ஆஸ்ரம் பள்ளிக்கு பூட்டு சர்ச்சை; நஷ்டஈடு கேட்கும் ரஜினி மகள்

ஆஸ்ரம் பள்ளிக்கு பூட்டு சர்ச்சை; நஷ்டஈடு கேட்கும் ரஜினி மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Soundarya Rajinikanthசென்னை, கிண்டியில் லதா ரஜினிகாந்த் ஆஸ்ரம் என்ற பள்ளியை நிர்வகித்து வருகிறார்.

இந்த கட்டிடத்திற்கு பல மாதங்களாக வாடகை கொடுக்காத காரணத்தினால் இப்பள்ளியை அந்த கட்டிட உரிமையாளர் பூட்டியதாக கூறப்பட்டது.

ஆனால் அதை மறுத்த பள்ளி நிர்வாகம், தாங்கள் வேறு ஒரு இடத்தை தேர்வு செய்து வருவதாகவும், வாடகை பாக்கியில்லை எனவும் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் தங்கள் பள்ளியின் மீது வேண்டுமென்றே அவதூறு கருத்துக்களை தெரிவித்ததற்காக ரூ.5 கோடி நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என ரஜினியின் 2வது மகளும் விஐபி2 பட இயக்குனருமான சௌந்தர்யா ரஜினி தெரிவித்துள்ளார்.

தீ காயத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விருது வழங்கினார் ரோஹினி

தீ காயத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விருது வழங்கினார் ரோஹினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Burn survivors honoured at COSMOGLITZ AWARDS by Rohiniபிரபல பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் உடல் எடை குறைப்பு மையமான ’சென்னை பிளாஸ்டிக் சர்ஜரி’ (Chennai Plastic Surgery) ‘காஸ்மோக்ளிட்ஸ் விருதுகள்’ (Cosmoglitz Awards) என்ற தலைப்பில் ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்கி வருகின்றது.

3ஆம் ஆண்டான இவ்வாண்டுக்கான விருது வழங்கும் விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

இதில் தீ காயங்களால் பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு ‘பீனிக்ஸ் க்ளிட்ஸ்’ விருது வழங்கப்பட்டது. இவ்விருதை நடிகையும், இயக்குநருமான ரோஹினி வழங்கினார்.

இந்த 8 பெண்களும் முறையான பயிற்சி பெற்று சென்னை ராயபேட்டையில் உள்ள ரைட்டர்ஸ் கபேவில் பணிபுரிகிறார்கள். தங்கள் முகத்தில் ஏற்பட்ட தீ காயத்தால் பலரால் புறக்கணிப்பட்ட இவர்கள், அனைத்து தடைகளையும் எதிர்த்து போராடி, தற்போது சமூகத்தில் உயர்ந்துள்ள, பிரியதர்ஷினி, அஸ்மா, மாரியம்மாள், தமிழ்செல்வி, பரிமளா, புனிதவள்ளி, சத்யா, கோமலா என்ற இந்த 8 பெண்களை கவுரப்படுத்தும் விதமாக பீனிக்ஸ் க்ளிட்ஸ் விருது வழங்கப்பட்டது.

அதேபோல், 50 வயதில் தனது உடல் எடையில் 50 கிலோவை குறைத்து சாதித்த சென்னையைச் சேர்ந்த பெண்மணி திருமதி.சுஜாதா மோகனுக்கு ‘அவதார் க்ளிட்ஸ்’ விருது வழங்கப்பட்டது.

இவர், எந்தவித மருந்தோ மாத்திரையோ பயன்படுத்தாமல், அறுவை சிகிச்சை செய்துக்கொள்ளாமல், தனது உடல் எடையை குறைத்துள்ளார். இவரது செயலை ஊக்குவிக்கும் நோக்கத்தில், சென்னை பிளாஸ்டிக் சர்ஜரி இவருக்கு இவ்விருதை வழங்கி கவுரப்படுத்தியது.

