and nothing else. Rahman is Rahman. #jaiho

  Overall Rating : Not available

  Leave a Reply

  Your rate

  Latest Post