பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு கிடைக்கப் போகும் பெருமை

பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு கிடைக்கப் போகும் பெருமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shreya ghosalஇப்போது மாடர்ன் வேர்ல்ட் என்ற பெயரில் சினிமாவில் பாதி பாடல்கள் குத்துப் பாடல்களாகவே வருகிறது.

ஆனால் சில பாடல்கள் மனதை உருக வைக்கும் மெலோடி பாடலாக வருகிறது.

இந்த மெலோடியில் நிச்சயம் பாடகி ஸ்ரேயா கோஷலின் குரல் ஒலித்திருக்கும்.

மிருதா.. மிருதா… மற்றும் உன் கண்ண காட்டு போதும் என்ற சமீபத்திய மெகா ஹிட் பாடல்கள் இவரின் குரலிலேயே ஒலித்தது.

இவர் நான்கு தேசிய விருதுகளையும், பத்து ஃபிலிம்பேர் விருதுகளையும் பெற்றவர்.

இந்நிலையில் விரைவில் இந்திய தலைநகர் டெல்லியில் மேடமி டுஸாட்ஸ்’ என்ற கிளை நிறுவப்படவுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தில் இந்தியாவின் உள்ள பல பிரபலங்களின் மெழுகுச்சிலை காட்சிக்காக வைக்கப்பட உள்ளது.

இதில் பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலின் மெழுகுச்சிலையும் வைக்கப்பட இருக்கிறதாம்.

இதுபோன்று, இங்கிலாந்து தலைநகர் லண்டனிலும் மேடமி டுஸாட்ஸ்’ என்ற அருங்காட்சியகம் உள்ளது,

அங்கு பிரதமர் மோடி, அமிதாப்பச்சன் உள்ளிட்டவர்களின் மெழுகுச்சிலை உள்ளது.

லண்டன் மட்டுமின்றி உலகின் முன்னணி நகரங்களிலும் இதுபோன்ற கிளைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரிலீசுக்கு முன்பே ரீமேக் கன்பார்ம்; நயன்தாரா படத்தில் பிரபுதேவா..?

ரிலீசுக்கு முன்பே ரீமேக் கன்பார்ம்; நயன்தாரா படத்தில் பிரபுதேவா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Prabhu Deva and Nayantharaதென்னிந்திய சினிமாவில் அசைக்க முடியாத நம்பர் 1 இடத்தில் நயன்தாரா இருக்கிறார்.

இவரது நடிப்பில் டோரா’, ‘இமைக்கா நொடிகள்’, ‘அறம்’, ‘கொலையுதிர்க்காலம்’, ‘வேலைக்காரன்’ ஆகிய படங்கள் வளர்ந்து வருகிறது.

இதில் டோரா வருகிற மார்ச் 31ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இதில் ‘கொலையுதிர்க்காலம்’ படத்தை இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தயாரிக்க, சக்ரி டோலட்டி இயக்கி வருகிறார்.

இந்நிலையில் ‘கொலையுதிர்க்காலம்’ தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதில் நயன்தாரா கேரக்டரில் நடிக்க தமன்னா நடிக்கவிருக்கிறாராம்.

மேலும் பிரபுதேவா, பூமிகா ஆகியோரும் இப்படத்தில் நடிக்கவிருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

’20 படத்துல நடிச்சிட்டேன்; தங்கரதம் படத்துலதான் பேசிய சம்பளம் வாங்கினேன்..’ சௌந்தரராஜா

’20 படத்துல நடிச்சிட்டேன்; தங்கரதம் படத்துலதான் பேசிய சம்பளம் வாங்கினேன்..’ சௌந்தரராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thangaradham movie teamஎன்.டி.சி மீடியா மற்றும் வீகேர் புரொடக்ஷன் பட நிறுவனங்கள் இணைந்து ‘தங்கரதம்’ என்கிற பெயரில் தமிழ்ப் படமொன்றை தயாரித்திருக்கிறது.

மார்ச் 24 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையிலுள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் படத்தின் தயாரிப்பாளர் C.M.வர்கீஸ், இணைத் தயாரிப்பாளர் பினுராம் மற்றும் ஹரி, இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ, ஒளிப்பதிவாளர் ஜேக்கப் ரத்தினராஜ், கலை இயக்குநர் N.K.பாலமுருகன், பாடகர் அந்தோணி தாசன், பாடகி தேவிகா, படத்தின் நாயகன் வெற்றி, நாயகி அதிதி கிருஷ்ணா, இன்னொரு நாயகன் சௌந்தரராஜா, இயக்குநர் பாலமுருகன் மற்றும் படத்தை வெளியிடும் வெங்கீஸ் பிலிம் இண்டர்நேஷனல் வெங்கடேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

படத்தின் நாயகன் வெற்றி பேசும் போது,

“நான் கதையின் நாயகனாக அறிமுகமாகும் முதல் படம் இது. பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்வதும் இது தான் முதல்முறை.

