பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படத்தில் சிவகார்த்திகேயன்

பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படத்தில் சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan plays lead role in short film directed by Thiruஅண்மையில் வெளியான மிஸ்டர் சந்திரமௌலி படத்தை இயக்கியிருந்தார் திரு.

இப்படத்தை அடுத்து இவர் ஒரு குறும்படத்தை இயக்குவதாக வந்த தகவல்களை பார்த்தோம்.

தற்போது இது தயாராகி விரைவில் வெளியாக உள்ளது.

இப்படம் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளுக்கான விழிப்புணர்வை சொல்ல வருகிறாம்.

இதில் சிவகார்த்திகேயன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan plays lead role in short film directed by Thiru

வடிவேலுவுக்கு சான்ஸ் கொடுக்காதீங்க..; வரிந்துக் கட்டும் தயாரிப்பாளர்கள்

வடிவேலுவுக்கு சான்ஸ் கொடுக்காதீங்க..; வரிந்துக் கட்டும் தயாரிப்பாளர்கள்

vadiveluஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு 2 வேடங்களில் நடித்து 2007-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி.

இதனையடுத்து 11 ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகத்திற்காக இந்த கூட்டணி மீண்டும் இணைந்தது.

சென்னைக்கு அருகே பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து இதன் முதற்கட்டப் படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது.

ஆனால் சில நாட்களிலேயே படக்குழுவினருடன் வடிவேலுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் அவர் சூட்டிங்கில் கலந்துக் கொள்ளவில்லை.

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. பல முறை தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும், வடிவேலு தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை.

இப்படியாக இந்த பிரச்சினை நீடித்து வந்தாலும் முடிவு ஏற்படவில்லை.

இறுதியாக இயக்குனர்கள் சங்கம், பெப்சி, நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் ஒன்றிணைந்து கூட்டம் ஒன்றை நடத்தினர்.

பல கட்ட பேச்சுவார்த்தைக்கும் பிறகும் இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

தற்போது ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின் பிரச்சினை தற்போது மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வந்துள்ளது.

இப்படத்துக்கு செலவழித்த 9 கோடி ரூபாயை அளிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் சொன்னதற்கு, வடிவேலு தரப்பில் எந்த ஒரு பதிலுமே வரவில்லை.

எனவே இந்த படப்பிரச்சினையை முடியும் வரை, வடிவேலுக்கு எந்த தயாரிப்பாளரும் வாய்ப்பு தரக் கூடாது என தயாரிப்பாளர்கள் சங்கம் வாய்வழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

தன் 100வது படத்தலைப்பை வரலட்சுமிக்கு விட்டுக் கொடுத்த கமல்

தன் 100வது படத்தலைப்பை வரலட்சுமிக்கு விட்டுக் கொடுத்த கமல்

kamal and varalaxmiநடிகர்களில் விஜய்சேதுபதி, ஜிவி. பிரகாஷ் இருவரும் கிட்டதட்ட 6,7 படங்களையாவது கையில் வைத்துள்ளனர்.

இவர்களைப் போல் நடிகைகளில் வரலட்சுமியும் கிட்டதட்ட 6 படங்களை கைவசம் வைத்துள்ளார்.

‘சர்கார்’, ‘சண்டக்கோழி 2’, `மாரி 2′, கன்னி ராசி, ‘நீயா 2’, ‘வெல்வெட் நகரம்’ உள்ளிட்ட படங்கள் தற்போது வரலட்சுமி கைவசம் உள்ளன.

இந்நிலையில் ஜே.கே. இயக்கத்தில் பார்வையற்றவராக வரலட்சுமி ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதை பார்தோம்.

இப்படத்திற்கு ராஜபார்வை என்று தலைப்பு வைக்க விரும்பினர் படக்குழுவினர்.

இப்படத்தலைப்பானது கமலின் 100வது படமாகும்.

