ஆர்.மாதேஷ் இயக்கும் ” சண்டகாரி- The பாஸ்” விமல் ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார்…

ஆர்.மாதேஷ் இயக்கும் ” சண்டகாரி- The பாஸ்” விமல் ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (8)பாஸ் புரொடக்‌ஷன்ஸ் கார்ப்பரேசன் & மெட்ரோ நெட் மல்டிமீடியா பட நிறுவனங்கள் இணைந்து வழங்க J.ஜெயகுமார் மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படத்திற்கு ” சண்டகாரி – The Boss என்று வித்தியாசமான தலைப்பு வைத்துள்ளார்கள்..

இந்த படத்தில் விமல் கதா நாயகனாக நடிக்கிறார்…கதாநாயகியாக ஸ்ரேயா நடிக்கிறார்…முக்கியமான வேடத்தில் பிரபு , சத்யன், மற்றும் கே.ஆர், விஜயா, ரேகா, கிரேன் மனோகர், மகாநதி சங்கர், உமா பத்மநாபன் மற்றும் பல முன்னனி நடிக நடிகைகள் நடிக்கின்றனர்.. சூப்பர் ஹிட்டான மகதீரா படத்தில் வில்லனாக நடித்த தேவேந்தர் சிங் கில் முக்கிய வேடம் ஏற்கிறார்..

ஒளிப்பதிவு – குருதேவ் ,
இசை – அம்ரீஷ்
பாடல்கள் – கபிலன் விவேக்
எடிட்டிங் – தினேஷ்
கலை- அய்யப்பன்
நடனம் – அபீப்
ஸ்டண்ட் – கனல் கண்ணன்
திரைக்கதை அமைத்து இயக்குகிறார் R.மாதேஷ்……

விஜய் நடித்த மதுர, பிரசாந்த நடித்த சாக்லட் ,விஜய்காந்த் நடித்த அரசாங்கம் ,வினய் நடித்த மிரட்டல் ,திரிஷா நடித்த மோகினி ஆகிய படங்களை இயக்கியவர்.

மலையாளத்தில் திலீப் மம்தா மோகன் தாஸ் நடித்து ஜீத்து ஜோசப் இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற மை பாஸ் என்ற படத்தை தழுவி எடுக்கப் படும் படம் இது…

திரிஷ்யம் எப்படி சூப்பர் ஹிட் அடித்ததோ அது மாதிரி மை பாஸ் கேரளாவில் 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த படம் …
படப் பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது…முதல் கட்ட படப்பிடிப்பு நியூயார்க் வெனிஸ் லண்டன் போன்ற இடங்களில் நடந்து முடிந்தது…மற்றும் கொச்சின் கோவா காரைக்குடி போன்ற இடங்களிலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடை பெற்றுக்கொண்டு உள்ளது…

படத்தைப் பற்றி இயக்குனர் மாதேஷ் ” வித்தியாசமான ஆக்‌ஷன் காமெடி படம்.முழுக்க முழுக்க குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வகையில் இந்தப் படம் உருவாகி வருகிறது.. பெரும் பகுதி வெளி நாடுகளில் படப் பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டு இருக்கிறது… தற்போது கேரளாவில் பரபரப்பாக படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது .. விரைவில் இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது..” என்றார் இயக்குனர் R.மாதேஷ்..

நடிகர் ஆரோவிற்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த நடிகை “நிகிஷா பட்டேல்”

நடிகர் ஆரோவிற்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த நடிகை “நிகிஷா பட்டேல்”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (7)என்னமோ ஏதோ படத்தில் துவங்கி நாரதன், அரவிந்த்சாமி உடன் பாஸ்கர் ஒரு ராஸ்கல், ஜிவி பிரகாஷ் உடன் ஆயிரம் ஜென்மங்கள், மற்றும் தமிழ் ,தெலுங்கு, கன்னடம் மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை நிகிஷா பட்டேல் தற்போது ஆரோவிற்கு ஜோடியாக `மார்க்கெட் ராஜா’ என்ற படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில் ஒரு காட்சியில் ஆரோவிற்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுக்க வேண்டிய காட்சி உள்ளது, அதை நிகிஷா பட்டேலிடம் இயக்குனர் கூறுகையில் முதலில் நடிக்க மறுத்த நிகிஷா பட்டேல், இயக்குனர் முழுக்கதையையும் நிகிஷா பட்டேலிடம் கூறிய பிறகு அந்த காட்சியில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

இதைப்பற்றி நிகிஷா பட்டேலிடம் கேட்டபோது இந்த காட்சி படத்தில் மிகவும் முக்கியமான காட்சி என்பதால் முத்தம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, அதனால் இந்த காட்சியில் நடிக்க ஒப்புக்கொண்டேன், மற்றபடி வல்கராவோ,முகம் சுளிக்க வைக்கும் காட்சியாக இருக்காது என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன்,நான் சினிமா துறையை மிகவும் விரும்பிவந்தேன் அதோடு என்னோடைய கதாபாத்திரத்திற்கு என்ன தேவைப்படுகிறதோ அதை நிச்சயம் செய்வேன் என்று கூறினார்..

சந்தானம்-தாரா இணைந்துள்ள ஏ1 படம் ஜீலை 26ல் ரிலீஸ்

சந்தானம்-தாரா இணைந்துள்ள ஏ1 படம் ஜீலை 26ல் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)அறிமுக இயக்குனர் ஜான்சன், எழுதி, இயக்க, சந்தானம் நடித்துள்ள படம் ஏ1. இப்படத்தை அக்யூஸ்ட்டு 1 என்றும் அழைக்கின்றனர்.

