நிஜ பாகுபலியை மிஞ்சிய கோஷம்; ஜப்பானில் ராஜமௌலி நெகிழ்ச்சி

Director Rajamouli reaction In Japan Baahubali 2 got huge responseஎஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்து பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் வெளியானது.

இந்த இரண்டு படங்களும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை இந்திய சினிமா பக்கம் ஈர்த்தது.

உலகளவில் சுமார் 1700 கோடி வசூலித்த இப்படம் ஜப்பான் நாட்டில் கடந்த வருடம் 2017ல் டிசம்பர் 31ம் தேதி வெளியானது.

அங்கு 100 நாட்களுக்கும் மேல் ஓடி 15 மில்லியன் டாலர்கள் வசூலித்தது.

எனவே ஜப்பான் வினியோகஸ்தர் அழைப்பின் பேரில் படத்தின் இயக்குனர் ராஜமௌலி, தயாரிப்பாளர் ஷோபு ஆகியோர் அங்கு சென்றுள்ளனர்.

அங்கு பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு பின், ‘பாகுபலி 2’ படத்தின் சிறப்புத் திரையிடல் நடைபெற்றது. அதில் இயக்குனர் ராஜமௌலி கலந்துக் கொண்டார்.

அப்போது படம் பார்த்த ரசிகர்கள் ‘பாகுபலி’, ‘பாகுபலி’ என குரல் எழுப்பினர். அதை செல்பி வீடியோவாக எடுத்துள்ளார் ராஜமௌலி.

பாகுபலி படத்திலும் இதுபோன்ற கோஷங்கள் இருந்தன. அது படத்திற்காக எடுக்கப்பட்டது என்றாலும் இது நிஜத்தில் நிறைவேறியது என்பதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறாராம் ராஜமௌலி.

Director Rajamouli reaction In Japan Baahubali 2 got huge response

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

பாகுபலி படத்தின் 2 பாகங்களை முடித்து…
...Read More
பாகுபலி படத்திற்கு முன்பே கிட்டதட்ட 15க்கும்…
...Read More
பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப்…
...Read More
சிவகார்த்திகேயன், பொன்ராம் இணையும் படங்கள் எப்போதுமே…
...Read More

Latest Post