தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காவிரி மேலாண்மை அமைப்பதற்கும், ஸ்டெர்லைட் ஆலை மூடுவதற்கும் நடிகர் சங்கம் சார்பில் மவுன போராட்டம் நடைபெற்றது.
இதில் சிம்பு பங்கேற்கவில்லை. அதுகுறித்து அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
அவர் கூறியதாவது…
நடிகர் சங்க போராட்டத்திற்கு என்னை அழைக்கவில்லை. அந்த போராட்டத்தில் பேசி பிரச்சினையை தீர்க்க வேண்டும். ஆனால் அது மௌன போராட்டம்.
மேலும் திரைத்துறையில் பல பிரச்சனைகள் இருக்கும்போது, பிற போராட்டங்களில் பங்கேற்பதில் எனக்கு உடன்பாடில்லை.
ரொம்ப நாளாக தமிழ்நாட்டிற்கு பிரச்சினை மேல் பிரச்சினைகள் வந்துக் கொண்டே இருக்கிறது.
ஒரு பிரச்சினை முடிந்தால் அடுத்த பிரச்சினை ஆரம்பாகிறது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழ்நாட்டிற்கு சூனியம் வைத்தது போல் உள்ளது.
அவர் மரணம் எப்படி நடந்தது? என்று ஆண்டவனுக்குத்தான் தெரியும். அதை முறையாக கண்டுபிடிக்க வேண்டும்.
காவிரியில் வாழ்கிற மக்கள் நிச்சயம் தண்ணீர் தர தயாராக இருப்பார்கள். ஆனால் அந்த மக்களுக்கும் நமக்கும் நடுவில் நிற்கும் அரசியல்வாதிகள்தான் இதை அரசியலாக்கிவிடுகிறார்கள்.
அரசியல்வாதிகள் யாருக்கும் மக்களுக்கு நீர் கிடைக்க வேண்டும் என்ற எண்ணமில்லை.” என்று ஆவேசமாக பேசினார்.
STR aka Simbu clarifies Why he not participated in Nadigar Sangam protest