சந்தானத்திற்கு ஜோடியாக, புதுமுகம் தாரா நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன், இசையமைத்துள்ளார்.

வருகிற ஜீலை 26ம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் தொலைக்காட்சி, ‘டிஜிட்டல்’ உரிமம் மட்டும், 4.6 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அண்மையில் இதன் ‘டீசர்’ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

‘ராட்சசி’ ஆக நடித்த ஜோதிகாவுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு

‘ராட்சசி’ ஆக நடித்த ஜோதிகாவுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (5)ஜோதிகா நடிப்பில் அண்மையில் வெளியான படம் ‘ராட்சசி’. இப்படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் மக்களிடையை நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதில் கீதாராணி என்ற கேரக்டரில் ஜோதிகா அரசுப் பள்ளி தலைமை ஆசிரியையாக நடித்திருந்தார்.

அரசுப்பள்ளியின் அவல நிலையை இதில் காட்டியிருந்தனர்.

ஆசிரியர்களும், ஆசிரியைகளும் ஒழுங்காக பாடம் நடத்தாமல் இருப்பது போன்ற காட்சிகள் இருந்தன.

மாணவர்கள் சிகரெட் பிடிப்பது, ஜாதி வன்முறையில் ஈடுபடுவது போன்ற காட்சிகளும் இருந்தன.

மேலும் அரசு பள்ளி ஆசிரியைகள் அதிக சம்பளம் பெறுவதாக காட்டப்பட்டு இருந்தன.

இந்த காட்சிகள் அரசுப்பள்ளி ஆசிரியர்களை இழிவுபடுத்துவதாக இருக்கிறது என எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர்-ஆசிரியைகள் ஜோதிகாவை கண்டித்து இணையத்தில் பேசி வருகின்றனர்

கரகாட்டக்காரன் 2 ரெடி..; ராமராஜன் & கவுண்டமணி நடிப்பார்களா..?

கரகாட்டக்காரன் 2 ரெடி..; ராமராஜன் & கவுண்டமணி நடிப்பார்களா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)தமிழ் சினிமா எத்தனை காலங்களை கடந்தாலும் ரசிகர்களால் மறக்க முடியாத படம் கரகாட்டக்காரன்.

கங்கை அமரன் இயக்கிய இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் ரிலீசாகி 30 வருடங்கள் ஆகிவிட்டது.

ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் 500 நாட்களை திரையரங்கில் ஓடியது.

இந்த நிலையில் விரைவில் கரகாட்டக்காரன் 2 உருவாக வாய்ப்புள்ளது.

”ராமராஜன், கவுண்டமணி சம்மதித்தால், இரண்டாம் பாகத்திலும் அவர்கள் நடிப்பர்,” என டைரக்டர் கங்கை அமரன் தெரிவித்து உள்ளார்.

சீயான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கும் விக்ரம் 58-ல் இணைகிறார் ஏ.ஆர் ரகுமான்

சீயான் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கும் விக்ரம் 58-ல் இணைகிறார் ஏ.ஆர் ரகுமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)தான் ஏற்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தன் இமை போல எண்ணும் நடிகரும், ரசிகனின் இமைகள் நொடிகூட திரையை விட்டு விலகி விடக் கூடாது என நினைக்கும் இயக்குநரும் ஒரு புதிய படத்தில் இணைந்தால்..அந்தப் புதிய படத்தை 7ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக லலித்குமார் தயாரித்தால்..அந்த ஹீரோ சீயான் விக்ரமாகவும், அந்த இயக்குநர் அஜய் ஞானமுத்துவாகவும் இருந்தால்..அந்தச் செய்தி கோலிவுட்டுக்கே கொண்டாட்டச் செய்தி அல்லவா? அப்படியான கொண்டாட்டச் செய்தியைத் தான் தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், Viacom 18 Studios நிறுவனமும் இணைந்து தயாரிக்க இருக்கும் புதியபடத்தை அஜய் ஞானமுத்து இயக்க சீயான் விக்ரம் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்திற்கு மேலும் ஒரு மகுடம் சேர்ப்பது போல இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானும் இணைந்துள்ளார் என்பது பலரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தான் இயக்கிய டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய இரண்டு படங்களிலும் தனக்கென தனி முத்திரையைப் பதித்து கெத்து காட்டியவர் அஜய் ஞானமுத்து. நடிப்பு என்ற மகத்தான கலைக்காக தன் சப்தநாடிகளையும் திரையில் ஒப்படைக்கும் கம்பீர மனம் படைத்தவர் சீயான் விக்ரம். இந்த இருவரும் ஒன்றிணையும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது. 2020-ல் சம்மர் கொண்டாட்டமாக ஏப்ரல் மாதம் படம் வெளிவர இருக்கிறது. மற்ற நட்சத்திரங்கள் யாரெல்லாம் இப்படத்தில் இருக்கிறார்கள் என்ற தகவலும் டெக்னிஷியன்ஸ் டீம் யார் யார் என்ற தகவலும் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

ஆக்‌ஷன் த்ரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப்பிரம்மாண்டமாக தயாராக இருக்கும் இப்படத்தின் ப்ரீ புரொடக்சன் வேலைகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது. தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் படம் தயாராக இருப்பதால் இந்திய சினிமாவில் இது மிக முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

More Articles
Follows