சென்னை பிளாஸ்டிக் சர்ஜரியில் உடல் உடை குறைப்பதற்கான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டாலும், எந்த ஒரு அறுவை சிகிச்சையும் இல்லாமல் உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியால் தனது எடையில் 50 கிலோவை குறைத்த இந்த பெண்மணியை உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும், அவரை ஊக்குவிக்கும் நோக்கத்திலும் அவருக்கு இவ்விருதை வழங்கி கவுரவித்தனர்.

மேலும், மிஸ்டர்.கிளிட்ஸ் என்ற விருது மாடல் அபி பிரசாத்துக்கும், மிஸ்.க்ளிட்ஸ் விருது மாடல் அழகி மீரா மிதுனுக்கும் வழங்கப்பட்டது. மிஸ்சஸ்.க்ளிட்ஸ் விருது புனிதா கார்த்திக்குக்கும், மிஸ்டர்.பிரஸ் பேஸ் (Fresh Face) பல்கிட் பஜோரியாவுக்கும், மிஸ்.பிரஸ் பேஸ் (Fresh Face) ரேஸ்மா நம்பியார்க்கும் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு விருது வழங்கும் விழாவிற்கு முன்பாக ’பேர் இஸ் நாட் ஆல்வேய்ஸ் லவ்லி’ (Fair is not always lovely) மற்றும் ’பாடி சேமிங் & இமேஜினெட் அக்லினஸ் சிண்ட்ரோம்’ (Body Shaming & Imagined Ugliness Syndrome) என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

அதாவது, கருப்பு மற்றும் மாநிறமாக இருப்பவர்கள் தங்களது வண்ணத்தை மாற்ற பல்வேறு நடவடிக்கையை மேற்கொள்கிறார்கள். அப்படி செய்யக்கூடாது என்பது குறித்தும், அதேபோல், நமது உடல் எடை மற்றும் முக தோற்றம் உள்ளிட்டவையை வைத்து யாராவது கேலி கிண்டல் செய்தால், அதை கண்டுகொள்ளாமல் இருப்பது, உள்ளிட்டவையை குறித்து இந்த கருத்தரங்கில் தெளிவாக விவாதிக்கப்பட்டது.

இந்த கருத்தரங்கில், சமூக ஆர்வலர்கள், பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவர்கள், மனநல மருத்துவர்கள், விளையாட்டு ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் உடல் எடை பராமரிப்பு மருத்துவர்கள் மற்றும் பேஷன் டிசைனர் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.

மேலும், சுனிதா ராஜ் எழுதிய ‘லிப்போசக்ஸன் – தி பிக் ஃபேட் ஸ்டோரி’ (Liposuction – The Big Fat Story) என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இது உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் பற்றியும், அவை எதனால் ஏற்படுகிறது மற்றும் அவற்றை கரைக்கும் யுக்தி உள்ளிட்ட தகவல்களை கொண்ட புத்தகமாகும். இந்த புத்தகத்தை இந்தியாவின் மூத்த மற்றும் பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் பேராசிரியர். ஆர்.வெங்கடசுவாமி வெளியிட்டார். இந்திய பிளாஸ்டிக் சர்ஜரி துறையின் முன்னோடியான இவர் தான் டாக்டர் கார்த்திக் ராமின் குரு என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர்.கார்த்திக் ராம் நிகழ்ச்சியில் பேசும் போது, “சென்னை பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவமனை உடல் எடை பருமன், முடி உதிர்தல், பெண்கள் உடலில் திடீர் மாற்றம் போன்றவற்றுக்கு சிறப்பான முறையில் தீர்வு கண்டு வருகிறது. அத்துடன் சமூகத்தில் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும், உந்துதலாகவும் இருப்பவர்களை கவுரவிக்கும் விதத்தில் ‘காஸ்மோ க்ளிட்ஸ்’ விருதுகளை வழங்கி வருகிறோம்.

