தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
எத்தனையோ குழந்தைகள் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினாலும் அதில் ஒரு சிலரே பெரிய நட்சத்திரங்களாக திகழ்கின்றனர்.
கமல், ஸ்ரீதேவி, விஜய், மீனா வரிசையில் நடிகர் சிம்புக்கும் ஒரு இடம் உண்டு.
சிம்புவின் தந்தையும் இயக்குனருமான டி.ராஜேந்தர் இயக்கத்தில் கடந்த 1984-ம் ஆண்டு வெளியான ‘உறவை காத்த கிளி’ படத்தில் அறிமுகமானார் சிம்பு.
தற்போது வெள்ளித்திரையில் அவர் கால்பதித்து 35 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
இந்த நிலையில், மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து தள்ளாகுளம் செல்லும் சாலை ஓரத்தில் 500 அடி நீள பிரம்மாண்ட போஸ்டரை அவருக்கு வாழ்த்து தெரிவித்து அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ளனர்.
தற்போது அந்த போட்டோவும் வீடியோவும் வைரலாகி வருகிறது.
இதற்கு முன்பு விஜய் ரசிகர்கள் 440 அடியில் போஸ்டர் ஒட்டியிருந்தனர்.
தற்போது அதை மிஞ்சும் வகையில் 500 அடியில் சிம்புவுக்கு போஸ்டர் ஒட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Simbu fans celebrating STR completed 35 years in Cine Industry