இதற்கு முன் ‘எனக்குள் ஒருவன்’ என்ற படத்தில் ஒரு கேரக்டர் ரோலில் நடித்திருந்தேன். ஸ்ட்ராபெர்ரி படத்தில் வில்லனாக நடித்திருந்தேன். ஆனால் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறேன்.

கூத்துப்பட்டறை முத்துசாமி சார் தான் என்னை பட்டைத் தீட்டிய குரு. இது மண் மணம் மாறாத கிராமத்துக் காதல் கதை.

இப்படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் கே.பாக்யராஜ் பாராட்டியது எனக்கு உற்சாகத்தை அளித்தது. இந்த படத்தின் கேப்சன் ‘ஏ ஜர்னி ஆஃப் ஹோப்’ என்றிருக்கும். அதாவது நம்பிக்கையின் ஒரு பயணம் என்றிருக்கும்.

படத்தின் பாடல்கள் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன.
ஆடியோவிற்கு ஆதரவு அளித்தது போல் படத்திற்கும் பெரிய அளவில் ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.’ என்றார்.

படத்தின் நாயகி அதிதி கிருஷ்ணா பேசும் போது,

“வில்லேஜ் பேக்ட்ராப்ல எல்லா எமோஷன்களும் கலந்திருக்கும் பேமிலி எண்டர்டெயினர் படம் தான் இது. இது எனக்கு முதல் தமிழ்ப் படம். இயக்குநர் பாலமுருகன் ஒவ்வொரு காட்சியையும் விளக்கி,என்னை நடிக்க வைத்தார்.”என்றார்.

படத்தின் மற்றொரு நாயகனாக சௌந்தரராஜா பேசும் போது,

“சுந்தரபாண்டியன் படத்தில் நடித்து முடித்த பிறகு இப்படத்தின் கேரக்டர் குறித்து இயக்குநர் பாலமுருகன் என்னிடம் தெரிவித்தார். இப்படத்தில் நாயகிக்கு அண்ணன் கேரக்டரில் நடிக்கிறேன்.

கோபக்காரனாகவும், பாசக்காரனாகவும் வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறேன். இதுவரை இருபது படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன். ஆனால் இப்படத்தில் தான், தயாரிப்பாளர் எனக்கு பேசிய சம்பளத்தை முழுதாக கொடுத்து என்னை அசத்தினார்.

24 ஆம் தேதியன்று நான் நடித்த மற்றொரு படமும் வெளியாகிறது. அதனால் இரட்டிப்பு சந்தோஷத்தில் இருக்கிறேன்” என்றார்.

இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ பேசும் போது,

“இந்த படத்தின் இயக்குநர் இசைஞானம் மிக்கவர். அவருடன் பணியாற்றுவது சவாலாக இருந்தது. அத்துடன் இப்படத்தில் மூன்று பாடல்களையும் எழுதி பாடலாசிரியாகவும் அறிமுகமாகியிருக்கிறார். அத்துடன் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் எமோஷனல் காட்சிகளுக்கான பின்னணியிசை சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக மாசிடோனியோ மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இடங்களுக்கு சென்று பதிவு செய்திருக்கிறோம். இதற்காக தயாரிப்பாளர் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.”என்றார்.

தயாரிப்பாளர் C.M.வர்கீஸ் பேசும் போது..

“கிராமத்து பின்னணியிலான கமர்சியல் படங்கள் வெளியாகி நிறைய நாளாகிவிட்ட து. அதனால் பாலமுருகன் இந்தக் கதையைச் சொன்னவுடன் தயாரிக்க முன்வந்தேன். இது ஓரு பேமிலி எண்டர்டெயினர் படம். அனைவரும் ஆதரவளிக்க வேண்டுகிறேன்.”என்றார்.

thangaradham movie team

thangaradham team

‘கமலுக்கு பிரச்சினைன்னா நாங்க இருக்கோம்…’. விஷால்

‘கமலுக்கு பிரச்சினைன்னா நாங்க இருக்கோம்…’. விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Vishalகமல் அரசியலுக்கு வரவில்லை என்றாலும், நாட்டில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு எதிராக குரல் கொடுப்பவர்.

அண்மை காலமாக இவரது அரசியல் பேச்சு அனல் பறக்கும் வகையில் உள்ளது.

