தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இன்று (ஜுன் 22ஆம் தேதி) விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இவருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்றைய தினத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள வட சென்னை (பாகம் 1) படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது.
பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய படங்களை தொடர்ந்து தனுஷை இப்படத்தில் இயக்குகிறார் வெற்றிமாறன்.
சமந்தா நாயகியாக நடிக்கவுள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
இந்நிலையில் படத்தின் நாயகனுக்கு தன் வாழ்த்துக்களை ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
அதில் “வாழ்த்துக்கள் தனுஷ் சார்” என குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்து “நன்றி சிவா” என தெரிவித்துள்ளார் தனுஷ்.