தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆர்யா – சித்தி இதானி இணைந்து நடித்துள்ள படம் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’.
முத்தையா இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ஜூன் 2ம் தேதி இந்த படம் வெளியாகவுள்ள நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக.குழுவினர்.
இந்த சந்திப்பில் நடிகர் ஆர்யா பேசியதாவது…
“பயங்கரமான சிட்டி சப்ஜெக்டோட என்னிடம் வந்தாரு முத்தையா. இது வேண்டாம் ஒரு கிராமத்துப் படம் பண்ணனும் அதுவும் உங்க கூட பண்ணனும்னு சொன்னேன், அவர் (காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்) இந்தக் கதையோடு திரும்ப வந்தாரு.
அவரோட படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். எமோஷன் எப்பவும் சூப்பரா இருக்கும், சீன் சொல்லும் போதே அழுதுருவாரு. அவர் மாதிரி என்னால நடிக்க முடியுமானு பயமா இருக்கும்.
நிறைய நிறையச் சம்பவங்கள் கதைகள் சொல்லிக்கொண்டே இருப்பாரு. மிகத்திறமையான இயக்குநர். தயாரிப்பாளர்கள் அவ்வளவு உறுதுணையா இருந்தாங்க. ஜீ ஸ்டூடியோஸ் எப்பவும் எனக்கு பெரிய சப்போர்ட் தந்திருக்காங்க, இந்தப்படத்துக்காகவும் தந்திருக்காங்க அவங்களுக்கு நன்றி.
ஹீரோயின் என்ன விட அவங்களுக்கு டயலாக் அதிகம் அவங்களுக்கு நிறைய காட்சிகள் இருக்கு, சாதாரணமா வந்துட்டு போற ஹீரோயின் ரோல் இல்ல. சூப்பரா நடிச்சிருக்காங்க, ஒரு செம்மையான டீம் முத்தையா சார் வச்சிருக்காரு. டெக்னிகலா எல்லோருமே அட்டகாசமா பண்ணிருக்காங்க.
எல்லோரும் ஒரு குடும்பமா தான் இருந்தாங்க. என்னோட படங்கள்ல இந்தமாதிரி தோற்றம் பண்ணதே இல்ல உங்களுக்கு பிடிக்கும்னு நம்புகிறேன் உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.” என்றார் ஆர்யா.
இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வீரமணி கலை இயக்கம் செய்துள்ளார்.
‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படம் உலகமெங்கும் 2023 ஜீன் 2 ஆம் தேதி படம் வெளியாகிறது.
Sidhi character is not just usual heroine says Arya