எனவே கமலின் அனுமதிக்காக காத்திருந்தனர்.

தற்போது இந்த தலைப்புக்கு கமல் ஓகே சொல்லிவிட்டாராம்.

எனவே விரைவில் இந்த தலைப்புடன் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட காத்திருக்கிறதாம்.

ஹீரோயின்ஸ்-நாய்-தயாரிப்பாளர்கள் பற்றி சர்ச்சை ட்வீட்; சந்தோஷ் சிவனால் கடுப்பான ஜேஎஸ்கே

ஹீரோயின்ஸ்-நாய்-தயாரிப்பாளர்கள் பற்றி சர்ச்சை ட்வீட்; சந்தோஷ் சிவனால் கடுப்பான ஜேஎஸ்கே

Captureரோஜா, தளபதி, இருவர், உயிரே உள்ளிட்ட மணிரத்னத்தின் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் சந்தோஷ் சிவன்.

தற்போது உருவாகியுள்ள ‘‘செக்கச் சிவந்த வானம்’’ படத்திற்கும் இவர்தான் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

12 முறை தேசிய விருதும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் இவர் பதிவிட்டுள்ள ட்வீட் ஒன்று தயாரிப்பாளர்கள் மத்தியில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இவர் ஒரு டிசைனை பதிவிட்டுள்ளார். அதில் இரண்டு நாய்கள் இடம்பெற்றுள்ளது. நடிகைகளுக்கு சம்பளம் கொடுக்கும் போது தயாரிப்பாளர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள்.

ஆனால் மற்ற கலைஞர்களுக்கு சம்பளம் கொடுக்கும் போது கடுப்பாக இருக்கிறார்கள் என்ற தோனியில் இரண்டு நாய் படங்கள் பதிவிட்டுள்ளார்.

இதற்குத் தயாரிப்பாளர்கள் சிலர் விமர்சனங்களையும் பதிவிட்டனர்.

தரமணி, அண்டாவ காணோம் படத்தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ்குமார் இது குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.

எனவே இந்த பிரச்சினை தயாரிப்பாளர்கள் சங்கம் வரை சென்றது.

இதனையடுத்து அந்த பதிவை சந்தோஷ் சிவன் தனது ட்விட்டரில் இருந்து நீக்கியுள்ளார்.

அதன் பிறகு அவர் தெரிவித்துள்ளதாவது…

‘‘நல்ல தயாரிப்பாளர்கள் பலருக்கு அந்தக் கருத்து ஆட்சேபனை தெரிவிக்கும் விதத்தில் இருந்ததால் அந்த டுவிட்டை நீக்கிவிட்டேன்.

நான் முன்பு தெரிவித்த கருத்து யாரையும் குறிப்பிட்டு வெளியிடவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயி த்ரிஷா ஆடும் *பரமபதம் விளையாட்டு*

தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயி த்ரிஷா ஆடும் *பரமபதம் விளையாட்டு*

Trishas Action Thriller Paramapadham Vilaiyattu Nears Wrap Up Momentத்ரிஷாவின் பரமபதம் விளையாட்டு திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. படத்தின் முதல் பார்வை போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளது.

தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயி என்று பெயர் சூட்டப்பட்ட த்ரிஷா நாயகியாக நடிக்கும் திரைப்படம் ”பரமபதம் விளையாட்டு“.

இப்படத்தை திருஞானம் இயக்குகிறார். த்ரிஷா மருத்துவராகவும், மருத்துவரின் தாயாகவும் நடிக்கிறார்.

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஏற்காட்டில் உள்ள ராபர்ட் கிளைவ் மேன்சனில் வைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படத்தை பற்றி இயக்குனர் திருஞானம் கூறும் போது…

இதை போன்ற ஒரு கதையில் த்ரிஷா முதன்முதலாக நடிக்கிறார். இதை நான் மிகைப்படுத்தி கூறவில்லை அதான் உண்மை. த்ரிஷா நடிப்பில் வெளிவந்த படங்களில் இது புதுமையான, முக்கியமான படமாக இருக்கும்.
த்ரிஷா இப்படத்தில் நடிப்பது தனக்கு சிறப்பாக இருக்கும் என்று நினைத்தார்.