இந்த ஆண்டு தீ காயங்களினால் பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு விருதுகள் வழங்கியதைப் போல, அடுத்த ஆண்டு திருநங்கைகளுக்கு உதவும் வகையில், அவர்களுக்கும் விருதுகள் வழங்குவதோடு, அவர்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான கலந்துரையாடல் நிகழ்வை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.

2016 – 17 ஆம் ஆண்டில் மட்டும் 600 முதல் 700 காஸ்மடிக் அறுவை சிகிச்சைகளை செய்துள்ள சென்னை பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவமனை, அனைத்துவிதமான உடல் பாதிப்புகள், தோல் பிரச்சினைகள் மற்றும் முடி பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு வருகிறது.

இந்தியாவில் முன்னணி காஸ்மடிக் சர்ஜரி மையமாக திகழும் சென்னை பிளாஸ்டிக் சர்ஜரியில், இந்தியா மட்டும் இன்றி 67 நாடுகளில் இருந்து மக்கள் சிகிச்சைப் பெற்று வருகிறர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Burn survivors honoured at COSMOGLITZ AWARDS by Rohini

rohini cosmoglitz awards

விவசாயிகளின் விடுதலைக்காக போலீஸ் ஸ்டேஷனில் இருந்த அபிசரவணன்

விவசாயிகளின் விடுதலைக்காக போலீஸ் ஸ்டேஷனில் இருந்த அபிசரவணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Abi Saravanan helping Tamilnadu farmers at Delhi protestநம்நாடு சுதந்திரம் பெற்று, 70வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் அதே வேளையில், தங்கள் வாழ்க்கையில் ஒரு விடியலை தேடி, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து தலைநகர் டில்லியில் சாகும் வரை போராட்டம் நடத்தி வருகிறார்கள் நம் தமிழக விவசாயிகள்.

அரை நிர்வாண கோலத்தில் மத்திய அரசின் கவனத்தையும் மக்களின் கவனத்தையும் தங்கள் பக்கம் திருப்பும் விதமாக இந்த போராட்டத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர் விவசாயிகள்.

இந்தநிலையில் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி டில்லியில் போராட்டத்தில் இருந்த விவசாயிகளை, சந்திக்க சென்றிருந்த அபி சரவணன், அங்கு விவசாயிகள் கைது செய்யப்படுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக நமது விவசாயிகளுக்கு சட்ட உதவிகள் செய்துவரும் வழக்கறிஞர் ராஜா ராம் மற்றும் ரீகன் அவர்கள் அலுவலகம் சென்று அவர்களை அழைத்து கொண்டு பார்லிமெண்ட் போலீஸ் நிலையம் சென்றார்.

பின்னர் விவசாயிகள் பாதுகாப்பு காரணங்களுக்காகவே கைது செய்யப்பட்டுள்ளார்கள் என தெரிந்த பிறகு அன்று இரவு முழுவதும் அந்த போலீஸ் ஸ்டேஷன் வாசலிலேயே இருந்து கொண்டு மறுநாள் நண்பகல் 12 மணி அளவில் விவசாயிகள் அனைவரும் விடுதலை ஆகும் வரை காத்திருந்து அவர்களை அழைத்து சென்று, அவர்களுக்கு வெண்ணிற ஆடைகளை வழங்கி அவற்றை உடுத்தச்செய்து, அவர்களுடன் சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்ந்தார் நடிகர் அபிசரவணன்.

