சௌந்தர்யா ரஜினி வாழ்க்கையில் முக்கியமான 3 ஆண்கள் இவர்கள்தான்

soundarya rajinikanthதன் வாழ்க்கையில் 3 முக்கியமான ஆண்கள் என 3 பேரை குறிப்பிட்டுள்ளார் செளந்தர்யா ரஜினி.

அவரது ட்விட்டர் பதிவில்…

”வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன். என்னுடைய அன்பு அப்பா, தேவதை போன்ற மகன், இப்போது என்னுடைய விசாகன் ஆகியோர் என்னுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான 3 ஆண்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான செளந்தர்யா ரஜினி திருமணம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

தொழிலதிபர் வணங்காமுடியின் மகனும் ‘வஞ்சகர் உலகம்’ என்ற படத்தில் நடித்தவருமான விசாகனை திருமணம் செய்துகொண்டார்.

அமெரிக்காவில் படித்த விசாகன், தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெற்ற திருமணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், திரையுலகினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

Overall Rating : Not available

Latest Post