இவரது பேச்சுக்கு தமிழக அமைச்சர் வைகை செல்வன் கூட கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் அரசியல் ரீதியாக கமலுக்கு பிரச்சனை ஏற்பட்டால் அவருக்கு நடிகர் சங்கம் துணை நிற்கும் என சங்க பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசுக்கு எதிராக கமல் கூறி வரும் கருத்துக்கள் அவரது தனிப்பட்ட கருத்து சுதந்திரம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைகாலமாக விஷாலின் நடவடிக்கைக்கு கமல் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து வருவது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Nadigar sangam will support to Kamal for Political issues says Vishal

ரஜினி பாடலுடன் போட்டி போடும் சிம்பு-விஜய் ஆண்டனி பாடல்கள்

ரஜினி பாடலுடன் போட்டி போடும் சிம்பு-விஜய் ஆண்டனி பாடல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nominations for Best Lyricist in IIFA Utsavamவிஜய் ஆன்டனியின் பிச்சைக்காரன் படத்தில் இடம் பெற்ற ‘நூறு சாமிகள் இருந்தாலும்….’ என்ற பாடல் பலரது மனதை கவர்ந்த பாடல் ஆகும்.

இப்பாடலை பிரபல பாடலாசிரியர் ஏக்நாத் எழுதியிருந்தார்.

இவர் பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது இப்பாடலுக்கு புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.

2017-ம்இ ஆண்டின் இந்திய சர்வதேச திரைப்பட விழா விருதுகளுக்கான (IIFA Awards 2017) பரிந்துரைகளில் இந்தப் பாடலும் இடம் பெற்றுள்ளது.

இந்தப் பாடலுடன் மற்ற பாடல்களும் போட்டியிடுகிறது.

ரஜினி நடித்த கபாலி படத்தில் இடம் பெற்ற நெருப்புடா நெருங்குடா… என்ற பாடலும் உள்ளது. இப்பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதி பாடியிருந்தார்

மற்ற பாடல்கள் விவரம்…

  • இது கதையா… (பார்த்தி பாஸ்கர் – சென்னை 28 II)
  • தள்ளிப் போகாதே (அச்சம் என்பது மடமையடா),
  • நீயும் நானும்.. (நானும் ரவுடிதான்) – கவிஞர் தாமரை.

ஏக்நாத் எழுதியுள்ள மற்ற பாடல்கள் விவரம்…

  • நீயும் நானும்… (மைனா)
  • கண்ணிரெண்டில் மோதி நான் விழுந்தேனே… (உத்தமபுத்திரன்)
  • குக்குறுகுக்குறு… (ஒரு ஊர்ல ரெண்டு ராஜா)
  • யாரோ யாரோ… (மீகாமன்)
  • தேகம் தாக்கும்… (புறம்போக்கு)

போன்றவை இவரது படைப்பில் வெளியான பாடல்களுக்கான சில உதாரணங்கள்.

Nominations for Best Lyricist in IIFA Utsavam

முதன்முறையாக சிம்புக்காக பாடிய இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ்

முதன்முறையாக சிம்புக்காக பாடிய இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu Leon jamesசந்தானம் ஹீரோவாக நடிக்கும் சக்க போடு போடு ராஜா படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் சிம்பு.

இப்படத்தில் இடம் பெறும் பாடல்களை பல பிரபலங்கள் பாட இசையமைத்து வருகிறார் சிம்பு.

சிம்புவின் பெற்றோர் டி.ஆர்., உஷா ராஜேந்தர் மற்றும் யுவன் சங்கர் ராஜா பாட, இன்று அப்பாடலை சிம்பு ரிக்கார்டிங் செய்திருக்கிறார்.

தற்போது இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் அவர்களும் இதில் பாடியுள்ளாராம்.

அவர் மற்ற இசையமைப்பாளர் இசையில் பாடுவது இதுதான் முதல்முறையாம்.

உனக்காக… உனக்காக… என்று தொடங்கும் இப்பாடலை அண்மையில் ரிகார்ட்டிங் செய்ததாக சிம்பு தன் ட்விட்டர் தெரிவித்துள்ளார்.

கோ2, கவலை வேண்டாம் ஆகிய படங்களை தொடர்ந்து வீரா படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Music Director Leon James sung song in Simbus Music in Sakka Podu Podu Raja

#UnakaagaUnakaaga for #SakkaPoduPoduRaja young and talented @leon_james Fresh & peculiar voice timbre . Hope u all like it  God bless .

Leon James‏Verified account @leon_james 1m1 minute ago
Just sang on a killer track for @iam_str .First time singing for someone else! Scary yet exciting! Thanks for making it a joyful session sir

More Articles
Follows