நடிகர் அபிசரவணன் தனது நண்பர்கள் மூலம் திரட்டிய நிதியை கொண்டு, கடந்த 31 நாட்களாக டில்லியில் ‘கிடைத்த’ உணவுகளை மட்டுமே உண்டு வந்த விவசாயிகளுக்கு, அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, தமிழ முறைப்படி சமைத்த அசைவ உணவுகளை வாழை இலை வைத்து அன்றைய 3 வேளைகளுக்கும் வழங்கி விட்டு வந்துள்ளார்.
விவசாயிகள் அபிசரவணனை மனதார பாராட்டி சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னரும் கடந்த 4 நாட்களாக நண்பர்களின் உதவியுடன் டில்லி விவசாயிகளுக்கு உணவளித்து வருகிறார் அபி சரவணன். அதில் ஒரு நாள் உணவை கவிஞர் தாமரை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அபிசரவணன், இதற்கு முன் டில்லியில் இவர்கள் முதற்கட்ட போராட்டம் நடத்தியபோதும் அவர்களுடனேயே தங்கி அந்த போராட்டத்தில் சில நாட்கள் கலந்துகொண்டு அவர்களை உற்சாகப்படுத்தினார் அதை தொடர்ந்து வந்த நாட்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளில் பலருக்கு தன் கையிலிருந்தும் திரையுலகினர் மூலமாகவும் அவ்வப்போது உதவிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Abi Saravanan helping Tamilnadu farmers at Delhi protest

Abi Saravanan TN farmers

விஐபி2-ஐ திருட்டுத்தனமாக பார்த்தவரை போட்டுக் கொடுத்த வரலட்சுமி

விஐபி2-ஐ திருட்டுத்தனமாக பார்த்தவரை போட்டுக் கொடுத்த வரலட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Varalakshmi tweet about VIP2 piracyகடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி சௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ வெளியானது.

இப்படம் இன்றுவரை வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், வரலட்சுமியின் கேரவன் டிரைவர் திருட்டுத்தனமாக ‘விஐபி2’ படத்தை ஆன்லைனில் பார்த்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் பதிவிட்டுள்ளதாவது..

இப்போது தான் எனது கேரவன் ஓட்டுநர் கள்ளத்தனமாக ‘வேலையில்லா பட்டதாரி 2’ படம் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தேன்.

கோபம் வந்து திட்டித் தீர்த்தேன். சினிமாவினால் லாபம் அடைபவர்களே இப்படி நடந்து கொண்டால் மற்றவர்கள் மனநிலை எப்படி இருக்கும் என நினைத்துப் பாருங்கள். பைரசியை நிறுத்துங்கள்.

இவ்வாறு வரலெட்சுமி பதிவிட்டுள்ளார்.

varu sarathkumar‏Verified account @varusarath
Jus caught my caravan driver watchin VIP2 online..blasted him..if ppl who make a living from films do this,jus imagine the rest #Stoppiracy

ரிலீசுக்கு முன்பே ரூ. 120 கோடியை அள்ளியது விவேகம்

ரிலீசுக்கு முன்பே ரூ. 120 கோடியை அள்ளியது விவேகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vivegam Pre release rs 120 crores businessஇன்னும் ஓரிரு தினங்களில் (ஆக.24) அஜித் நடித்துள்ள விவேகம் படம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இப்படம் ஹாலிவுட் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளதால் இதன் மீதான எதிர்பார்ப்பு தினம் தினம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் மட்டும் தற்போது வரை ரூ. 120கோடி வரை வசூலித்துள்ளதாம்.

தமிழகத்தில் மட்டும் ரூ. 53 கோடி வரை தியேட்டர் உரிமை வியாபாரம் ஆகியுள்ளது.

கர்நாடகத்தில் ரூ. 5 கோடியும், கேரளாவில் ரூ. 4.5 கோடியும், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரூ. 4.5 கோடிக்கும் வியாபாரம் ஆகியுள்ளதாம்.

இதுதவிர இந்தியாவின் மற்ற மாநிலங்களை சேர்த்து 1 கோடிக்கும்,
வெளிநாட்டு தியேட்டர் உரிமை ரூ. 19 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு சாட்டிலைட் உரிமை மட்டும் ரூ. 23 கோடிக்கும் பாடல் உரிமை ரூ. 2.5 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளது.

