தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் மொழியை நேர்த்தியாக பேசி, தனித்துவமான கதாபாத்திரங்களில் பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரக்கூடியவர் நடிகை சஞ்சனா நடராஜன்.
இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தில் அவர் தனது சிறப்பான நடிப்பிற்காக பாராட்டுகளைப் பெற்றார். இப்போது அவர் தனது வரவிருக்கும் ‘போர்’ திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளார்.
டீசரில் அவரது டிரெண்டி & ஃபேஷனபிள் தோற்றம் அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
படத்தில் சஞ்சனா தனது கதாபாத்திரத்தைப் பற்றி பேசுகையில்…
‘ரிஷிகா’ என்ற மருத்துவ மாணவியாக நடித்துள்ளதாகக் கூறியுள்ளார்.
இந்த படத்தில் தான் நடித்துள்ள ரிஷிகா கதாபாத்திரம் தனது நிஜ வாழ்க்கை இயல்பை ஒத்திருக்கிறது என்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் சஞ்சனா.
“நண்பர்கள் குழுவைச் சுற்றி சுழலும் இந்தக் கதை அவர்களின் கடந்த கால சம்பவங்கள் எப்படி தற்போதைய வாழ்க்கையை பாதிக்கிறது என்பதைக் கூறும்.
இது அரசியல் விஷயங்களைப் பேசுவதோடு, சில சமூகப் பிரச்சினைகளையும் சொல்லி இருக்கிறது. படக்குழுவில் உள்ள அனைவரும் உற்சாகத்தோடு வேலை செய்தோம். இயக்குநர் பிஜாய் நம்பியாரும் படத்தை தெளிவான பார்வையோடு கொண்டு சென்றார்.
இந்த படத்தில் எனது கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பார்வையாளர்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்தக் கதை நிஜ சம்பவங்களின் அடிப்படையில் உருவானது” என்று சஞ்சனா நடராஜன் கூறினார்.
Actress Sanchana Natarajan movies updates