இந்த கதாபாத்திரத்தை மிகவும் விரும்பினார். படப்பிடிப்பில் கடினமான காட்சியில் த்ரிஷா ஒரே டேக்கில் நடித்தார். படத்தில் நிறைய ட்விஸ்ட் மற்றும் திருப்பங்கள் இருக்கும் ரசிகர்களுக்கு அது மிகவும் பிடிக்கும் என்றார் இயக்குனர் திருஞானம்.

படத்தில் நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பிரமாண்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யும் ஒளிப்பதிவாளர் R D ராஜசேகர் இப்படத்தின் கதையை கேட்டு இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்வதற்காக மற்ற படங்களின் தேதியை மாற்றிவிட்டு வந்துள்ளார்.

இப்படத்தை 24 Hrs நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் முதல் பார்வை இம்மாதத்தில் வெளியாகும்.

Trishas Action Thriller Paramapadham Vilaiyattu Nears Wrap Up Moment

சிம்புக்கு ஜோடியாகி தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் டயானா எரப்பா

சிம்புக்கு ஜோடியாகி தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் டயானா எரப்பா

International Model Dayana Erappa is setting her foot in Indian Cinemaஇயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் “செக்க சிவந்த வானம்” படத்தில் நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக நடித்திருப்பவர் நடிகை டயானா எரப்பா.

கர்நாடகத்திலுள்ள கூர்க்கில் பிறந்த இவர் 2011ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் முதல் 10 போட்டியாளர்களில் ஒருவராக திகழ்ந்தார்.

பின்பு 2012 இல், உலகின் மிகவும் மதிப்புமிக்க சர்வதேச மாடலிங் போட்டியான ஷாங்காய் எலைட் மாடல் லுக் போட்டியில் இந்திய நாட்டின் சார்பாக பங்கேற்றார்.

பின்பு கிங்ஃபிஷர் காலெண்டர் 2015 மற்றும் 2017, லாக்மே பேஷன் வீக், அமேசான் பேஷன் வீக், கௌச்சர் வீக் போன்ற பிரசதிபெற்ற பேஷன் பத்திரிக்கைகளில் இடம்பெற்றார் நடிகை டயானா எரப்பா. இவரது எளிமையான அழகு, நளினம் மற்றும் நடையழகு ஆகியவை அனைவரையும் கவர்ந்தது மட்டுமன்றி பேஷன் பத்திரிக்கைகள் இவரை ஒரு இளவரசியாக கொண்டாடின.

மேலும் சர்வதேச பேஷன் பத்திரிக்கைகளான வோக், எல்லி, ஹார்ப்பர்ஸ் பஜார், காஸ்மோபொலிட்டன் மற்றும் ஜி.கியூ போன்றவைகளில் இவரது புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

தருண் தஹிலியானி, மனிஷ் மல்ஹோத்ரா, அஞ்சு மோடி, சாந்தனு நிக்கில், கவுராவ் குப்தா, சுனீத் வர்மா, அனிதா டோங்ரே, பாயல் சிங்கல், மோனிஷா ஜெய்சிங், லைப் ஸ்டைல், பீமா ஜூவல்லரி மற்றும் ஆஸ்வா ஜூவல்லரி உள்ளிட்ட பல முன்னனி டிசைனர்களின் விளம்பர மாடலாக நடித்துள்ளார்.

பிரபல மாடலான டயானா எரப்பா, பிரபல இயக்குனரான மணிரத்னத்தின் படத்தில் நடித்திருப்பது, சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

International Model Dayana Erappa is setting her foot in Indian Cinema

More Articles
Follows