எம்ஜிஆர் பட டைட்டில் கிடைக்காமல் புதிய டைட்டில் வைத்த சிவகார்த்திகேயன்

Sivakarthikeyans 16 movie titled Namma Veetu Pillaiசிவகார்த்திகேயன் நடித்து இறுதியாக வெளியான வேலைக்காரன், சீமராஜா மற்றும் மிஸ்டர். லோக்கல் ஆகிய 3 படங்களும் தோல்வியை தழுவியது.

தற்போது மித்ரன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் ஹீரோ படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார்.

மேலும் மற்றொரு படமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பாண்டிராஜன் படத்திற்கு எஸ்கே 16 என்று தலைப்பிட்டு சூட்டிங் நடத்தப்பட்டு வந்தது.

இந்த படத்திற்கு எம்ஜிஆர் நடித்த ‛எங்க வீட்டுப்பிள்ளை’ தலைப்பை வைக்க திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால் தயாரிப்பு நிறுவனம் அதை தர மறுத்துவிடவே ‛நம்ம வீட்டுப்பிள்ளை’ என்று தலைப்பிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், சூரி, நட்டி என்கிற நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இமான் இசையமைக்கின்றனர்.

இப்படம் செப்டம்பரில் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.

Sivakarthikeyans 16 movie titled Namma Veetu Pillai

Overall Rating : Not available

Related News

Latest Post