Vivegam Pre release rs 120 crores business

இதர விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது…

Area Price
Chennai Rs 5.1 crore
Chengalpet Rs 11.1 crore
North and Arcot Rs 5.9 crore
Coimbatore Rs 9.6 crore
Madurai Rs 6.9 crore
Trichy-Thanjavur Rs 6.1 crore
Salem Rs 5 crore
Tirunelveli-Kanyakumari Rs 3 crore
Tamil Nadu Total Rs 52.7 crore
Karnataka Rs 5 crore
Kerala Rs 4.5 crore
AP/Nizam Rs 4.5 crore
Rest of India Rs 80 lakh
Overseas Rs 18 crore
Worldwide Theatrical Rights Rs 85.5 crore
Satellite Rights Rs 23 crore
Hindi Rs 8 crore
Music Rs 2.5 crore
Worldwide Total Pre-Release Business Rs 119 crore

மூன்று கனவுகளை நிறைவேற்ற அரசியலில் இறங்கும் ரஜினி

மூன்று கனவுகளை நிறைவேற்ற அரசியலில் இறங்கும் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini entering in politics to make 3 dreams trueகாந்திய மக்கள் இயக்கம் சார்பாக திருச்சியில் ஒரு மாநாட்டை நடத்தினார் தமிழருவி மணியன்.

மாநாட்டிற்கு மாநில பொதுச்செயலாளர் ஏ. கணேசன் தலைமை வகித்தார். திருச்சி மாவட்ட தலைவர் வி. சந்திரன் மற்றும் நடிகர் ஜீவா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

அப்போது தமிழருவி மணியன் பேசியதாவது…

தமிழகத்தில் அரசியல் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி கூறியபோதுதான் என் பார்வை அவர் மீது திரும்பியது.

அதன்பின்னர் ஒரு முறை என்னை சந்திக்க விரும்பிய அவர் என் வீட்டிற்கு வரவா? அல்லது நீங்கள் வருகிறீர்களா? எனக் கேட்டார்.

ஒரு பக்குவப்பட்ட ஆன்மிகவாதியால்தான் இப்படி பேச முடியும். நான் அவரை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்தேன்.

அவரை சந்தித்த உடன் முதலில் நான் அவரிடம் கேட்டது…. 20 வருடங்களாக அரசியலைப் பற்றி பேசுகிறீர்கள். அரசியலுக்கு வருவீர்களா? எனக் கேட்டேன்.

அரசியலுக்கு வருவதை பற்றி முடிவு செய்துவிட்டேன். கடவுள் சொல்லிவிட்டார் என்றார்.

அரசியலுக்கு அவர் வர 3 கனவுகள் பற்றி சொன்னார்.

இன்னும் 10 ஆண்டுகளில் நதிகளை இணைக்க வேண்டும். அது நிச்சயம் ஒரு மாநில அரசால் செய்ய முடியாது. மற்ற மாநிலங்கள் மற்றும் மத்திய அரசுடன் என் செல்வாக்கை பயன்படுத்தி பேசுவேன்.

காமராஜர் மற்றும் அண்ணா இருவரும் என் ரோல் மாடல்கள். மிகவும் எளிமையாக வாழ்ந்தார்கள். அவர்களை போலவே ஒரு ஊழலற்ற ஆட்சியை கொடுப்பேன்.

முக்கியமாக தமிழகத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் மக்கள் இந்த ஆட்சியை பற்றி தெரிந்து கொள்ள ஒரு வெளிப்படையான ஆட்சியை கொடுப்பேன் என்றார்.

இதுதான் அவரின் 3 கனவுகள். அதுநாள் வரை நான் அவரை ஒரு நடிகராகதான் பார்த்தேன். ஆனால் அவர் சிறந்த மனிதர் என்பதை அவர் பேச பேச உணர்ந்தேன்.

அப்படி நல்ல உள்ளம் படைத்த மனிதர் ரஜினிகாந்த் முதல்வர் நாற்காலியில்அமர வேண்டாமா? என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று தமிழருவி மணியன் பேசினார்.

Rajini entering in politics to make 3 dreams true

tamilaruvi maninan actor jeeva at trichy rajini

More Articles
Follows