‘பேட்ட’ இயக்குனரிடம் மருமகனுக்கு சான்ஸ் கேட்டாரா ரஜினி…?

Rajinis recommendation for his son in law to act in moviesதன் மகள் திருமண வாழ்க்கை சரியில்லை என்றால் பெரும்பாலான பெற்றோர்கள் சமூகத்திற்கு பயந்து அந்த மாப்பிள்ளையுடன் தான் நீ வாழ வேண்டும் என மகளை நிர்பந்திக்கின்றனர்.

ஆனால் இதில் ரஜினிகாந்த் சற்று வித்தியாசப்பட்டு விவாகரத்து பெற்ற தன் 2வது மகள் சௌந்தர்யாவின் 2வது திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தி வைத்தார்.

இதனால் ரஜினியின் சிந்தனையை பலரும் பாராட்டினர்.

சௌந்தர்யாவின் 2வது கணவர் விசாகன் வணங்காமுடி என்பதும் அவர் ஒரு தொழிலதிபர் என்பது பலரும் அறிந்ததே.

இவருக்கு நடிப்பின் மீதும் ஆர்வம் உள்ளது.

எனவே தான் குரு சோமசுந்தரம் ஹீரோவாக நடித்த ‘வஞ்சகர் உலகம்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்நிலையில் பேட்ட பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விசாகன் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தனது மாப்பிள்ளைக்கு நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தை பார்த்து அவரை ரஜினி சிபாரிசு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஒருவேளை இது உண்மையானால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Rajinis recommendation for his son in law to act in movies

Overall Rating : Not available

Latest Post